Tuesday, August 02, 2011

ஈரோடு டாப் 10 சினிமா தியேட்டர்கள் ERODE TOP TEN CINE - THEATRES

http://bollywoodpoint.com/gallery/d/6630-1/aishwarya+rai+hot.jpg

தமிழ்நாட்டிலேயே டீசண்ட்டான ஆட்கள் உள்ள ஊர் லிஸ்ட் எடுத்தால்  முதலிடம் கோவை என்றால் இரண்டாமிடம் ஈரோடு.. மஞ்சள் மார்க்கெட்,ஜவுளி,பெட்ஷீட் வியாபாரம்,புத்தகத்திருவிழா என எல்லாவற்றிலும் களை கட்டும் இந்த ஊர் சினிமா ரசனையில் மட்டும் விதி விலக்கா? என்ன? ஒரு படம் ஹிட்டா? டப்பாவா? என்பதை கோலிவுட்டே கணிப்பது மதுரை, ஈரோடு நகர ரிசல்ட்டை வைத்துத்தான்.. அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க ஈரோட்டில் உள்ள டாப்  10 சினிமா தியேட்டர்கள்  பற்றி ஒரு பார்வை..... 

1. அபிராமி 70 MM A/C DTS  - ஈரோட்டின் நெம்பர் ஒன் தியேட்டர்.பக்காவான பராமரிப்பு.. வெய்யில் அடித்தாலும் , மழை பெய்தாலும் க்யூவில் நிற்கும் ரசிகர்களை பாதிக்காதவண்ணம் ஃபுல் கவரேஜ் .கார் பாக்கிங்க், பைக் பார்க்கிங் என எல்லாமே செம பக்கா .. பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸில் இருந்து ஏ சி, ஃபேன் போடுவது வரை எல்லாவற்றிலும் ஒரு நீட்நெஸ் உள்ள தியேட்டர் இதுதான்.

ஷோ டைம் காலை 10.40 , மதியம் 1.40 மாலை 6 இரவு 9.30 . டிக்கெட் ரேட் ரூ 10 ரூ 20  ரூ 50 ரூ 70 . பைக் பாஸ் ரூ 7 கார் பாஸ் ரூ 15. ஈரோடு பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள தியேட்டர் என்பதால் நல்ல பிக்கப்.. ரஜினி , மணி ரத்னம் படங்கள்,ஷங்கர் படங்கள் உட்பட பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்குள்ளான பல படங்கள் இங்கே தான் ரிலீஸ்  ஆகும்.

எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் 20 டூ 30 நாட்கள் அபிராமியில் போட்டு விட்டு அதற்குப்பின் மேலே உள்ள தேவி அபிராமியில் போட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள்..


அபிராமி தியேட்டரிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் கே பாக்ய ராஜின் இது நம்ம ஆளு 72 நாட்கள். தேவி அபிராமியில் அதிக நாட்கள் ஓடிய படங்கள்  டி ஆர் இன் என் தங்கை கல்யாணி 210 நாட்கள் , நாகார்ஜூன் -இன் உதயம் 137 நாட்கள் , இதயத்தை திருடாதே- 112 நாட்கள்.

கேண்டீன்ல கொள்ளை அடிப்பாங்க.. என்ன தமாஷ்னா விலைப்பட்டியல் போட்டு வெச்சு பக்கத்துலயே அதிக விலை என்றால் நிர்வாகத்திடம் புகார் தரவும்னு போர்டு வெச்சிருப்பாங்க, ஆனா அந்த லிஸ்ட்டை விட அதிக விலையில் தான் பொருள்கள் விற்கப்படும்.. 

எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் இந்த தியேட்டர் மேனேஜரின் மீசை வெச்ச ஃபோட்டோக்கள் பட ஹீரோ சைஸ்க்கு இருக்கும். தியேட்டர் ஓனர் ஃபோட்டோ கூட இருக்காது.. அதுக்கு தனி கதை இருக்கு.. அது தனியே.. பகிர்கிறேன்..  ( அது ஒரு கில்மா கதை )


2. VSP A/C DTS  - ஆங்கிலப்படத்துக்கென்றே ஒரு தியேட்டர் முதன் முதலாக ஈரோட்டில் நிறுவப்பட்டது இது தான். ஜி ஹெச் அருகே உள்ளது. டி டி எஸ் சும்மா அதிரும்.. சூப்பர் ஹிட் ஆங்கிலப்படங்கள் இதில் தான் ரிலீஸ் ஆகும். பிரபா, ரவி ஆகிய தியேட்டர்களில் தான் முதலில் ஆங்கிலப்படங்கள் ரிலீஸ் ஆனது.. இந்த தியேட்டர் வந்த பிறகு  அவை பணால் ஆகி விட்டன.. இப்போ தனிக்காட்டு ராஜாவாக இங்கிலீஷ் படங்களுக்கான ஒரே தியேட்டர் என்ற பெருமையில் பட்டாசைக்கிளப்பிட்டு இருக்கு..


ஷோ டைம் காலை 11 மணி  மதியம் 2 மணி , மாலை 6 மணி , இரவு 9.30 மணி

டிக்கெட் விலை ரூ 20 , ரூ 40 , ரூ 50 , ரூ 70

இங்கே கேண்டீன்ல ஐஸ் க்ரீம் , கட்லெட் நல்லாருக்கும்..

THE ABYSS  என்ற படம் அதிக பட்சமாக 108 நாட்கள் ஓடியது.. அவ்வப்போது ஹிந்திப்படங்களும் போடுவாங்க.. இப்போ சமீப காலமா தமிழ்ப்படங்களும் போடறாங்க..

பால்கனி போற மாடிப்படில ஆள் உயர கண்ணாடி வெச்சிருப்பாங்க.. பால்கனி டிக்கெட் எடுக்காதவங்க கூட பால்கனில போய் தலை அலங்காரத்தை சரி செய்துட்டு வருவாங்க..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் சுமார் தான்..

3. ஆனூர் A/C DTS  -  ஃபயர் சர்வீஸ் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள சாலையில் உள்ளது.. கோழி முட்டை வடிவில் ஆன தியேட்டர்.. ஏ சி வாசம் கம கம நு இறங்கும்..சின்னத்தம்பி இதுல தான் ரிலீஸ் ஆகி 148 நாட்கள் ஓடி பட்டாசை கிளப்புச்சு..

ஷோ டைம் காலை 11 மணி  மதியம் 2 மணி , மாலை 6 மணி , இரவு 9.30 மணி

டிக்கெட் விலை ரூ15 , ரூ 40 , ரூ 50 , ரூ 70

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் இன்னும் முன்னேறனும்..

4. ஸ்ரீ கிருஷ்ணா DTS  - மணிக்கூண்டு அருகே உள்ளது.. நகரின் மையபகுதியில் உள்ள தியேட்டர் என்பதாலும், கனி மார்க்கெட், காய் கறி மார்க்கெட் அருகே உள்ளது என்பதாலும், அனைத்து ஜவுளிக்கடைகள் உள்ள ஏரியா என்பதாலும் எப்பவும் கூட்டத்துக்கு பஞ்சம் இல்லை..

கேப்டன் பிரபாகரன் 142 நாட்கள் இதில் ஓடியது..

டிக்கெட் விலை ரூ 10  ரூ20 , ரூ 30 , ரூ 50 ,

 ஷோ டைம் காலை 10.45 , மதியம் 1.45 மாலை 6   இரவு 9.30

 பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் இன்னும் முன்னேறனும்..

ஃபேன் போட ரொம்ப யோசிப்பாங்க.. பால்கனிக்கு மட்டும் தான் ஃபேன் போடுவாங்க.. தியேட்டர் ஓனருக்கு ஏழைகள்னா இளக்காரம் போல.. 

5. அன்னபூரணி - அசோகபுரம் பஸ் ஸ்டாப்ல பவானி சாலையில் இருக்கு.. அவுட்டர் ஏரியா என்பதால் பெரிய படங்கள் ரிலீஸ் பண்ண மாட்டாங்க அதிகமா.. தியேட்டர் நீட்டா இருக்கும்.. சேர் சூப்பரா இருகும்.. நல்லா விஸ்தாரமான தியேட்டர்..  பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் ஓக்கே..

உன்னை நினைத்து இங்கே 60 நாட்கள் ஓடின. அதிக பட்ச ஓட்டமே அந்தப்படம் தான்.. 



டிக்கெட் விலை ரூ 10  ரூ20 , ரூ 40 , ரூ 50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு10

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsoW8SCSqmdXFKmvIvdt4Y0XfHudrq3RbMFehh2I56UWlsQGmM-UANv87s4r5Tt5qFVpfz3WtSxVYVwMd5L3uVaodoln9uKNmeMEOPCVuHrVKD-8YbrFnofX305XE3YVZwbl83Sw-efpM/s1600/005-aishwarya+rai+hot+photos+8.jpg

6. ஸ்ரீசண்டிகா -  - ரயில் நிலையம் எதிரே உள்ளதால் செகண்ட் ஷோ ஈஸியா ஃபுல் ஆகிடும்.. முத்துக்குமார் என்ற பெயரில் முதலில் இருந்த தியேட்டர் தான் கை மாறி இப்போ இந்தப்பேர்ல.. டிக்கெட் வாங்கற ரசிக மகா ஜனங்கள் வெய்யில்ல நின்னு தான் வாங்கனும்..தியேட்டர் கடல் மாதிரி இருக்கும்.. ஃபேன் போடுவாங்க.. பேப்பர் விளம்பரங்கள்ல டி டி எஸ்னு பந்தாவா போட்டுக்குவாங்க, ஆனா டி டி எஸ் இல்ல..  ஹி ஹி கேட்டா டி எஸ் பி சிஸ்டம்.. அவங்க தப்பா பிரிண்டட்னு சமாளிஃபிகேஷன் வேற...



 பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் ஓக்கே.



டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ 50 , ரூ70 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

7. ஸ்ரீ லட்சுமி  DTS  - அசோக புரம் ஸ்டாப்ல இருக்கு , பவானி ரோடு ,அன்னபூரணி தியேட்டர் ஏரியாவே தான்.. பெரும்பாலும் கூட்டம் இருக்காது.. கள்ளக்காதல் ஜோடிங்க, தள்ளிட்டு வந்ததுங்க.. கெட் டுகெதர் லைஃப் இன் தியேட்டர் ஒன்லி ஜோடிகள்,பிக்கப், டிராப் எஸ்கேப் ஜோடிங்க எல்லாம் இங்கே வரும்.. தியேட்டர் ஸ்க்ரீன்ல ஓடற படத்தை விட இவங்க ஓட்டற படம் செம கில்மாவா இருக்கும்..

ஸ்க்ரீன்ல லைட்டிங்க் செட் பண்ணி வெச்சிருப்பாங்க.. ஹீரோ ஓப்பனிங்க் சாங்க், ஹீரோயின் ஒப்பனிங்க் சீன் ( ஹி ஹி ஹி ) எல்லாத்துக்கும்  லைட் போட்டு கிளப்புவாங்க.

  பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் சுமார்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

8. ராயல் -   பாரம்பரியம் மிக்க தியேட்டர். பஸ் ஸ்டேண்ட்க்கு பக்கம் என்பதால் டப்பா படம் கூட 25 நாட்கள் ஓடிடும்.. நடுவே 3 வருடங்கள் அண்ணன் என் கே கே பி ராஜா மிரட்டலால் க்ளோஸ் ஆகி இருந்தது.. இப்போ ரீ ஓப்பன்ல போய்ட்டிருக்கு,.

பிரமாதமா ஓடின படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்  110 நாட்கள், துள்ளாத மனமும் துள்ளும் 117 நாட்கள்.

கேண்டீன் கேவலமா இருக்கும். பால்கனி போகும் வழில  ஒரு ஆள் உயர கண்னாடி, ஸ்டில்ஸ் வெச்சிருக்கற இடத்துக்கு எதிர்ல 2 கண்ணாடி இருக்கும்..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் படு கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

9. ஸ்டார்   - இதுவும் ரொம்ப பழைய தியேட்டர்.. மஞ்சள் மண்டிகள் உள்ள ஏரியாவில் உள்ளது.. கூட்டம் அவ்வளவா வராது,. பஸ் ஸ்டேண்டில் இருந்து பள்ளி பாளையம் போற ரூட்ல அரை கி மீ தொலைவில் உள்ளது..

கரகாட்டக்காரன் ( 136), முதல் மரியாதை  ( 140)எல்லாம் இங்கே ரிலீஸ் ஆகி செம ஓட்டம் ஓடுச்சு..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் படு கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு 10

10. அண்ணா  DTS  - சம்பத் நகர் எதிர் சாலையில் உள்ளது. அதாவது நசியனூர் ரோட்ல ரைட் கட்ல இருக்கு.. சமீபத்துல தான் டிடி எஸ்  செஞ்சாங்க.. பாடாவதிப்படம் ( பகவதி அல்ல) நிறைய ரிலீஸ் ஆன தியேட்டர் இதுவாத்தான் இருக்கும்.. ஆனா பிது படம் ரிலீஸ் ஆனா டிக்கெட் ரேட்டை ஏத்தி வித்து நல்ல காசு பார்த்துடுவாங்க..




பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ்  கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு 10

http://cinemamasti.com/wp-content/uploads/2011/05/Aishwarya-Rai-Hot-Nipple-Show-Pics-1.png

இவை போக மூடப்பட்ட கில்மா தியேட்டர்கள் ( அதாவது கில்மா படங்கள் மட்டுமே திரை இடுவதை லட்சியமாக கொண்ட தியேட்ட்ரகள்) நடராசா மரப்பாலம் ஏரியா , ராஜாராம், ஆகிய தியேட்டர்கள் க்ளோஸ்டு.. இதுல நடராசா தியேட்டர் மட்டும் 3780 தடவை போலீஸ் ரெய்டுக்குள்ளாகி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.. அந்த தியேட்டரில் மாமூல் வசூல் பண்ணியே பல போலீஸ் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்தன.

ரவி தியேட்டர் பெருந்துறை ரோட்ல அதையும் மூடிட்டாங்க.. பிரபா தியேட்டர் பாழடைஞ்சு போய் கிடக்கு.. நோ ரன்னிங்..

இவை போக ஸ்ரீ நிவாசா, சங்கீதா, மாணிக்கம், சம்பூர்ணம் ( டெண்ட் கொட்டாய்)
போன்ற தியேட்டர்களும் உண்டு..

33 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நடராசா தியேட்டர்ல உங்களுக்கு சீசன் டிக்கெட் இருந்துச்சமே!!

லிவிங்ஸ்டன் said...

aduthu nanum podalamni idya

kobiraj said...

அக்கு வேர் ஆணி வேரா புட்டு புட்டு வைக்கிறிங்களே .எனக்கு ஒரு டவுட் ஈரோடில புது படங்கள் ஒண்ணுமே ரிலீஸ் ஆகலையா.அப்புறம் தியேட்டர் காரங்க கோவிக்க மாட்டாங்களா

ராம்குமார் - அமுதன் said...

உங்கள் ஊர் திரையரங்குகளை பற்றிய விரிவான பார்வை... நல்ல தகவல்...

///தமிழ்நாட்டிலேயே டீசண்ட்டான ஆட்கள் உள்ள ஊர் லிஸ்ட் எடுத்தால் முதலிடம் கோவை என்றால் இரண்டாமிடம் ஈரோடு..///

ஆனால் உங்களுடைய இந்த முதல் வரிதான் நெருடலாக இருக்கிறது.... கோயமுத்தூர், ஈரோடு காரவங்க மட்டும் தான் டீசன்டானவங்கனா, அது தவிர மத்த ஊர்க்காரங்கல்லாம் என்ன இன்டீசன்ட்டா? மிகத் தவறான எண்ணம்... மிக மிகத் தவறான பார்வை...

கவி அழகன் said...

தமிழ் நடிகர்கள் வில்லனுக்கு விடும் சவாலில் ரசிகர்களுக்கு சூச்சா போயிடுது அதால தான் சி பி சார் பாத்ரூம்ல மிக அக்கறையாய் இருக்கிறார்

கிராமத்து காக்கை said...

தியேட்டரை பற்றி அருமையான விரிவான தகவல் அதுபோல பள்ளிகூடங்களையும் கூறலாம் நண்பரே பயனுள்ளதாக இருக்கும்

Napoo Sounthar said...

SUPER...

Unknown said...

இருடி உனக்கு இருக்கு!

vijayan said...

1960 -களில் ஈரோட்டில் இருந்து முனிசிபல் உயர்நிலை பள்ளியில் {அப்போது அது பன்னீர்செல்வம் பார்க் எதிரில் தாலுக்கா ஆபிஸ் பக்கம் இருந்தது}படித்து கொண்டு இருந்தேன்.அந்த ஊரில் அப்போது இருந்த கொட்டகைகள் கிருஷ்ணா{கஞ்சன் கொட்டாய்}ராஜாராம்,ஸ்டார்,சென்ட்ரல்,ஊருக்கு வெகு தொலைவில் முத்துக்குமார்,பின்னர் வெகு நாட்களுக்கு பிறகு நடராஜ்.தினசரி இரண்டு காட்சிகள்தான்.சனி ஞாயிறு காலை காட்சி குறைந்த கட்டணம் {மூணு அணா,இப்போதைய 18 காசு.}எங்கள் பள்ளிக்கு பின்னால் இருந்த சென்ட்ரல் டாக்கீஸில் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் ஆன அன்று மத்தியான காட்சி போட்டிருந்தார்கள், எங்கள் வகுப்பை சேர்ந்த 40 மாணவர்களும் [எல்லோரும் ஸ்ரீதர் ரசிகர்கள்}வகுப்பை கட் அடித்துவிட்டு படத்திற்கு போனோம்,படம் முடிந்து வெளியே வரும்போது தலைமை ஆசிரியர் திரு.மாரிமுத்து பிள்ளை அவர்கள் எங்கள் uniform -i அடையாளம் வைத்து பிரம்பில் பின்னியது 45 வருடங்கள் ஆகியும் மறக்கமுடியவில்லை,ஈரோடையும் தான்.

உலக சினிமா ரசிகன் said...

கோவைக்கு முதலிடம் கொடுத்த சிபி வாழ்க.

செங்கோவி said...

நல்ல பகிர்வு.

ILA (a) இளா said...

தூள் பதிவு, நடுவால இருக்கிற புள்ளைங்க படத்துக்குப் பதிலா திரையரங்கத்தோட படங்கள் போட்டிருக்கலாமே?
நான் ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்த பதிவுங்க இது.. படமில்லாததால போடாம இருந்தேன்.

சென்னை பித்தன் said...

ஆரம்பமே ஆட்சேபிக்கத்தக்கது! பரவாயில்லை .படங்களுக்காக மன்னிக்கலாம்!!

Menaga Sathia said...

புள்ளி விவரத்தோட அசத்திட்டீங்க..

எப்படிங்க ஒரு மாசத்துக்கு 70 பதிவுக்குமேல போடுறீங்க..இன்னிக்கு தேதி 2தான் ஆகுது,அதுக்குள்ள 6 பதிவு போட்டு சாதனை படைத்திட்டீங்க..

சி.கிருபா கரன் said...

romba super anna

• » мσнαη « • said...

என்னது பாத்ரூமா ???? ஈரோடு ரொம்பதான் முன்னேறிருச்சு போல...எங்க ஊர் தியேட்டரில் எல்லாம் toilet மட்டும் தானே இருக்குது.!!!!!...



கல்லூரி காலத்தில் அபிராமி ,VSP யில் படம் பார்த்து இருக்கிறேன்...எனது முதல் dts அனுபவம் அமைந்தது VSP யில் தான்...2001 ல் என்று நினைக்கிறேன்,...சான்சே இல்லை அந்த நேரத்தில் !!!...

ராஜி said...

சமுதாயத்திற்கு தேவையான அதி முக்கியமான பதிவினை பதிந்துள்ளீர். வளர்க நின் தொண்டு, வாழ்க சிபி சார்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தியேட்டரை பற்றி அருமையான விரிவான தகவல் அதுபோல பள்ளிகூடங்களையும் கூறலாம் நண்பரே பயனுள்ளதாக இருக்கும்//
I second it

சி.கிருபா கரன் said...

cp unga blog enaku romba pidikum..
Enga ooru dharmapuri pathi ezhuda mudiyuma...

சுதா SJ said...

நல்ல பகிர்வு பாஸ்

நிரூபன் said...

ஈரோடு டாப் 10 சினிமா தியேட்டர்கள் ERODE TOP TEN CINE - THEATRES//

ஆகா, தியேட்டரில் தான் படங் காட்டுவார்கள் என்றால், இங்கே ப்ளாக்கில் விதவிதமான, கவர்ச்சியான படங்கள் இருக்கிறதே பாஸ்,
எப்பூடி;-)))

நிரூபன் said...

1. அபிராமி 70 MM A/C DTS //

பாஸ், இது தானே உங்களின் பேவரிட் தியேட்டர்.

நிரூபன் said...

எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் 20 டூ 30 நாட்கள் அபிராமியில் போட்டு விட்டு அதற்குப்பின் மேலே உள்ள தேவி அபிராமியில் போட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள்..//

ஆகா...இப்புடியா சங்கதி, அப்போ நீங்க எப்பவுமே அபிராமி தியேட்டருக்குத் தான் போவீங்க போல இருக்கே.

நிரூபன் said...

தியேட்டர் ஓனர் ஃபோட்டோ கூட இருக்காது.. அதுக்கு தனி கதை இருக்கு.. அது தனியே.. பகிர்கிறேன்.. ( அது ஒரு கில்மா கதை )//

ஆகா...அப்ப அதுக்கும் வெயிட் பண்ணிட வேண்டியது தான்

நிரூபன் said...

VSP A/C DTS - ஆங்கிலப்படத்துக்கென்றே ஒரு தியேட்டர் முதன் முதலாக ஈரோட்டில் நிறுவப்பட்டது இது தான். //

இது உங்க பேவரிட் பிளேசா பாஸ்.

நிரூபன் said...

ராஜாராம், ஆகிய தியேட்டர்கள் க்ளோஸ்டு.. இதுல நடராசா தியேட்டர் மட்டும் 3780 தடவை போலீஸ் ரெய்டுக்குள்ளாகி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.. அந்த தியேட்டரில் மாமூல் வசூல் பண்ணியே பல போலீஸ் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்தன.//

ஸப்பா...இது வேறையா...
ஒவ்வோர் கெட்ட செயல்களிலும், நல்ல செயல்கள் இருக்கு என்பதை அறிந்துள்ளேன்.

நிரூபன் said...

ஈரோட்டிற்கு வர வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் தியேட்டர் பற்றிய விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

Unknown said...

ஈரோடுல இருந்தவரைக்கும் ஈரோடு தியேட்டர் தான் சூப்பர் ன்னு நினைச்சுட்டு இருந்தேன் திருப்பூர் ல வந்து தியேட்டரை பார்த்துட்டு அசந்து போயிட்டேன்
ஸ்ரீ சக்தி, யுனிவர்சல், சூப்பரா இருக்கும் அது மட்டும் இல்லாம இரண்டு சக்கர வாகனத்துக்கு இரண்டு டிக்கட் கிடைக்கும் எவ்வளவு கூட்டமா இருந்தாலும் சைக்கிளுக்கு ஒரு டிக்கட், ரஜினி படம் சைக்கிள் கொண்டுபோய் முதல் ஷோ அலுங்காம குலுங்காம பாத்து இருக்கின்றேன் ஈரோடு அபிராமியில VSP ல டிக்கெட் எடுக்க நாக்குல நுரை தள்ளிரும் இருந்தாலும் நம்ம ஊர் தியேட்டரை பத்தி எழுதி இருக்கீங்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

கோவையை டீசண்டாக றிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்.


அடுத்தபதிவில் சாரியும் கேட்டாச்சு.

எந்த ஆட்டோகாரரும் சொல்வார் அவர் எந்த ஊர்க்காரர் என்று.

baba said...

சிவா தலைவர் படம் அபிராமியில் பார்த்தேன்.

நன்றி
ஆனந்த்

GANESH said...

i AM ALSO FROM ERODE.NICE POST......

Sathish said...

தல, இருந்தாலும் இப்படி நீங்க ஏமாத்த கூடாது. ஆங்கில படத்துகுன்னே ஒரு தியேட்டர் இருக்கறத சொன்னீங்களே, உங்க வீட்டுக்கு போற வழியிலேயே, பிட்டு படத்துகுன்னே பாரதி தியேட்டர் இருக்கே... அத மட்டும் ஏன் விட்டீங்க. (இது தான் சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது. இந்த பதிவ போடாம இருந்தா இந்த விஷயம் உலகம் பூரா தெரியுமா)

soma said...

எல்லாம் சரி. ஆனால் திரைப்படங்கள் பற்றிய புள்ளி விபரங்கள்தான் தவறாக உள்ளன. அபிராமியிலேயே பல படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடி உள்ளன.
பாஷா, படையப்பா,முத்து, இதுதாண்டா போலீஸ், காதலுக்கு மரியாதை போன்ற படங்கள். ராயல் தியேட்டரிலும் அண்ணாமலை, பூந்தோட்ட காவல்காரன் நாட்டாமை, பூவே உனக்காக(175 ) போன்ற படங்கள் 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்து உள்ளன. கிருஷ்ணாவில் மிக முக்கியமாக சின்ன கௌண்டரை விட்டு விட்டீர்கள். என் ராசாவின் மனசில படம் கூட நூறு நாட்களுக்கு மேல் ஓடி உள்ளது. ஸ்டாரில் varusam16 100 நாட்களுக்கு மேலும், கரகாட்டக்காரன் 200 நாட்களுக்கு மேல் ஓடியதாக ஞாபகம்.