Monday, June 13, 2011

ஆரண்ய காண்டம்-எம கண்டம் - சினிமா விமர்சனம்



படத்தோட ஓப்பனிங்க்லயே ஒரு கில்மா சீன்.60 வயசு தாத்தாவான ஜாக்கி செராஃப் 20 வயசு ஃபிகர் யாஅஸ்மின் பொன்னப்பாவை அஜால் குஜால்க்கு அழைக்கிறார்..(அழைக்கவில்லை ,வலுக்கட்டாயமாக இழுக்கிறார்- பெஞ்ச் ரசிகன்)ஆனா அவர்னால முடியல.. உடனே பளார்னு ஒரு அறை விடறாரு.. அதுக்கு இந்த ஃபிகர் சவுக்கால அடிச்ச மாதிரி ஒரு கேள்வி கேட்கும் பாருங்க.. ஹா ஹா செம .. அந்த கலக்கல் வசனம் எது என்பதை வசன பகுதியில் காண்க.. 

2 தாதாக்கள் குரூப்..ஏதோ ஒரு சரக்கை கடத்தறப்ப தகராறு.. அந்த சரக்கை கைப்பற்ற நடக்கும் போராட்டம் தான் கதை.. கதையோட ஒன் லைன்  ரொம்ப சாதாரணம் தான், ஆனா திரைக்கதை பின்னி பெடல் எடுக்குதே.. ஆனா ஒரு வார்னிங்க்,படம் ஒன்லி ஃபார் ஜெண்ட்ஸ்.. 

இயக்குநர் புத்திசாலி என்பதை எப்படி நிரூபிக்கிறார்னா அடி தடி வெட்டு குத்து மட்டுமே நடக்க வாய்ப்பு இருக்கும் இந்த மாதிரி தாதா கதைல நைஸா ஒரு கள்ளக்காதலையும்,அதனால ஏற்படும் விளைவுகளையும், ஒரு பெண் எப்படி ஆணை இளிச்சவாயனாக்கி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கறதை செமயான த்ரில்லிங்கோட காட்டினது தான்.. 

ஜாக்கிசெராஃபின் (ரங்கீலா ஹிந்திப்பட புகழ்) பாடி லேங்குவேஜ் ஓக்கே.. அவர் அடிக்கடி க்ளோசப்பில் ஈ காட்டுவது உவ்வே.. அதே போல் பல் துலக்கும் காட்சிகளில் கொடூரமான க்ளோசப் காட்சிகள்  ஓவர்

சப்பை எனும் கிட்டத்தட்ட திருநங்கை கேரக்டரில் கேடி ரவி கிருஷ்ணா.. அவரது குரலும் பாடி லேங்குவேஜும்\ செம, கள்ளக்காதலியாக வரும் யா அஸ்மின் மாநிறமான ஃபிகர் தான் என்றாலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறது,, அப்பாவி போல் சப்பையிடம் குழைவதும், க்ளைமாக்ஸில் திடீர் வில்லி ஆவதும் செம நடிப்பு.. 

சம்பத்தின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறுகிறது.. சோமசுந்தரம்,கொடுக்காப்புளியின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.. 


செண்டம் அடித்த வசனங்கள்(வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.)


1. டீன் ஏஜ் கீப் - உங்களால முடியல..... ஏன் என்னை போட்டு அடிக்கறீங்க?

கிழடு - பளார்....


2. ஆண்ட்டிங்களை கவுக்கறது ரொம்ப ஈஸி.. அவங்க ரஜினி ரசிகையா? கமல் ரசிகையா?ன்னு கேள்.. கமல் ரசிகைன்னா  ஈஸியா கவுத்துடலாம்..

3.  மேரேஜ் ஆகிடுச்சான்னு ஆண்ட்டிகள்ட்ட பேச்சு குடு.. உன்னை அவளுக்கு பிடிச்சிருந்தா இன்னும் மேரேஜ் ஆகலைனு வாய் கூசாம பொய் சொல்வா..

4. இந்த மேட்டரை வெளில சொல்லிடாதே... 

ஓக்கே.. ஏன் கட்டை விரலை கட் பண்றீங்க?



வெளில சொன்ன பிறகு கட் பண்ணி பிரயோசஜனம் இல்லையே?

5.  என் மனைவி மேலே அழுதுட்டு இருக்கா.. இந்தா பணம், அவளுக்கு ஏதாவது வாங்கிக்குடுத்து அழுகையை நிறுத்து.. அவ முகத்தை பார்க்க சகிக்கலை..முகத்தைப்பார்த்தாலே மூடு வர மாட்டெங்குது.. ( முகத்தை பார்த்தா எங்காவது மூடு வருமா? #டவுட்டு)

6.  ஏண்டி.. உன் வீட்டுக்காரரு நல்ல மனுஷனா?


போடா லூஸ்.. அவர் பேத்தி வயசு ஆகுது எனக்கு. என்னைத் தூக்கிட்டு வந்து அழிச்சியாட்டம் பண்ணிட்டு இருக்காரு..

7. ஆண்ட்டிகளை பற்றி தப்பா பேசாதே..

அப்போ ஸ்பீக்கர் ஃபோன் போட்டு அவங்க கிட்டே பேசு பார்க்கலாம்..

8.  ஹலோ.. பிஸியா?

ஆமா..

அப்புறம் ஏன் ஃபோனை எடுத்தே? அந்த வேலையையே பார்த்துட்டு இருக்க வேண்டியதுதானே?


9. எங்கே போறீங்க எல்லாரும்?

பாண்டிச்சேரிக்கு சார்..

எங்கே ஊது பார்ப்போம்..?

சார்.. இப்போ தான் போறோம்..

10. மேடம்.. உங்களுக்கு கமல், ரஜினி யாரை பிடிக்கும்?

ம்.. கமல்னு சொன்னா என்னைப்பற்றி என்ன நினைப்பேன்னு தெரியும்.. எனக்குபிடிச்சவரு விஜய்காந்த் தான்.. அவர் தானே பாகிஸ்தான் தீவிரவாதிங்க கிட்டே இருந்து நம்ம நாட்டை காப்பாற்றினாரு?



http://www.celluloidtamil.com/wp-content/gallery/aaranya-kaandam-press-meet/aaranya-kaandam-press-meet12.jpg


11.  டேய்.. பயப்படாதே.. அப்பா நான் இருக்கேனில்லை..?

போப்பா.. நீ வேஸ்ட்..

நீயும் அப்படி சொல்லக்கூடாதுடா என் கண்ணு..


12. சாராயம் வாங்கிக்குடுத்தவன் சாமி மாதிரிடா....

13.  நீ மட்டும் உயிரோட இருந்திருந்தே.. உன்னை கொலை பண்ணி இருப்பேன்..

14.  நீ ஆம்பளையா இருந்தா அவனை போட்டுத்தள்ளு உனக்கு லாலிபாப் வாங்கித்தாரேன்..

15. இப்போ நான் மட்டும் ஓடலை.. என் சாவும் என் கூடவே வந்துட்டு இருக்கு..


16. நீ ஏன் எனக்கு சமோஷா வாங்கித்தந்தே?


ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்..


17. நான் வேணா ஹிந்தி சினிமா ஹீரோயின் ஆகிடறேன்.. நீ என் மேனேஜர் ஆகிடறியா?

வேணாம்..

ஏன்? பொறாமையா?

நோ.. போஸ்டர்ல உன் முகத்தைப்பார்த்தா அய்யா கண்டு பிடிச்சுடுவாரே?

18. டேய்.. மவனே.. ஒத்துகோடா.. எங்கப்பனை விட உங்கப்பன் புத்திசாலி..

19. அண்ணே.. நீங்க மனசுக்குள்ளே 2 பூ நினைச்சுக்குங்க.. அவை என்ன?னு நான் சொல்றேன்.. ம் ம் மல்லிகையும் ,ரோஜாவும் தானே?

இல்லை பிரபூ, குஷ்பூ

20. புழுவை மீன் தின்னுது, மீனை மனுஷன் தின்னுவான். இது தான் ரூட்டு

21. யோவ் போய்யா.. நீ கட்டுன பொண்டாடியை காப்பாத்த உனக்கு துப்பில்லை.. நீ எப்படி எங்கப்பாவை காப்பாத்துவே?

22. உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?



அப்படி இல்லை.. ஆனாலும் அவர் எங்கப்பா.. ( என்னா கலக்கல் வசனம்?)

23. என்னைப்பொறுத்தவரை என் தற்காலிக காதலன் சப்பையும் ஒரு ஆம்பளை தான், எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்








 இயக்குநர் சபாஷ் வாங்கிய இடங்கள்

1. கொடுக்காப்புளியாக வரும் சிறுவனின் பாத்திர வடிவமைப்பும்,நேர்த்தியான நடிப்பை வர வைத்த விதமும்+ அதே போல் அந்த சிறுவனின் அப்பா கேரக்டர்


2. எதேச்சையாக செல் ஃபோனை ஸ்பீக்கர் ஃபோன்ல போட்டு பேசு என்று சம்பத் சொல்ல வில்லன் அவனை போட்டுடு என ஆர்டர் பண்ண வேனுக்குள் பர பரப்பாகும் திரைச்சூழல்..

3. தன்னை போட்டுத்தள்ளப்போகிறார்கள் என்று தெரிந்ததும் செக் போஸ்ட் போலீஸ் உடன் வீண் வம்புக்கு இழுத்து போலீசிடம் மாட்டுவது போல் நடித்து வில்லன் ஆட்களிடம் உயிர் தப்பும் சீன்..

4. வில்லன் ஆளை வெட்டுவது  போல் காட்டி கோழியைத்தான் வெட்டினான் என பில்டப் சீன்

5. படத்தில் வரும் காட்சிகள் பாமர ஜனங்களுக்கு புரிய வேண்டுமே என்பதற்காக தேவை இல்லாத விளக்கங்கள் எதுவும் கொடுக்காமல் பர பர என காட்சிகளை நகர்த்திய விதம், பக்கா எடிட்டிங்க்.

6. படத்தின் திரைக்கதை காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதைஎன அமைத்தது..

7. படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும்  யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. பாடல்களே இல்லை என்பது படத்துக்கு கூடுதல் பிளஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMf_I9EG9rscGlEuicZnQfTPLgxnbldAh1S2ZRjoPz5dulz9eR4RBHZqm9yRxG0yIm-nQi9jusTHtVxJ1AbhhIK0hVttBd6PPIkx4EsIWJSqe6b5aGG3oOmN62SqGZF0mYxMUUbr-D_PXJ/s400/Aaranya-Kaandam-Stills-001.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பல காட்சிகள் இயக்குநர் மணி ரத்னம் படம் போல் இருட்டுக்குள் இருப்பது..

2. நிர்வாணமாக வரும் ஜாக்கி செராஃப்க்கு ஆயில் மசாஜ் செய்யும் சீன்

3.சம்பத் உயிர் பிழைக்க ஓடும்போது வசனம் பின்னணியில் வர அவர் கதை சொல்வதாக அமைத்தது..

4.க்ளைமாக்ஸில் சுபா கதைகளில் வருவது போல் ஹீரோயினின் கேரக்டரை ஆண்ட்டி ஹீரோயின் ஆக்கியது..


5.வன்முறைக்காட்சிகள்,ரத்தம் சிந்தும் காட்சிகளில் கொடூரம்


இந்தப்படம் ஆண்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்,

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ஏ செண்ட்டரில் 25 நாட்கள்,பி சென்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 7 நாட்கள் ஓடும்

ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்

42 comments:

ராஜி said...

Me the first?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

y late?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன யாரையுமே காணோம்.. படிச்ச உடனே படத்துக்கு போய்ட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விமர்சனம்......!

கூடல் பாலா said...

யப்பாடா .......முழு படம் பார்த்த திருப்தி ......500 ரூபாய் மிச்சம் ....

Shankar said...

cp, enna kootathiye kaanum?
normally you have more than 30 replies when I see the page.
btw, its interesting to read the review as usual. Will see the movie when a good print comes on yams online.

Unknown said...

நடுவில தூங்கிட்டிங்களா?

சக்தி கல்வி மையம் said...

ஆமா என்ன லேட்டு?

ராஜி said...

நீ ஏன் எனக்கு சமோஷா வாங்கித்தந்தே?


ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்..

>>>>



அட ரொம்ப "காஸ்ட்லி" லவ் போல.

Unknown said...

கலக்கல்....

Indian said...

மன்னிக்கவும்.

இப்படி விமர்சனம் எழுதினதுக்கு பதிலா ஒரு கேம்கார்டர தியேட்டருக்குள்ளார கொண்டு போயி அப்படியே படத்த சுட்டுட்டு வந்து அப்லோட் பண்ணியிருக்கலாம்.

Unknown said...

படம் பார்ப்பதை விட உங்கள் விமர்சனம் படிப்பது சுவாரசியம்.

படம் உங்க விமர்சனம் போல சுவாரசியமா இருக்குமா?

Thenammai Lakshmanan said...

அதுக்குள்ள 12 கமெண்டா.. தாங்கமுடியல சாமி. சி பி யோட அலப்பரை.. :))

விமர்சனம் சூப்பர்.

Unknown said...

உங்க விமர்சனம் படிக்க தான் வெயிட் பண்ணினேன் நன்றி நல்ல விமர்சனம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வசனங்கள் படிக்கும் போது நல்லாயிருக்கு...

படம்... சுவாரஸ்யம்...

தங்கள் கணிப்புப்படி படம் சுமார்...

நிரூபன் said...

ஆரண்ய காண்டம்-எம கண்டம் - சினிமா விமர்சனம்//

அவ்...தலைப்பே வில்லங்கமா இல்லே இருக்கு. இருங்க விமர்சனத்தைப் படித்து விட்டு வாறேன்.

நிரூபன் said...

உடனே பளார்னு ஒரு அறை விடறாரு.. அதுக்கு இந்த ஃபிகர் சவுக்கால அடிச்ச மாதிரி ஒரு கேள்வி கேட்கும் பாருங்க.. ஹா ஹா செம .. அந்த கலக்கல் வசனம் எது என்பதை வசன பகுதியில் காண்க..//

ஐ லைக் திஸ் பாலிசி..
ஹி..ஹி...

பதிவை முழுமையாகப் படிக்கும் வண்ணம் அருமையான ஒரு எழுத்து.
ரசித்தேன்.

நிரூபன் said...

என்னதான் இந்தப்படம் மெக்சிகன் படமான ட்ரேடு படத்தின் காப்பி என சொல்லப்பட்டாலும் செய் நேர்த்தி செம...//

பாஸ்...முடியலை பாஸ்..

தமிழ் சினிமாவைத் தான் விரல் நுனியில் வைத்திருக்கிறீங்க என்றால்,
மெக்சிக்கன் சினிமா பற்றியும் அறிந்து வைத்திருக்கிறீங்களே..

நிரூபன் said...

1. டீன் ஏஜ் கீப் - உங்களால முடியல..... ஏன் என்னை போட்டு அடிக்கறீங்க?

கிழடு - பளார்...//

ரொம்ப பீலிங்ஸினை வரவைக்கும் வசனமாக இருக்கே சகோ.

நிரூபன் said...

8. ஹலோ.. பிஸியா?//

இது ப்ளாக்கர்ஸ் பேசிக் கொள்ளுற வசனமாச்சே,
படத்திலயும் வருதா;-)))

ஹி...ஹி...

நிரூபன் said...

சகோ சிபி, பதிலைப் போடுங்க பிளீஸ்....

நிரூபன் said...

தன்னை போட்டுத்தள்ளப்போகிறார்கள் என்று தெரிந்ததும் செக் போஸ்ட் போலீஸ் உடன் வீண் வம்புக்கு இழுத்து போலீசிடம் மாட்டுவது போல் நடித்து வில்லன் ஆட்களிடம் உயிர் தப்பும் சீன்..//

என்னமா யோசிக்கிறாங்க பாருங்க..
ஹி...ஹி...
தமிழ் சினிமா முன்னேற இடம் இருக்கு பாஸ்..

தூரத்தே தெரிகிறது ஒளிக் கதிர்கள்;-)

நிரூபன் said...

இந்தப்படம் ஆண்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்,//

அப்போ குழந்தைங்க நாம பார்க்கக் கூடாத படமா இது...
ஹி...ஹி...

நிரூபன் said...

ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்//

எங்க போனாலும் அபிராமியை விட மாட்டீங்க போல இருக்கே...
ஹி...ஹி..

நான் தியேட்டரைச் சொன்னேன் பாஸ்..

நிரூபன் said...

விமர்சனம் அருமை, தொழில் நுட்பம், ஒலி, ஒளிச் சேர்க்கைகள் பற்றி வழமை போல அலசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பதிவு நீண்டு விடும் என்பதால் சிபி சென்சார் பண்ணிட்டார் என நினைக்கிறேன்.

Philosophy Prabhakaran said...

// இந்தப்படம் ஆண்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம் //

ஏன் இந்தப்படத்தை பெண்கள் பார்க்கக்கூடாதா கெட்டவார்த்தைகளும் பாலியலும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா #ஆணாதிக்க சண்முகம்

Philosophy Prabhakaran said...

// கிட்டத்தட்ட திருநங்கை கேரக்டரில் ரவிகிருஷ்ணா //

அடப்பாவி... இத டைரக்டரு கேட்டா துரத்தி துரத்தி அடிப்பாரு...

Unknown said...

ஹிஹி பலரு முத்திகிட்டாங்க பாஸ் உங்கள இந்த பட விமர்சனம் போடுறதில..என்னாச்சு?
ஏன் லேட்டு??
ஆனா உங்கள மாதிரி யாரும் விரிவா விளக்கமா பட விமர்சனம் போடல...
அந்த வகையில் ஹாட்ஸ் ஒப் டு சி பி!!!

pranavviswa said...

/ என்னதான் இந்தப்படம் மெக்சிகன் படமான ட்ரேடு படத்தின் காப்பி என சொல்லப்பட்டாலும் செய் நேர்த்தி செம... /

இதுக்கும் ட்ரேடு படத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரில? தயவு செய்து பாத்துட்டு எழுதுங்க..

விமர்சனத்தை எழுதும் முன் படத்தின் உள்ளடக்கத்தை உள்வாங்கி எழுதவும்...

கடம்பவன குயில் said...

என்ன கொழுந்தனாருக்கு இன்னிக்கு தடுமாற்றம். trade பிரேசில் படம்.
டிரேட் படத்துக்கும் ஆரண்ய காண்டம் கதை நீங்கள் சொல்லியதுதான் என்றால் சுத்தமாக மேட்ச் ஆகலையே. டிரேட் கதை ஆண்மைதவறேல் கதையோடு வேண்டுமானால் ஒத்துப்போகும்.

அதுக்குத்தான் ஒரு நாளைக்கு 2,3 படங்களைப் பார்க்கக் கூடாது என்று சொல்வது. நல்லா குழம்பிட்டீங்க என்று நினைக்கிறேன்.

bandhu said...

படத்தின் முக்கிய திருப்பங்களை எழுதுவதை தவிர்க்கவும். படம் பார்க்காதவர்களின் சுவாரசியத்தை இது குறைக்கும்!

அதுவும் உங்கள் விமர்சனம் முன்னாலேயே வந்து விடுவதால், நிறையபேர் இன்னும் இந்த படத்தை பார்க்காமல் இருக்கிறோம்.

சுதா SJ said...

நல்ல விமர்சனம், படம் பாக்கணும் போல இருக்கு

kumaresan said...

என்னதான் இந்தப்படம் மெக்சிகன் படமான ட்ரேடு படத்தின் காப்பி என சொல்லப்பட்டாலும் செய் நேர்த்தி செம...//
ட்ரேடு படத்தை நீங்கள் பார்க்காமலெ எழுதி இருக்கீங்க முதலில் படத்தை பாருங்க.அதுக்கும் இதுக்கும் சிறுதுளிகூட சம்பந்தம் இல்லை.
ட்ரேடு படத்தொட லிங்க்:http://stagevu.com/video/dwqymuqhztiy

JesusJoseph said...

நல்ல விமர்சனம்

நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

புதுகை.அப்துல்லா said...

டிரேடு = ஆண்மைதவறேல்

சி.பி.செந்தில்குமார் said...

@புதுகை.அப்துல்லா

நன்றி அண்ணே.. சிலர் சொன்னாங்க ,தவறாகி விட்டது சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அண்ணே

Unknown said...

பாக்கணும் பாஸ்! இங்கே ரிலீசாச்சா தெரியல! இல்லேன்னா dvd க்கு வெய்ட் பண்ணனும்!
நல்ல படம்லாம் இப்பிடித்தான் பாக்கவேண்டியிருக்கு! :-(

Gangaram said...

boss.. Naangallam yenna andha padatha pakkave venama.. yen ippadi yella mukkiyamana visayathaum yeluthi thaldreenga... vimarsnam mattum pannunga boss.. idhu yennoda anbu vendugol... Full visayathaum.. unga parvayileye sollitta.. naanga padam pakkurappo oru feel irukkathu adhunalathaan.. purinchkkuveengannu ninaikkuren....

Shiva sky said...

படம் பார்த்தேன்....

ரொம்ப பிடித்திருந்தது...

Shiva sky said...

யுவனின் இசை...மிக அருமை..!

யுவனின் பிண்ணனி இசைக்காகவே

இன்னொரு முறை படம் பார்க்கலாம்...!

Shiva sky said...

யுவனின் இசை...மிக அருமை..!

யுவனின் பிண்ணனி இசைக்காகவே

இன்னொரு முறை படம் பார்க்கலாம்...!

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...படம் பார்த்தபின்தான் தங்கள் பதிவைப்படிக்க வேண்டும் எனக்காத்திருந்தேன்.
தங்கள் பதிவு எனக்கு பிரமிப்பூட்டியது.
எப்படி படத்தின் டயலாக்கை
அட்சரம் பிசகாமல் எழுதி உள்ளீர்கள்!!!