Tuesday, June 21, 2011

திருநெல்வேலி அல்வாடா.. வடை வாங்கி செல்வாடா.. நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 2



நெல்லை பதிவர் சந்திப்பு பற்றி பேச ஆரம்பிக்கும்போதே ஆன் லைன் -ல் அனைவரும் அந்த சந்திப்பை காண வேண்டும் என்ற அளப்பரிய ஆர்வம் இலங்கை அலப்பறை மன்னன் நிரூபனுக்கு இருந்தது.. பதிவர் சந்திப்பு அன்று அவர் ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுட்டு வீட்ல காத்துட்டு இருந்தார்..


யார் செய்த பாவமோ,அண்ணன் உணவு உலகம் போன ஜென்மத்துல  எந்த ஃபிகரை ஏமாத்தி சாபம் வாங்குனாரோ ஹோட்டல்ல நெட் ஒர்க் ஆகலை..

என்னென்னமோ முயற்சி செஞ்சு பார்த்தோம், முடியலை.. நிரூபனை ஒரு வழியா சமாதானப்படுத்திட்டு  பதிவர் சந்திப்பு  கூட்டம் ஆரம்பம் ஆச்சு..


எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு வரி அறி முகம்..

பெயர் சொல்ல விருப்பம் இல்லை (ஹூம் இப்படி ஒரு பிளாக்கர் பேரா/) ஆள் செம காமெடியா இருந்தார்.. கன்னிப்பொண்ணுங்க பொதுவா பசங்களுக்கு என்ன சாத்துவாங்களோ அதை நெற்றில இட்டிருந்தார் .. ( அதாங்க நாமம்)

ரசிகன் ஷர்புதின் அப்பாஸ் மாதிரி இருந்தார்.. ( தனி மெயில்ல அஜித் மாதிரி தான் இருக்கறதா போடனும்னு மிரட்னாரு.. )

மேலும் ஒவ்வொருத்தர் பற்றியும் வர்ணிக்கறதுக்குள்ள  புரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடுச்சு..

லேப்டாப் மனோ பேசறான் (ர்),அருகில் அண்ணன் உணவு உலகம்,வலைச்சரம் சீனா ,பலாபட்டறை சங்கர், அப்பாஸ் ரசிகன் ஷர்புதீன்


நிகழ்ச்சியின் 2 வது கட்டமா கோபி காதல் மன்னன் கோமாளி செல்வா  கதை விடும் நேரம்.. ( கோபி மாவட்டம் பாரியூர் என்ற ஊரில் மட்டும் எங்கள் தங்கத்தலைவன் செல்வாவுக்கு 3 காதலிகள் ஹி ஹி .. அந்த ஃபிகர்களோட ஃபோட்டோ வேண்டுபவர்கள் செல்வாவிடம் தனி மெயிலில் கேட்டுப்பெற்றுக்கொள்ளவும்,.. )


கோமாளி செல்வாவைப்பற்றி ஒரு அறிமுகம்,, அவர் பிளாக் உலகில் உள்ள மிக முக்கியமான நகைச்சுவை எழுத்துக்கு சொந்தக்காரர்..செல்வா கதைகள் என அவர் எழுதி வருவது முல்லா கதைகளுக்கு இணையானது..  இவர் பத்திரிக்கை உலகை கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. இவர் இப்போதே ட்விட்டர் அக்கவுண்ட்டில் பின்னிட்டு இருக்கார்.. ஆனந்த விகடனில் 5  ட்வீட்கள் வந்துள்ளது..இவர் என்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் திறமையில்,நகைச்சுவையில் ,பழகும் பண்பில்,கண்ணியத்தில் மிக மிக உயர்ந்தவர்.. 


கோமாளி செல்வா மீது நான் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் அவர் கதையை படிக்க உங்கள் சுவராஸ்யத்துக்காக அவரை செந்திலாகவும் , என்னை கவுண்டமணியாகவும் கற்பனை செய்து கொள்க.. இந்த உரையாடலில் ஏற்படும் மரியாதைக்குறைவான வசனங்களுக்கு மன்னிக்கவும்..செல்வாவின் குடும்பத்தார்கள், அவரது நண்பர்கள் ,அவரால் கழட்டி விடப்பட்ட, இனி கழட்டி விடப்போகிற காதலிகள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.. ஹி ஹி



எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. 

 சி.பி - அப்போ ஆரம்பிக்காதே.. நாங்க தப்பிச்சுக்கறோம்.. 


காரணம் என்ன விட பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கீங்க. அந்த பயம்தான். அதுவும் இல்லாம இது ஒரு மொக்க கதை.

 சி.பி- ஒரு மொக்கைப்பையன் கிட்டே இருந்து வேற எதை எதிர்பார்க்க முடியும்?


தயவு செஞ்சு கோபப்பட்டுறாதீங்க. சீக்கிரமே முடிச்சிடறேன்.

 சி.பி - கதையையா? எங்களையா? 

கூடவே இத நான் பேச்சு வழக்குல இல்லாம உரைநடை வழக்குல சொல்லப்போறேன். அது எப்படி இருக்குனு நீங்க கேட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லுங்க!

சி.பி - உயிரோட இருந்தா சொல்றோம்.. 


நீங்கள் இந்தப் பதிவர் சந்திப்பிற்கு மன்னிக்கவும் நண்பர்கள் சந்திப்பிற்கு வரும்போது பூனை குறுக்கே செல்லுதல் போன்ற சகுனங்கள் ஏற்ப்பட்டு அது மூட நம்பிக்கை என்று உதாசீனப்படுத்திக்கொண்டு வந்திருந்தால் நான் சொல்லப்போகும் இந்தக் கதை உங்களின் அந்த எண்ணத்தை மாற்றிவிடும்.

சி.பி - பூனை குறுக்கே வர்லை.. ஒரு யானை தான் குறுக்கே வந்துச்சு.. லேப் டாப் மனோ.. தான் மப்புல  குறுக்கே வந்தான்.. ஹா ஹா 


முதலில் உங்களுடன் சிறு கேள்வி ஒன்று இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இன்று காலை சூரியன் உதித்ததிலிருது இப்பொழுதுவரை எத்தனை நாளிகைகள் ஆகியுள்ளன என்று துல்லியமாகத் தெரியுமா ?


சி.பி - நாளிகையா? நாழிகையா? டவுட்டு/....

உங்களுக்குத் தெரியாதென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் அதுபற்றித் தெரியாது.


சி.பி - அடங்கொய்யால.. உனக்கும் தெரியாதா> அப்புறம் என்ன இதுக்கோசரம் என்னை கேட்டே? 

இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் நாளிகைக் கணக்கிற்கும் நமது கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதே. ஆகையினால் நாம் கதையைத் தொடரலாம். கதையின் சில இடங்களில் புயல் , மழை வருமென்பதால் எல்லோரும் தயவு செய்து உங்களது குடைகளைக் கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

 சி.பி - குடையை கையில் எடுத்த வை கோ வுக்கு  நேர்ந்த கதி எங்களுக்கும் வரனுமா? 



சுமார் 2100 வருடங்களுக்கு முன்னர் தமிழ் பீட்டர் என்றொரு குறுநில மன்னன் இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களில் யாரும் 2100 வருடங்களாக வாழ்ந்துவருபவர்களாகத் தெரியவில்லை.

சி.பி - இந்த கூட்டத்துலயே  கோவை டாக்டர் கந்த சாமியும்,உணவு உலகம் அண்ணனும் தான் சீனியர்ஸ்.. நீ எல்லாரையும் விட சீனியர் போல..

இருந்தாலும் நான்தான் திருவள்ளுவரின் வகுப்பாசிரியர் என்றும் நான் கணிதப்பாடம் நடத்தியதால் வெறுத்துப்போன திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் உங்களில் யாரேனும் எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ சொல்ல வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் அந்த மன்னன் எனது கற்பனையில் வந்தவன் என்பதையும் கூற விழைகிறேன்!

 சி.பி - முப்பொழுதும் உன் கற்பனைகள் ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு..? நாயே... நாயே.. 


கோபியின் காதல் மன்னன் எங்கள் அண்ணன் கோமாளி செல்வா ,வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன்
( கூலிங்க் கிளாஸை மறந்துட்டு வந்துட்டாராம்.. )

தமிழ் மன்னனுக்கு அதுவும் 2100 ஆண்டுகளுக்கு முந்தய மன்னனுக்கு எப்படி தமிழ் பீட்டர் என்றொரு ஆங்கிலப்பெயர் வந்தது என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அதற்கான காரணத்தை நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுதித் தொலைத்துவிட்டதால் மன்னிக்கவும் எழுதி கையுடனே கொண்டுவந்திருப்பதால் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

சி.பி - என்ன? கலைஞரை சோனியா மிரட்டி 63 சீட் வாங்குன மாதிரி மிரட்றே? 

அதிக தமிழர்கள் உள்ள இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுபவரை நாம் பீட்டர் விடுறான் என்று சொல்கிறோம். அதைப்போலவே நமது மன்னர் ஒரு சமயம் அரசு வரிப்பணத்தில் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்காவிட்டால் தான் மன்னராயிருப்பதற்கே தகுதியற்றவர் என்ற என்று நினைத்ததால் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.

சி.பி - அட பொழப்பு கெட்ட மன்னா.. மன்னர்னா அந்தப்புரத்தை சுத்திப்பார்க்கனும்.. 

அப்பொழுது இங்கிலாந்தில் பிறந்த இரண்டுவயதுக் குழந்தை கூட ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபன் நமது மன்னரிடம் சில கேள்விகளைக்கேட்டன். மன்னரும் எவ்வளவோ முயன்றும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாதுதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


சி.பி - டேய் டேய்.. சீக்கிரம் மேட்டருக்கு வாடா.. பொறுப்பல்ல பருப்பல்லன்னு என்னடா இழுவை.. 

ஏனெனில் என் குலதெய்வத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவரை ஆங்கிலம் கற்க வேண்டாமெனச் சொல்லவேயில்லை. சரி கதைக்கு வருவோம்.


சி.பி - உன் குள தெய்வம்  அடச்சே... குல தெய்வம் ஹன்சிகா மோத்வாணி தானே?

பதிலேதும் பேசமுடியாமல் நின்றிருந்த நம் மன்னர் திடீரென தமிழில் பேச ஆரம்பித்தார். மன்னர் பேசியது அந்த இளைஞருக்கோ அல்லது அந்த இளைஞர் பேசியது நம் மன்னருக்கோ புரியவில்லை.

சி.பி - இப்போ நீ பேசறது  மட்டும் எங்களுக்குப்புரிஞ்சிடுச்சாக்கும்.. நாயே நாயே..

எனவே ஆங்கிலம் அதிகம் பேசுவோர் இருக்கும் இடத்தில் தமிழில் பேசியதால் நம் மன்னரின் பெயர் அன்றிலிருந்த தமிழ் பீட்டர் என்றானது.


சி.பி - வேட்டிப்பேச்சு சித்ராவை நக்கல் அடித்ததற்காக எனது கடும் கண்டனங்கள் ஹி ஹி நாங்களும் கோர்த்து விடுவோமில்ல. ஏஹே ஹேய்  

மன்னரின் பெயர்க்காரணத்திற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டபடியால் விரைவில் இந்தக் கதையை முடிக்க முயற்சிக்கிறேன்.

சி.பி - உன்னை முடிச்சா போதும் ,கதை உடனே முடிஞ்சிடும்.. 


சிறிது நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மன்னருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததது.

 சி.பி - ஏன் பட்டத்து ராணி குப்பத்து கோபால் கூட ஊடிப்போயிடுச்சா?

அது என்ன அதிர்ச்சி என்று தெரிந்துகொள்ள சிறிய விளம்பர இடைவேளை விடலாம் என்றிருந்தேன். விளம்பரத்திற்காக நான் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சில சோப்பு நிறுவனங்களிடமும், எங்கள் ஷாம்பூ போட்டு பல்லு விளக்கினால் பற்களில் கூட முடி முளைக்கும் என்று விளம்பரம் செய்யும் விளம்பரக் கம்பனிக்காரர்களிடமும் எனது கதைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்யுங்கள் என்று நீண்ட நேரம் போராடினேன். பலனில்லை . அவர்கள் சொன்ன ஒரே பதில் மானாடி , மயிலாடி கெமிஸ்ட்ரி வந்தால்தான் நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் என்றதுதான்.

சி.பி - கலைஞர் டி வியை நக்கல் அடிக்கற அளவு பெரிய ஆள் ஆகிட்டயா ராஸ்கல். இதுக்கு தண்டனையா கலா மாஸ்டரை க்ளோஸப்ல மேக்கப் இல்லாம ஒருக்கா, ஃபுல் மேக்கப்போட மறுக்கா காட்டனும்டா..  (ஒருக்கா ,மறுக்கா ,கலாக்கா அடடே நானும் கவிஞன் ஆகிடுவேன் போல இருக்கே... ஹூம் நம்ம முதல் கவிதையே கலாபூர்வமா அமைஞ்சிடுச்செ..?)

படிக்கும் காலத்திலிருந்தே நானும் கெமிஸ்ட்ரியும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணித்ததால் அவர்கள் கேட்டது போல எனது கதையில் கெமிஸ்ட்ரி வராது என்பதால் விளம்பரம் தேடும் எனது முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன்.

 சி.பி - கோபில இருக்கற கெமிஸ்ட்ரி டீச்சர் ஏன் ரிசைன் பண்ணீட்டாங்கன்னு இப்போத்தான் தெரியுது.. பாப்பா எங்கே போனாலும் எதிர்க்கவே அதாவது எதிர் திசைலயே வந்தா எப்படிய்யா?

அதே போல தொடரும் என்று போடுவதற்கு இது ஒன்று தொடர் நாடகமில்லை என்பதால் மறுபடியும் கதையைத் தொடர்கிறேன்.

நாடு திரும்பிய நம் மன்னருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் வெளிநாடு சென்று வந்த தினத்தன்று மன்னர் அகோரப் பசியிலிருந்தார். அதனால் அன்று பல்லுவிலக்குவதைக் கூட இரு தினங்களுக்கு ஒத்திப்போட்டுவிட்டு நாட்டில் யாருமே பல்லு விளக்கக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டுவிட்டு பந்தியில் அமர்ந்தார்.

சி.பி - அய்யய்யோ ,ரமேஷ்க்கு ஆபத்தாச்சே.. அவர் பல் துலக்காம சாப்பிட மாட்டாரே?ஓ சி சாப்பாடுன்னா மட்டும் விதி விலக்கு உண்டு.. 


அப்பொழுது என்னைத் தொடாதே என்றொரு சத்தம் கேட்டது.

சி.பி - தம்பி . இது பதிவர் சந்திப்பு , லேடீஸ் எல்லாம் இருக்காங்க.. இது அட்ராசக்க பிளாக் கிடையாது.. எது வேணாலும் சொல்லலாம்கறதுக்கு அடக்கி வாசி அமுக்கி வசி.. 


அதிர்ச்சியில் உறைந்துபோன மன்னர் அந்த சத்தம் இலையில் வைத்திருந்த பச்சியிலிருந்து வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.. மன்னரின் அகோரப்பசி அந்தப் பச்சி சொல்வதைக் கேட்காமல் இரண்டு பச்சிகளை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

அப்பொழுது இலையிலிருந்த இன்னொரு பச்சி சொன்னது " பல்லு விளக்காமல் எங்களைச் சாப்பிட்டதால் எதிர்காலத்தில் சான்றோர்களின் முன்னிலையில், உன்னைவிட அறிவாளிகளின் முன்னிலையில் நீ ஒரு மொக்கைக் கதை சொல்வாய் அதற்காக பயந்து நிற்பாய் " என நான் சாபம் அளிக்கிறேன் என்று வாயை மூடுவதற்குள் மன்னர் அந்தப் பச்சியை தனது வாயில் போட்டு மூடிவிட்டார்.

அந்தப் பச்சியின் சாபம் நிறைவேறாது என்று கர்வத்தில் இருந்த நமது மன்னர் சில தினங்களில் இறந்து விட்டார்.ஆனால் நல்லோரின் சாபம் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்கிற சிலப்பதிகார சொற்களை ஞாபகப்படுத்த வைத்துவிட்டது இப்பொழுது! ஆம் அந்த பச்சி சொன்ன சான்றோர்கள் நீங்கள்தான் , பின்னர் அந்த மன்னர் யாரென்று நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!


சி.பி - இது தெரியாதா? எங்க பண்ணையார் அண்ணன் ராசலீலா ராசேந்திரன் தான் ,ஏன்னா அவரு தான் 5 செல் ஃபோன் வெச்சிருக்காரு.. செல் ஃபோனே 5 வெச்சிருக்காரே..   சரி சரி அண்ணன் பப்ளிக் பப்ளிக்னு கண் அடிக்கிறார்... விட்ருவோம்.. 



அதற்கு முன்னர் நான் முதலில் கூறியது போல இந்த கதையில் மழை , புயல் வராததற்குக் காரணம் நீங்கள் யாரும் குடை எடுத்துக்கொண்டு வரதாதால் மழை வந்து அதனால் நம் மன்னருக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீமைகளால் நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதிய எனது கதையின் நானூற்றி ஐந்தாயிரம் பக்கங்களை உங்களுக்கு சொல்ல முடியாமல் போனது கண்டு வருந்துகிறேன்.

மேலும் முதலில் சொன்னது போல இதில் சகுனங்களை நம்புவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் இந்தக் கதையை கேக்குறதே கெட்ட விசயம்தானே! இப்ப சகுனத்த நம்புரீங்கள்ள :-)


சி.பி -சகுனத்தை நம்பவே முடியாது.. சில சமயம் என்னைப்பார்த்து சிரிப்பா.. சில சமயம் முறைப்பா.. எதிர் வீட்டு ஃபிகர் சகுனத்தை பத்தித்தானே  பேசறே.. ? ஆனா சற்குணத்தை நம்பலாம் .. களவாணி என செம ஹிட் படம் கொடுத்தாரே..?


தமிழ்வாசி பிரகாஷ்,வெறும்பய ஜெயந்த் ( ஜோதி புகழ்)


அடுத்து என் உரை. இதுவரை காமெடியாக போய்ட்டு இருக்கற பதிவு இப்போ கொஞ்சம் சீரியஸ் ஆகப்போகுது..

ஏன்னா வலை உலகில் என்னை குறி வைத்து தாக்கப்படும் பதிவுகள் ,விமர்சனங்களுக்கு நான் நேரடி பதில் அளிக்கப்போகிறேன்.. வித் அவுட் எனி சென்சார்.. ...  கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்.. ஏன்னா கலர் டோன் மாறுது.. அதுவரை  குட்டி பிரேக்..  (குட்டி = சின்னதா) #நோ டபுள் மீனிங்க் ப்ளீஸ் ஹி ஹி 


டிஸ்கி 1 - இந்தப்பதிவில் வரும் செல்வாவைப்பற்றிய மரியாதைக்குறைவான வார்த்தைகள் பதிவின் நகைச்சுவையை கூட்டவே.. யார் மனதாவது புண்பட்டால் மன்னிக்கவும்.. இப்படிக்கு ஒவ்வொரு பதிவிலும் மன்னிப்பு கேட்பதையே பொழப்பாக வைத்திருக்கும் ஒரு மானங்கெட்ட அடச்சே மானமிகு  பதிவர் ...ஹி ஹி 


டிஸ்கி 2 - படங்கள் உதவி ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம்  கல்பனா ராஜேந்திரன் (பெயர்க்காரணம் பாகம் 4 -ல்) மற்றும் உணவு உலகம் அண்ணன் ராசலீலா ராஜேந்திரன்.. (இவரைப்பற்றி ஒரு கில்மா மேட்டர் பாகம் 5 -ல் )




தொடரும்.........

63 comments:

Shiva sky said...

வடை......

Shiva sky said...

முதல் மழை .....முதன் முறையாக.......

Shiva sky said...

பதிவர்களின் ...சந்திப்பின் போது நடந்த சம்பவங்களை..உங்கள் நடையில் படிக்க ஆவலாய் உள்ளேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த பார்ட்டும் வந்துடுச்சு........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஈரோட்ல ஒரு மாசத்துக்கு முன்னாடி ரெண்டு பிரபல பதிவர்கள் சந்திச்சுக்கிட்டாங்களே அத பத்தி ஏன்யா எழுதல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் கைல மைக்க வெச்சிட்டு இருக்காங்களே என்ன பண்றாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வாவுக்காவது கோபில 3 காதலிகள், ஆனா உங்களுக்கு.......தமிழ்நாடு பூரா டூர் போகனும் போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ப்ளாக் ஓனர், என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க? இப்போ உடனே வந்து ரிப்ளை போடலேன்னா சேதாரம் அதிகமா இருக்கும் ஆமா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கன்னிதீவுக்கு போட்டியாக சிபியின் நெல்லை பயணம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிபியும் செல்வாவும் சந்தித்தா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வாவுக்காவது கோபில 3 காதலிகள், ஆனா உங்களுக்கு.......தமிழ்நாடு பூரா டூர் போகனும் போல இருக்கே?/

நீங்க உங்க ஊர்ல போற மாதிரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கன்னிதீவுக்கு போட்டியாக சிபியின் நெல்லை பயணம்...////

அடுத்த பதிவர் சந்திப்பு வரைக்கும் போடுவாரு போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வாவுக்காவது கோபில 3 காதலிகள், ஆனா உங்களுக்கு.......தமிழ்நாடு பூரா டூர் போகனும் போல இருக்கே?/

நீங்க உங்க ஊர்ல போற மாதிரியா?
////////

அடிங்....... நான் போனது பிரபல பதிவர்கள சந்திக்க மட்டும்தான்........!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதன்முறையாக பதிவுலகில் ஒரே பதிவை நூறு தொடர் எழுதி கின்னஸ் சாதனை பண்ண சிபி முயற்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முதன்முறையாக பதிவுலகில் ஒரே பதிவை நூறு தொடர் எழுதி கின்னஸ் சாதனை பண்ண சிபி முயற்சி
///////

கின்னசா... ஆஸ்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக் ஓனர் எங்க போயிட்டாரு? ஒரு வேள சேலத்துக்கு போயிட்டாரோ?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மறுபடியுமா அழுதுடுவேன்

Unknown said...

என்னமோ சொல்றான் ஒண்ணுமே பிரியல கொய்யால!

Jana said...

அடங்கொப்பா தாமரபரணியில தலைமுழுக...(திருநெல்வேலிதானே?) அதுசரி நமக்கு எங்க இருட்டுக்கடை அல்வா?

உணவு உலகம் said...

//Jana said...
அடங்கொப்பா தாமரபரணியில தலைமுழுக...(திருநெல்வேலிதானே?) அதுசரி நமக்கு எங்க இருட்டுக்கடை அல்வா?//
அதான் சிபி எல்லோருக்கும் நல்லா அல்வா கொடுத்துட்டு இருக்காரே!

உணவு உலகம் said...
This comment has been removed by the author.
கூடல் பாலா said...

ம்ம்ம்ம்ம்.........பப்ளிக் ....பப்ளிக் ..

உணவு உலகம் said...

எல்லோரும் ஒரு பாக்கெட் அல்வா வாங்கிக்கிட்டாங்க. ஆனா, சிபி இன்னாள், முன்னாளுக்குன்னு சொல்லி நாலு பாக்கெட் வாங்கின மேட்டரை நான் சொல்லலியே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு அருமையான பதிவு, அதுவும் போட்டோப்படங்களுடன். நேரில் கலந்து கொள்ளவில்லையே என்ற குறை ஓரளவுக்கு, நீங்கியது, தங்களின் இந்தப்பதிவால். பாராட்டுக்கள்.

ராஜ நடராஜன் said...

இருட்டுக்கடை அல்வா சாப்பிடப் போயிட்டுத்தான் நல பாகமா?

Admin said...

பதிவர் சந்திப்பு ஒரு தொடர் கதையாக

அழகாக சொல்லி இருக்கிங்க..

தமிழ்வாசி பிரகாஷ் said...

tamilmanam seventh me

தமிழ்வாசி பிரகாஷ் said...

good series c.p

தமிழ்வாசி பிரகாஷ் said...

blog owner gilmaa film paakka poyirukkar.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடித்த அளப்பரிகள் தொடரட்டும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்க போடுற புகைப்படங்கள் நல்லாயிருக்கு...

ராஜி said...

Shiva sky said...

பதிவர்களின் ...சந்திப்பின் போது நடந்த சம்பவங்களை..உங்கள் நடையில் படிக்க ஆவலாய் உள்ளேன்..
>>>>>
அப்போ இது சிபி சார் எழுதலியா?! மண்டபத்துல எழுதினதைதான் வாங்கி வந்து போட்டிருக்காரா?

கடம்பவன குயில் said...

லைவ் ஷோ மாதிரி ஒரு மார்க்கமாத்தான் போகுது கதை. நடக்கட்டும் நடக்கட்டும்.

மற்றநாட்களில் 3 பதிவு போடுவீர்கள். இப்போ என்ன வந்தது? கொஞ்சம் அதிகமா சிரமம் எடுத்து 4,5 பதிவு இன்றே பதிவர் சந்திப்புபற்றி போட்டு சுபம் போட்டிருக்கலாமில்லை.

எல்லோரையும் காக்க வைக்கிறதில் அப்படி என்னதான் ஆனந்தமோ??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சி பி! கோமாளி செல்வாவின் கதை சூப்பர் + அதுக்கு உங்களோட கமெண்ட் டாப்பு டக்கர்!

இரட்டை விருந்து என்பதால், தப்சியை வலது புறமும், ஹன்சிகாவை இடது புறமும் இருத்தி, பாரிஸ் சென் நதியில் படகுப் பயணம் போன குதூகலம் ஏபடுகிறது, உங்கள் பதிவைப் படிக்கும் போது!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நாயே நீ மப்புல குற்றாலத்துல உருண்டு சுவத்தை பிடிச்சி நடந்ததை நான் சொன்னேநெனடா நாயே நாயே....

MANO நாஞ்சில் மனோ said...

மூதேவி மூதேவி நீ திருந்தவே மாட்டேடா பன்னாடை.....

தனிமரம் said...

ஒவ்வொருத்தர் லூட்டி செமக்கடி மாப்பூ!

செங்கோவி said...

ஆஹா..செம விறுவிறுப்பாப் போகுதே..

நிரூபன் said...

திருநெல்வேலி அல்வாடா.. வடை வாங்கி செல்வாடா.. நெல்லை பதிவர் சந்திப்பு பாகம்//

ஆஹா.பதிவர் சந்திப்பிற்கு வைக்கப்பட்டிருந்த முழு வடையினையும் திருடியது நம்ம செல்வாவா...
தலைப்பே இடக்கு முடக்கா இருக்கே.

உள்ளே இறங்கிப் பார்த்திட வேண்டியது தான்.

நிரூபன் said...

ஆன் லைன் -ல் அனைவரும் அந்த சந்திப்பை காண வேண்டும் என்ற அளப்பரிய ஆர்வம் இலங்கை அலப்பறை மன்னன் நிரூபனுக்கு இருந்தது.. பதிவர் சந்திப்பு அன்று அவர் ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுட்டு வீட்ல காத்துட்டு இருந்தார்.//

அடிங்....ஆப்பிசுக்கு லீவு போட்டதெல்லாம் சப்பை மேட்டர்,

ஆனால் ஆன்லைனில் உங்க திருமுகங்களைக் காண முடியலையே என்று நேரடி ஒளிபரப்புத் தளத்தில் ரசிகர்கள் எல்லாம் கொதிச்சிட்டாங்க பாஸ்..
அதுவும் பல்வேறு உலக நாடுகளில் இருந்து கிளம்பி வந்து
’அடோய் நாறப் பயலே!
எங்கடா நேரடி ஒளிபரப்பு என்று கேட்காத குறையா,
கேட்டு கேட்டு கொன்னுட்டாங்க பாஸ்.

நிரூபன் said...

என்னென்னமோ முயற்சி செஞ்சு பார்த்தோம், முடியலை.. நிரூபனை ஒரு வழியா சமாதானப்படுத்திட்டு பதிவர் சந்திப்பு கூட்டம் ஆரம்பம் ஆச்சு..//

நீங்க என்னையைச் சமாதனப்படுத்தின மேட்டர் ஓக்கே,
நான் நேரடி ஒளிபரப்புத் தளத்தில் ஏமாற்றத்துடன் இருந்த ரசிகர்களைச் சமாளிக்கப்பட்ட பாடு இருக்கே...

கடைசியா ஒரு அன்பர் வந்து கேட்டார்,

ஏண்டா திருட்டி வீசிடியில அவன் இவன் படமாச்சும் வைச்சிருப்பீங்க இல்லே.
வந்த குற்றத்துக்கு,
பதிவர் சந்திப்பை பார்க்க முடியலைன்னா,
படத்தாயுச்சும் பார்த்து முடிக்கிறோம் என்று கடுப்பாகிட்டாங்க சகோ.

நிரூபன் said...

கன்னிப்பொண்ணுங்க பொதுவா பசங்களுக்கு என்ன சாத்துவாங்களோ அதை நெற்றில இட்டிருந்தார் ..//

பயங்கர நாரயணன் பக்தர் போல இருப்பாரே அண்ணாச்சி;-))

நிரூபன் said...

ரசிகன் ஷர்புதின் அப்பாஸ் மாதிரி இருந்தார்.. ( தனி மெயில்ல அஜித் மாதிரி தான் இருக்கறதா போடனும்னு மிரட்னாரு.. )//

அட்ரா....அட்ரா....அட்ரா...

நிரூபன் said...

லேப்டாப் மனோ பேசறான் (ர்),அருகில் அண்ணன் உணவு உலகம்,வலைச்சரம் சீனா ,பலாபட்டறை சங்கர், அப்பாஸ் ரசிகன் ஷர்புதீன்//

போட்டோக்களைப் பார்க்கையில் மனோ அண்ணன் வயதானவராகவும், சிபி வயது குறைந்த
மலையாள நடிகர் மம்முட்டி கலரில் வடிவான ஆளாகவும் தோற்றமளிக்கிறார்கள்.

வயது வேறுபாடு, ஈகோ இன்றி நீங்கள் இருவரும் அடிக்கும் ஜோக்குகள் எப்போதுமே கலக்கலானவை.

உங்களிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

நிரூபன் said...

இவர் என்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் திறமையில்,நகைச்சுவையில் ,பழகும் பண்பில்,கண்ணியத்தில் மிக மிக உயர்ந்தவர்.. //

அடடா, இது நல்லாயிருக்கே.

//.. வடை வாங்கி செல்வாடா..//

இந்த வசனத்திற்கு, மேற்படி வரிகளூடாக சிபி மன்னிப்புக் கேட்கிறாரு.
ஹி,...ஹி...

நிரூபன் said...

தமிழ்வாசி பிரகாஷ்,வெறும்பய ஜெயந்த் ( ஜோதி புகழ்)//

பிரகாஷ் இன் புரோபைலைப் பார்க்கையில் அவர் ஒரு சிறு வாண்டு என நினைத்தேன்(சின்னப் பையன்)
ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தா...எம்மாம் பெரிய ஆளாக இருக்கார் நம்ம சகோ.

நிரூபன் said...

ஏன்னா வலை உலகில் என்னை குறி வைத்து தாக்கப்படும் பதிவுகள் ,விமர்சனங்களுக்கு நான் நேரடி பதில் அளிக்கப்போகிறேன்.. வித் அவுட் எனி சென்சார்.. ... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்.. ஏன்னா கலர் டோன் மாறுது.. அதுவரை குட்டி பிரேக்.. (குட்டி = சின்னதா) #நோ டபுள் மீனிங்க் ப்ளீஸ் ஹி ஹி //


அவ்...பதிவர் சந்திப்பிலையும் உங்களை விட்டு வைக்கலையா..
என்ன கொலை வெறி இவங்களுக்கு.

நிரூபன் said...

இப்படிக்கு ஒவ்வொரு பதிவிலும் மன்னிப்பு கேட்பதையே பொழப்பாக வைத்திருக்கும் ஒரு மானங்கெட்ட அடச்சே மானமிகு பதிவர் ...ஹி ஹி//

அப்போ, நம்மளை உங்க சீடனாக ஏற்றுக் கொள்ள முடியுமா குருவே;-))

நிரூபன் said...

(இவரைப்பற்றி ஒரு கில்மா மேட்டர் பாகம் 5 -ல் )//

அடடா... இந்த ரேஞ்சில போன ஏழு பதிவு இதை வைச்சே தேத்திடுவீங்க போல இருக்கே;-))

நிரூபன் said...

பதிவர் சந்திப்பினைச் சுவாரஸ்யமாகவும், நேரஞ்சல் மூலம் இதனைப் பார்க்காது விட்டதற்கான குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலும் அசத்தலாக, வரிக்கு வரி,
அச்சுப் பிசகாமல் அத்தனை நிகழ்வுகளையும் விபரமாகத் தொகுத்திருக்கிறீங்க.
நன்றிகளும், வாழ்த்துக்களும் சகோ!

சுதா SJ said...

சூப்பர் ,
நமக்குதான் கொடுத்து வைக்கவில்லை

காங்கேயம் P.நந்தகுமார் said...

பதிவர் சந்திப்பு பாகம் 2 நம்ம சிபி அண்ணே லொள்ளு தாங்க முடியலை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

@நிரூபன்
சகோ... உம்மை விட வயதில் மூத்தவன் நான்... ப்ரோபைலை வைத்து கணிக்க வேண்டாம்.

Anonymous said...

இன்னும் 5 பாகம் இருக்கு..ஜெட் வேகத்துல பறக்குது எனக்கென்னமோ 5 பாகம் எழுதவே நெல்லை போன மாதிரி தெரியுது

Mohamed Faaique said...

///இன்னும் 5 பாகம் இருக்கு..ஜெட் வேகத்துல பறக்குது எனக்கென்னமோ 5 பாகம் எழுதவே நெல்லை போன மாதிரி தெரியுது///
ஆமால்ல...... இதுவும் சரியாத்தான் படுது..

Anonymous said...

ஒரு நாள் உங்கள பார்த்ததுக்கு இப்பிடி பதிவ போடு கொல்லுறீங்களே !!!!!!!

ஆமா அது என்ன பாகம் 4 ????

என்ன வச்சு காமெடி பண்ண போறிங்களா ????

Unknown said...

அண்ணே நான் சிரிக்குரப்ப யாருன்னே போட்டோ எடுத்தது

சக்தி கல்வி மையம் said...

ஏலே மனோ போதாது.. இன்னும் திட்டணும்..

N.H. Narasimma Prasad said...

அய்யோ ராமா, என்னை ஏன் இப்படி மொக்கை பதிவு போடுறவங்களோடு கூட்டு சேர வச்ச?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உங்கள் எழுத்து நடையை ரசிக்கிறோம்.
வாழ்த்துக்கள்.

செல்வா said...

இப்பத்தான் அண்ணா பார்த்தேன்! ஐயோ இப்படி புகழ்ந்து தள்ளிட்டீங்க :-) என்னால நம்பவே முடில! உங்கள் வாக்கு பலித்தால் நன்றி!

உங்களை விட நகைச்சுவையில் சிறந்தவன்னு சொல்ல முடியாது. என்னைவிட நீங்க ரொம்ப பெரிய ஆள் :-)

செல்வா said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் சிபி - அருமையான நேர்முக வர்ணனை - நல்ல நினைவாற்றல் - ஆமா போட்டோ உங்க சடி மட்டும் எடுக்கச் சொல்லி, இங்கே போட்டதா - நாங்கல்லாம் இந்தப்பக்கம் உக்காந்திருந்தோமே - ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் சிபி
நட்புடன் சீனா