Monday, September 5, 2011

சாமி, சிங்கம் இரண்டை விட மங்காத்தா டாப்பா? எப்படி?

a

 1.ஒரு மாதிரியான பெண்கள் என சிலரை சொல்பவர்கள் அவர்கள் அந்த நிலைமைக்கு வர காரணமான ஆண்களை யாரும் ஒரு மாதிரி சொல்வதில்லை # நீதி -ஆண் நல்லவன்

-----------------------

2. காதலிக்கும் பெண் மற்ற ஆணிடம் அதிகம் கடலை போடுவதில்லை,ஆனால் ஆண் காதலியை விட மற்றவர்களிடம்தான் அதிக கடலை போடுகிறான் # நீதி - ஆண் தாராளமனசுக்காரன்

----------------------------

3. கல்யாணம் முடிஞ்சுது,அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கேன். 

முழிச்சுட்டு மட்டும் இரு, மிச்சத்தை அவ பாத்துக்குவா.

-----------------------------

4. முதல் இரவில் மனைவி - அத்தான்,கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம்? 

நாசமாப்போச்சு, 4 வருஷமா அதைத்தானே செஞ்சுட்டு இருந்தோம்? இது கொஞ்சற நேரம்.

--------------------------
5. வீட்டம்மா,வீட்டுக்காரம்மா என்ன வித்தியாசம்? 

சம்பளத்துல ஒரு பகுதியை கொடுத்தா அது வீட்டுக்காரம்மா, சம்பளத்தையே மொத்தமா பிடுங்கிட்டா அது வீட்டம்மா

-------------------------


6. என் மனைவி என்ன தப்பு செஞ்சாலும் சாரி கேட்கவே மாட்டா. 

நீ கொடுத்து வெச்சவண்டா,என் மனைவி மாசா மாசம் ஒரு சாரி எடுத்து தரச்சொல்லி கேட்கறா

--------------------------------

7.அமைச்சரே!மாதம் மும்மாரி பொழிகிறதா?

-மன்னா! இப்படி அந்தப்புரமே கதியா இருந்தா நாட்ல என்னநடக்குதுன்னே தெரியாது,மாதம் ஒருமுறையாவது வெளிலவாங்க


----------------------------------

8. எனக்கு கார்த்திக் தான் முதல்ல, மத்தவங்க எல்லாம் அதுக்கு அப்பால தான் - குஷ்பு ட்விட்டரில் # ஒரு தோராயமான மொழி பெயர்ப்பு( அவங்க ஆங்கிலத்துல டீசண்ட்டா சொன்னதை நான் தமிழ்ல கொஞ்சம் இண்டீசண்ட்டா மாத்திட்டேன்)

------------------------

9. இந்த சின்ன வயசுலயே தொழில் அதிபர் ஆக ஆசைப்பட்றீங்களே? ஏன்?

முன்னணி நடிகைங்க அவங்களைத்தானே விரும்பறாங்க?

-----------------------------

10. அதிமுகவினர் என்றால் நடவடிக்கையே இல்லை:கருணாநிதி புகார் # இது உண்மைன்னா நீங்களும் நைஸா ஜோதில ஐக்கியம் ஆகிடுங்க தலைவரே? எஸ் ஆக  செம சான்ஸ்

---------------------------




11. பழசிராஜா குரூப்பின் புதிய மலையாளப்படத்தில் திப்பு சுல்தானாக நடிக்கிறார் கமல். # திப்பு சுந்தரி உதடு பத்திரம்!

----------------------

12. ஜெயா டிவியில் இனி ஜாக்பாட் நிகழ்ச்சி சிம்ரன் கையில்! # “இடை” விடாத ஹிட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்

---------------------------

13.மணிரத்னம் அவர்களுக்கு  தலை எல்லாம் மங்காத்தா எஃப்ஃபக்ட், 51 வயசு ஆன சுஹாசினி தலைல ஒரு முடி கூட வெள்ளை இல்லை # நீதி - ஆண் டை அடிப்பதில்லை

---------------------

14. சாமி, சிங்கம் எல்லாம் டியூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் ,ஆனா தல சஸ்பெண்ட் ஆனாலே பிச்சுக்கிட்டு ஓடும்,மங்காத்தாடா - பிரேஜி @ட்விட்டர்

-----------------

15. தயிராக காதல், கயிறாக கவிதை,கற்பனை மத்து திரட்டி எடுத்து உன்னிடம் தந்தது அன்பு வெண்ணெய்

----------------------



16. விக்கல் வரும்போது நான் தண்ணீர் குடிப்பதில்லை, நீ எனை நினைப்பதை நிறுத்தி விட்டால்?

------------------

17. நினைவுகள் என்பது கடல் அலை போல, அருகில் வரும்போது அதை விட்டு விலகத்தோன்றும், தொலைவில் இருக்கும்போது ரசிக்கத்தோன்றும்

-------------------------

18. அவளிடம் அன்பைக்கொடுத்து அன்பைப்பெற நினைத்தேன்,அவள் அன்பைப்பெற்று எனக்கு அறிவு ஊட்டினாள் -பெண்ணை நம்பாதே என!

----------------------

19. கவிதையுடன் பயணப்படுகிறேன் நதியாக! ஏதோ ஒரு புள்ளியில் உன்னை சந்திப்பேன் கடலாக

-------------------------

20. உன்னைப்பற்றி தெரிந்து கொண்டேன், ஆனால் புரிந்து கொள்ளவில்லை,அதுதான் நம்மிருவருக்கிடையேயான விரிசலுக்குக்காரணமோ என்னமோ?

-----------------------



21. பெண்கள் ஆண்களை விட அதிகமாக சிந்திக்கிறார்கள், அதனால் பல பிரச்சனைகளை ஆண்கள்தான் சந்திக்கிறார்கள்.

------------------------

22. கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் - விஜய்.# அண்ணே!நீங்க சொன்னதைத்தானே செஞ்சோம்?

-----------------------------

23. தமிழக ஆண்கள் ஒல்லியாக இருந்தால் கூட கொழுக் மொழுக் ஹீரோயின்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர் # நீதி _ ஆணின் மனது விசாலம்

---------------------------

24. ஜெயா டிவி ஜாக்பாட்டில் சிம்ரன் ஜாக்கெட் டிசைனில் குஷ்பூவை ஓவர்டேக்குவாரா? என்ற சர்ச்சைக்கு முடிவு # அவர் ஜாக்கெட்டே போடலை,நன்றி டூ வாசன் ஐ கேர்

------------------------

25.முதல்வராக நடிக்கிறார் திரிஷா # ஜோடியா விஜய்யா? அப்புறம் அவர் ஆக்டிங்க் சி எம் ஆவேன்னு அடம் பிடிப்பாரே?

------------------------------

39 comments:

யானைகுட்டி @ ஞானேந்திரன் said... Best Blogger Tips

எப்படி!!எப்படி!!அப்படி !!!அப்படி !!!
தலைப்பு -"சாமி "
ஜோக்ஸ் -"மங்காதா "
மொத்தமாக- "சிங்கம் "
கலக்கல் நண்பா.....
-யானைக்குட்டி ---

விக்கியுலகம் said... Best Blogger Tips

எப்படியெல்லாம் மூடு வருதுய்யா உனக்கு.....எல்லாம் ஜூப்பரு...!

காந்தி பனங்கூர் said... Best Blogger Tips

எங்கிருந்து சார் இந்த புகைப்படங்களையெல்லாம் சுட்டீங்க. படங்கள் அருமையோ அருமை.

காந்தி பனங்கூர் said... Best Blogger Tips

//பெண்கள் ஆண்களைவிட சிந்திக்கிறார்கள், அதனால் பல பிரச்சினைகளை ஆண்கள்தான் சந்திக்கிறார்கள். //

ஒத்துக்கிறேன்.

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

குஷ்பு பற்றிய மொழி பெயர்ப்பு பயங்கரம்

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

ஆசிரியர் தின வாழ்த்துகள்
என்று என் வலையில்

இவளுகளை என்ன செய்யலாம் சார்..?

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

//
Blogger விக்கியுலகம் said...

எப்படியெல்லாம் மூடு வருதுய்யா உனக்கு.....எல்லாம் ஜூப்பரு...!
//

அதனால்தான் அவர் தல

கடம்பவன குயில் said... Best Blogger Tips

//கவிதையுடன் பயணப்படுகிறேன் நதியாக.ஏதோ ஒரு புள்ளியில் உன்னை சந்திப்பேன் கடலாக//

சிபி சார் இப்படியெல்லாம் கவிதையில் கலக்கி தாமரை, விஜய், சிநேகன் பிழைப்பில் கை வச்சுறாதீங்க...

கடம்பவன குயில் said... Best Blogger Tips

//தயிராக காதல் கயிறாக கவிதை கற்பனை மத்து திரட்டி எடுத்து உன்னிடம் தந்தது அன்பு வெண்ணை.

சரியான வெண்ணை தான் அன்பு காதல் இரண்டும். ... விடுங்க விடுங்க...ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...

கடம்பவன குயில் said... Best Blogger Tips

மணிரத்தினம் சுஹாஸினி... தத்துவம் ஆண்கள் டை அடிப்பதில்லையா?????

ஆண்கள் டை அடிப்பதில்லை...வோட்கா, ஸகாட்ச் தான் அடிப்பார்கள்....

ஷீ-நிசி said... Best Blogger Tips

"இடை" விடாத ஹிட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள் :)

கடம்பவன குயில் said... Best Blogger Tips

6. ஹய்யோ....எந்த யுகத்தில் சார் இருக்கிறீங்க???இன்னும் உங்கள்ட்ட எடுத்துத்தரச்சொல்லி பெர்மிசன் எல்லாம் கேட்கிறாங்களா உங்க மனைவி....கொடுத்து வச்சவர் சார் நீங்க...

நாங்கள்லாம் எங்க இஷ்டத்துக்கு வாரம் ஒரு தடவை கடைக்கு போய் சாரி வாங்குவோம்...மனமிருந்தால்தான் கணவனிடமே காட்டுவோம்...இல்லைனா கட்டி நடமாடும்போது புதுசாரிய பாத்துக்கிட்டாத்தான் உண்டு..

செங்கோவி said... Best Blogger Tips

அண்ணன் அடிச்சு, ஆடி இருக்காரே!

காட்டான் said... Best Blogger Tips

சூப்பர் மாப்பிள அதிலும் போட்டோக்கள் கலக்கல்.. செங்கல் லோடு என்ர சின்ன வயசில நெல்லு மூட்ட ஏத்திக்கொண்டு போன ஞாபகம்..

காட்டான் குழ போட்டான்....

சசிகுமார் said... Best Blogger Tips

சுதந்திர தேவி சிலைக்கு புடவை போட்டோ செம!!!!

கவி அழகன் said... Best Blogger Tips

கும்புடுறேனுங்க

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips
This comment has been removed by the author.
Online Works For All said... Best Blogger Tips

Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

செங்கல் சுமைதூக்கி படம் அருமை... ஆனால் இவ்ளோ சுமை தேவையா?

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் பாஸ்,
பதிவின் தலைப்பில் உள் கூத்து ஏதும் இல்லையே?

Mohamed Faaique said... Best Blogger Tips

இன்று ஓஓஒவர் குசும்பு சார். படங்களும் அருமையோ அருமை..

நிரூபன் said... Best Blogger Tips

முன்னணி நடிகைங்க- தொழிலதிபர் சமாச்சாரம்...சூப்பர் கடி...

வழமை போல எல்லா டுவிட்ஸ் உம் அருமை பாஸ்.

சென்னை பித்தன் said... Best Blogger Tips

சூப்பர் படங்கள்!

Nirosh said... Best Blogger Tips

படங்கள் சுப்பர் பாஸ்..>!

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said... Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

சார், உங்க பஸ்ஸுகள் சிரிக்க வைக்குது + படங்கள் சிந்திக்க வைக்குது!

ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ ஆல் ஃபோட்டோஸ்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

மாப்ள வழக்கம் போல கலகல..

KANA VARO said... Best Blogger Tips

சிபி படங்களெல்லாம் எங்க தேடி எடுக்கிறீங்க Fantastic

துஷ்யந்தன் said... Best Blogger Tips

எல்லாமே செம கலக்கல்.

துஷ்யந்தன் said... Best Blogger Tips

அப்புறம் நம்ம முகா தலைவரை அம்மா கட்சியில் ஐக்கியம் ஆக சொன்னீங்களே, அது எங்க நடந்துருமோ என்று பயமா இருக்கு.... அவ்வ்

துஷ்யந்தன் said... Best Blogger Tips

மங்காத்தா பிரேம்ஜி கடி பிரமாதம்

ராஜி said... Best Blogger Tips

தயிராக காதல், கயிறாக கவிதை,கற்பனை மத்து திரட்டி எடுத்து உன்னிடம் தந்தது அன்பு வெண்ணெய்
>>>
ஆக மொத்தம் உங்க லவ் வெண்ணெய்னு சொல்றீங்க.

ராஜி said... Best Blogger Tips

விக்கல் வரும்போது நான் தண்ணீர் குடிப்பதில்லை, நீ எனை நினைப்பதை நிறுத்தி விட்டால்?
>>>
அப்படியே விக்கி விக்கி வயிறு வலிக்கப் போகுதுங்க சார்

ராஜி said... Best Blogger Tips

நினைவுகள் என்பது கடல் அலை போல, அருகில் வரும்போது அதை விட்டு விலகத்தோன்றும், தொலைவில் இருக்கும்போது ரசிக்கத்தோன்றும்
அட இது நல்லா இருக்கே

ராஜி said... Best Blogger Tips

கவிதையுடன் பயணப்படுகிறேன் நதியாக! ஏதோ ஒரு புள்ளியில் உன்னை சந்திப்பேன் கடலாக
>>
கடல்கள் பல கடந்த பின்னும்ம்..ன்னும் சேர்த்துக்கோங்க.

ரெவெரி said... Best Blogger Tips

தொடர்ந்து கலக்குங்க
...