Monday, July 04, 2011

நாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேரும் கோட் சூட்ல நீட்டாவும்,தொகுப்பாளினி வழக்கம்போல நைட்டில கசங்கலாவும் ஆஜர்....இன்னைக்கு டபுள் ரோல் கதைகள் அப்டின்னு மதன் சார் சொல்லிட்டு அது பற்றி ரொம்ப சிலாகித்து பெசினார்.. டபுள் ரோல் அந்தக்காலத்துல இருந்தே பிரமாதமான வரவேற்பு பெற்றவைகள்னு.. எடுக்கறது ரொம்ப கஷ்டம்னாரு.. (பார்க்கறது அதை விட கஷ்டம்)

1. நகுலன் - ராஜேஷ்குமார்
இந்தப்படம் போட்டு 2 வது செகண்ட்லயே அபூர்வசகோதரர்கள் இன்ஸ்பிரேஷன்னு தெரிஞ்சிடுச்சு.. அப்பு கமல் மாதிரி ஹீரோ (இவர் தான் இயக்குநரும் ) அவருக்கு தாழ்வு மனப்பான்மை.. தான் அநாதை,யாரும் நம் மீது அன்பு செலுத்துவது இல்லைன்னு.. இது பற்றாதுன்னு குடைக்குள் மழை பார்த்திபன்  மாதிரி இல்லாத ஒரு கேரக்டர் கூட பேசிக்கற மனப்பிறழ்வு நோய் வேற.. 

ஸ்கூட்டில போற ஃபிகர் கிட்டே பேச ஆசைப்படறாரு.. அது கண்டுக்கவே இல்லை.. (இந்தப்பொண்ணுங்க யாரைத்தான் கண்டுக்குவாங்களோ?).. இவர் ஆற்றாமைல பொங்கி அழறாரு.. இசை வேற சோகத்துல போட்டு தாளிக்கறாங்க.. கடைசில எப்படியோ அந்த ஃபிகர் அவரை வண்டில ஏத்திக்கிட்டு கிளம்புது..  

ஹீரோ முழங்காலை கட்டி ரொம்ப சிரமப்பட்டு தான் நடிச்சிருக்கார்.. என்ன பிரச்சனைன்னா நமக்கும் பார்க்க சிரமமா இருக்கு.. டிரமாட்டிக்கா இருக்கு.. சித்தரிக்கப்பட்ட ,செயற்கையான சோகம் மாதிரி நம்ம மூளைக்குள்ள ஒரு அவார்னெஸ் பல்பு எரியுது.. சாரி டைரக்டர் சார்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அதிகம் பழக்கம் இல்லாத அந்த பொண்ணு ஹீரோவை பரிதாபப்பட்டு எங்காவது டிராப் பண்ணினா ஓக்கே.. திடு திப்னு வீட்டுக்கே கூட்டிட்டு போக ஓக்கே சொல்லுமா?
2. அதிக பழக்கம் இல்லாத ஆணிடம் அப்படி பாசமா முகத்தை தடவி கொடுக்குமா?

3. ஹீரோ மாதிரியே இருக்கும் அந்த இன்னொரு கேரக்டர் யாரு? இவரோட கற்பனையா? அண்ணனா? அதற்கு படத்துல விளக்கமே இல்லை.. 


இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

டைட்டிலுக்கான  விளக்கத்தை ஹாய் மதன் கிட்டே டைரக்டர் சொன்னது டச்சிங்கா இருந்துது..  நகுலன் அப்டிங்கறதை வேகமா,தொடர்ச்சியா சொல்லிட்டே வந்தா அது நான் குள்ளம், நான் குள்ளன்னு வரும் ..அது படத்தோட மையக்கரு.ன்னாரு.. குட் ஒன். 


2. சித்திரப்பாவை - சரத்ஜோதி 

ட்வின்ஸ் சிஸ்டர்ஸோட கதை.. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்.. அடிக்கடி ஏதாவது வரைஞ்சிட்டே இருக்கா.. மன நிலைக்காப்பகத்துல அவ ஒரு முறை எங்கேயும் வர சம்மதிக்காம மாடில அபாயமான இடத்துல நின்னு  வரையறா.. அவளை கீழே விழாம காப்பாற்றப்போகும் அவளின் சகோதரி ஸ்லிப் ஆகி கீழே விழுந்துடறா.. அக்கா க்ளோஸ். தங்கை.. எகெயின் டிராயிங்க் கிளாஸ்..


  இந்தப்படத்தின் மூலமா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல.. மனநிலை தவறியவர்களை பாதுகாக்கும்போது நாம முதல்ல ஜாக்கிரதையா இருக்கனும்னு சொல்ல வர்றாரோ? 

இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. மனநலக்காப்பகம் அப்படி அபாயமான மாடியை கொண்டிருக்குமா? பேஷண்ட்டை அங்கே போக அலோ பண்ணுமா?
2. மகள் இறந்தாள் என்ற செய்தி ஃபோனில் அம்மாவுக்கு தெரிவிக்கப்படும்போது அந்தம்மா கிட்டே ஒரு ரீ ஆக்‌ஷனே இல்லையே? ஏன்? ஆ ராசா ஊழலில் மாட்னார்னு கேட்டு மக்கள் சகஜமா இருக்கற மாதிரி  என்ன ஒரு அலட்சியம்?

3.மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால அவ்வளவு தெளிவான ஓவியத்தை வரைய முடியுமா?

இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

 பட ஹீரோயினை நடிக்க வைத்த விதம் ,மற்றும் அந்த நடிகை தேர்வு..  

看完震惊了,这才叫艺高人胆大


3. மைக்கேல் மதன் காமராஜ் - தமிழ் சீனு 

 ஒரே மாதிரி முகத்தோற்றம் உள்ள இருவரில் ஒருவர் செய்யும் தவறால் இன்னொருவர் மாட்டிக்கொள்ளும் கதை.. கேட்க பழைய கதையாக தோன்றினாலும் காமெடியாக கொண்டு போனதால் தப்பித்தார் இயக்குநர்..

போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோவும், போலீஸூம் பேசும் வசனங்கள் நல்லதொரு காமெடி ஸ்க்ரிப்ட் கிடைத்தால் இயக்குநர் கிளப்புவார் என்று கட்டியம் கூறுகிறது.. 


க்ளைமாக்சில் “ கை கழுவிட்டு வாய்யா சாப்பிடலாம்” என மனைவி கூறுவது டச்சிங்காக இருந்தது.. 

 இந்த வாரம் போட்ட 3 படங்களுமே சுமார் ரகங்கள் தான்.







டிஸ்கி - மேலே சொன்ன படங்களின் யூ டியூப் லிங்க் 


http://www.techsatish.net/2011/07/kalaingar-tv-naalaiya-iyyakunar-03-07.html
 

23 comments:

Thirumalai Kandasami said...

முதல் படம் - பார்க்க வில்லை,,ரெண்டாவது படம் மொக்கை ,மூன்றாவது படம் -ஒக்கே

Thirumalai Kandasami said...

Link:


http://www.techsatish.net/2011/07/kalaingar-tv-naalaiya-iyyakunar-03-07.html

குணசேகரன்... said...

3film ok.இன்னும் கொஞ்சம் நன்றாக யோசிக்க வேண்டும்.
என்னோட வலைப்பக்கமும் கொஞ்சம் வந்திட்டு போங்க பாஸ்..

சுதா SJ said...

நானும் பார்த்தேன் பாஸ்,
ரெண்டாவது படம் ஓகே

நெல்லி. மூர்த்தி said...

பணி நிமித்தமாக “நாளைய இயக்குநர்” தொடரினைக் காண்பதில்லை. ஆனால் தாங்கள் விமர்சனமும் அளித்து அதோடு காணொளியின் இணைப்பையும் தந்துள்ளது. தேவையான திரையினை மட்டுமல்ல, விளம்பரமும் இன்றி காண உதவி செய்து எங்களின் நேரத்தினை சேமித்த உங்கள் சேவையைப் பாராட்டியே ஆக வேண்டும்.

Unknown said...

அண்ணே நல்லா தொகுத்து அவங்க வழங்குராங்களோ இல்லையோ...நீங்க வழங்குறீங்க நன்றி

Unknown said...

ok ok

சசிகுமார் said...

இதெல்லாம் பார்க்கிறது இல்லை நண்பா... உன்னுடைய விமர்சனங்கள பார்த்தாலே பார்த்த நிறைவு வருது.... நன்றி நண்பா

மாலதி said...

தாங்கள் விமர்சனமும் அளித்து அதோடு காணொளியின் இணைப்பையும் தந்துள்ளது. தேவையான திரையினை மட்டுமல்ல, விளம்பரமும் இன்றி காண உதவி செய்து எங்களின் நேரத்தினை சேமித்த உங்கள் சேவையைப் பாராட்டியே ஆக வேண்டும்.

மாலதி said...

தாங்கள் விமர்சனங்கள பார்த்தாலே பார்த்த நிறைவு வருது....

Jana said...

ஜெஸ் பாஸ்.. மூணாவது பறவாய் இல்லை.

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கொள்ளைகார பதிவர்கள்

Thenammai Lakshmanan said...

இரண்டாவது படத்தின் விமர்சனம் படித்துவிட்டு வருந்துவதற்கு பதில் சிரிக்க வைத்து விட்டீர்கள் சிபி.:)

காங்கேயம் P.நந்தகுமார் said...

நாளைய இயக்குனர் விமர்ச்சனம் அருமை

உணவு உலகம் said...

ம் ம். நல்லா சொல்லிருக்கீங்க.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

ஆமா, இங்க எதுக்கு லட்சுமி ராய் படம்?

ராஜி said...

மகள் இறந்தாள் என்ற செய்தி ஃபோனில் அம்மாவுக்கு தெரிவிக்கப்படும்போது அந்தம்மா கிட்டே ஒரு ரீ ஆக்‌ஷனே இல்லையே? ஏன்?
>>>
இங்கு என்ன வரனும் Re Action and Reaction?

சரியில்ல....... said...

வணக்கம் சாமியோவ்...

சரியில்ல....... said...

இரட்டை கதாபாத்திரம் என்றாலே அதில் ஒன்று லூசாகவே (இல்லன்னா ஏதாவது குறைபாடு ) இருக்கிறதே ஏன்?

சரியில்ல....... said...

வழக்கம் போல கலக்..கலக்..கலக்...கலக்கிட்டிங்க...

சரியில்ல....... said...

வித்தியாசமான புகைப்பட தேடல்களுக்கு வாழ்த்துக்கள்....

சரியில்ல....... said...

இந்த பதிவில் அஜால் குஜால் மேட்டர் எதுவும் சிக்கவில்லை.. நான் கெளம்புறேன்...