Tuesday, August 30, 2011

மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆராய்ச்சி - பாகம் 2

இந்தப்பதிவின் முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://adrasaka.blogspot.com/2011/07/blog-post_6519.html  


http://www.iaac.us/mic/mic_roja.jpg

 ரோஜா(1992 ) - இந்தப்படத்தில் இருந்துதான் மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மான்  கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டார். சின்ன சின்ன ஆசை பாடல் சூப்பர் ஹிட். ஆடியோ கேசட்டில் ஏ சைடு, பி சைடு என திரும்பி திரும்பி ஒரே பாட்டை ரெக்கார்டு செய்யும் புதிய திருப்பு முனையை இப்பாட்டு உண்டாக்கியது. சத்யவான் சாவித்திரி கதைதான். தன் கணவனின் உயிரை காப்பாற்ற தீவிரவாதிகளிடம் போராடும் மனைவியின் கதை.. சொன்ன விதத்தில் ஜெயித்தார்.வைரமுத்து சின்ன சின்ன ஆசை பாடல்க்காக இயக்குநரிடம் மொத்தம் 260 ஆசைகள் எழுதிக்கொடுத்ததாகவும், அதில் இருந்து தேவையானதை அவர் தேர்வு செய்ததாகவும் குமுதம் பேட்டியில் கூறி இருந்தார்..

இந்தப்படத்தின் வெற்றி இந்திய அளவில் மணிரத்னத்துக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத்தந்தது என்பதால் அவர் அடுத்தடுத்த படங்களில் அதே போல் தேசிய பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.. அதுவரை அவரது டேஸ்ட்க்கு படம் எடுத்தவர்  அதற்குப்பின் ஹிந்தியில் டப் பண்ண வேண்டுமே என்பதற்காக கதையில் ஆல் ஓவர் இந்தியா ரிலேட்டட் பிரச்சனை என்ன ?என்பதை கவனமாக கதையில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.. 

http://chennaionline.com/film/Preview/Aug09/Images/Roja-Movie-Stills01.jpg

சூப்பர்ஹிட் பாடல்கள் 1. சின்ன சின்ன ஆசை 2. ருக்குமணியே  ,ருக்குமணியே  அக்கம் பக்கம் என்ன சத்தம்?  3. காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே 4. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தப்படம் ஈரோடு அபிராமியில் 62 நாட்கள் ஓடியது.

http://newtamilhits.com/movieimages/Thiruda-Thiruda_b.jpg
திருடா திருடா ( 1993) - படம் பூரா யாராவது ஓடிட்டே இருப்பாங்க.. ஒரு ட்ரக் நிறையா கோடிக்கணக்குல பணம்,அதை கடத்திடறாங்க. அதை கைப்பற்ற 2 கோஷ்டிகள், அவங்களை பிடிக்க சி பி ஐ , இதுக்கு நடுவே ஒரு காதல் என கதை போகும்..  படம் ஜாலியா போனாலும் ,தியேட்டர்ல சுமாராத்தான் போச்சு.. 

http://incap.files.wordpress.com/2009/06/541.jpg

க்ளைமாக்ஸ்ல ராசாத்தியை காமெடி பீஸ் ஆக்கிட்டு 2 ஹீரோக்களும் பணத்தை குறியா நினைக்கும் நினைப்பை ரசிகர்கள் ஏத்துக்கலை.. பாடல்கள் சூப்பர் ஹிட்ஸ்/..இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBBwoiDub5iCnrcdM_k74llZ9Jr6Germ3UhSwofSnAudsI9dO8fJLc0sdIIl-hN-b3CZZDgmc4Ab8lWpUU7I1iaIzgpX-gl8rZ8-mwK8rcfr6w36hMMAkoKs6IT2KHGIRCVOVi3d22pgo/s320/Thiruda+Thiruda.png

பாடலாசிரியர் - வைரமுத்து 1. கண்ணும் கண்ணும் - மனோ 2.கொஞ்சும் நிலவு - அனுபமா 3. வீரபாண்டிக் கோட்டையிலே- மனோ, கே.எஸ் சித்ரா 4. தீ தீ - கரோலீன் , 5. ராசாத்தி - சாகுல் ஹமீத்  , 6. புத்தம் புது பூமி- கே.எஸ் சித்ரா, மனோ

ஈரோடு அபிராமில இந்தப்படம் 38 நாட்கள் ஓடுச்சு.. 

http://www.musiqbuzz.com/tamil/movie/bombay/photos_gallery/bombay-photo-gallery-1266232253.jpg
பம்பாய் - (1995) - ரோஜா படத்துக்குப்பிறகு அதை விட அதிகமான ரீச் இந்த படத்துக்கு கிடைச்சதுக்கு முக்கிய காரணம்  பாபர்மசூதி இடிப்பு, இந்து முஸ்லீம் பிரச்சனையை சாமார்த்தியமா ஒரு காதல் கதையின் ஊடாக சொன்ன விதம் தான்.. 

பலரது மனம் கவர்ந்த சீன்கள்

1. கண்ணாளனே பாட்டின்போது அர்விந்தசாமி  ஒரு தூணில் காலை வைத்து உதைத்து தன் காதல் இயலாமையை வெளிப்படுத்தும் நுணுக்கமான சீன்.. அதே சீனில் அவரது தங்கை அவரை மிரட்டுவதும் அவள் கையை இவர் மடக்குவதும்.

2.  இந்து முஸ்லீம் கலவர சீனில் சிறுவர்கள் தங்கள் நெற்றியில் போட்ட பட்டையை அழித்துக்கொள்வது

3. உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாடல் காட்சியில் மிதக்கும் அழகுடன் மனீஷா ஸ்லோ மோஷனில் வருவதும், அவரது ஷால் கிளையில் மாட்டுவதும் , மதம் என்னும் ஷால்லை அவர் துறப்பதுமாக சிம்பாலிக் ஷாட்.

http://www.indianetzone.com/photos_gallery/5/bombay_10466.jpg

விருதுகள்

1.1996 அரசியல் திரைப்படக் குழுமம் (அமெரிக்கா)வென்ற விருது - சிறப்பு விருது- பம்பாய் - மணிரத்னம் 2.1996 தேசிய திரைப்படவிருது(இந்தியா)வென்ற விருது - சிறந்த தொகுப்பாளர்- சுரேஷ் எர்ஸ்வென்ற விருது - நார்கிஸ் டத் விருது- சிறந்த திரைப்படம் - பம்பாய் - மணிரத்னம்
1995 பில்ம்பேர் விருது (இந்தியா)வென்ற விருது - விமர்சகர்கள் விருது - பம்பாய் - மணிரத்னம் , வென்ற விருது - சிறந்த நடிப்பிற்காக - மனிஷா கொய்ராலா
 இத்திரைப்படம் வெளியிடப்பட்டபொழுது சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.பம்பாய் ஆரம்ப இசையானது ஆங்கிலத்திரைப்படமான லோஎட் ஒஃவ் வார் என்ற திரைப்படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள்

பாடலாசிரியர் - வைரமுத்து 1. அந்த அரபிக்கடலோரம் - ஏ.ஆர். ரஹ்மான் 2. பூவுக்கு என்ன- நோல், அனுபமா , 3. உயிரே உயிரே- ஹரிகரன், கே.எஸ் சித்ரா, 4. குச்சி குச்சி - ஹரிகரன், சுவர்ணலதா, 5. கண்ணாளனே - கே.எஸ் சித்ரா 6. பம்பாய் ஆரம்ப இசை- ஏ.ஆர். ரஹ்மான்

ஈரோடு அபிராமியில் 60 நாட்கள் ஓடி தேவி அபிராமியில் பின் 100 நாட்கள் வரை ஓடியது.. 

http://i1.peperonity.info/c/DDD547/598626/ssc3/home/009/arhits/tamil_iruvar.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg
இருவர் ( 1997) - மணிரத்னம் இயக்கிய படங்களில் இது ஒரு மைல் கல் என சொல்லலாம்.. படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறாததற்கு  காரணம் கடைசியில் சொல்றேன்..

எம் ஜி ஆர் , கலைஞர் இருவருக்கும் இடையே நிகழ்ந்த இது வரை வெளியில் வராத சில உண்மைகள் பிரமாதமாக சொல்லப்பட்டிருக்கும் படம் இது..

பிரகாஷ்ராஜ் கலைஞராகவும், மோகன்லால் எம்ஜிஆராகவும் போட்டி போட்டு நடிக்க ஜெவாக ஆணவம், அகங்காரம் பிடித்த அழகு எனும் செருக்கால் ஆடவனை பொம்மை போல் நடத்திய  ஜெவாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்.. பொதுவாக ஐஸூக்கு நடிப்பு சுமாராகத்தான் வரும், அவரது நடிப்புப்பற்றாக்குறையை அவரது அழகு சரிப்படுத்தி விடும்..ஆனால் அவர் இந்தப்படத்தில் வி என் ஜானகி கேரக்டரில் அமைதிப்பதுமையாகவும், ஜெ வாக அலட்டல் ராணியாகவும்  மாறுபட்ட நடிப்பை வழங்கி இருப்பார்..

http://www.cinemaal.com/uploads/thumbs/1974806151mooshoo.gif

மிக நுணுக்கமான காட்சிகள்

1. எம் ஜி ஆர் வெளியே கிளம்பிம்போது வேண்டும் என்றே ஜெ அவரை கூட்டத்துக்கு தாமதமாக போக சொல்வது. கலைஞர் பேசிக்கொண்டிருக்கும்போது தாமதமாக வரும் எம்ஜிஆர்க்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைப்பதை கலைஞர் சங்கடத்துடன் பார்ப்பது..

2. தனிமையான தருணத்தில் எம்ஜிஆரை வேண்டும் என்றே ஜெ அலைக்கழிப்பது. தன்னை கெஞ்சும் நிலைக்கு கொண்டு வருவது...

3. எம் ஜி ஆர் கலைஞரை கட்டி அணைக்கும் காட்சியில்  எம் ஜி ஆரின் முகத்தை க்ளோசப்பில்  காட்டி அவர் வில்லத்தனமாய் உதட்டை மடித்து  சிரிப்பதை காட்டுவது..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyc2r6ktghFPZAS0aBr4vat328d88ornpA0mMmdA_ALwVgC27iMDYC7TKdU0CoiLHm0A1LV7bIfdDi14QWrrSfpy3cFKwkKp7ozr9fbZ2GsS6SEfSruexSfS42r9pSa4wWD44naTHZFvMA/s1600/iruvar002.jpg

கதை - திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்) இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும், நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர்.எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடிபடுத்திக்கொள்கின்றாரிவரத் தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார்.


இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது.முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும், ஆன்ந்தும் பகைவர்களாகின்றனர்.

இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார்.

இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார்.இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.

விருதுகள்

1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா), வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ் , வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்

சூப்பர்ஹிட் பாடல்கள் 1. ஆயிரத்தில் நான் ஒருவன் ,நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் , 2. நறுமுகையே, நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்.. 3. ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி! கேள்விக்குப்பதிலும் என்னாச்சு? 4. கண்ணைக்கட்டிக்கொள்ளாதே, கண்டதை எல்லாம் நம்பாதே தோழா! 5.  பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை 6. வெண்ணிலா

இந்தப்படம் தமிழில் ஹிட் ஆகாததற்கு முக்கிய காரணம் ஒரு கடவுளாக நினைக்கப்பட்ட எம் ஜி ஆர் -ன் மைனஸ் பாயிண்ட்ஸை மக்கள் ஏற்றுக்கொள்ள அல்லது நம்பத்தயார் இல்லை என்பதே!

 - தொடரும்

27 comments:

Butter_cutter said...

அசத்துங்க

செங்கோவி said...

மற்ற படங்கள் ஓகே..இருவர் திரைப்படம் திராவிட அரசியலைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியுடன் எடுத்த படம்..குறிப்பாக பெரியார்-அண்ணா கேரக்டரை இணைத்து, சிதைத்து கமர்சியலாக மட்டுமல்லாது அரசியல்ரீதியாகவும் படத்தை தோற்கச் செய்தார் மணிரத்னம்..

கலைஞர்-என்.ஜி.ஆருக்கி இடையேயான அடிப்படைப்பண்புகளை ஆராயாமல், அவர்களது பெண் தொடர்புகளை ஆராய்ந்ததும் அந்தப் படத்தின் தரத்தை கீழே இழுத்தது.

RAMA RAVI (RAMVI) said...

அழகிய ஆராய்ச்சி-2

Anonymous said...

ஒரு தல இன்னொரு தலையைப்பற்றி...

மகேந்திரன்...பாலுமகேந்திரா மாதிரி இல்லாட்டியும் அவர் என் மனம் கவர்ந்த தமிழ் இயக்குனர்களில் ஒருவர்...

கூடல் பாலா said...

நடு நிலையான அலசல் ....

ரைட்டர் நட்சத்திரா said...

சுவாரசியமான ஆராய்ச்சி
நன்றி

கடம்பவன குயில் said...

ம்...ம்...வேணும்னே...படங்கள் அருமையா செலக்ட் பண்றீங்கண்ணு சொன்னதுக்கு தண்டனையா மேலிருந்து 4வது படம். என்னமோ செய்ங்க....

சி.கிருபா கரன் said...

அருமையான பதிவு#
எப்படி அண்ணே எந்த தியேட்டர்ல எத்தன நாள் படம் ஓடிச்சுன்னு கரெக்ட்டா தெரிஞ்சு வைசுரிகிங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super. after long time good post from u :)

K said...

சார்! மணிரத்னம் படங்கள் பத்தி இம்புட்டு டீட்டெயில் குடுக்கிறீங்க! சூப்பர் சார்! இதுமாதிரி இன்னும் நீங்க எழுதணும்! வாழ்த்துக்கள் சார்!

அப்புறம் உங்களப்பத்தியெல்லாம் குறிப்பிட்டு ஒரு கொல வெறி பதிவு போட்டிருக்கேன்! டைம் கெடைச்ச வாங்க சார்!

உலக சினிமா ரசிகன் said...

சிபி..மணிரத்தினத்தின் சிறப்பம்சங்களை சரியாகச்சொல்லி உள்ளீர்கள்.
அதே நேரத்தில் அவர் சறுக்கிய விசயங்களையும் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.தொடர்ந்து கலக்குங்கள்.

ராஜி said...

சி.கிருபா கரன் said...

அருமையான பதிவு#
எப்படி அண்ணே எந்த தியேட்டர்ல எத்தன நாள் படம் ஓடிச்சுன்னு கரெக்ட்டா தெரிஞ்சு வைசுரிகிங்க?
>>>>
என்னங்க சகோ இப்படி கேட்டுட்டீங்க சிபியை? அப்புறம் அவர் வாரத்துல ஏழு நாளுக்கு 14 படம் பார்த்து பிரயோஜனமில்லையே

அம்பாளடியாள் said...

அழகிய ஆராட்சி வாழ்த்துக்கள் .பணி தொடரட்டும் ........

அம்பாளடியாள் said...

போடவேண்டிய ஓட்டுப் போட்டாச்சு சார் .......நன்றி பகிர்வுக்கு .....

சசிகுமார் said...

tamilmanam- 7

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
rajamelaiyur said...

Super . . . He is great director . . .

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இன்னும் அதிகம் மிகவும் நல்ல அலசலாக அமையும் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அசத்தல் சிபி, செங்கோவியின் கமெண்ட்டும் கவனிக்கத்தக்கது!

நிரூபன் said...

மணிரத்தினம் அவர்களின் 1990ம் ஆண்டின் பின்னரான திரையுலகத் திருப்பங்களைத் தாங்கிய படங்களைப் பற்றிய அலசலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

சுதா SJ said...

கலக்கல் பதிவு, ரெம்ப ரசித்து படித்தேன் , அடுத்த பாகத்துக்கு இப்பவே ஆவலாக இருக்கேன் பாஸ்..

Kitcha said...

Hi Friend... Really Great... Neengal Kadaisiyaaga sonnathu 100000/100000 Unmai...Ithai oru Thani Pathivaaga Ezhuthalaam...

VSKumar said...

V.N. Janaki characteril varuvathu Actress GOUTHAMI. MGRin First wife character than First Aishwarya Rai.

Barath said...

ரொம்ப நல்லா அலசி எழுதி இருக்கிறீர்கள். இருவரின் தோல்விக்கு நான் நினைக்கும் காரணம் 1) மெதுவான திரைக்கதை 2)காட்சிகளின் தொடர்பின்மை

ராஜ நடராஜன் said...

ஆராய்ச்சியெல்லாம் செய்வீங்களா:)

ராஜ நடராஜன் said...

மணிரத்னத்தின் மூணு பீஸ்ன்னா நாயகன்,இருவர்,பாம்பே.

”தளிர் சுரேஷ்” said...

இருவர் படம் குறித்து சூப்பராக அலசி இருந்தீர்கள்! எம்ஜிஆரை இன்னும் மக்கள் கடவுளாகத்தான் பார்க்கிறார்கள் நன்றாக சொன்னீர்கள்