Wednesday, June 08, 2011

டாக்டர்,....என் சம்சாரம் 2 வருஷமா முழுகாம இருக்கா!!!!!!!!!!!!!!!!!

http://fashiontribe.net/wp-content/uploads/2011/05/indian-girls-in-salwar-kameez.jpeg

1. டாக்டர்,என் மனைவி 2 வருஷமா முழுகாம இருக்கா.

என்ன உளர்றே?

ஹவுஸ் ஓனர்ங்கற முறைல வாட்டர் பிராப்ளத்தை சரி பண்ணிட்டா தேவலை.

----------------------------

2.ஆபரேஷன் முடிஞ்சதும் டாக்டர் ஹாஸ்பிடல்ல வேலை செய்யற 4 பேரை கூப்பிட்டு ஏதோ மாத்திரை தர்றாரே? எதுக்கு?

அது தான் தூக்க மாத்திரை.. அதை சாப்பிட்டுட்டு தெம்பா பேஷண்ட்டோட பாடியை தூக்குவாங்க..

-----------------------------

3. அந்த டைரக்டர் படு கஞ்சன்னு எப்படி சொல்றே?

படத்துக்கு மியூசிக் டைரக்டர்னு யாரையும் புக் பண்ணலை..தீம் பார்க் போய் அங்கே இருந்து மியூசிக் தீம் எடுத்துக்கறாராம்.

----------------------------

4. தலைவரோட பெட்ரூம்ல 4 பக்கமும் கண்ணாடியா  இருக்கே?

காலைல எந்திரிச்சதும் நரி முகத்துல விழிக்க ஆசைப்பட்டாருஅதான் அவர் முகத்தை பார்க்க.....

-----------------------

5. எப்பவும் செருப்புடன் தான் இருக்கனும்னு மேலிட உத்தரவு..

தலைவரே.. விளையாடாதீங்க.. இப்போ நாம கோயிலுக்கு உள்ளே போகப்போறோம்.. செப்பலை கழட்டுங்க  முதல்ல..

----------------------------

http://www.indianmakeuptips.com/wp-content/uploads/indian-wedding-night-makeup.jpg

6. தலைவர் வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டாராமே?

மக்கள் வாழ்க்கைத்தரம் உயருதோ இல்லையோ எங்கள் ஆட்சியில் பெட்ரோல் தங்கம் விலை அபரிதமா உயருதுன்னாரே...

-----------------------------

7. இளவரசி ஒரு முஸ்லீம் இளைஞரை காதலிக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்கள் மன்னா?

இளவரசி வரும்போது வீரர்கள் பராக் சொல்லாமல் முபாரக் முபாரக் என்றார்களே? யார் அந்த முபாரக்?

---------------------------------

8. இவரு கில்மா ஜோசியர்னு எப்படி சொல்றே?

இங்கே ஜாதக பலாபலன் பார்க்கப்படும்னு போர்டு வைக்கறதுக்குப்பதிலா பலான பலன்கள் பார்க்கப்படும்னு போர்டு வெச்சிருக்காரே?

----------------------

9. மாசமா இருக்கறப்ப இப்படி டான்ஸ் ஆடறியே? உனக்கு எவ்வளவு தைரியம்?

டான்ஸ் ஆடறதுக்கு தைரியம் எதுக்கு டார்லிங்க்?கால் இருந்தா போதாதா?

------------------------

10. ஹலோ.. சுரேஷா?எப்போ ஊருக்கு ரிட்டர்ன்?

டார்லிங்க்.. ஏன் கேட்கறே?

உங்களுக்கு எதுவும் ஷாக்கா இருக்கக்கூடாதே.. சரி பண்ணிக்கத்தான்..

--------------------------
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQmpPb8yps67VuX3VQJdDlDPIlMlQI2Ot4JZfNFdHYowbYpr5I-&t=1 

டிஸ்கி - 1. எங்கள் ஆருயிர் அண்ணன் ராசலீலா ராஜேந்திரன் என்னும்
  திரு .  சங்கரலிங்கம் அவர்கள்,   தமிழ் பதிவர்கள் அனைவரும் நெல்லையில் சந்திக்க ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.  இது வரை, சென்னை - மதுரை -  கோவில்பட்டி - நெல்லை பகுதிகளில் யில் இருந்து சில பதிவர்கள் வர சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறினார்.
இது குறித்து அவர் அனுப்பிய விவரம்:

 
அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!
 
           வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள்   சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
 
           இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
 
           நாள்: 17.06.2011 
 
           நேரம்: காலை 10.00 மணி

10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம். 
 
எனது [email protected]  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
 
என் செல் எண் 9442201331.
 
ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும். 
 
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம்

எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் - அண்ணன் பரம்பரை பணக்காரர் என்பதாலும், பண்ணை நிலம் ஏக்கரா கணக்கில் இருப்பதாலும்,வரும் பதிவர்களுக்கு T.A (ட்ராவலிங்க் அலவன்ஸ்)D.A (இதர செலவுகள்) HRA (லாட்ஜில் தங்கும் செலவு ) அனைத்தும் பார்த்துக்கொள்வார்.. மேலும் குறிப்பிட்ட சிலரை நமீதா முறையில் அதாவது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களை குற்றாலம் கூட்டி செல்ல இருக்கிறார்.. 

மேலும் அவர் தனது டீன் ஏஜ் கால கட்டத்தில் கரெக்ட் பண்ணுன ஃபிகரின் ஆல்பங்கள் 4 ( வித் 675 ஃபோட்டோக்கள்) பார்வையாளர்கள் பார்க்க ( அண்டர்லைன் பார்க்க மட்டுமே..)வைக்கப்படும்

எனவே திருநெல்வேலி வந்து செம ஜாலியா இருப்போம், கொண்டாடுவோம்.. ( ஊரான் ஊட்டு காசுல தீபாவளி கொண்டாட கசக்குதா என்ன? ஹா ஹா )

டிஸ்கி 2 - காபி பேஸ்ட் பதிவர் என இனி என்னை யாரும் அழைக்க முடியாது .. ஏன் எனில் உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பதிவை காப்பி அடித்து அதை டிஸ்கியாகவும் போட்டது  இதுவே முதல் முறை.. எனவே இனி காபி பேஸ்ட்  டிஸ்கி பதிவர் என்றும் அழைக்கப்படுவேன்.. ஹா ஹா 

டிஸ்கி 3 - இந்த பதிவில் உள்ள ஃபிகர்கள் யார்னே எனக்கு தெரியாது.. உணவு உலகம் கரெக்ட் பண்ணுன ஃபிகர்களுக்கான சாம்ப்பிள்ஸா? என கேட்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ஹி ஹி

41 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

Unknown said...

அடடா என்னாது இது அடப்பாவமே......சரி அப்படியே flight டிக்கட்டும் தர்ரரானு கேட்டு சொல்லுய்யா

ராஜி said...

ஆபரேஷன் முடிஞ்சதும் டாக்டர் ஹாஸ்பிடல்ல வேலை செய்யற 4 பேரை கூப்பிட்டு ஏதோ மாத்திரை தர்றாரே? எதுக்கு?

அது தான் தூக்க மாத்திரை.. அதை சாப்பிட்டுட்டு தெம்பா பேஷண்ட்டோட பாடியை தூக்குவாங்க..
>>>
இது புதுசா இருக்கே. ஈரோடுல இதுப்போல மாத்திரைலாம் கிடைக்குதா? எங்க ஊர்ரு பக்கமும் கொஞ்சம் அனுப்புங்க. பள்ளிக்கூடம் திறந்துட்டால் பிள்ளைகளுக்கு புத்தகப் பை தூக்க உதவியா இருக்கும்

காங்கேயம் P.நந்தகுமார் said...

தகவல் தொழில்நுட்பமே மதி கெட்டு கிடக்கும்போது எப்படி முன்னேறும் தமிழகம்? கணினி யுகத்தில் கன்றாவி பேட்டி! அனைவரும் கட்டாயமாக செப்பல் போடும் திட்டம் விரைவில் அமுலுக்கு வருகிறது. செப்பல் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அரசு முடிவு.

வைகை said...

என்ன பாஸ் பதிவு முழுதும் ஒரே டபுள் மீனிங்கா இருக்கு?

வைகை said...

நல்லவேள நேத்தோட எனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிருச்சு!

வைகை said...

ரமேஷ் வாழ்க!

வைகை said...

இன்னும் யார் யாரு வாழணுமோ.. அவங்களெல்லாம் வாழ்க!

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

2 வது 18 என்பதை விளக்கமாக சொல்லவும்

வைகை said...

விக்கி உலகம் said...
அடடா என்னாது இது அடப்பாவமே......சரி அப்படியே flight டிக்கட்டும் தர்ரரானு கேட்டு சொல்லுய்யா//


தக்காளி.. என்னய்யா டெம்ப்ளேட் மாத்துன? உன் ப்ளாக் ஒப்பன் ஆகவே மாட்டேங்குது?

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

வழி காட்டிய வைகையும் வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

கண்ணாடியை கழட்டிட்டு பார்க்கவும். எது எடுத்தாலும் ரெண்டு ரெண்டா தெரியற வியாதியோ என்னவோ?

வைகை said...

2 வது 18 என்பதை விளக்கமாக சொல்லவும்//

ஆமாம்.. போன ஜென்மத்தில் ராஜ ராஜ சோழனாக இருக்கும்போது ஒருமுறை.. இப்ப ஒருமுறை :))

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி உலகம்

எல்லாம் உண்டு.. அவ்வளவு ஏன்? நீ ஏதாவது டிக்கெட்டை கூட்டிட்டு வந்தாலும் அதுக்கும் டிக்கெட் எடுத்துட்டு பதிவு போடுவார்.. விக்கி அழைத்து வந்த டிக்கெட்டுக்கே டிக்கெட் என ஹா ஹா ராஸ்கலுக்கு லொள்ளைப்பாரு

ராஜி said...

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களை குற்றாலம் கூட்டி செல்ல இருக்கிறார்..
>>>>
குற்றாலமா? "அவசியமான" இடம்தான் போயிட்டு "நல்லப்படியா" திரும்பி வாங்க.

sathishsangkavi.blogspot.com said...

குற்றாலம் வேற கூட்டுட்டுப்போறாரா????

Unknown said...

"வைகை said...

விக்கி உலகம் said...
அடடா என்னாது இது அடப்பாவமே......சரி அப்படியே flight டிக்கட்டும் தர்ரரானு கேட்டு சொல்லுய்யா//


தக்காளி.. என்னய்யா டெம்ப்ளேட் மாத்துன? உன் ப்ளாக் ஒப்பன் ஆகவே மாட்டேங்குது?"

>>>>>>>

அண்ணே பல முறை முயற்சிக்கவும் எப்பவும்போல ஹிஹி...கொய்யால கலாய்கிரியா மாப்ள!

Unknown said...

"குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா"

- அடுத்த பதிவு அண்ணன் உணவு அவர்கள் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

@சங்கவி

ஆம்.. உங்க ஃபிகரையும் (இல்லீகல்) கூட்டி வரவும் ஹி ஹி

Unknown said...

ஹி ஹி ஹி கடி எல்லாம் வெடி அப்பறம் அந்த டிஸ்கி 2
பதிவுலக வரலாற்றிலேயே சூப்பர்
வாழ்க காபி பேஸ்ட் டிஸ்கி பதிவர்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அய்யோ தல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது! இன்று செம செம காமெடி
சத்தியமா சொல்றேன்! டைப் பண்ணக்கூட முடியல அவ்வளவு சிரிப்பு! என்னது உணவு உலகம் பரம்பரை பணக்காரரா - ஹா ஹா ஹா அவருக்கான எக்ஸ்ட்ரா பிட்டிங் அருமையோ அருமை!

காப்பி பேஸ்ட் டிஸ்கி பதிவர் சி பி செந்தில்குமார் வாழ்க!!

ஹா ஹா ஹா ஹா !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலாவது ஜோக்!! ஹாஹ் ஹா ஹா ஆயுளுக்கும் மறக்க மாட்டேன்! செம

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி ரெண்டாவது படத்துல நடுவுல இருக்குற பிகர் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு - தக்க வெகுமதிகள் வழங்கப்படும்!! ஹி ஹி ஹி!!!

bandhu said...

Google Images மூலம் புகைப்படங்கள் எடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வேண்டாமே. இது அவர்கள் தனிப்பட்ட புகைப்படங்களாக இருக்கலாம். நமக்கெதற்கு?

Mohamed Faaique said...

Extra Fittings sooper.. - (எவ்வளவுதான காமெடி பண்ணினாலும், அடுத்தவன் காலை வாரும் போதுதான், ஜாலியா இருக்கு...)

சி.பி.செந்தில்குமார் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

haa haa haa haa haa yr taste is different always

சி.பி.செந்தில்குமார் said...

@Mohamed Faaique

ஹா ஹா தமிழனின் ஸ்பெசாலிட்டியே அதானே?

Unknown said...

ஹா ஹா ஹிஹி குருவே அந்த ஐந்தாவது செருப்பு மேட்டர் நச் நறுக் ஹி ஹி ..
மத்தப்படி போடோக்கள் நான் பாக்கவே இல்லை ஹி ஹி . இப்படி பொண்டாட்டி ஊரில் இல்லாத நேரத்தில் ஊசுப்பேத்த கூடாது மீ பாவம்

சி.பி.செந்தில்குமார் said...

@ரியாஸ் அஹமது

ஓஹோ.. அதனால தான் பக்கத்து வீட்டு ஃபிகர்ட்ட நேத்து செம க்டலையா? ம் ம்

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

நிரூபன் said...

டாக்டர்,என் மனைவி 2 வருஷமா முழுகாம இருக்கா.

என்ன உளர்றே?

ஹவுஸ் ஓனர்ங்கற முறைல வாட்டர் பிராப்ளத்தை சரி பண்ணிட்டா தேவலை.//

அடடா....தலைப்ப்பைப் பார்த்து வந்தவங்களுக்கு,
எக்ஸ்ட்ரா கட்டிங்க் கொடுக்கிறீங்களே

ஹி....ஹி...

நிரூபன் said...

படத்துக்கு மியூசிக் டைரக்டர்னு யாரையும் புக் பண்ணலை..தீம் பார்க் போய் அங்கே இருந்து மியூசிக் தீம் எடுத்துக்கறாராம்.//

என்ன கொடுமை இது...
இதை மட்டும் அவரு கேட்டாரு...
ஒன்னுமே பண்ண மாட்டாரு என்று சொல்ல வந்தேன்.

நிரூபன் said...

இளவரசி வரும்போது வீரர்கள் பராக் சொல்லாமல் முபாரக் முபாரக் என்றார்களே? யார் அந்த முபாரக்?//

இது கொஞ்சம் புதுமையா இருக்கே.

நிரூபன் said...

இங்கே ஜாதக பலாபலன் பார்க்கப்படும்னு போர்டு வைக்கறதுக்குப்பதிலா பலான பலன்கள் பார்க்கப்படும்னு போர்டு வெச்சிருக்காரே?//

யாருக்கோ சைட் கப்பில் போட்டுத் தாக்குறீங்க என்று மட்டும் தெரியுது...

ஹி....ஹி...

நடக்கடும், நடக்கட்டும்.

நிரூபன் said...

மாசமா இருக்கறப்ப இப்படி டான்ஸ் ஆடறியே? உனக்கு எவ்வளவு தைரியம்?

டான்ஸ் ஆடறதுக்கு தைரியம் எதுக்கு டார்லிங்க்?கால் இருந்தா போதாதா?//

என்ன ஒரு கொல வெறி பிடிச்ச பெண்ணா இருப்பா போல இருக்கே...

நிரூபன் said...

அண்ணன் பரம்பரை பணக்காரர் என்பதாலும், பண்ணை நிலம் ஏக்கரா கணக்கில் இருப்பதாலும்,வரும் பதிவர்களுக்கு T.A (ட்ராவலிங்க் அலவன்ஸ்)D.A (இதர செலவுகள்) HRA (லாட்ஜில் தங்கும் செலவு ) அனைத்தும் பார்த்துக்கொள்வார்.. மேலும் குறிப்பிட்ட சிலரை நமீதா முறையில் அதாவது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களை குற்றாலம் கூட்டி செல்ல இருக்கிறார்.. //

அப்பூடியே பக்கத்து ஊர்க் காரங்களுக்கு,
ஒரு டிக்கட் போட்டு, பிளைனில் அழைத்து வர ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க பாஸ்...

puppy love said...

its nice , i need to post some thing how can i post it, pls advice

Ponchandar said...

குற்றாலம் வர்றதா இருந்தா சொல்லுங்க..சந்திக்கிறேன்

THOPPITHOPPI said...

தலைப்பு போங்க பாஸி சான்சே இல்லை

உணவு உலகம் said...

//நிரூபன் said...
அண்ணன் பரம்பரை பணக்காரர் என்பதாலும், பண்ணை நிலம் ஏக்கரா கணக்கில் இருப்பதாலும்,வரும் பதிவர்களுக்கு T.A (ட்ராவலிங்க் அலவன்ஸ்)D.A (இதர செலவுகள்) HRA (லாட்ஜில் தங்கும் செலவு ) அனைத்தும் பார்த்துக்கொள்வார்.. மேலும் குறிப்பிட்ட சிலரை நமீதா முறையில் அதாவது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களை குற்றாலம் கூட்டி செல்ல இருக்கிறார்.. //
அப்பூடியே பக்கத்து ஊர்க் காரங்களுக்கு,
ஒரு டிக்கட் போட்டு, பிளைனில் அழைத்து வர ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க பாஸ்...//
நிரூபன் வருவதாக இருந்தால் ஃப்ளைட்டே விட்ருவோம்ல!
ஆனா, சிபி இங்கே நிறைய டுபாக்கூர் விடுறார். கவனம்.

கடம்பவன குயில் said...

உங்க டிரேட்மார்க் மிஸ்ஸிங் ஆனமாதிரி இருக்கே. என்னாச்சு????