Wednesday, July 13, 2011

அடுத்த ஆப்பு அழகிரிக்கு!!!! ஜூ வி கட்டுரை

http://www.envazhi.com/wp-content/uploads/2010/10/Rajini-Alagiri-invite.jpgமிஸ்டர் கழுகு: பெமா வலையில் கலைஞர் டி.வி.!


செல்போனில் பேசியபடியே வந்தார் கழுகார். நம்மைப் பார்த்ததும், ''நியூஸை கன்ஃபார்ம் செய்ததும், மிஸ்டு கால் கொடுங்கள்!'' என்று  போனை கட் பண்ணினார். ''மணல் மேட்டரில் ஒரு க்ளைமாக்ஸ் நடக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன்...'' என்றவர், மற்ற செய்திகளை ஆரம்பித்தார்!


''தயாநிதி மாறனின் ராஜினாமா காட்சிகள் பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தேன். கடந்த வியாழன் அன்று இரவே, சென்னைக்குத் திரும்பி வர நினைத்தார். ஆனால், மீடியாக்கள் சூழ்ந்துகொண்டு துளைத்தெடுப்பார்கள் என்பதால், வெள்ளிக்கிழமை இரவுதான் வந்தார்.

நேராக கோபாலபுரம் போய், கருணாநிதியைச் சந்தித்தார். கருணாநிதிதான் அவருக்கு அதிகம் ஆறுதல் சொன்னதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் டி.ஆர்.பாலு,  ஜெகத்ரட்சகன், துரைமுருகன் போன்றவர்களால் கருணாநிதி வீடு நிரம்பியது. ஒருவிதமான விரக்தி மனோநிலையில், 'இனிமேல் என்னால் பண்றதுக்கு எதுவும் இல்லை. யாராவது ஆலோசனை இருந்தா, சொல்லுங்க’ என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினாராம் கருணாநிதி.


இந்த நிலையில், மறுநாள் காலை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருவதாகவும், கருணாநிதியைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. 'என்ன விஷயமாக இருக்கும்?’ என்று கருணாநிதி யோசித்தார். ஆ.ராசா, தயாநிதி ஆகிய இருவரும் பதவி விலகிய நிலையில், 'அந்த இடங்களுக்கு யாரை நியமிக்கலாம்?’ என்று பிரதமர் விசாரிக்கச் சொன்னதற்காகத்தான் பிரணாப் வருவதாகச் சொன்னார்கள்.''

''யாருடைய பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்​டனவாம்?''

''கருணாநிதிக்கு இதுவும் புதுத் தலைவலியாக மாறியது. நாகை ஏ.கே.எஸ்.விஜயனை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். டி.ஆர்.பாலுவையே அமைச்சர் ஆக்குங்கள் என்பது அழகிரியின் பரிந்துரை. ஜெயதுரை அல்லது நாகர்கோவில் ஹெலன் டேவிட்சனை அமைச்சராக்க வேண்டும் என்பது ராஜாத்தி அம்மாள் கோரிக்கை. கனிமொழி உள்ளே இருப்பதால், அவரது ஆதரவு யாருக்கு எனத் தெரியவில்லை.

இந்த நிலையில், மண்டையைப் பிய்த்துக்கொண்டாராம் கருணாநிதி. 'யாருமே மந்திரியாக வேண்டாம்! ஒவ்வொருத்தராக ராஜினாமா பண்ணிட்டு வர்றதுக்குதான் மந்திரி ஆகணுமா?’ என்று வருத்தப்பட்ட கருணாநிதி... இதையே பிரணாப் முகர்ஜியிடமும் சொன்னாராம். இதைத் தெரிந்துகொண்ட ஸ்டாலின் கோபம்​கொண்டதாகவும், இதனால் கருணாநிதியைச் சந்திப்​பதைத் தவிர்த்ததாகவும் சொல்கிறார்கள்.''

http://www.envazhi.com/wp-content/uploads/2010/04/alagiri-jake.jpg

''பிரணாப்பின் சமாதானம் என்னவாம்?''

''அவர் தி.மு.க-வை சமாதானம் செய்ய வரவில்லை. பிரதமரின் கோபத்தைக் கொட்டுவதற்கே வந்தாராம்!''

''ஆ.ராசாவைக் கைது செய்தாகிவிட்டது. தயாநிதி ராஜினாமா செய்துவிட்டார். இதற்கு மேல் என்னவாம் பிரதமருக்கு?''

''அடுத்த கோபம், அழகிரி மீது திரும்பி உள்ளதாம் டெல்லிக்கு! 'அழகிரி நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை. கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் இல்லை’ என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் கிளம்பின. 'தமிழில் பதில் சொல்லலாம்’ என்று சபாநாயகர் மீராகுமார் சொன்ன பிறகும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அழகிரி கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், உரத் துறை சம்பந்தமான  மீட்டிங்குகளிலும் கலந்துகொள்வது இல்லையாம். உர விலைக் குறைப்பு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கேபினெட் அமைச்சர் என்ற முறையில் அழகிரிதான் நடுநாயகமாக இருந்து அதை நடத்தி இருக்க வேண்டும். அவருக்குத் துணையாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியையும் சேர்த்தார்கள். ஆனால், அன்றும் அழகிரி எஸ்கேப்!''

''அப்படியா?''

''கூட்டமே நடக்கவில்லை. 'அழகிரி வராததால் இந்தக் கூட்டம் நடக்கவில்லை’ என்று அம்பிகா சோனி வெளிப்படையாகவே அறிவித்தார். உரங்கள் தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஒரு தாக்கீது வந்தது. அதற்கும் அழகிரியிடம் இருந்து உரிய பதில் அனுப்பிவைக்கப்படவில்லை. அஸ்ஸாம் முதல்வர், பிரதமரைத் தொடர்புகொண்டு, இது தொடர்பாக மூன்று முறை பேசினார். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்மோகன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6nBltvFh5XQMh_g7zpUt-XGSsMWPTMB4YqnKUDe55VWBG9I1Kya40UwjynXyOF1Qejgh47Rh1yNDD1hcAzexvo2cpbB7vjERibD0K1VZwWQOtgCZs4662HnSfFdASvE8zTstoX1uWAFD3/s320/alakiri+stalin+kanimoli+thayanithi.jpg

அதனால், அந்த மாநிலத்தின் மீது கொஞ்சம் அதிகக் கவனம் அவருக்கு உண்டு. அதிலும், அழகிரி சுணக்கமாக இருந்தார். உச்சக்கட்ட கோபம், சமீபத்தில் நடந்த கேபினெட் கூட்டத்துக்கு அழகிரி வராததுதான்.''


''அவர் மதுரையில் இல்லையே!''

''அவர் மதுரையில் இல்லை என்றால், டெல்லியில்தான் இருப்பாரா என்ன? ஜூலை 4-ம் தேதி பாட்டியாலா கோர்ட் விசாரணைகள் தொடங்கியது அல்லவா? அதையட்டி அழகிரியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் ஆகியோர் டெல்லிக்குச் சென்றார்கள். கனிமொழியைச் சந்தித்தார்கள்.

அப்படியே சுற்றுலாத் தலமான குலுமணாலி சென்று ஓய்வெடுத்தார்கள். கேபினெட் வியாழக்கிழமை நடக்கும்போது, அழகிரி டெல்லியில் இல்லை. பிரதமர் கோபத்துக்கு இதுதான் காரணம். அந்த வருத்தங்களை பிரணாப் கொட்டியதாகச் சொல்கிறார்கள். 'செயல்படாத ஒருவருக்கு கேபினெட் அந்தஸ்து உள்ள பதவி தேவையா? அவரை  பதவி விலகச் சொல்லுங்கள், அல்லது முக்கியத்துவம் இல்லாத இலாகாவை வாங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்று காங்கிரஸ் மேலிடம் சொல்லச் சொல்லி இருக்கிறதாம்.''


''என்ன செய்வார் கருணாநிதி?''

''அவரோ, அழகிரியிடம் எதையும் சொல்லும் நிலையில் இல்லை. மன்மோகனிடமும் சொல்ல முடியாது. அநேகமாக, இலாகா மாற்றத்தின்போது அழகிரிக்கு டம்மியான இலாகா தரப்படலாம்!'' என்ற கழுகார்... டெல்லி நியூஸுக்குத் தாவினார்.

''ஜூலை 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு அறிக்கை தாக்கல் செய்து, தயாநிதி மாறனுக்குச் சிக்கல் ஏற்படுத்தியது அல்லவா? இன்றைய தினம், மத்திய அமலாக்கத் துறை தனது அறிக்கையைத் தாக்கல் செய்து, அடுத்த சிக்கலை உண்டாக்கிவிட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_5seORehqVW8RIRx_RlvuLBI7PqZyGLgRR-PxmYSDyLzxgPkM-9L-1aicK1omrNlLu4XiarrqZ9xOAVvavYsmMtOKWNPq8wKI7uxZaByMykgwhUYEX9_lz0Vc72yiE5Do4Y-dIE40vdAG/s400/alagiri_60.jpg

அவர்கள் குற்றம் நடந்திருப்பதைச் சொன்னார்கள். இவர்கள் இது நடந்ததால் கைமாறிய பணம் மற்றும் இந்தியாவுக்கு உள்ளே வந்த, வெளியில் சென்ற பணத்தின் மதிப்பைப் பட்டியல் இட்டு மலைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். ஃபெமா மற்றும் ஃபெரா சட்டங்களையும், முறைகேடான நிதியில் தொடங்கப்பட்ட நிறுவனங்களை முடக்குவது பற்றிய ஏராளமான சட்டங்களையும் துணைக்கு அழைத்து இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

டிபி ரியாலிட்டி நிறுவனம் லைசென்ஸ் பெறுவதற்காக 200 கோடி பணம் தந்தது. அது குஸேகான் மூலமாக சினியுக் நிறுவனத்துக்கு வந்து, அது கலைஞர் டி.வி-யை ஆரம்பிக்கத் துணை புரிந்ததாகக் கொண்டுவருகிறார்கள். 'எனவே கலைஞர் டி.வி-யை இந்த வழக்கில் சேர்த்து, அந்தச் சொத்தையும் அட்டாச் பண்ணப்போகிறோம்’ என்று அவர்கள் சொல்லி இருப்பதுதான் மாபெரும் அட்டாக்!''

''கலைஞர் டி.வி-யையே மொத்தமாக முடக்கி​விடுவார்​களா?''

''ஃபைன் போடுவது ஒரு வகை. வழக்கு நடந்து முடியும் வரை கணக்குகளைத் தன்னுடைய கண்காணிப்பில் வைப்பது இன்னொரு வகை. மொத்தமாக செயல்படவிடாமல் தடுப்பது மூன்றாவது. இதில் எதைச் செய்யப்போகிறார்களோ? சுமார் 7,000 கோடிக்கும் அதிகமான பணம் இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறி நடமாடி இருக்கிறதாம்.

சைப்ரஸ், மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரிட்டீஸ் வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகளும், சில தீவுகளும் இந்த வலைப் பின்னல்களுக்குள் வருகின்றனவாம். தகவல்களைத் திரட்டிக் கொண்டுவரக் களத்தில் குதித்துள்ளதாம் அமலாக்கத் துறை. இதில் நிகழ்ந்த மிக முக்கியமான கைமாறுதல் விஷயங்களை, அடுத்தடுத்த அறிக்கைகளில் கொண்டுவந்து, அதிர்ச்சியைக் கூட்டுவார்களாம்!'' என்று சொல்லி முடிக்கவும், கழுகாருக்கு அந்த மிஸ்டு கால் வரவும் சரியாக இருந்தது. புன்னகைத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்!

''மணல் கொள்ளையைப்பற்றி ஏற்கெனவே உமது நிருபர் எழுதி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை செய்திருந்தார். மதுரை வட்டாரத்துக் கொள்முதல் விஷயங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, மன்னார்குடிப் பிரமுகர் கைக்குச் சென்றது. அவரும் மதுரையில் தனக்கு ஓர் ஆளை நியமித்து காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார். ஆனால், அவரால் இதைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த 'பைசா’ பிரமுகரிடம் தகவல் சொல்லப்பட்டது.

http://new.vikatan.com/news/images/p14(2).jpg

'நானே அதைச் செய்து கொடுக்கிறேன்’ என்று அவராக முன்வந்தார். இதை மன்னார்குடிப் பிரமுகரும் ஏற்றுக்கொண்டார். சென்னைக்கு 'பைசா’ பிரமுகர் அழைத்து வரப்பட்டு, வி.வி.ஐ.பி-யுடன் சந்திப்பும் நடந்தது.  மேட்டர் ஓகே ஆனது. அதாவது, கடந்த ஆட்சியில் யார் மணல் அள்ளினார்களோ, அவர்களின் கைகளுக்கே இந்த ஆட்சியிலும் மணல் சக்சஸாகப் போய்ச் சேர்ந்துள்ளது.

இதைவிடச் சோகம் என்னவென்றால், 'இவர்கள் எல்லாம் நம்ம தொழிலுக்கு உடந்தையானவர்கள். அவங்க மேல் வழக்கு ஏதுவும் வராமப் பார்த்துக்கோங்க’ என்று 'பைசா’ பிரமுகர் வாக்குறுதியும் கேட்டு வாங்கினாராம். அவர்களில் பலர் தி.மு.க-வினர்!'' என்றபடி சிறகை விரித்தார் கழுகார்!

வருவாரா டக்ளஸ்?

டெல்லியில் இருந்து இலங்கைக்குச் சென்ற அதிகாரி நிருபமா ராவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். ''எனக்கு அவசரமாக ஒரு சிகிச்சை செய்ய வேண்டும். சென்னையில்தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால், கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் என்னை, அங்கு வந்தால் தமிழக போலீஸார் கைதுசெய்துவிடுவார்கள்.

அப்படிக் கைதுசெய்யவிடாமல் தடுக்க வேண்டும்!'' எனக் கேட்டுக்கொண்டாராம். அதற்கு நிருபமா, ''நீங்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டு, ஜாமீன் மனு போடுங்கள். அப்போது, எங்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கிறோம். இதைத்தான் நாங்கள் செய்ய முடியும்!'' என்று சொன்னாராம். இதற்கு ஏற்றபடி அதிகார மட்டத்தில் காரியங்கள் நடந்து வருகின்றனவாம்!

thanx-ju vi

28 comments:

கவி அழகன் said...

Wow 1st

கவி அழகன் said...

2nd

கவி அழகன் said...

3rd

கவி அழகன் said...

4t

கவி அழகன் said...

5th

கவி அழகன் said...

enought

கவி அழகன் said...

1.1

கவி அழகன் said...

1.2

கவி அழகன் said...

no more

MANO நாஞ்சில் மனோ said...

உள்ளேன் அய்யா.......

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே சிபி அண்ணே கழுகார் மேலயும் உன் உருப்படாத கையை வச்சிட்டியா...???

MANO நாஞ்சில் மனோ said...

அழகிரி விரைவில் கைது செய்யபடுவார்'ன்னு செய்தி வந்துட்டு இருக்கே அது உண்மையா அண்ணே..???

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்றைய அரசியல் தெரிந்து கொள்ள உதவும் கட்டுரை.
கவி அழகன் இது உங்களுக்கே இது 1.2 மச்சா தெரியலையா?

உணவு உலகம் said...

சென்னிமலைப்பக்கம், ஆட்டோ அட்ரஸ் தேடி அலைஞ்சுகிட்டு இருக்காம். ஜாக்கிரதை!

சக்தி கல்வி மையம் said...

veetukku auto varanumaa? maapla//

கூடல் பாலா said...

போன வாரம் ஜூவி காரன் எங்கிட்ட அணு உலை சம்மந்தமா ரொம்பநேரம் பேட்டி எடுத்தான் ....ஏதாவது போட்டா தெரியப்படுத்துங்க ...

Unknown said...

ஓய்வு எடுக்கறது அப்படின்னா...
மட்டயாவரதுன்னு தானே அர்த்தம் ஹிஹி!

சரியில்ல....... said...

எவ்ளோ பெர்ர்ரிய கட்டுரை...

'பரிவை' சே.குமார் said...

katturai pakirvukku nanri

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

aappu...aappu....aappu... DMK vukku pidikkaatha vaarththai.....

சசிகுமார் said...

வேட்டை ஆரம்பமா... சூப்பர் இனி அனைவரும் களி திங்க வேண்டியது தான். தகவலுக்கு நன்றி செந்தில்

தனிமரம் said...

அப்ப டக்லஸ் வருவாரா அண்ணா! பின்னாடி ஆட்டோ வருமா?

நிரூபன் said...

வணக்கம் பாஸ், ஒருவரைக் கைது செய்ததைப் பற்றி, ஒரு ரியஸ் படம் காட்டுவது போல அழகாக எழுதியிருக்கிறாங்க.

பதிவின் இடையில் வரும், நான்கு மாநில பிரிப்பு கார்ட்டூன் செம சூப்பர்..

இறுதியிள் உள்ள இலங்கை அரசியல்...சமீபத்தில் தமிழகத்திற்கு வந்துள்ள ஒரு சூப்பர் காமெடி....

Mukundan said...

கனிமொழியை திகாரில் சந்தித்த ராஜாத்தி, அப்படியே பிரதமரிடம் சென்று, காலில் விழுந்து அழுது, "கலைஞர் ஸ்டாலின் சொல்வதைத் தான் கேட்கிறார். இப்போதைக்கு எங்களுக்கு ஒரே பாதுகாப்பு, அழகிரி தான். தயவு செய்து அவரது துறையை மாற்றாதீர்கள்" என்று கண்ணீர் மல்க கேட்க, பிரதமரும் மனம் இறங்கி, சோனியாவிடம் வாதாடி, துறை மாற்றத்தை கடைசி நிமிடத்தில் தடுத்து விட்டார் - என்பது லேட்டஸ்ட் தகவல். இதை கேள்விப்பட்ட ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கே சென்று, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், திமுக பொருளாளர் பதவியையும் ராஜினாமா செய்து, கருணாநிதியிடம் அன்பழகன் மூலமாக அனுப்பி விட்டாதாகவு ஒரு தகவல் அறிவாலயத்தில் அலை பாய்கிறது.

"அழகிரி துறை மாற்றப்படாததின் மர்மம்" என்று தலைப்பிட்டு அடுத்த இதழ் ஜூவியில், கழுகார் சொல்ல போகும் செய்தி இது தான்.

vidivelli said...

வாசிக்கத்தூண்டுகிற விறு விறுப்பான பதிவு....
வாழ்த்துக்கள்..




எனது பக்கம்...
http://sempakam.blogspot.com

rajamani said...

Mmm,enna thaiyirium..

RAMA RAVI (RAMVI) said...

என்ன செந்தில்குமார்,கழுகாரை உங்க பதிவுக்கு கொண்டுவந்துட்டீங்க?நல்ல பதிவு...