Monday, June 20, 2011

நெல்லை பதிவர் சந்திப்பும்,நான் வாங்கிய பல்புகளும்


ஜூன் மாசம் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்னைக்கு திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு நடந்தது.

ஜூன் 16 நைட் 10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல இடம் பிடிச்சாச்சு..ஈரோடு டூ நெல்லை ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்பதை ஜூன் 25 அன்று தனி பதிவா போட்டுக்கலாம்.. இப்போ பதிவர் சந்திப்புல என்ன நடந்ததுங்கறதை மட்டும் பார்ப்போம்..


நெல்லையில் காலை 5 மணிக்கு ரயில் ஸ்டேஷன் அடைகிறது.. வரவேற்க யாராவது வந்திருப்பாங்கன்னு பார்த்தா ஒரு பயலையும் காணோம்..  ( ஆமா இவரு பெரிய ஃபிகரு.. ரோசாப்பூ மாலையோட வந்து வரவேற்க.. )

இறங்குனதும் நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்க்கு ஃபோன் போட்டா அண்ணன் ஃபோனை எடுக்கவே இல்லை.. அடடா.. இது ரெகுலரா அண்ணன் பதிவு போடற டைம் ஆச்சே..


நடிகர் விக்ரம்,நடிகர் சம்பத் போல சாயலில் கலக்கலாக என் அருகே அமர்ந்திருப்பவர் பலா பட்டறை சங்கர்

சரி.. நாமே ஹோட்டல் பேரை வெச்சு விசாரிப்போம்னு விசாரிச்சுட்டு போனா ஹோட்டல் வாசல்ல லேப் டாப் மனோ படுத்திருக்கான்.. டேய் ராஸ்கோலு.. மப்புல இருக்கியா? எந்திரிலேய்.. என்றேன்..

செம சரக்கு போல.. அப்படியே வாசப்படில உருண்டுட்டு இருக்கட்டும்னு விட்டுட்டு ரிசப்ஷன்ல போய் விசாரிச்சேன்..

திருநெல்வேலி வாசிகள்க்கு ரசனை கம்மி போல.. (நெல்லைவாசிகள் மன்னிக்க) அவ்வளவு பிரமாதமான ஹோட்டல்ல ஒரு பக்கா ஃபிகரை ரிசப்ஷ்னிஸ்ட்டா போடாம ஒரு ஆம்பளையை அப்பாயிண்ட் பண்ணி இருந்தாங்க.என்னது? ஓப்பனிங்கே சரி இல்லையே?ன்னுட்டுயோசிச்சேன்..

சார்.. ரூம் இருக்கா?

ஓ ,இருக்கே.. மொத்தம் 237 ரூம் இருக்கு..

ஓக்கே ஒரு சிங்கிள் காட் ரூம் வேணும்..

அவசரப்படாதீங்க.. ரூம் இருக்கு,ஆனா எதுவும் காலியா இல்லை..

அடிங்கொய்யால.. நம்ம கிட்டேயேவா?ன்னு நினைச்சுட்டு பக்கத்துல உள்ள 6 ஹோட்டல்லயும் விசாரிச்சா எங்கேயும் ரூம் கிடைக்கல.. அது கூட பரவாயில்ல.. எல்லா ஹோட்டல்லயும் லேடி ரிசப்ஷனிஸ்ட் நஹி.. ஹூம்..

அப்புறம் எப்படியோ ஒரு ஹோட்டல்ல ரூம் கிடைச்சது.. ரூம்க்கு போய்ட்டு ராசலீலா ராஜேந்திரன் அண்னனுக்கு மெசேஜ் அனுப்பினேன் (மெசேஜ் அனுப்பினா நாலணா தான் )அண்ணன் ரிப்ளை எதுவும் அனுப்பலை.(அவருக்கு ஒரு ரூபாயாம் மெசேஜ் அனுப்ப)



பதிவுலக தாதா மாதிரி ,ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் மாதிரி ,ஹிந்தி வில்லன் மாதிரி தோற்றம் அளித்தாலும் பச்சப்புள்ளய்யா இந்த ஜெயந்த(வெறும்பய)

ஆனா 10 நிமிஷத்துல அண்ணன் ரூம்க்கு வந்துட்டாரு..

நான் தான் ரூம் வேணுமா?ன்னு முதல்லயே கேட்டப்ப வேணாம்னீங்க..

ஆமாண்ணே.. எதுக்கு உங்களுக்கு சிரமம்,நமக்கு கிடைக்காத ரூமா?ன்னு அசால்ட்டா இருந்துட்டேன்..

சரி.. குளிச்சுட்டு ஃபிரஸ் ஆகிட்டு வாங்க நான் ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்..

அண்ணே,நான் ஆல்ரெடி ஃபிரஸ் பீஸ் தான்.. குளிச்சாத்தான் ஃபிரஸ்ஸா? அவ்வ்வ்வ்


சரி சரி.. வாங்க..நாம 2 பேரும் டிஃபன் சாப்பிடலாம்..

(ஆஹா.. காலைலயும் ஓசி சாப்பாடா.. டேய் சி பி நீ நிறய புண்ணியம் செஞ்சவண்டா.. )

அண்ணன் ஒரு ஆஃபீசர் இல்லையா?தன்னோட கெத்தை காமிச்சாரு.. டேய் தம்பி.. இதை எல்லாம் க்ளீன் பண்ணு என்ன இப்படி இருக்கு?



நான்,அழுகாச்சி காவியம் புகழ் கவிதாயினி கல்பனா,ஃபாரீன் புயல் சித்ரா,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்

போன ஜென்மத்துல அண்ணன்  பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஆபரேட்டர் போல.. நல்ல படம் காமிச்சார்.. ஆனா ஒண்ணு அண்ணனுக்கு ஊர்ல செம செல்வாக்கு.. போலீஸ்காரங்க எல்லாம் அண்ணனுக்கு சல்யூட் வெச்சாங்க..

அவரோட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு போனாரு.. ஆஃபீஸ்ல அண்ணனுக்கு செம சவுகர்யம்.. ஒரு பெரிய ஹால் 40 * 40 சைஸ்..ஒரே ஒரு சேர்... வெளில இருக்கறவங்க உள்ளே பார்க்க முடியாது.. உள்ளே இருக்கறவங்க வெளில பார்க்கலாம்.. ஹூம்.. அண்ணன் என்னென்னெ தில்லு முல்லு பண்றாரோ//.. ஆனா பதிவர் சந்திப்புக்கும் அண்ணனோட பர்சனல் லீலைகளுக்கும் சம்பந்தம் இல்லாததால மேட்டர்க்கு வரேன்.

இங்கே ஏன் வெயிட் பண்ணனும்? நேரா ஹோட்டல்க்கு போயிடலாம்..?

இருங்க.. இப்போ பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும்,கவுசல்யாவும் வருவாங்க.. அப்புறம் போலாம்

சொன்ன மாதிரியே பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும் வந்தாங்க.. சங்கர் அண்னன் ஹிந்தி ஹீரோ கணக்கா  செம கலரா இருந்தாரு,,ஆனா பந்தா எல்லாம் பண்ணலை.. ( இனிமே நாமளும் வெட்டி பந்தா பண்ணுவதை குறைச்சுக்கனும்,, அஜித் மாதிரி இருக்கறவங்களே அடக்கி வாசிக்கறப்ப  அட்டக்கறுப்பா இருக்கற நாம எப்படி இருக்கனும்? )

மணிஜி அண்னன் ஜாக்கிசேகரோட தோஸ்த்.. ஏற்கனவே எனக்கு அறிமுகம், நேரில் இப்போத்தான் பார்க்கறேன்..

அப்போ அண்ணனுக்கு ஃபோன் வந்தது.. பேசுனது கவுசல்யா மேடம்

சார்.. நான் நேரா ஹோட்டலுக்கே வந்துடறேன்.. ஆஃபீஸ்க்கு வர்லை..

ஏம்மா?



அங்கே வந்தேன் .. சி பி அங்கே இருக்கறதை பார்த்தேன்.. அவன் விவகாரம் பிடிச்ச ஆள் ஆச்சே.. பிளாக்லயே நடிகைங்க ஃபோட்டோ எல்லாம் போடுவான்.. எதுக்கு வம்பு..? புரொஃபைல்ல என் ஃபோட்டோ தெரியக்கூடாது.. என் எழுத்து மட்டும் தெரிஞ்சா போதும்னு நினைக்கறேன்.. இவன் பாட்டுக்கு செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து போட்டுட்டா?

சரி சரி.. ஓக்கே ஓக்கே

அப்புறம் அண்ணன் வந்து சமாளிச்சார்..

மேடம் டிராஃபிக்ல மாட்டிட்டாங்களாம்.. நேரா ஹோட்டல்க்கு வந்துடறதா சொன்னாங்க..

 சரின்னு ஹோட்டல்க்கு  போனோம்..


அங்கே போனதும் “ வாங்க வாங்க வணக்கம்னு ஒரு லேடி வாய்ஸ் கேட்டுது..


ஆஹா, நம்மையும் ஒரு லேடி மதிச்சுட்டாங்களேன்னு நானும் பதிலுக்கு வணக்கம் போட்டேன்..

அந்த மேடம் அண்ணன்  கிட்டே ரகசியமா “ தம்பி யாரு?”ன்னு கேட்டாங்க..

ஹூம் ,யாருன்னு தெரியாமயே இந்த பில்டப்பா? ந்னு நினைச்சுட்டே அக்கா என் பேரு சி.பி அப்டின்னேன்.. அய்யய்யோ அப்டின்னாங்க..

என்ன கொடுமை சார்.. இது? ஆளாளுக்கு பார்த்து பயப்பட நான் என்ன செஞ்சேன்? ஏதோ 19 கில்மா பட விமர்சனம் பண்ணி இருக்கேன்.. ( எண்ணிக்கைல கரெக்ட்டா இருப்போம்ல..?)
 
கோமாளி செல்வா,லேப்டாப் மனோ,நான்(குற்றாலம்)

அவங்க அண்ணன் கிட்டே ஏதோ சொல்லி நைஸா என் செல் ஃபோனை பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க.. ( நான் ஃபோட்டோ எடுத்துடக்கூடாதாம்)

டாக்டர் கந்த சாமி கோவை ஆல்ரெடி அங்கே இருந்தார்.. அவர் கிட்டே அறிமுகம் நடந்தது..

இம்சை அரசன் பாபு ,வெறும்பய ஜெயந்த்,கோமாளி செல்வா,கல்பனா 4 பேரும் வந்தாங்க..

பாபு ஆள் காலேஜ் பிரின்ஸ் மாதிரி இருந்தாரு.. ஆள் நல்ல ஜாலியா பேசுனாரு.. ஜெயந்த் ஹிந்திப்பட வில்லன் மாதிரி இருந்தாரு.. தெரியாத்தனமா அவர் கிட்டே நான் கை குடுத்துட்டேன்.. குலுக்கறேன்கற பேர்ல கையை கசக்கி எடுத்துட்டாரு..

(அவரோட கோபத்துக்கு காரணம் அவர் எழுதுன ஜோதி தொடர் ல நான் “அப்புறம் ஜோதியை முடிச்சீங்களா? இல்லையா? அப்டின்னு கமெண்ட் போட்டிருந்தேன்.. அதான் , பழி வாங்கிட்டாரு..)

செல்வா ஏற்கனவே பார்த்து அறிமுகம் ஆனவர் தான்.. கைல ஸ்கிரிப்ட் வெச்சிருந்தார் ,காமெடி கதை போல.. மனப்பாடம் பண்ணிட்டு இருந்தார்..

கல்பனா தமிழ்ப்பொண்ணு கணக்கா ஒரு கும்பிடு போட்டாங்க,, நானும் கும்பிடு போட்டுட்டு சுய அறிமுகம் பண்ணுனேன்... (வேற யாரும் என்னை அறிமுகப்படுத்தலை..கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி நானே அறிமுகம் பண்ணிக்கிட்டேன்,வேற வழி?)

. என் பேரு.. சி.பி.. அட்ரா சக்க பிளாக் ஓனர்.. (பொல்லாத முதலாளிடா இவனுங்க.. )

அப்டியா.. சாரி.. நான் கேள்விபட்டதில்லை.. கண்ட கண்ட பிளாக் எல்லாம் நான் படிக்கறதில்லைன்னாங்க..

 ஹி ஹி .. நீங்க ஓப்பனா பேசறீங்க.. வெரிகுட்.. ( நற நற.. )

வெட்டிப்பேச்சு சித்ரா வந்தாங்க.. என்னமோ சொல்லீட்டே வந்தாங்க.. எல்லாம் அமெரிக்கன் இங்கிலீசா இருந்ததால எனக்கு ஒண்ணும் புரியல.. (பட்லர் இங்கிலிஸே ஒழுங்கா புரியாது நமக்கு.. )



அப்போத்தான் நம்ம ஆஃபீசர்.. ஒரு வில்லங்கமான காரியத்தை பண்ணுனாரு..

ஒண்ணா நேரடியா என்னை அறிமுகப்படுத்தி இருக்கோனும்.. இல்ல சும்மா விட்டிருக்கனும்.. இவர் பில்டப் குடுக்கறேன்கற பேர்ல..

 சித்ரா மேடம்.. இது (அக்ரிணை) யார்னு தெரியுதுங்களா?

எவனா இருந்தா எனக்கென்ன? ஹா ஹா  ஹா

அப்டின்னாங்க..

ஹூம் நமக்கு நேரமே சரி இல்லையே என நினைக்கும்போதுதான் நிரூபன் ஃபோன் வந்தது..

தொடரும்...

77 comments:

ராஜி said...

இதுவரை முகம்தெரியாமல்(புரொபைல் போட்டோ பார்த்தோமுங்கனு குதர்க்கமா ரிப்ளை பண்ணக்கூடாது)ன ந‌ட்பு கொண்டவர்களை, நேரில் சந்தித்து, பழகும் வாய்ப்பு உங்களைப்போல ஒருச்சிலருக்குத்தான் வாய்த்த்திருக்கு.மீதமுள்ள எங்களுக்கெல்லாம் எப்போ வாய்க்கப்போகிறதோ?!, நெல்லைக்கு வர வாய்ப்பில்லாதர்களுக்கு, நேரில் பார்த்ததுப்போல் நிகழ்ச்சியை பதிவிட்டமைக்கு நன்றிகள் சிபி சார்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வடை போச்சே....

ராஜி said...

அவ்வளவு பிரமாதமான ஹோட்டல்ல ஒரு பக்கா ஃபிகரை ரிசப்ஷ்னிஸ்ட்டா போடாம ஒரு ஆம்பளையை அப்பாயிண்ட் பண்ணி இருந்தாங்க.என்னது? ஓப்பனிங்கே சரி
>>>
ஹோட்டல்காரங்களுக்குத்தான் சிபி சாரைப்பத்தி தெரியாது, நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணவங்க்குளுக்குமா தெரியாது.

Unknown said...

அப்புறமா வாறன் இப்போ வேலை...ஒட்டு போட்டேன் இப்போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொடரும்ம்னு சொல்லிட்டீங்க. நான் டீக்கடைக்கு போகும்போது யாருமே தொடரலியே? ஏன்?

Unknown said...

அடேய் என்னை மறந்துட்டியே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டுட்டோரியல் காலேஜ் கூட போகாத பாபுவை காலேஜ் பிரின்சிபால் போல இருக்கானு சொன்ன சிபியை கண்டிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிபி பக்கங்கள்ன்னு போட்டு யாரும் பக்கத்துல வரலியா? என்ன கொடுமை சார் இது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

இதுவரை முகம்தெரியாமல்(புரொபைல் போட்டோ பார்த்தோமுங்கனு குதர்க்கமா ரிப்ளை பண்ணக்கூடாது)ன ந‌ட்பு கொண்டவர்களை, நேரில் சந்தித்து, பழகும் வாய்ப்பு உங்களைப்போல ஒருச்சிலருக்குத்தான் வாய்த்த்திருக்கு.மீதமுள்ள எங்களுக்கெல்லாம் எப்போ வாய்க்கப்போகிறதோ?!, நெல்லைக்கு வர வாய்ப்பில்லாதர்களுக்கு, நேரில் பார்த்ததுப்போல் நிகழ்ச்சியை பதிவிட்டமைக்கு நன்றிகள் சிபி சார்.//

ennai paartheengkale. athukke neengka punniyam pannirukkanum

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டுட்டோரியல் காலேஜ் கூட போகாத பாபுவை காலேஜ் பிரின்சிபால் போல இருக்கானு சொன்ன சிபியை கண்டிக்கிறேன்//

மொக்கையா போட்டு கொல்ற உன்ன சிரிப்பு போலிஸ்னு சொல்றதில்லையா? அதுமாதிரிதான்.. :))

உணவு உலகம் said...

Thodarum.....appa adutha pathivila Neenga courtalam women police kitta adi vaangnatha solveengalaa? Sojaattaa....,Mano, selva solvaangale!

வைகை said...

அந்த குற்றாலம் போனது தனி பதிவா? சிறப்பு படங்களுடன்.. ஒரு வேள அது கில்மா பதிவின் கீழ் வருமோ?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிபி பக்கங்கள்ன்னு போட்டு யாரும் பக்கத்துல வரலியா? என்ன கொடுமை சார் இது...//

அது ஒண்ணுமில்ல.. எப்பிடியும் குற்றாலம் போகபோறோம்னு ரெண்டு நாளா குளிக்காம போயிட்டாராம் :))

வைகை said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

வைகை எங்கிருந்தாலும் வந்து தான் என்ன திட்டினாரோ அதை ரீ கமெண்ட்டவும் ஹி ஹி

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
@வைகை

வைகை எங்கிருந்தாலும் வந்து தான் என்ன திட்டினாரோ அதை ரீ கமெண்ட்டவும் ஹி ஹி//

பதிவுலக கடவுள யாராவது திட்டுவாங்களா?.. அது கொஞ்சம் அதிகமா புகழ்ந்துட்டேன்... ஒரு கட்டிங் வாங்கி கொடுத்தா திரும்ப போடறேன் :))

ராஜி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

இதுவரை முகம்தெரியாமல்(புரொபைல் போட்டோ பார்த்தோமுங்கனு குதர்க்கமா ரிப்ளை பண்ணக்கூடாது)ன ந‌ட்பு கொண்டவர்களை, நேரில் சந்தித்து, பழகும் வாய்ப்பு உங்களைப்போல ஒருச்சிலருக்குத்தான் வாய்த்த்திருக்கு.மீதமுள்ள எங்களுக்கெல்லாம் எப்போ வாய்க்கப்போகிறதோ?!, நெல்லைக்கு வர வாய்ப்பில்லாதர்களுக்கு, நேரில் பார்த்ததுப்போல் நிகழ்ச்சியை பதிவிட்டமைக்கு நன்றிகள் சிபி சார்.//

ennai paartheengkale. athukke neengka punniyam pannirukkanum
>>>>
ஆமாம் நீயெல்லாம் ஒரு பதிவரா தம்பி. நான்கூட நீ எதோ போட்டோக் கடையில வேலைப் பார்க்குறியோனு நினைச்சேன்.

மாணவன் said...

சந்திப்புகள் இனிமையாய் நிறைவுபெற்றதற்கு வாழ்த்துக்கள் சார், சந்திப்பின்போது சென்னையிலிருந்து ஒரு பிரபல பதிவர் போன்பண்ணி பேசுனாராமே அத சொல்லவே இல்ல... :))

மாணவன் said...

//ennai paartheengkale. athukke neengka punniyam pannirukkanum
>>>>
ஆமாம் நீயெல்லாம் ஒரு பதிவரா தம்பி. நான்கூட நீ எதோ போட்டோக் கடையில வேலைப் பார்க்குறியோனு நினைச்சேன்.///

ஹா...ஹா.. அசிங்கபட்டார் ரமேஷ் :)

சி.பி.செந்தில்குமார் said...

@மாணவன்

ஹா ஹா அது 4 ம் பாகத்தில்

ராஜி said...

போன ஜென்மத்துல அண்ணன் பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஆபரேட்டர் போல.. நல்ல படம் காமிச்சார்.. ஆனா ஒண்ணு அண்ணனுக்கு ஊர்ல செம செல்வாக்கு..
>>>>>
என்னே ஒரு உவமை.

ராஜி said...

நானெல்லாம் இந்த வாய்ப்பை தவறவிட்டுட்டோமேனு கவலையா இருக்கு, அடுத்த தரம் சென்னையில வைங்க கலந்துக்கலாம்.

ராஜி said...

என்ன சிபி சார் நெல்லை பதிவுக்கு கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டு போகலியா? கூலிங்க் கிளாஸ் இல்லாம சிபி சாரா?! போங்க சார் அடையாளமே தெரியலை.

Paleo God said...

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி செந்தில். சிறப்பாகவும் தனித்துவமாகவும் எழுதக்கூடிய எல்லாத் திறமைகளும் உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும். :))

Unknown said...

அப்புறம் வேற யார் யாரெல்லாம் தம்பிக்கு பல்பு கொடுத்தாங்க? ஒரே ஆர்வமா இருக்கு தம்பி..:-)

சி.பி.செந்தில்குமார் said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

மிக்க நன்றி சார்.. உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்

சசிகுமார் said...

காலை டிபன் என்ன சாப்டீங்க சாருக்கு எவ்வளவு செலவு வச்சீங்கன்னு சொல்லாத சிபியை கண்டிக்கிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.(c.p) க்கு புது அர்த்தம் இருக்குதுங்கோ... உணவு சாரிடம் கேளுங்கள்.

செங்கோவி said...

பல்பு வாங்குனதைக்கூட பெருமையாச் சொல்ல அண்ணனால தான் முடியும்.

sathishsangkavi.blogspot.com said...

சிபி திருநெல்வேலில நிறைய பல்பு வாங்கி இருப்ப போல...

sathishsangkavi.blogspot.com said...

அல்வா வாங்கிட்டு வந்தியா இல்லியா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடபாவிகளா அங்க சாப்டதும் இல்லாம வீட்டுக்கு வேற பார்சலா? விளங்கிடும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ ராஜி
ஆமாம் நீயெல்லாம் ஒரு பதிவரா தம்பி. நான்கூட நீ எதோ போட்டோக் கடையில வேலைப் பார்க்குறியோனு நினைச்சேன்.//

ஒரு பிரபல பதிவரை பத்தி தெரியலை(என்னை சொன்னேன்) இவங்கெல்லாம் பதிவர் சந்திப்புக்கு வர்றாங்களாம். ஐயோ ஐயோ

rajamelaiyur said...

//
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடபாவிகளா அங்க சாப்டதும் இல்லாம வீட்டுக்கு வேற பார்சலா? விளங்கிடும்
///

உங்களுக்கு தரலைன்னு பொறமை

Anonymous said...

அட இந்த தடவை நான் மாட்டிக் கொண்டென உங்களிடம் !!!!
ஒரு நாள் அழுததா ஊர் பூர சொல்லறாங்க இது நியாமா ?????????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கல்பனா said...

அட இந்த தடவை நான் மாட்டிக் கொண்டென உங்களிடம் !!!!
ஒரு நாள் அழுததா ஊர் பூர சொல்லறாங்க இது நியாமா ?????????//

ஏன் ஏதாச்சும் சினிமா விமர்சனம் சொன்னாரா?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் பரதேசி, நான் பதினோரு மணிக்கு'தானேடா வந்தேன் ராஸ்கல். எழுதுறதா இருந்தா உண்மையா எழுது...[[இரு குற்றாலத்துல நீ பண்ணுன அலும்பு எல்லாம் வெளியே விடுறேன் பழிக்கு பழியா]]

ஸ்ரீராம். said...

தொடருமா....
குறுநாவலா, தொடர்கதையா, மெகா சீரியலா....!!

கோவை நேரம் said...

அடடா ..அல்வா போச்சே ...மிஸ் பண்ணிட்டேனே ..உங்க பதிவை படிக்கும் போது நேர்ல இருக்கிற பீலிங்

சக்தி கல்வி மையம் said...

தமிழ்வாசி - Prakash said...

வடை போச்சே....// romba mukkiyam..

சென்னை பித்தன் said...

படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது!தொடருங்கள்!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

கலக்கல் கலக்கல்

N.H. Narasimma Prasad said...

அகில உலக 'கில்மா ஸ்டார்' அண்ணன் சி.பி.செந்தில்குமாரை நேரிலும், பின்னூட்டத்தின் மூலமாகவும் கலாய்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இப்படிக்கு உகாண்டா ரசிகர்மன்ற கிளை. (எப்புடி? நாங்களும் கலாய்ப்போம்ல!)

நானானி said...

அட்ரா சக்கை...அட்ரா சக்கை..நல்லாவே கலக்கீட்டீங்க.
எங்கூரு குசும்பு எல்லாம் கண்டுகிட்டீங்களா?
அண்ணன் சகாதேவன் சந்தீர்களா?
என்னால்தான் வரமுடியலை.

Sivakumar said...

கண்ணுக்கு மை அழகு. மனோவுக்கு தொப்பை அழகு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செம கலக்கல் ரிப்போரட் சி பி! நேரில கலந்து கொண்டது போலவே இருக்கு! ஆமா நீங்க வாங்கின பல்புகள என்ன பண்ணீங்க! ஃபிரான்சுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க! ஒரு தொகை தந்து வாங்கிக்கறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அப்புறம் , நீங்க பயணம் போன அன்னிக்கு ராத்திரி ரெயின்ல என்ன நடந்திச்சு? ஆவலுடன் காத்திருக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அடுத்த பாகம் இன்னிக்கேவா? அல்லது நாளைக்கா?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

நீங்க கலக்குங்க தல, எல்லாம் நேர பார்த்த மாதிரியே இருக்கு.

ஹா ஹா ஹா

சிநேகிதன் அக்பர் said...

பதிவர் சந்திப்பு உங்க ஸ்டைல்ல... அசத்துங்க பாஸ்.

போளூர் தயாநிதி said...

சந்திப்புகள் இனிமையாய் நிறைவுபெற்றதற்கு வாழ்த்துக்கள்

மாலதி said...

நெல்லைக்கு வர வாய்ப்பில்லாதர்களுக்கு, நேரில் பார்த்ததுப்போல் நிகழ்ச்சியை பதிவிட்டமைக்கு நன்றிகள்

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ சி பி நான் கோவமா இருக்கேன் ..ஒரு யங் காலேஜ் யூத் பார்த்து காலேஜ் ப்ரோபாசர் ன்னு சொல்லி போட்டீங்களே ...

Shiva sky said...

ROMBA NALLAVAN NA NEENGA..

சி.பி.செந்தில்குமார் said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

சால்னாக்கடைக்குப்போனப்ப தொடர்ந்தாரெ ராம்சாமி மறந்தாச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்


நீ 3 ஆம் பாகத்தில்

சி.பி.செந்தில்குமார் said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

என்னைப்பார்த்தாலே எல்லாரும் ஓடறாங்க ,, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

@ஜீ...

ஆஹா என்னா ஒரு வில்லத்தனம்?

சி.பி.செந்தில்குமார் said...

@சசிகுமார்



ஹூம் நான் என்ன பதிவு போட்டாலும் கண்டிக்கறாங்க.. நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி

சி.பி.செந்தில்குமார் said...

@இம்சைஅரசன் பாபு..

hi hi ஹி ஹி

குறையொன்றுமில்லை. said...

நேரில் சந்தித்த எபெக்ட். மேலும் மேலும் நிறைய பல்புகள் வாங்க
வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் காலைல 5 மணிக்கு ஹோட்டல் ரிசப்சன்ல நைட் டூட்டி ஆளுதான் இருப்பாங்க, 8 மணிக்கு மேலதான் பிகர்ஸ் வருவாங்க........! சே ஏழுகழுத வயசாகியும் இதுகூட தெரியாம....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// போன ஜென்மத்துல அண்ணன் பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஆபரேட்டர் போல..//////

அப்போ இத்தனை வருசமா பறங்கி மலை ஜோதி கஸ்டமரா இருக்கீங்களா சிபி? எப்பேர்ப்பட்ட சாதனை...?

காங்கேயம் P.நந்தகுமார் said...

பதிவர் சந்திப்பு இடுக்கை நன்று. உங்க எழுத்தில் நகைச்சுவை சிரித்தது. மெய்யாலுமே நல்லாயிருந்ததுண்ணே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஏதோ 19 கில்மா பட விமர்சனம் பண்ணி இருக்கேன்..///////

ஆனா பார்த்தது எப்படியும் ஒரு 500+ இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பாபு ஆள் காலேஜ் பிரின்ஸ் மாதிரி இருந்தாரு..///////

இது டூ மச் டூட்டூ மச்........ (ஒருவேள சிபி சொன்னது டுட்டோரியல் காலேஜா இருக்குமோ?)

cheena (சீனா) said...

அன்பின் சிபி - அன்று சந்திப்பில் அதிக நேரம் பேச இயலவில்லை. இடுகை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

R.Puratchimani said...

உங்களின் நகைச்சுவை கலந்த எழுத்து அருமை ...தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளரை தவற விட்டு கொண்டிருக்கின்றதோ...என தோன்றுகிறது...

கடம்பவன குயில் said...

உங்களோட எழுத்தில் நான் விகடன் மதன் சாரோட சாயலைப் பார்க்கிறேன். ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. சீக்கிரம் தொடருங்கள்.

ராஜ நடராஜன் said...

அந்தப் பாழாப் போன வெள்ளக்காரன் எங்க மனோவுக்கு லேப்டாப் மனோ பட்டப்பெயர் வாங்க வச்சுட்டானே:)

மாதேவி said...

பதிவர் சந்திப்பு படங்களுடன் கலக்கல்.

நிரூபன் said...

சி.பி அப்டின்னேன்.. அய்யய்யோ அப்டின்னாங்க..

என்ன கொடுமை சார்.. இது? ஆளாளுக்கு பார்த்து பயப்பட நான் என்ன செஞ்சேன்? ஏதோ 19 கில்மா பட விமர்சனம் பண்ணி இருக்கேன்.. ( எண்ணிக்கைல கரெக்ட்டா இருப்போம்ல..?)//

ஐயோ...ஐயோ....ஐயோ...
நம்ம அண்ணாச்சி, அழகரைப் பார்த்துப் பயப்படுவது நியாயமா.
ஹி...ஹி...

நிரூபன் said...

ஹூம் நமக்கு நேரமே சரி இல்லையே என நினைக்கும்போதுதான் நிரூபன் ஃபோன் வந்தது..

தொடரும்..//

என்ன ஒரு டெரர் தனம்,

நான் போன் பண்ணினா எப்பவுமே நல்லது தானே நடக்கும், என்ன எல்லோருமே சேர்ந்து கும்மிட்டாங்களா...
ஹி...ஹி...

நிரூபன் said...

சிபி, தொலைக்காட்சியூடாக நேரலையில் இந்தச் சந்திப்பினைப் பார்க்க முடியாத குறையினை உங்களின் பதிவு நிவர்த்தி செய்கிறது.
பதிவர் சந்திப்பினைச் சுவாரஸ்யம் கூட்டி அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கீறீங்க சகோ.

J.P Josephine Baba said...

நண்பா உங்கள் எழுத்தில் ஒரு தனி தன்மையும் உங்களை போன்றே ஒரு ஆளுமையும் உள்ளது. வாழ்த்துக்கள்.உங்களை போன்றோர் எழுத்துலகத்திற்க்கு வரப் பிரசாதமே!!