Sunday, June 19, 2011

எனக்கு கொழுப்பு ஜாஸ்திதான்யா.. அதுக்காக என்னா பண்ண சொல்றீக.. ?

சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!

டாக்டர் விகடன் - நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்!
ன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.


இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.

பைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக வாழவும் வழி காட்டுகிறார் ஆற்காட்டை சேர்ந்த சித்த மருத்துவர் மகேஷ்வரன். கூடவே, 'பக்குவமாய் செய்ய ஏது நேரம்?’ என்பவர்கள் பூண்டு, வெங்காயம், வெள்ளரிக்காயை பச்சையாக பயன்படுத்தினாலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு கரைந்துவிடும்’ என்கிறார்.

1. பூண்டு

'பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில்  கெட்ட கொழுப்பு  கணிசமாக குறைந்துவிடும்.
2. ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை

பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.

3. கொள்ளு

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

4. கறிவேப்பிலை

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

5. மிளகு

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும்.  உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.


6. சாம்பார் வெங்காயம்

சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

7. கோடாம்புளி

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக  பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

8. சீரகம் - அதிமதுரம்

தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். 

இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.  அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருடன்      20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.

9. செம்பருத்தி,ரோஜா இதழ்கள்  

செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து        50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.


10. இஞ்சி - ஏலக்காய்

இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

11. சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!

நன்றி - டாக்டர் விகடன்

34 comments:

R.Puratchimani said...

?????

R.Puratchimani said...

Where is pathivaragal santhippu post?

சி.பி.செந்தில்குமார் said...

@R.Puratchimani

மேட்டர் ரெடி.. நாளை காலை 8 மணிக்கு போஸ்ட்டிங்க்

ராஜி said...

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே!!

Jana said...

ஆஹா... எனக்கு யூஸ்புல்லான விடயங்கள்தான் பகிர்வுக்கு நன்றிகள் தலை:)

R.Puratchimani said...

//சி.பி.செந்தில்குமார் said...

@R.Puratchimani

மேட்டர் ரெடி.. நாளை காலை 8 மணிக்கு போஸ்ட்டிங்க்//
Thanks for your info CP.

ராஜி said...

எப்படியோ நல்லது நடந்தா சரி

தமிழ்வாசி பிரகாஷ் said...

கா...பே... சார் கிரீன் டீ சாப்பிடுங்க... கொழுப்பு குறையும்.

ராஜி said...

செலவில்லாமல் உடல் எடையை குறைக்க வழிக் காட்டிய சிபிசார்க்கு நன்றிகள்

rajamelaiyur said...

Title pathathum unkala pathe solaporenka nu nenaithen

ராஜி said...

டைட்டிலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லியே சார்

ராஜி said...

டைட்டிலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லியே சார்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இதே தலைப்பில்தான் விகடனில் வந்திச்சா? டவுட்//

சி.பி.செந்தில்குமார் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஹா ஹா நண்பா.. பதிவு மட்டுமே காப்பி பேஸ்ட்.. எப்பவும் டைட்டில் சொந்த சரக்கு தான்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது எனக்கும் கொஞ்சம் பயன்படும்! காரணம் கொஞ்சூண்டு கொழுப்பு இருக்கு! உங்களுடைய நாளைய பதிவுக்காக வெயிட்டிங்!

சி.பி.செந்தில்குமார் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

உடலில் எப்படியோ, உள்ளத்தில் கொழுப்பே இல்லாத மிகச்சில பதிவர்களில் நீங்களும் ஒருவர் ஆச்சே?

Unknown said...

பாசமழை பொழிகிறது..ஒவ்வொரு துளியிலும் குவாட்டரு விழுகிறது..

Unknown said...

பாசமழை பொழிகிறது..ஒவ்வொரு துளியிலும் குவாட்டரு விழுகிறது..

Unknown said...

நல்ல பகிர்வு!

ஷர்புதீன் said...

பதிவர்கள் சந்திப்பு குறித்த உங்க போஸ்ட்டுல நம்மள அஜித் மாதிரி இருந்தேன்னு சொல்லிடனும்., சரியா.....

( பின் குறிப்பு - உங்க அக்கௌன்ட் நம்பர் அனுப்பி வைக்கவும் )

:-)

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே நல்ல பயனுள்ள பதிவு. உடம்பில் கொழுப்புள்ளவர்களுக்கு உபயோகமான டிப்ஸ். ஆனா எனக்கு உங்களுக்கு பயன்படாதே!

சுதா SJ said...

உடம்பு அதிகமானவங்களுக்கு பயன் உள்ள பதிவு பாஸ்

உணவு உலகம் said...

SUPER C.P.

உணவு உலகம் said...

In train to chennai. So mobile comment. Hope u had a nice time in nellai&courtallam.

நிரூபன் said...

எனக்கு கொழுப்பு ஜாஸ்திதான்யா.. அதுக்காக என்னா பண்ண சொல்றீக.. ?//

தலைப்பில உள் குத்து ஏதும் இல்லையே பாஸ்..
ஹி...ஹி...

நிரூபன் said...

பயனுள்ள பதிவு, & பகிர்வு
எமது உடற் கொழுப்பை நாளாந்தம் உணவில் சேர்க்கும் தானிய வகைகள் மூலமாக குறைப்பதற்கேற்ற இலகுவான வழி முறைகளைப் பகிர்ந்துள்ளீங்க.

உங்களின் பதிவர் சந்திப்பு பதிவினைப் படிப்பதற்காக வெயிட்டிங்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உருப்படியான பகிர்வு....!

Unknown said...

annatha useful information....en blog la oru copy poatturraen....thappa nenaikkatha naina

செங்கோவி said...

ஏதோ உள்குத்துன்னு மட்டும் தெரியுது..நாளைக்குப் பார்ப்போம்.

Meena said...

வாரம் நாலு ஆப்பிள் சாப்பிட்டும் கொழுப்பு குறைய மாட்டேன்னுதே சார் என்ன பண்ணட்டும் சொல்லுங்க

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

ஹேமா said...

சிபி....இதெல்லாம் சரிவரும்ன்னு சொல்றீங்க !

Unknown said...

என் கொழுப்பை அடக்கிய சிபி அண்ணன்.

நானும் முயற்சி பண்றேன். பலன் இருந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி அண்ணே

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

படிக்கும்போதே கொழுப்பு கரைவது போல் இருக்கிறது.