Monday, June 27, 2011

அன்பே.. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது

1.நீ என்னை காயப்படுத்தி விட்டாய்,இதில் என்ன விசித்திரம் எனில் காயத்துக்கு மருந்தே நீ தான்.

------------------------

2. உணர்ச்சி வசப்பட்டு நான் வார்த்தைகளை கொட்டுவதில்லை,உணர்ச்சிகள் மாறி விடும்,ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. 

--------------------

3.  சேலை எடுக்கும் கணவன் மெல்லிய  எடை குறைந்த சேலையாக எடுத்தால்வீட்டில் துவைக்கும் பணி கணவனுடையதாக இருக்கும்

---------------------

4.  என்னைப்புரிந்து கொள்வாயா?இல்லை,பிரிந்து கொல்வாயா?முடிவெடுக்கும் அதிகாரம் உன் கையில்,ஏற்றுக்கொள்ளும் அன்பு என் மனதில்#அப்ளிகேஷன்

---------------------

5. நான் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்வதே இல்லை என என்னுடன் ஊடல்கொண்டாள்.அப்போதுதான் ஏன்? ஏன்? என பேசிக்கொண்டே இருப்பாய் என்றேன்


 ---------------------



6. கொடுத்து கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது,வாங்கினால் வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்ற இங்கிதம் இல்லாத உதடுகள் உன்னுது#கிஸ்ஸாலஜி

--------------------

7. இன்றுடன் நம் காதல் செத்துப்போய்  12 ஆண்டுகள் ஆகின்றன.நீயும், நானும் தனித்தனியே இருக்கிறோம்.வாழ்கிறோமா?

---------------------------

8. கூட்ட நெரிசலில் பஸ்ஸில் கண்டக்டர் முன்னும்பின்னும்  எரிச்சலுடன் அடிக்கடி சென்று வருவதைப்போல என் நினைவுகள் உன் ஊடல் தருணங்களைதொட்டுத்தொட்டு வருகிறது..

----------------------------

9. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது,வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட இயலாத ஏழை அசலையாவது கட்ட ஏங்குவது போல் கிடைத்த அன்பை உன் மீது செலுத்த துடிக்கிறேன்

--------------------

10.  கல்நெஞ்சக்காரியடி நீ.அதனால் தான் உன் முடிவை மறு பரிசீலனைக்கு நான் கோரிக்கையே விடுக்கவில்லை.நேசிப்பு என்பது இதயம் உள்ளவர்களூக்குமட்டும்

------------------------

21 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிறைய ட்வீட்டுகளை பார்த்தா அடி கொஞ்சம் பலம்தான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்பவே திருந்திட்ட மாதிரி தெரியுதே? அப்போ இந்த வெள்ளிக்கெழம...?

settaikkaran said...

வலைப்பதிவு, ட்விட்டர், பஸ் - தல, சென்னிமலை பக்கத்துலே கற்பனை நிக்காம ஊறுறா மாதிரி ஏதாச்சும் சுனை இருக்குதுங்களா? #டவுட்டு

ராஜி said...

உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது,வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட இயலாத ஏழை அசலையாவது கட்ட ஏங்குவது போல் கிடைத்த அன்பை உன் மீது செலுத்த துடிக்கிறேன்
>>>
உங்க professional க்கு தகுந்த மாதிரி போகுது பாரு உங்க புத்தி.
காதலிலியும் வட்டி, அசல்னு

ராஜி said...

இன்றுடன் நம் காதல் செத்துப்போய் 12 ஆண்டுகள் ஆகின்றன.நீயும், நானும் தனித்தனியே இருக்கிறோம்.வாழ்கிறோமா?
>>
இது "அவங்களுக்கு" தெரியுமா?

Jana said...

உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது,வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட இயலாத ஏழை அசலையாவது கட்ட ஏங்குவது போல் கிடைத்த அன்பை உன் மீது செலுத்த துடிக்கிறேன்...

இது சூப்பராய் இருக்கே தலை :)

தமிழ்வாசி பிரகாஷ் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
பன்னிக்குட்டி அண்ணே.... சி.பி மேல கண்ணு வைக்காதிங்க/

குணசேகரன்... said...

பழைய ஃபார்முக்கு வந்திட்டீங்க..

Unknown said...

பயபுள்ள கமெண்டை கூட காப்பி பண்ண முடியாதபடி செய்திருக்கார்...

Unknown said...

@தமிழ்வாசி//
அப்போ கண்ணு வைக்காம வேற என்ன வைக்க சொல்றீங்க??ஹிஹி
நோ டபுள் மீனிங்!!

RAMA RAVI (RAMVI) said...

அன்பு அதிகமானாலும் கஷ்டம் தான் போலிருக்கிறது!!!!!

Unknown said...

டுவீத்ஸ் கலக்கல் பாஸ்...
அப்புறம் நீங்க பேசுறது அண்ணன் உணவு உலகம் போஸ்ட்ல பாத்தேன்...
ரொம்ப சாது போல இருக்கீங்க பாஸ்...
உங்க பணிவு,சிரித்த முகம் தான் அனைவரையும் இழுக்குது!!

THOPPITHOPPI said...

அட அட கவிதா கவிதா... ச்சி.. கவிதை கவிதை

செங்கோவி said...

அடடா..ஒன்னுக்குக் கீழ ஒன்னா எழுதி இருந்தா கவிதை ஆகியிருக்குமே.

நிரூபன் said...

உணர்ச்சி வசப்பட்டு நான் வார்த்தைகளை கொட்டுவதில்லை,உணர்ச்சிகள் மாறி விடும்,ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. //

சரியாகச் சொன்னீங்க பாஸ்...

நிரூபன் said...

சேலை எடுக்கும் கணவன் மெல்லிய எடை குறைந்த சேலையாக எடுத்தால்வீட்டில் துவைக்கும் பணி கணவனுடையதாக இருக்கும்//

மக்களே, அனுபவப்பட்டவர் சொல்றாரு,
நீங்க எல்லோரும் பாலோ பண்ணிக்குங்க.

நிரூபன் said...

கொடுத்து கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது,வாங்கினால் வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்ற இங்கிதம் இல்லாத உதடுகள் உன்னுது#கிஸ்ஸாலஜி//

கொன்னுட்டீங்க பாஸ்..

கவிதை நடையில் கலக்கலா எழுதியிருக்கிறீங்க..

அடுத்த கட்டமாக உங்களிடம் இருந்து கவிதைகளை எதிர்பார்க்கிறோம்..

நிரூபன் said...

இன்றுடன் நம் காதல் செத்துப்போய் 12 ஆண்டுகள் ஆகின்றன.நீயும், நானும் தனித்தனியே இருக்கிறோம்.வாழ்கிறோமா?//

பாஸ், இப்பத் தானே ப்ளாக் எழுதத் தொடங்கியிருக்கிறீங்க.

போன வருசத்தில் இருந்து என்றால் ஒரு வருசம் என்று தானே வந்திருக்கனும்;-)))

நிரூபன் said...

கல்நெஞ்சக்காரியடி நீ.அதனால் தான் உன் முடிவை மறு பரிசீலனைக்கு நான் கோரிக்கையே விடுக்கவில்லை.நேசிப்பு என்பது இதயம் உள்ளவர்களூக்குமட்டும்//

வாழ்த்துக்கள் சிபி,
வித்தியாசமான ஒரு நடையில் டுவிட்ஸ்களைத் தந்திருக்கிறீங்க.

தொடர்ந்தும் கலக்கலான கவி நடை கலந்த் டுவிட்ஸ்களோடு,
இலக்கிய நயம் ததும்பும் கவிதைகளையும் எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

ஒண்ணுமே புரியலே உலகத்துலே..என்னமோ நடக்குது மர்மமா இருக்குது......ரீப்பீட்டு

ganesh said...

உணர்ச்சி வசப்பட்டு நான் வார்த்தைகளை கொட்டுவதில்லை,உணர்ச்சிகள் மாறி விடும்,ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. Very Nice Lines...