Friday, July 01, 2011

தேநீர் விடுதி - லைட் டீயா? ஸ்ட்ராங்க் டீயா? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5ldEPJ2hjxY5YA2RQk5sOtmwU_OLHARhyphenhyphenk5MZf9Rp2Kk46jfGN519vFcoNFrF-sjCa73vIGmu6SfnVB4UOkPkG-L1HtJf4t84ehywLY_uuuH1MWI-OgetCp0r0mKQMvHJkw6OfFomurg/

களவாணி இசை அமைப்பாளர் எஸ் எஸ் குமரன் முதன் முறையாக இயக்கி இருக்கும் படம் என்பதால் அந்தப்படத்தின் சாயல் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கிறது..ஆனால் எந்த வித பிரமாதமான திருப்புமுனையோ,பரபரப்போ இல்லாத சிம்ப்பிள் லவ் ஸ்டோரி என்பது தான் படத்தின் பலமும்,பலவீனமும்...

பந்தல் காண்ட்ராக்டராக வரும் ஹீரோ பெட்டிக்கடை வைத்திருக்கும் பெண் மீது கொள்ளும் காதல் எப்படி கை கூடுகிறது என்பது தான் கதை.. இதுல தேநீர் விடுதி எங்கே வந்தது என கேட்பவர்களூக்கு.. ஹீரோ ஹீரோயினுக்கு ரூட் போடறதே பெட்டிக்கடைக்கு எதிரே உள்ள டீக்கடையிலிருந்துதான்..

ஹீரோ சுமார் ரகம்.. பாஸ் மார்க் வாங்கிடுவார். ஹீரோயின் அம்சமான அழகு என சொல்ல முடியா விட்டாலும் அடக்கமான குத்து விளக்கு மாதிரி அழகாக வந்து போகிறார்.. ரேஷ்மா மேணன் .என்ன ஒரே மைனஸ் என்றால் அவரிடம் காதல் உணர்வுகள், சிரிப்பு இவை எல்லாம் ஸ்விட்ச் போட்ட மாதிரி வந்து போகின்றன.. அதாவது டைரக்டர் ஓக்கே சொன்னதும் டக் என்று சிரிப்பதும், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் என்றதும் உடனே காதல் கொள்வதும் லேசான செயற்கை இழை தட்டும் நடிப்பு.

ஹீரோயினை படம் முழுக்க கண்ணியமாக காண்பித்ததற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக்,ஓப்பனிங்க் ஃபைட்,ஃபினிஷிங்க் ஃபைட் எதுவும் கொடுக்காமல் இயல்பாய் வந்து போக வைத்தமைக்கும் ஒரு பலே.. 

ரெஜிஸ்ட்டர் ஆஃபீசில்  வேலை செய்பவராக வரும் ஹீரோயினின் அப்பா நடிப்பு ரொம்பவே எதார்த்தம்..

பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் எழுதிய 3 பாடல்களில் 2 பாடல்கள் சூப்பர் ஹிட்.. ஜில்லென சிரிப்பாளோ,நெஞ்சுக்குள் இனிப்பாளோ.. செம மெலோடி.. பாடல் வரிகளுக்கும் , மென்மையான இசைக்கும் ஒரு சபாஷ்.. அதே போல் அட என்னமோ ஏதோ பண்ணுது புள்ளே.. பாடல் வரிகளூம் மனசுக்குள் வந்து என்னமோ ஏதோ பண்ணுது.. 

படத்தின் டைட்டில் டிசைன் அழகு.. 


http://chennaionline.com/film/Photofeature/images/Theneer-Viduthi-Movie/Theneer-Viduthi-Movie-Stills-07.jpg

வசனங்களில் செம ஸ்ட்ராங்க் என சொல்ல வைத்த இடங்கள்

1. தம்பி. இது டீக்கடை.. கண்ணும் ,கையும் தான் வேலை  செய்யனும், காதும் ,காலும் சும்மா இருக்கனும்.. 

2. என்னங்க நம்ம பந்தல் காண்ட்ராக்ட் பத்தி இம்புட்டு கேவலமா பேசிட்டீங்க.. நம்ம கோவை செம்மொழி மாநாட்டுக்கே நான் தாங்க காண்ட்ராக்ட்டு..!

போடா.. போடா ரீல் விட்டது போதும். 

3. அண்ணனுக்கு குடிக்க கூல்டிரிங்க்ஸ் கொண்டு வரவா?

வேணாம்.. ஹாட் டிரிங்க்ஸ் கொண்டு வாப்பா.. 

அட, நம்ம ஜாதிப்பையனா? படிச்சிருக்கீங்களா?அது சரி சரக்கு அடிக்க எதுக்கு படிப்பு?

4. ஜோசியரே. உங்களுக்கு வருமானம் எவ்வளவு வரும்?

ஏதோ நீங்க பாத்து குடுக்கற அளவு வரும்.. 

5. ஹீரோயின் - நான் இன்னும் வயசுக்கு வர்லைங்கற மேட்டர் உனக்கு எப்படிய்யா தெரியும்?

எனக்கு தொழிலே அதானே? எத்தனை பக்கம் போய் பந்தல் போட்டிருக்கேன்.? எத்தனை வயசுக்கு வந்த பொண்ணுங்களை கிட்டே பார்த்திருக்கேன்?

6. அண்ணே, கேட்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க.. போன தடவை ஒரு தப்பு நடந்துடுச்சு.. யாரோ ஃபோன் பண்ணிசொன்னாங்கன்னு ஏதோ ஒரு வீட்டு முன்னால பந்தல் போட்டு விடிஞ்சதும் ஏமாந்துட்டோம். பொண்ணு வயசுக்கு வந்தது நிஜம்தானா? நீங்க பார்த்தீங்களா?

யோவ், என்னய்யா கண்றாவி பேச்சு இது?பெத்த அப்பன் கிட்டேயேவா?

7. இந்த நாட்ல பொறந்தா சர்ட்டிஃபிகேட் தர்றாங்க, இறந்தாலும் சர்ட்டிஃபிகேட் தர்றாங்க.. ஆனா வயசுக்கு வந்தா மட்டும் சர்ட்டிஃபிகேட் தர்றதில்லை .. அது ஏன்? ( ஏன்னா பசங்க மெச்சூரிட்டி சர்ட்டிஃபிகேட் எங்கேம்மா?ன்னு கேட்டு ராக்கிங்க் பண்ணுவானுங்களே?)

8. லவ் மேரேஜை நாங்க எதிர்க்கிறோம். எல்லோருமே கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் பந்தல் போடற எங்களுக்கு என்னய்யா வேலை?

9. இப்போ டீ சாப்பிடற எல்லாருமே திடீர்னு பால்க்கு மாறிட்டா நீ மூடிட்டு போயிட மாட்டே? கடையை சொன்னேன்பா. 

10. மொத்தம் 17 டீ குடிச்சும் இன்னும் சரி வர்லையே?

எது டீ சரி வர்லையா? அந்த ஃபிகர் சரி வர்லையா?




http://3.bp.blogspot.com/_AGkFj4KghR0/TShUNUnygGI/AAAAAAAAGg8/N0RosdPjKbg/s1600/Reshma-Menon-In-Theneer-Viduthi-Movie-Stills-3.jpg
11. முந்திரிப்பருப்பு போட்டு புளிக்கொழம்பு வைக்கனும்னு எங்கம்மா சொன்னாங்க.. கொஞ்சம் முந்திரிப்பருப்பு கொடுங்க.. 

12. ஏண்டி.. சொன்னா கேள்டி.. தம்பிக்கு முன்னாலயே அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டா அண்ணன் செத்துடுவான்னு ஒரு தோஷம் இருக்காம்டி.. 

அட வாங்க அதை செக் பண்ணி பார்த்துடுவோம்.. ஒரு நாளாவது சந்தோஷமா வாழ்வோம்.. ( அடிப்பாவி.. )

13. யோவ்.... என்னய்யா ரூல்ஸ் பேசிட்டு இருக்கே? பொறம்போக்கு நிலத்துக்கு இப்படி ரூல்ஸ் பேசறியே.. அங்கே உன் பொண்ணு ஒரு பொறம்போக்கு பயலோட சுத்திட்டு இருக்கா..

14. உனக்கு ஒண்ணு தெரியுமா? இந்த மாதிரி ரூல்ஸ் பேசற ராமானுஜருங்களோட பொண்டாட்டி வீட்டை விட்டு ஓடிடுவா.. அல்லது பொண்ணு ஓடிடுவா.. உன் விஷயத்துல பொண்ணூ ஓடிடுவா பாரு..

15. அப்பா.. விழாவை ஜாம் ஜாம்னு நடத்தனும்.. முன் வாசல்ல பந்தல் போட்டா 50 பேர் உக்காந்து சாப்பிடலாம். பின் வாசல்ல பந்தல் போட்டா 100 பேர் உக்காந்து சாப்பிடலாம். 

 மொத்தத்துல  உன் ஆள் இங்கே பந்தல் போட வரனும் அதானே?

16. .நான் உன் லவ்வர்ங்கறது தெரிஞ்சும் என்னை இங்கே பந்தல் போட கூப்பிட்டிருக்கானே உங்கப்பன் சரியான மாங்கா மடையனா இருப்பானோ?

17. வீட்ல பொண்ணுங்க அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான் ஆம்பளைங்க வெளில தலை நிமிர்ந்து நடக்க முடியும்.. ( களவணி டயலாக்)

18. நாம நினைச்ச படி எதுவுமே நடக்கலையே .. ம் ம் இந்த தவளை வாயன் கிட்டே போட்டு வாங்க முடியுதான்னு பார்ப்போம்

அண்ணே.. இப்போத்தான் வள்ளியை பார்த்து கட்டி குலாவிட்டு வர்றேன்.. 

அடப்போடா லூஸ்.. அவ அவளோட சித்தப்பன் வீட்ல பத்திரமா இருக்கா.. பக்கத்து ஊர்ல.. சும்மா ரீல் விடாத. 

ஹா ஹா போட்டு வாங்குனோமில்ல../இப்போ அங்கே போவோம் இல்ல?

19. நியாயமா சம்பாதிச்ச பொருளும், பணமும் எங்கேயும் போகாது..

20. வந்தமா? பார்த்தமா? பேசுனமா?ன்னு கிளம்பிட்டே இருக்கனும்.. அண்ணனை மாமா ஆகிடாதே டா


21. டியர்.. நாம கொஞ்ச நள் பார்க்காம இருந்தா எல்லாம் சரி ஆகிடும்.. 


22. என் பரம்பரைலயே பொண்ணுங்க யாரும் படி தாண்டி போனதில்ல்லை.. ம் 


http://www.top10cinema.com/dataimages/8420/24-12-2010-8409-9-3.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ,ஹீரோயின் இருவருக்கும் மேரேஜ் ஆகுமா ? ஆகாதா? என்பதை கண்டறிய குறுக்கு வழி ஜோசியமாக கிராமத்து வழக்கமான ஒட்டுப்புல் விளையாட்டை ஹீரோயின் விளையாடுவது.. 


2. ஹீரோயின் வயசுக்கு வராதவர் என்பதை ஹீரோ கிண்டல் அடித்த அன்று இரவு ஹீரோயின் வீட்டில் டி வி பார்க்கும்போது எல்லாப்பாடல்களூம் வயசுக்கு வந்த ஹீரோயினுக்கு சடங்கு சுத்தும் பாடலாக வரிசையாக வருவது1.அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே.. 2. மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே.. 

3. ஹீரோ ஹீரோயினுக்கு டீ வாங்கித்தரும்போது எதுக்குய்யா இதை இப்போ சாப்பிட வேணாம்கறே ? என கேட்கும்போது காதலை சொல்ல வெட்கப்படும் ஹீரோ அப்போது டைமிங்காக ப்ரூக்பாண்ட் டீ ரோசஸ் டீ விளம்பரத்தில் பேச நல்ல டைம் - சீன்  வருவதும் காதல் சொல்லாமலேயே உணரப்படுவதும்.. காதலியின் கண்களில் பட்டாம்பூச்சி பறப்பதும்.. ...



http://gallery.southdreamz.com/cache/actress/reshmi-menon/browse-theneer-viduthi-audio-launch-photo-gallery-20_720_southdreamz.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பொதுவா பொண்ணு காதலை சொல்ல முடியலைன்னா லெட்டர் எழுதி வைப்பா.. ஆனா சொந்த அப்பாவை எந்த பொண்ணாவது காதலன் முன் அவமானப்படுத்துவாளா?தான் காதலன் கூட கொஞ்சுவதை அவரே வீடியோ எடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு காட்டுவாரா?காதல் இருக்குன்னு வாய் வார்த்தையா சொன்னாலே போதுமே?

2. ஹீரோவுடன் ஊரை விட்டு ஓடிப்போக தீர்மானித்து மலையில் காத்திருக்கும்போது ஹீரோ வர்லை. டென்சனில் ஹீரோயின் தான் கட்டி இருந்த 2 முழம் மல்லிகைப்பூவையும் ஒவ்வொண்ணாப்பிச்சி பிச்சு போடறா.. அப்புறம் மீண்டும் வீட்டுக்கு வரும்போது மல்லிகைப்பூ அப்படியே தலைல குறையாம இருக்கே? எப்படி? ( கண்ட்டிநியூட்டி மிஸ்ஸிங்க்)

3.படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோவோட அம்மா உப்பு பெறாத விஷயத்துக்காக தான் செத்துப்போனது போல நடிப்பதும் ,ஊரே திரண்டு வந்து நின்ற பிறகு சாவதானமாக எழுந்து” பார்த்தியா? நான் செத்தா யாரும் வர மாட்டாங்கன்னு சொன்னியே ? இத்தனை பேர் வந்திருக்காங்களே? என கேட்பதும் செம டிராமா.. செயற்கை.. 

4. பொண்ணோட வீடியோ லவ் காட்சி பார்த்த பிறகு கோபமாக போன அமெரிக்கா மாப்ளை மீண்டும் அந்த பொண்ணே தான் வேணும்னு வர்றாரே? ஏன்?

5. அமெரிக்க மாப்ளையாக நடிக்க ஒரு நல்ல துணை நடிகர் கிடைக்கலையா? பஞ்சம் பிழைக்க வந்த பரமேஸ்வரன் மாதிரி இருக்கற ஆளை அமெரிக்க மாப்ளை ஆக்குவதா?

மொத்தத்தில் இந்தப்படம் காதலர்கள் பார்க்கும் அளவு இருக்கு.. எல்லாரும் பார்க்கும் அளவு இல்லை.. 

ஏ, பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களீல் 15 நாட்கள் ஓடும்
‘’
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - ஓக்கே

சி .பி கமெண்ட் - சன் டி வி ல போட்டா பார்க்கலாம்

ஈரோடு ஆனூர் திரை அரங்கில் இந்தப்படம் பார்த்தேன்.. 

http://2.bp.blogspot.com/_gYNnKAPodv8/TUde3DAi_tI/AAAAAAAAJfs/38tIh3JbsiE/s1600/Theneer+Viduthi+Movie+Stills+pics+gallery+007.jpg


34 comments:

Senthil said...

nice!

Senthil said...

A Decent movie??watchable?

Senthil said...

Vadai Enakka?

thanks
Senthil, Doha

Unknown said...
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...

மாப்ள எப்பவோ வந்த கலைவாணி டையலாக் எப்படி ஞாபகம் இருக்கு..
சூப்பர் ...

Unknown said...

அண்ணே விமர்சனம் நல்லா இருக்கு...இந்த பொண்ண வேற எதோ டிவி நிகழ்ச்சில பாத்தாப்போல இருக்கே!

குணசேகரன்... said...

Nice review.nice stills

Unknown said...

he he paavam boss ..
director ,,,,

neengalum thaan ha ha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா தக்காளி சொல்ற மாதிரி ஹீரோயினை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் இன்னிக்கு வெள்ளிக்கெழமயாச்சே? பிட்டுப்படமும் பாத்துருப்பீங்களே? திருந்திட்டோம்னு நெனச்சு ப்ளாக்ல வெமர்சனம் போடலேன்னாலும், பஸ்ல போடலாம்ல?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ராம்சாமி.. லொள்ளு ஜாஸ்திய்யா.. உமக்கு...விமர்சனம் எப்படி இருக்குன்னு சொல்லாம ஹீரோயின் பற்றி டவுட்டா பிச்சு பிச்சு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ராம்சாமி.. லொள்ளு ஜாஸ்திய்யா.. உமக்கு...விமர்சனம் எப்படி இருக்குன்னு சொல்லாம ஹீரோயின் பற்றி டவுட்டா பிச்சு பிச்சு.
////////

யோவ் நாங்கள்லாம் என்னிக்குய்யா பதிவ படிச்சி கமெண்ட் போட்டிருக்கோம்?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நல்ல நண்பன்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செங்கோவி said...

அண்ணே பார்க்கலாமா..இல்லையா......ஒத்தை வார்த்தைல சொல்லுங்க.

Unknown said...

அந்த ஹீரோயினை எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு! ஏதாவது அக்கடா துக்கடா வேசத்தில்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

நல்ல நண்பன்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///////

யோவ் எல்லாரும் வாங்கய்யா சிபி கோச்சுக்கிட்டாருய்யா......

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

உங்களுக்கு மட்டும் ரதிநிர்வேதம்,தாரம் விமர்சனம் தனி மெயில்ல அனுப்பலாம்னு இருந்தேன் கேன்சல். ஹா ஹா

THOPPITHOPPI said...

அண்ணே இந்த படத்தையும் தியேட்டர்ல போய் பாக்குரிங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

உங்களுக்கு மட்டும் ரதிநிர்வேதம்,தாரம் விமர்சனம் தனி மெயில்ல அனுப்பலாம்னு இருந்தேன் கேன்சல். ஹா ஹா
///////

அண்ணே அந்த கேன்சல்ணே, மேட்டரை உடனே மெயில் பண்ணுங்க, நான் உடனே என் ப்ளாக்ல போட்டுறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////THOPPITHOPPI said...
அண்ணே இந்த படத்தையும் தியேட்டர்ல போய் பாக்குரிங்களே!
////////

அண்ணே இந்தப்படம்லாம் திருட்டு டிவிடில கூட வராதுண்ணே, தியேட்டர்ல பாத்தா தான் உண்டு, அதுவும் ரிலீசான அன்னிக்கே!

RAMA RAVI (RAMVI) said...

எத்தனை தடவை படத்தை பார்த்தீர்கள்??? இப்படி வசனத்தை யெல்லாம் நினைவு வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்?? விமர்சனம் நன்றக உள்ள்து.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனம் நல்லாயிருக்கு. படம் பாத்த காசு வேஸ்ட்டா, வேஸ்ட்டில்லையா?

rajamelaiyur said...

அண்ணே !! கொஞ்சம் ஹீரோ போடோவும் போடுங்க ..

rajamelaiyur said...

கில்மா படம் ஏதும் வரலையா ?

டக்கால்டி said...

ayyo ayyo

Menaga Sathia said...

விமர்சனத்தை வித்தியாசமா நல்லா எழுதிருக்கீங்க...பாராட்டுக்கள் சகோ!!

உங்க பதிவுகளில் காப்பி பேஸ்ட் செய்யமுடியலயே?? எப்படின்னு எனக்கும் சொல்லுங்க..

சத்யா said...

திரைக்கு வந்த எந்தப் படத்திற்க்கும் இந்தப் பதிவுலகில் முதல் விமர்சனம் உங்களுடையது தான்

சுதா SJ said...

நல்ல விமர்சனம்,
நீங்க சொல்லுறத பார்த்த படம் ஒருதடவை பாக்கலாம் போல

குமார் வீரராகவன் said...

"இனிது இனிது" பட ஹீரோயின்?

nellai ram said...

nice one!

கூடல் பாலா said...

விமர்சனம் ஸ்ட்ரான்க் டீ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஹீரோயின் பாக்கறதுக்கு கொஞ்சம் பூனம் பஜ்வா மாதிரியே இருக்குல்ல? அதான் எங்கேயோ பாத்த பீலிங் எல்லாருக்கும்....! (எப்பூடி....?)

guru said...

விமர்சனம் படித்ததில் படம் ஒருவாட்டி பார்க்கலாம்னு நினைக்கிறேன் ..
என்ன சிபி அண்ணா சரிதாணே..?
இருவரும் இனிது இனிது படத்தில் நடித்தவர்கள் . ஹீரோ அருண் ஆதித் , ஹீரோயின் ரேஷ்மி மேனன்

நிரூபன் said...

தமிழ் சினிமாவில் அண்மையில் வந்த படங்களுள் வித்தியாசமான ஓர் கதைக் கருவோடு இப் படம் வந்திருக்கிறது, விமர்சனம் வழமை போலவே கலக்கல்.

பகிர்விற்கு நன்றி பாஸ்