Published on Thursday, July 21, 2011 at 5:42:00 PM with 34 Comments

உங்க கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட் உங்க புருஷனா?கிழிஞ்சுது கிருஷ்ணகிரி

cid:ACB786ED36DE4CC2A9A7C8DA9A9334BF@HomePC1.கடவுளுக்கு செவி மடுக்க நேரம் இருக்கிறது,பிரார்த்தனை செய்ய நமக்குத்தான் நேரம் இருப்பதில்லை

---------------------

2. நீ செய்யும் முட்டாள்தனங்களை எல்லாம் காதலுடன் ரசிக்கிறேன். ஆனால் நீ என்னை காதலிப்பது முட்டாள் தனம் அல்ல

-----------

3. நான் வெற்றி பெறும்போது அருகில் இருந்து அதைக்காண அப்பா இல்லையே எனவும்,தோல்வி அடையும்போது அருகில் இருந்து ஆறுதல் சொல்ல  நீ  இல்லையே எனவும் வருத்தப்படுவேன்.

-------------------------

4. காதல் எனும் சதுரங்கத்தில் நீ ராணி ,நான் ராஜா.அடிக்கடி எனக்கு செக் வைக்கிறாய்,   என் காதலை செக் செய்கிறாய்

---------------------

5. என் வழியில் நான் போறேன் ,எனக்கு வழி விடு என்றாய்,வழி விட்டேன் , நீ எனக்கு வலி கொடுத்தாய்

---------------------


cid:B251579C8DF94BC79A282719CFE09A4B@HomePC
6. அவள் பாதம் பட்ட இடத்தை முத்தம் இட்டேன்,அம்மாவிடம் புகார் செய்தாள்,”ஆண்ட்டி ,உங்க பையன் மண்ணு திங்கறான்”#1990 எல் கே ஜி லவ் ஸ்டோரி

-------------------

7. வெட்ட வெட்ட வளர்ந்துடுதே என ஆணும், வெட்டி வெட்டி பார்த்தும் வளர மாட்டேங்குதே என பெண்ணும் வருத்தப்படுவது தலை முடி விஷயத்தில்

--------------------

8. நீளம் தாண்டுதலில் இந்தியா தங்கப்பதக்கம் இழந்தது.


பதக்கத்தை கழுத்துல மாட்டிக்கிட்டே ஓடி வந்தா விழத்தான் செய்யும், கழட்டி பாக்கெட்ல சேஃபா வெச்சுக்கிட்டு ஓடி இருக்கனும்

-----------------------

9. உன் அழகுக்கு நான் இணை இல்லை,ஆனாலும் நான் உன் இணை ஆனேன்

#நன்றி நவிலல் இன் காதல் திருவிழா

--------------

10. சிவப்பழகு க்ரீம்கள் ஏதும் போடாமலேயே இன்சிடெண்ட்டாய் சிவந்தாய்!!நான் என் காதலை உன்னிடம் சொன்னபோது#தங்க தருணம்,குங்கும வர்ணம்

--------------------11 டியர்,எங்கம்மா,அப்பா,அக்கா பார்த்துத்தான் உங்களை ஓக்கே பண்ணனும்”

“நம்ம காதல் என்ன ரியாலிட்டி ஷோவா? 3 ஜட்ஜ்ங்க பார்த்து தீர்மானிக்க?.

-------------------

12. என்னைப்பிடிக்காதது போல் என்றும் நீ நடிப்பதால் சிறந்த நடிகை ஆகிறாய்.(குணச்சித்திரம்)

------------------

13. இந்த உலக நன்மைக்காக நீ என்ன கிழித்தாய்?என கேட்க முடியாதவர்கள் பட்டியலில் கண்டக்டர்,சினிமா டிக்கெட் கிழிப்பவர்

------

14. 10 ஆண்டுகளில் ரூ.15.5 லட்சம் கோடி ஊழல்:ஆய்வில் அதிர்ச்சி தகவல் #இந்த சாதனையில் எங்களுக்கே பெரும் பங்கு உள்ளது - கலைஞர்

-----------

15. பெண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்குக்காரணம் அவங்க அடிக்கடி மனசை மாத்திக்கறதாலா? டவுட்டு

---------

Valentines Day Pop

16. மேரேஜ் ஆகும் வரை என் நகத்தைக்கூட நீங்க தொடக்கூடாது.. “

ச்சே.. ச்சே. நகத்தை எதுக்கு? தேகத்தை மட்டும் தொட்டுக்கறேன் #ஜிகிடி


---------------------

17. உன் காதலி எல்லாத்தையும் ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருப்பாளாமே?

ச்சே ச்சே எல்லாத்தையும் அல்ல,நெயில் பாலீஸை மட்டும்
-----------------


18. என்னை மறந்துடுங்க என சொல்லி உன் செல் எண்ணை மாற்றினாய்.. ஆனால் என்னால் என்னை மட்டும் மாற்ற முடியவில்லை.

-----------------

19. உன் கணவருக்கு விளம்பர மோகம் ஜாஸ்தின்னு எப்படிடி சொல்றே?

பின்னே என்னடி? கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட்னு அவர் பேரை போட்டுக்கறாரே?

---------------

20. ரூ.200 கோடி வசூலித்தும் வீடு ஒதுக்கவில்லை சஹாரா சிட்டிஹோம்ஸ் மீது போலீசில் புகார்#சின்னா வீடா இருந்தாலும் பரவால்ல ,அழகான வீடா வேணும்னீங்களோ?

----------------

34 comments:

ராஜி said...

Tweels lam kalakal ragam.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஆமினா said...

ஒரு நாளைக்கு எத்தன மொற தான் இங்கே வரது? :)

கலக்கல் ரகம்ஸ்!!

கிருபாநந்தினி said...

முதல் பொன்மொழி- முதல் தரமான பொன்மொழி!

செங்கோவி said...

நீங்க எழுதும் பதிவுகளை எல்லாம் முட்டாள்தனத்துடன் ரசிக்கிறோம்.ஆனால் உங்கள் பதிவுகள் முட்டாள்தனமானவை அல்ல.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா படமெல்லாம் சூப்பரா இருக்குடோய்.....!!!

நாய்க்குட்டி மனசு said...

6 -பாழாப் போச்சு !!

சென்னை பித்தன் said...

கலக்கல் கதம்பம்.

R.Puratchimani said...

பல வாரங்களாக நட்சத்திரமாக விளங்கும் உங்களை இந்தவார நட்சத்திரம் என்று அறிமுகப்படுத்திய தமிழ்மணத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். :))
வாழ்த்துக்கள்

M.R said...

சிபி :-வழி கொடுத்தேன் ,பதிலுக்கு வலி
கொடுத்தாய் .

அருமையான வரிகள்

விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய் ,விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் . என்ற பாடல் நினைவிற்கு வருகிறது

M.R said...

எட்டாவது வரி

இந்தியா இழந்தது(பதக்கம்)நகை

படித்ததும் வந்தது புன்னகை

ராஜி said...

அவள் பாதம் பட்ட இடத்தை முத்தம் இட்டேன்,அம்மாவிடம் புகார் செய்தாள்,”ஆண்ட்டி ,உங்க பையன் மண்ணு திங்கறான்”#1990 எல் கே ஜி லவ் ஸ்டோரி
>>
எல்.கே.ஜி யிலியே ஆர்ம்பிச்சுட்டீங்களா உங்க சேட்டையை.

ராஜி said...

இந்த உலக நன்மைக்காக நீ என்ன கிழித்தாய்?என கேட்க முடியாதவர்கள் பட்டியலில் கண்டக்டர்,சினிமா டிக்கெட் கிழிப்பவர்
>>>
நாளை வெள்ளிக்கிழமை, தான் படத்துக்கு போவதை என்பதை நாசூக்காய் உணர்த்திய சிபி, உங்க மூளையை இன்ஸ்யூர் பண்ணுங்க

ராஜி said...

நீ செய்யும் முட்டாள்தனங்களை எல்லாம் காதலுடன் ரசிக்கிறேன். ஆனால் நீ என்னை காதலிப்பது முட்டாள் தனம் அல்ல
>>
முட்டாள்தனம் அல்ல, அதுக்கும் மேல னு அவங்களுக்கு தெரியாதுப் போல

ஆகுலன் said...

வழமை போல் ஒரு நல்ல கலக்கல்...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

Reverie said...

11 கலக்கல்..

தமிழ்வாசி - Prakash said...

உங்க கிச்சன்ல நீங்க தான் கிரியேடிவ் ஹெட்டாமே...

J.P Josephine Baba said...

சி.பி அருமையான சிந்தனைத் துளிகள்!!

கடம்பவன குயில் said...

கவிதை பாதி டிவிட்ஸ்பாதி கலந்து செய்த சிபிசார் பதிவு சூப்பர்.

2, 3, 4, 5, 9, 10 கவிதை போல் இருந்தது. நல்லா கவிதை எழுதறீங்க. கலக்குங்க.

S.Menaga said...

7 வது ட்விட்ஸ் சூப்பர்ர்!!

சரியில்ல....... said...

நல்லா இருக்கு பாஸ்...

ஹேமா said...

சிபி....தத்துவங்களில் சிலவற்றை ஒற்றியெடுத்துகொள்கிறேன்.எனக்கும் தேவைப்படுகிறது !

நிரூபன் said...

கடவுளுக்கு செவி மடுக்க நேரம் இருக்கிறது,பிரார்த்தனை செய்ய நமக்குத்தான் நேரம் இருப்பதில்ல//

ஏன்னா, நாம ப்ளாக்கோடு பிஸியாகிட்டோமோ;-)))

நிரூபன் said...

நீ செய்யும் முட்டாள்தனங்களை எல்லாம் காதலுடன் ரசிக்கிறேன். ஆனால் நீ என்னை காதலிப்பது முட்டாள் தனம் அல்ல//

அடடா...இப்படி ஒரு டுவிட்ஸ் காதலிக்கு கிடைச்சாலே, அவள் வானத்தில் பறப்பாள் போல இருக்கே.

நிரூபன் said...

நான் வெற்றி பெறும்போது அருகில் இருந்து அதைக்காண அப்பா இல்லையே எனவும்,தோல்வி அடையும்போது அருகில் இருந்து ஆறுதல் சொல்ல நீ இல்லையே எனவும் வருத்தப்படுவேன்//

செண்டி மெண்டல்....
டச்சிங்..பாஸ்.

நிரூபன் said...

காதல் எனும் சதுரங்கத்தில் நீ ராணி ,நான் ராஜா.அடிக்கடி எனக்கு செக் வைக்கிறாய், என் காதலை செக் செய்கிறாய்//

பாஸ், தான் ஒரு செஸ் பிளேயர், முன்னாள் சாம்பியன் என்பதை காதலிலும் நிரூபித்து விட்டார்.

கலக்கல்.

நிரூபன் said...

என் வழியில் நான் போறேன் ,எனக்கு வழி விடு என்றாய்,வழி விட்டேன் , நீ எனக்கு வலி கொடுத்தாய்//

இதயத்தை டச் பண்ணிட்டீங்க.

இதை அவங்க கேட்டால் எவ்ளோ பீல் பண்ணுவாங்க.

நிரூபன் said...

வெட்ட வெட்ட வளர்ந்துடுதே என ஆணும், வெட்டி வெட்டி பார்த்தும் வளர மாட்டேங்குதே என பெண்ணும் வருத்தப்படுவது தலை முடி விஷயத்தில்//

பாஸ் இதனூடாக நீங்கள் வேறு ஒன்றும் சொல்ல வரவிலைத் தானே?

நிரூபன் said...

மேரேஜ் ஆகும் வரை என் நகத்தைக்கூட நீங்க தொடக்கூடாது.. “

ச்சே.. ச்சே. நகத்தை எதுக்கு? தேகத்தை மட்டும் தொட்டுக்கறேன் #ஜிகிடி//

ஹா...ஹா...நல்ல வேளை அவங்க கிட்ட அடி ஒன்றும் வாங்கிக்கலையே(((:

நிரூபன் said...

உன் கணவருக்கு விளம்பர மோகம் ஜாஸ்தின்னு எப்படிடி சொல்றே?

பின்னே என்னடி? கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட்னு அவர் பேரை போட்டுக்கறாரே?//

பாஸ், உண்மையை ஓப்பினாச் சொல்லிட்டீங்களே.
ஹா..ஹா...

நிரூபன் said...

டுவிட்ஸ் அனைத்துமே வழமை போல கலக்கல். காதல் கனி ரசமும், தத்துவங்களும், லொள்ளுகளும் வழிந்தோடுகின்றது.

மாய உலகம் said...

என் வழியில் நான் போறேன்..வழி விடு என்றாய் வழி விட்டேன் நீ எனக்கு வலி கொடுத்தாய்.......


புன்னகையிலிருந்து சோகத்துக்கு இழுத்துச்செல்கிறது