Sunday, July 31, 2011

டென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர்ஸ் நளினா சொல்றதை கேளுங்கப்பா

http://thavorngrandplaza.com/phuket-travel/wp-content/uploads/2010/05/tb_Clinics_450x300.jpg

உளைச்சலைப் போக்க உணவே மருந்து!

 ஆரோக்கியப் பக்கம்!
ன வலிமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதே நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது. உடலையும், மனதையும் உற்சாகமாக இயங்க வைக்க, ஆரோக்கியமான சரிவிகித உணவை  கடைப்பிடித்தாலே போதும், மனஅழுத்தத்தை முற்றிலும் குறைக்கலாம்.  நாம் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உணவியல் நிபுணர் வி.சுகன்யா இங்கே விரிவாக சொல்கிறார்.


'எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் தேவைதான். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும்போதுதான் மன அழுத்தம் என்கிற 'ஸ்ட்ரெஸ்’ நம்மை இறுக்கிப் பிடிக்கத் தொடங்குகிறது. உதாரணத்திற்கு... இன்றைக்கு நாம் 10 வேலைகளை முடித்திருக்கிறோம் என்றால், நாளைக்கு அதை 12 அல்லது 13 என்பதுபோல் அதிகரித்துக் கொள்ளலாம்.  அதுவே, ஒரே நாளில் 20 வேலைகள் என இலக்கு நிர்ணயிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் போன்ற பல்வேறு அடிப்படை சத்துக்களைக் கொண்டதுதான் ஆரோக்கியமான உணவு.  இவை சாப்பிடும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


தொடர்ச்சியான வேலையால்,  பெரும்பாலானோர், காலை உணவை தியாகம் செய்துவிடுவதுண்டு. இது தவறு! இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்,  உள்ள இடைவெளி அதிகம். காலை உணவை தவிர்க்கும்போது உடலில் போதிய சக்தி இல்லாமல் போய்விடும். இதனால், சிறிய மன அழுத்தம் ஏற்பட்டாலும், அது அதிகமாகி விடும்.  தலைவலி, தலைசுற்றல், கவனக் குறைவு போன்ற கூடுதல் பிரச்னைகள் தலைதூக்கும்.'' என்றவர், மன அழுத்தம் குறைவதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

http://www.odt.co.nz/files/story/2009/11/youth_health_clinic_nurse_kate_balfour_takes_the_b_1449208845.JPG

'மன அழுத்தத்தைக் குறைப்பதில், நார்ச்சத்து நிறைந்த தானியங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை 'செரடோனின்’ என்கிற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும். ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். பசலைக் கீரை மன உளைச்சலை குறைக்கச் செய்யும். மேலும், மீன் உணவில் அதிகமாக இருக்கும் ஒமேகா-3 என்கிற கொழுப்புச் சத்தும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காபியை தவிர்ப்பதாலும், டென்ஷன், ஸ்ட்ரெஸிலிருந்து பெருமளவு விடுபடலாம். மன அழுத்தம் இருப்பவர்கள், காபிக்குப் பதிலாக பால் சேர்க்காத பிளாக் டீ ஒரு நாளைக்கு இருமுறை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தினசரி உணவில் கேரட், வெள்ளரி போன்ற பச்சைக் காய்கறிகள், பழ வகைகளை சேர்த்து சாலட்டாக சாப்பிடவேண்டும். எண்ணெய், நெய், டால்டா, தேங்காயின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். 

மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், ரத்தத்தில் சர்க்கரை,  கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், இவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

உடலில் தண்ணீர் அளவு குறைந்தாலும், போதிய தூக்கமின்மையாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். தினசரி குறைந்தது இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். டென்ஷன் இருக்கும்போது தண்ணீர் குடித்தால் நல்லபலன் கிடைக்கும். ஏழு மணிநேர தூக்கம் மிக அவசியம். தவிர்க்கமுடியாமல், இரவு விழிக்க வேண்டி இருந்தால், மறுநாள் சீக்கிரமாகத் தூங்கிவிடுவது நல்லது.
மன அழுத்தத்துக்கு செலவே இல்லாத மருத்துவம் நடைப்பயிற்சிதான். தினசரி குறைந்தது அரை மணி நேரம் மிதமான வேகத்தில் தொடர்ந்து நடப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.

http://www.spraguephoto.com/stock-photos/9935-Nursing-students-in-class,-Nursing-school-at-Muttuchira,-Kerala,-India.%7C9186.jpg
சிகரெட், மதுப் பழக்கம்,  மன அழுத்தத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்து விடும்,  ஜாக்கிரதை! தொடர் மன அழுத்தம் இருந்தால் நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது.’ என்றார் சுகன்யா அக்கறையுடன்


நன்றி - டாக்டர் விகடன்


டிஸ்கி - ஈரோட்டில் புத்தகத்திருவிழா நடக்கிறது.. ட்விட்டர் நாயகர்கள் கம் ஈரோடு, கோவை,திருப்பூர் ட்விட்டர்ஸ் கம் பதிவர்கள் சிலர் ஈரோடு வர்றாங்க.. ஜஸ்ட் எ ஃபார்மல் மீட் .. வர்றவங்க எல்லாம் வாங்க.. இதுவரை வர்றதா சொன்னவங்க

1. அவினாசி ராஜன் லீக்ஸ் ( ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கடை )

2. திருப்பூர்  கே பி கிருஷ்ணகுமார் ( பரிசல்காரன் )

3. கோபி செல்வா ( கோமாளி செல்வா)

4. ஷர்புதீன் ( ரசிகன்)

5. கே தீபக் குமார்

31 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பதாம் பருப்பு.....

MANO நாஞ்சில் மனோ said...

அடபாவி ஞாயிற்று கிழமையும் அதுவுமா காலையிலேயே ஆரம்பிச்சிடியா ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே சிபி அண்ணே எனக்கு ஒரு கிலோ பத்தாம் பருப்பும், பிஸ்தாவும் அனுப்பி தாங்கன்னே....

MANO நாஞ்சில் மனோ said...

என்னக்கு புத்தக திருவிழான்னு சொல்லலையே ஏன்...???

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி ராஸ்களுக்கு ஏதோ இன்டைரக்ட் மெசேஜ் சொன்னா மாதிரி இருக்கே ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

யாரு சுகன்யா'வா ஹி ஹி.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

சுகன்யா யாரு?

சக்தி கல்வி மையம் said...

ஞாயிற்றுக்கிழமை சொந்த சரக்கு எதுக்கு வேஸ்ட் பண்ணறது..
அப்படிதானே மாப்ள..

மாலதி said...

நல்ல சிந்தனை இன்றய நிலையில் நீவீர் குறிப்பிடும் இந்த இதயம் தொடர்பான பயணிகளே மிகையாக இருக்கிறது அவற்றிற்கு முறையான உணவு பழக்கத்தையும் முறையான வழிகாட்டலையும் வழங்கியமைக்கு பாட்டுகள் நன்றி .

கோகுல் said...

நேற்று ஆன்மிகம் இன்று ஆரோக்யம் கலக்குங்க தல!

Unknown said...

ஓ பிரியா ....ஓ பிரியா - பாட்டு பாடிப்பாருங்கோ......மன உளைச்சல் போகுங்கோ ஹிஹி!

நிரூபன் said...

டென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா//

ஏன் பாஸ்,
பிரீயா சாக்கிலேட் நளினாகிட்ட இருந்து வாங்கி தரப் போறீங்களா;-))

நிரூபன் said...

நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் போன்ற பல்வேறு அடிப்படை சத்துக்களைக் கொண்டதுதான் ஆரோக்கியமான உணவு. இவை சாப்பிடும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.//

சூப்பர் தகவல்கள் டாக்டர்.

நிரூபன் said...

தொடர்ச்சியான வேலையால், பெரும்பாலானோர், காலை உணவை தியாகம் செய்துவிடுவதுண்டு.//

குறிப்பாக, ஆப்பிசிற்கு ரெடியாகிக் கொண்டு ப்ளாக் எழுதும்/
பின்னூட்டம் போடும் நபர்கள்;-))

நிரூபன் said...

மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.//

ஆமா...எனக்கும் மன அழுத்தம் இருக்கென்ற நினைப்பில் நான் பாதாமை நிறையச் சாப்பிட்டால்,
பிறகு மூட் மாறிடாது?
அப்புறம் கலியாணம் ஆகாத பிரம்மசாரிப் பசங்க என்ன பண்றது பாஸ்?

நிரூபன் said...

உடலில் தண்ணீர் அளவு குறைந்தாலும், போதிய தூக்கமின்மையாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். தினசரி குறைந்தது இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். டென்ஷன் இருக்கும்போது தண்ணீர் குடித்தால் நல்லபலன் கிடைக்கும்.//

இனிய காலை வேளையில் தண்ணீரை அதிகம் குடிக்க வைக்கும், நமக்கான ஆரோக்கியத் தகவலைப் பகிர்ந்து கொள்ளும் அருமையான பதிவு.

'பரிவை' சே.குமார் said...

ஆரோக்கியத் தகவலைப் பகிர்ந்து கொள்ளும் அருமையான பதிவு.

நாய் நக்ஸ் said...

அதெல்லாம் இருக்கட்டும் ---எங்களுக்கு பார்லி வாட்டர் போதும் அண்ணே
ஒன்னும் வராது

கிராமத்து காக்கை said...

பயனுள்ள கருத்துகள்
இதையே கொஞ்சம் மாற்றி
சொல்லிருக்கிறேன் என்னுடைய தளத்தில் பாருங்கள்

Unknown said...

ஆகா! நிச்சயமா எல்லாருக்கும் தேவையான பகிர்வு! குறிப்பா எனக்கு ஹி ஹி!

ஆமா.... பார்லி டீ குடிச்சா நல்லதாமே இதுக்கெல்லாம்? :-)

Mohamed Faaique said...

பகிர்வுக்கு நன்றி..

rajamelaiyur said...

Very useful post friend . . .

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

http://astrovanakam.blogspot.com/

Unknown said...

பகிர்தலுக்கு நன்றிகள் தல!

கவி அழகன் said...

நிசமா கலக்கலா இருக்கு

erodethangadurai said...

சிபி வரும் சனிகிழமை நான் வருகிறேன் . நண்பர்களோடு ஒரு சந்திப்பு வைத்து கொள்வோமா ? ?

Prabu Krishna said...

"குங்குமம்" கட்டுரை படித்தேன்... நல்ல விழிப்புணர்வு கட்டுரை. மேலும் எழுத வாழ்த்துகள்.

Prabu Krishna said...

"குங்குமம்" கட்டுரை படித்தேன்... நல்ல விழிப்புணர்வு கட்டுரை. மேலும் எழுத வாழ்த்துகள்.

செங்கோவி said...

டாக்டர் விகடன்லயும் இதே தலைப்பு தான் வச்சிருந்தாங்களா?

KANA VARO said...

Good post. தேவையான விஷயம் தான். ஆனா இதை கடைப்பிடிக்கிற நிலமையில நான் இல்ல

Unknown said...

அடடே....இந்த தடவ நானும் மன உளைச்சலைப் பத்தி தான் பதிவு போட்டு இருக்கேன்.

நேரம் இருந்தா நம்ம பதிவ படிச்சு பாருங்க....இதோ லிங்க்
http://penathuligal.blogspot.com/2011/08/blog-post.html