Tuesday, September 13, 2011

வேலாயுதம் விஜய் VS விகடன் பேட்டி காமெடி கும்மி

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/04/Velayutham-stills-of-Vijay-download.jpg
1. ''எப்பண்ணா கட்சி தொடங்கப் போறீங்க?'


''அவசரப்படாதீங்கண்ணா!''

சி.பி - ஆமா,ராகுல்ட்ட அடி வாங்குனது இன்னும் வலிக்குது..கேப் வேணாமா?

2. ''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்து இருப்பது ஆரோக்கியமான விஷயமா?'' 

''அது அவரோட தனிப்பட்ட முடிவு!''

சி.பி - ஹய்யா செம ஜாலின்னு ஓப்பனா சொல்ல முடியுமா? 



3. ''உங்கள் ரசிகர்கள் இன்று மக்கள் இயக்கத் தொண்டர்கள்... என்ன வித்தியாசத்தை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்?'' 

சி.பி - விசில் அடிச்சு விஜய் வாழ்க அப்டின்னு சொல்றதோட நின்னுடக்கூடாது உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு,நாளைய முதல்வர் விஜய் வாழ்கன்னு எதையாவது உளறனும்.. 

''தோரணம் கட்டுறது, போஸ்டர் ஒட்டுறதுன்னு என் படம் ரிலீஸாகும்போது சந்தோஷப்பட்டுக்கிறவங்க என் ரசிகர்கள். அப்பவே நான் அவங்க கிட்ட ஒரே ஒரு விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருப்பேன். 

 சி.பி -திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க?உங்க ரசிகர்கள்க்கு எதையும் ஒரு தடவை சொன்னா புரியாதா?

'முதல்ல உங்க அம்மா, அப்பா, குடும்பத்தைக் கவனிங்க. உங்க வேலை யைக் கவனமா செய்யுங்க. ரசிகர் மன்றப் பணிகளை அப்புறம் நேரம் இருக் குறப்ப பார்த்துக்கலாம்’னு கட்டாயப் படுத்திட்டே இருப்பேன். அவங்க எப்பவும் 'ரசிகன்’னு ஒரு அடையாளத் தோடு, அதே நிலைமையில் தேங்கிடணும் என்பதில் எனக்கு எப்பவும் உடன்பாடு இல்லை.


இப்போ எங்க ரசிகர் மன்றம், 'மக்கள் இயக்க’மாக ஒரு வடிவம் எடுத்துருச்சு. இப்போ எந்தச் சின்ன காரியத்தையும் தொலைநோக்குப் பார்வையுடன் யோசிச்சு தான் செயல்படுறாங்க. ஊருக்கு ஒரு பிரச்னைன்னா, அதுக்குக் குரல் கொடுக்க முன்னாடி நிக்கிறாங்க. அந்த அளவுக்கு அவங்க பார்வை விரிவு அடைஞ்சு இருக்கு.

சி.பி - பார்வையும் விரிவடையலை,போர்வையும் விரிவடையலை.. எல்லாருக்கும் பேராசை தான்.. ஏதாவது பதவி கிடைக்குமா?ன்னு பார்க்கறாங்க.. 

என் ரசிகர்கள் அவங்களை அறியாமல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துட்டு இருக்காங்க. அதை ரொம்ப சீக்கிரமே அவர்களும் உணர்வார்கள்!''

சி.பி - ஆமா,உருப்படியா இருக்கறவங்க உருப்படாம போகப்பார்க்கறாங்க.. இதான் அடுத்த கட்டமா?

http://reviews.in.88db.com/images/vijay_velayutham_photos_stills_pics_02.jpg

4. ''நடிப்பில் உங்களுக்குப் போட்டி யார்?'' 

சி.பி - ஹா ஹா .. அப்பாடா.. அப்போ நான் நடிக்கறேன்னு ஒத்துக்கறீங்க.. தாங்க்ஸ் காட்  .. ஃபார்வார்டு எஸ் எம் எஸ் நக்கல்களை படிச்சு படிச்சு எனக்கே என் மேல நம்பிக்கை இல்லாம இருந்துச்சு.. 


''மக்கள் மனசைச் சந்தோஷப் படுத்தி, ஓஹோன்னு ஓடி ஜெயிக்கிற ஒவ்வொரு படமும் எனக்குப் போட்டி தாங்ணா. ஆனா, இது ஆரோக்கியமான போட்டி!''

 சி.பி -ராமநாராயணன் படம் கூடத்தான் ஓடுது.. அவர் படமும் உங்களுக்குப்போட்டியாங்க்ணா?


5. ''மனம்விட்டு அழுத சம்பவம்?'' 

சி.பி - சாரி.. அண்ணனுக்கு மத்தவங்களை அழ வெச்சுத்தான்  பழக்கம்.. அவர் ராகுல்காந்தி கேவலப்படுத்துனப்பக்கூட அழலையே.. சிரிச்சுகிட்டே எந்திரிச்ட்டாரே?


எனக்கு அழுகை பிடிக்காது. அதுவும் அழுறவங்களைப் பிடிக்கவே பிடிக்காது. என்னோட லைஃப்ல ஒரே ஒரு முறைதான் அழுதேன். அது என் அன்புத் தங்கச்சி வித்யா, சின்ன வயதில் இறந்தப்போ!''

சி.பி - சாரி.. சீரியஸ் மேட்டர், நோ கமெண்ட்ஸ்

6. ''விழுந்து விழுந்து சிரிக்கவெச்ச சினிமா?'' 

சி.பி - கால்ல ஏதாவது சுளுக்குன்னாக்கூட இந்த மீடியாக்கள் சண்டைக்காட்சியில் நடிக்கும்போது கால் முறிவுன்னு எழுதறாங்களே.. அதான் செம சிரிப்பு.. 

''இப்போ, 'பாஸ் (எ) பாஸ்கரன்’. சிரிச்சுச் சிரிச்சு வயிறே புண்ணாச்சு. 'அவனவன் பத்துப் பதினஞ்சு ஃப்ரெண்டுகளை வெச்சிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கான். ஆனா, ஒரே ஒரு ஃப்ரெண்டை வெச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே... அய்யய்யய்யய்யோவ்’னு சந்தானம் புலம்புற டயலாக்கை ரசிச்சுப் பார்த்தேன்!''

சி.பி -ஹாலிவுட்ல எத்தனையோ ஹீரோக்கள் காமெடி பண்றாங்க.. ஆனா கோலிவுட்ல இந்த ஒரு ஹீரோ பண்ணும் காமெடிகளை தாங்க முடியலையே?



7. ''நீங்கள் முதல்வரானால், கையெழுத்துப் போடும் முதல் உத்தரவு?'' 

சி.பி  - அப்பா எஸ் ஏ சி துணை முதல்வர்,தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை

''இதுபோல எடக்கு மடக்காக் கேள்வி கேட்கிற வங்களுக்கு, ஆறு மாசம் ஜெயில் என்கிற உத்தர வில் கையெழுத்துப் போடுவேன்!''

சி.பி - ஆஹா ,அண்னன் சினிமால இருந்தாலும் தியேட்டர்ல அடைச்சு வெச்சு சந்தோஷப்படராரு, அரசியல்ல இருந்தா ஜெயில்ல அடைச்சு சந்தோசப்படறாரு.. 



8. ''நேரில் சீரியஸ்... திரையில் மட்டும் காமெடிக் காட்சிகளில் அசத்துறீங்களே... எப்படிங்ணா?'' 

சி.பி - அது வேற ஒண்ணும் இல்ல,நேரில் நான் எப்படி இருக்கனோ அப்படி பார்க்கறீங்க.. திரைல டைரக்டர் சொல்லித்தர்றதை ஒப்பிக்கறேன்.. அதனால அப்படி தெரியலாம்..


''எப்பவுமே காமெடின்னா ரொம்பப் பிடிக்கும். ஜாலியா, கலகலன்னு பேசுற கேரக்டர்களை ரொம்ப ரசிப்பேன். நான் படிக்கிற காலத்துல இருந்து இப்போ வரைக்கும் எப்பவுமே என்னைச் சுத்தி ஜாலியாப் பேசுற நண்பர்கள் கூடவே இருக்காங்க. நண்பர்களோடு மனம்விட்டுப் பேசிச் சிரிச்சா, மனசுல இருக்குற பாரம் எல்லாம் அப்பிடியே ஐஸ் கட்டி மாதிரி கரைஞ்சு லேசாகிடும். என்னை மாதிரியே மக்களும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்காகத் தான் என்னோட படத்தில் காமெடி ஸீன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். 'வேலாயுதம்’ பாருங்க... விளையாடி இருக்கோம்!''


 சி.பி - என்னது?மக்களும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா? அப்போ சினி ஃபீல்டை விட்டு விலகப்போறீங்கலா? ஐ ஜாலி


9. ''வில்லன் வேஷத்தில் விஜய்யைப் பார்க்க ஆசை?'' 

சி.பி - அவர் எப்பவுமே  அவரோட படத்துல,படத்தோட ரிசல்ட்ல  வில்லன் தானே?



''ஏற்கெனவே 'பிரியமுடன்’ படம் நடிச்சேனே? அந்தப் படத்தைப் பார்த்த எங்க அம்மா 'இனிமேல் இந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காதப்பா’னு சொன் னாங்க. அதுக்கு அப்புறமும் நிறைய நெகட்டிவ் கேரக்டர்கள் தேடி வந்துச்சு. அம்மாவோட அன்புக் காக நடிக்காமத் தவிர்த்துட்டேன். ஆனாலும் செந்தில்...  நீங்க ஆசைப்படுற மாதிரி எனக்கும், வில்லன் வேஷத்து மேல ஆசை இருக்கு!''


10. ''அவுட்டோர் படப்பிடிப்புக்கு காரில் செல்லும்போது என்ன செய்வீர்கள்?'' 

சி.பி - ஹி ஹி இப்படி பப்ளிக்காக கேட்டா எப்படி? ஹீரோயின் கூட ஸ்டோரி டிஸ்கசன் தான்.. 



''கிராமங்களுக்கு கார்ல போறப்ப, வழியில் இருக்கும் பாலங்கள், அணைக்கட்டுகள், ஏரி, குளம்னு எல்லாத்தையும் ஒண்ணுவிடாமப் பார்த்துக் கிட்டே போவேன். மனசுக்குப் பிடிச்ச இடத்தில் இறங்கி நின்னா... ஆசையா ஓடி வர்ற மக்களிடம் பேசுறது வழக்கம். அப்போ, 'இந்தப் பாலத்தை காமராஜர் கட்டினார்... காமராஜர் இல்லேன்னா, இந்த அணைக்கட்டு வந்து இருக்காது’னு அவரை வாயார, மனசார வாழ்த்துவாங்க.

இன்னிக்கு இருக்குற மாதிரி ஹைடெக் வளர்ச்சி அப்போ கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில, விவசாயத்துக்காக அய்யா காமராஜர் செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்தால்... ஆச்சர்யமா இருக்கும். எல்லோரும் பாராட்டுற மாதிரி காமராஜர்... ஒரு கர்ம வீரர் மட்டும் இல்லே... விவசாய விஞ்ஞானியும்தான்!''


11. ''உங்க மானசீக குரு யார்?'' 
''என்னோட அப்பா!''

சி.பி - அப்பா உங்களை சி எம் ஆக்க துடிக்கிறார் .. பார்த்துக்கோங்க.. அது உங்களுக்கும் நல்லதில்லை, தமிழ் நாட்டுக்கும் நல்லதில்லை


12. ''நடிப்பில் பொறாமைப்படவைக்கும் நடிகர்கள் யார்... யார்?'' 

''உலக நாயகன் கமல் சார்தான்!''
- அடுத்த வாரம்...

'' 'காவலன்’ படப் பிரச்னைக்காக, அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரித்தது சுயநல அரசியல் இல்லையா?''
''வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?''
''அமோக வெற்றி பெற்ற அம்மாவைச் சந்தித்த அனுபவம்பற்றி?''

38 comments:

சக்தி கல்வி மையம் said...

மாப்ள அப்படி என்னதான் ராகுல் காந்தி டாக்குடரூ விஜய கேவலப் படுத்தினார்?

சௌந்தர் said...

ரொம்ப பழைய பேட்டி....!!!

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

விஜையை கும்மோ கும்முன்னு கும்மியிருக்கீங்க! நல்லாத்தான் இருக்கு!

மங்காத்தாவுக்கு நீங்க போட்ட விமர்சனத்தை பார்த்து சிலபேர், நீங்க விஜய் ரசிகன்னு பொங்கினாங்க!

ஆனா, நீங்க ஒரு நடுநிலைப் பத்திரிகையாளர் அப்டீங்கறத ப்ரூஃப் பண்ணிட்டீங்க!

வாழ்த்துக்கள் சார்!

பை த பை உங்க கமெண்டுகள் கலக்கல்!!

பால கணேஷ் said...

என்னது மக்களும் எப்பவும் சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா இருக்கணுமா... அப்ப சினிமாவ விட்டு விலகப் போறீங்களா... ஐ ஜாலி... -சூப்பர் கமெண்ட் தல.

Unknown said...

சூப்பர் தம்பி! டாக்டர இப்பிடி கும்மிட்டீங்க? :-)

காட்டான் said...

அட இவரும் அஜித்தபோல அந்த மன்றங்களை கலைத்தா எவ்வளவு ச்ந்தோஷமையா..

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்,
முதல் படம் சூப்பரா இருக்கு..

படிச்சிட்டு வாரேன்

Unknown said...

//அஜீத் ரசிகர் மன்றங்களைக் கலைச்சது ஆரோக்கியமான விஷயமா?

அது அவரோட தனிப்பட்ட முடிவு!//

மெய்யாலுமா? நல்லவேளை டாகுடர் தெளிவு படுத்திட்டாரு! நான் கூட அது டாகுடரோட முடிவா இருக்குமோன்னு தான் இம்புட்டு நாளா யோசிச்சுட்டிருந்தேன்!

MANO நாஞ்சில் மனோ said...

கேவலப்படுறது விஜய்க்கு என்ன புதுசா...?

நிரூபன் said...

சி.பி - ஆமா,ராகுல்ட்ட அடி வாங்குனது இன்னும் வலிக்குது..கேப் வேணாமா//

விஜய் ரசிகர்களே,
நோட் திஸ் பாயிண்ட்...

அவ்........

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ விஜய் பெட்டியைப் சாரி பேட்டியை போட்டு இவனும் நம்மளை கொல்றாண்டோ...

MANO நாஞ்சில் மனோ said...

ஃபிரண்ட்ஸ் படத்துல சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு, சூப்பரா அதில் நடிச்சிருந்தார் ஹி ஹி...[[இப்பவும் எனக்கு அதை நினச்சா குலை நடுங்குது]]

நிரூபன் said...

சி.பி - விசில் அடிச்சு விஜய் வாழ்க அப்டின்னு சொல்றதோட நின்னுடக்கூடாது உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு,நாளைய முதல்வர் விஜய் வாழ்கன்னு எதையாவது உளறனும்//

சும்மா இருக்கிற ரசிகர்களை உசுப்பி விடுறீங்களே,
இது நன்னா இருக்கா...

நிரூபன் said...

கால்ல ஏதாவது சுளுக்குன்னாக்கூட இந்த மீடியாக்கள் சண்டைக்காட்சியில் நடிக்கும்போது கால் முறிவுன்னு எழுதறாங்களே.. அதான் செம சிரிப்பு.. //

அவ்...விஜயை காப்பாத்திட்டீங்களே பாஸ்.

சசிகுமார் said...

எப்பவும் போல!!!!!!!!

Mathuran said...

ஆஹா.. நம்மள உசுப்பிவிட்டுட்டீங்களே

கும்மாச்சி said...

சி.பி.ங்க்னா உங்கள் கமெண்ட்ஸ் சூப்பர் கலக்களுங்னா.

நிரூபன் said...

அப்பா எஸ் ஏ சி துணை முதல்வர்,தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை//

அவ்..இப்படியும் பண்ணிக்கலாமா...

அவ்...........

வாழ்க விஜய்!

நிரூபன் said...

வழமை போலவே காமெடிக் கும்மி கலக்கல் பாஸ்.

சுதா SJ said...

பாஸ்... விஜய் பதிலை விட உங்கள் கமெண்ட்ஸ் பார்ப்பதர்க்ககவே ஓடி வந்தேன் ஏமாற்றாமல் அசத்தி விட்டீர்கள் கலக்கல் தல

சுதா SJ said...

அதிலும் விஜய் முதல்வர் ஆனால் போடும் முதல் கையெழுத்துக்கு உங்கள் கமெண்ட்ஸ் தூக்கல்.
ஹீ ஹீ விஜய் முதல்வர் ஆனால் நீங்கள் சொன்னதுதான் பலிக்கும்

சுதா SJ said...

ராமநாராயணன் படம் கூட தான் ஓடுது என்பது
ஓவர் குசும்பு ஹீ ஹீ

Unknown said...

சார் புள்ளி ராஜாவுக்கு...உடம்புல எத்தன புள்ளி இருக்கும்...சொல்லுங்க சார்!

Unknown said...

பேட்டி சூப்பர் அண்ணா

நான் விஜய் கிட்ட கேள்வி கேக்கலாமா அண்ணா?? ஹா ஹா ஹா

Jana said...

4. நடிப்பில் உங்களுக்கு போட்டி யார்? இதுதாண்ணா காமடியான கேள்வி :)

ராஜி said...

நடிப்பில் உங்களுக்கு போட்டி யார்?
>>>
யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க சிபி சார். இளைய தலைவலியை பார்த்து இப்படி கேட்டுட்டீங்களே! அவருக்கு நடிப்புக்கும் என்ன சம்பந்தம் சார்

Anonymous said...

ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டீங்களே...

கடம்பவன குயில் said...

ஆனாலும் உங்க லொள்ளு கமெண்ட் ரொம்ப ஓவர். விஜய் நல்லவரு...எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாருன்னு உங்களுக்கு யாரும் சொல்லிட்டாங்களா????

உங்க கமெண்ட் ரொம்ப ரசிக்க வச்சது...

Anonymous said...

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இளைய தளபதிய ஓட்டிட்டே இருக்கபோறீங்கன்னு தெரியலை...

எந்த ஒரு மனுஷனும் திறமை இல்லாம இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கமுடியாது என்பது என் கருத்து...

பஞ்ச் வசனங்கள் ஓரளவிற்கே ரசிக்க வைத்தன

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

M (Real Santhanam Fanz) said...

//சி.பி - சாரி.. சீரியஸ் மேட்டர், நோ கமெண்ட்ஸ்///
அண்ணே உங்க நேர்மை எனக்கு புடிச்சி இருக்கு!!

M (Real Santhanam Fanz) said...

///'இப்போ, 'பாஸ் (எ) பாஸ்கரன்’. சிரிச்சுச் சிரிச்சு வயிறே புண்ணாச்சு. 'அவனவன் பத்துப் ....’னு சந்தானம் புலம்புற டயலாக்கை ரசிச்சுப் பார்த்தேன்!''////
இவரும் நம்ம ஆளு போல...

M (Real Santhanam Fanz) said...

அண்ணே இது எப்ப வந்த பேட்டி அண்ணே? கொஞ்சம் பழசா?

M (Real Santhanam Fanz) said...

அண்ணே ஆயிரம் சொல்லுங்க, டாகுடர் பாவம்ணே... நாங்க இனிமே அவர கலாய்கிறது இல்லன்னு சத்தியாபிராமனமே எடுத்துட்டோம்!!

பதிவுலக ரவுண்டப்

kobiraj said...
This comment has been removed by the author.
kobiraj said...

என்ன சார் இது ரொம்ப பழசு .என்றாலும் நல்லாய் இருக்கு

”தளிர் சுரேஷ்” said...

பேட்டிக்கு நீங்க போட்ட கமெண்ட்ஸ் கலக்கல்!