Wednesday, May 25, 2011

PIRATES OF THE CARIBBEAN-அட்வென்ச்சர் ஆக்‌ஷன்+கடல் கன்னியின் காதல் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்


http://www.ihabo.in/wp-content/uploads/2011/05/Pirates-of-the-Caribbean-4.1-575x431.jpg

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளர் + ஹீரோ இணைந்த படம்.வழக்கமான பாணியில் வந்த கடல் ,கப்பல் அட்வெண்ச்சர்  ஆக்‌ஷன் ஃபிலிம் தான் என்றாலும் கண் கலங்க வைக்கும் கடல் கன்னியின் காதல் கதையும் இருப்பது கூடுதல் பிளஸ்..

கதை  வழக்கம் போன்ற கடற்பிரயாண கப்பல் கதை தான். இளமை நீரூற்று என்று சொல்லப்படும் இடத்துக்குப்போக 2 குரூப் முயற்சி செய்யுது.. அதுல போய் அந்த நீரூற்றை  பிடித்து குடித்து விட்டால் சாகாவரம் நிச்சயம்.செல்லும் வழியில் கடல் கன்னி ஒருத்தியை  சிறை பிடிக்கிறார்கள்.நர பலி இட.. அந்த கடல் கன்னிக்கும், அந்த குரூப்பில் உள்ள ஒருவனுக்கும் காதல்.. ..

மெயின் கதையை விட பலரின் மனம் கவர்ந்தது கடல் கன்னியின் காதல் கதை தான். கிளைக்கதையாக வந்தாலும் செம திரில்லிங்க்.பூமியில் வாழும் மனிதனுக்கும்,கடலில் வாழும் கடல் கனிக்கும் காதல் சாத்தியமா? என்றெல்லாம் லாஜிக்கே பார்க்காமல் எல்லோரும் அந்த கதையை ரசித்த விதத்திலே  காதல் கதைகள் ஏன் சாகா வரம் பெற்றிருக்கின்றன என்ற உண்மை புரிகிறது.

ஹென்ஸ் ஜிம்மன்ஸ் தான் மியூசிக்.. பிரமாதப்படுத்டுகிறார் மனுஷன்.. பல காட்சிகளில் டெம்ப்போ கூட்ட இசை முக்கிய இடம் பிடிக்கிறது.



http://www.killurtime.com/wp-content/uploads/2011/05/Pirates-Of-Caribbean-4.jpg
ஹீரோ ஓப்பனிங்க் சீன்ல இருந்தே காமெடியை அள்ளி தெளிக்கிறார். ஜிம் கேரியின் பாடி லாங்குவேஜ் இவருக்கு.. சாரட் வண்டியில் எஸ்கேப் ஆகும் சீனில் ஒரு லேடியை கட்டி அணைக்க அவர் மயக்கத்தில் இருக்கும்போதே அவர் காதில் உள்ள கம்மலை அபேஸ் பண்ணும் சீன் அபாரம்.. செம சுறு சுறுப்பான நடிப்பு ஹீரோவுடையது.. அவர்  வாள் பிடித்து சண்டை இடும் காட்சியில் அவரது பாடி லாங்குவேஜ் அபாரம்.

ஹீரோயின் செம கிளாமர்.. ஹி ஹி அதானே நமக்கு வேணும்.. அதுவும் ஓப்பன் செஸ்ட் டிரஸ்ஸில் பாப்பா இன்னும் அழகு.. 

கடல் கன்னியாக வரும் ஃபிகர் பிரமாதமான அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் அப்பாவித்தனம்,சோகம் போன்ற உணர்வுகள் நல்லாவே காட்டுகிறார். அது போக அப்பப்ப அழகு தரிசனமும் காட்றார் ( அதானே... பார்த்தேன் )

கப்பலில் ஹீரோ & கோ போகையில் கடல் கன்னிகள் சுற்றி வளைக்கும் காட்சி செம விறு விறுப்பு.. அப்போது வரும் பின்னணி இசை அபாரம்.
http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/pirates-of/the-caribbean-4-7-new-images/pirates-of-the-caribbean-4-7-new-images-04.jpg
 படத்தில் கலக்கலான வசனங்கள்

1.  உன்னால் எவ்வளவு சீக்கிரம் போக முடியும்?

காற்றை விட வேகமாக..  ( தன்னம்பிக்கை தெறிக்கும் வரிகள்)

2.  டேய்.. நாயே .. டிரஸ்ஸை துவைக்கவே மாட்டியா? அவ்வ்வ்வ்வ்

3. சாதிக்கனும்னு நினைக்கறவனுக்குத்தான் சோதனைகள் அதிகம் வருது..

சரி.. சரி.. நீ இதுவரை எதுவும் சாதிக்கலைன்னு சொல்லு...

4.  ஏன் அவங்க எல்லாம் பரபரப்பா இருக்காங்க? உன் வேலையா அது? 

யாரோ மகா ராஜாவாம்.. நான் சீண்டிட்டேனாம்.. 

5.  டியர்.. நீ என்னை ஏமாத்திட்டே.. 

என்னமோ பல ஆண்களோட பழகுன மாதிரி பேசறே,.?

6.  நான் உன்னை பயன்படுத்திக்கிட்டேன்னு எப்படி சொல்றே?

என் வாயால தான் சொன்னேன்.

7. நாம கடல் பிரயணம் பண்ணி 5 நாள் ஆச்சு.. 

எப்படி சொல்றே? கடல் தண்ணியோட வாசத்தை வெச்சு சொல்றியா?

ம்ஹூம்.. உன் உடம்புல இருந்து வர்ற ஸ்மெல்லை வெச்சு சொல்றேன், நீ தான் 5 நாளா குளிக்கவே இல்லையே..

8.  இது கனவுன்னா என்னை கட்டிப்பிடிக்க அனுமதிக்கனும் நீ.. 

எஸ் .. இது கனவு தான்

அடப்பாவி.. எந்திரி முதல்ல.. 

9.  உன் மூஞ்சிக்கு இப்படி ஒரு அழகான பொண்ணா?

அப்போ நீ ஆச்சரியப்பட்டுக்கிட்டே செத்துப்போ.. 

10. என் பின்னாடி நீ சுத்துனியா? உன் பின்னாடி நான் சுத்துனேனா? எப்படியோ நாம 2 பேரும் வேலை வெட்டி இல்லாம ஒருத்தர் பின்னால ஒருத்தர் சுத்திட்டே இருந்தோம்.. 

11.  டியர் எனக்கு ஒரு டவுட்.. நான் தான் உன்னோட முத லவ்வரா? ( தக்காளி எல்லோருக்கும் இந்த டவுட்  இருக்கு போல )

12.  டியர்.. கடலும் , கப்பலும் போல நம்ம 2 பேரையும் யாராலும் பிரிக்கவே முடியாது.. 



http://www.cinemanewsonline.com/wp-content/uploads/2010/09/Megan-Fox-Pirates-of-the-Caribbean-4.jpg
13.  சடங்குல முக்கியமான 1 இருக்கு அது நரபலி.. 

அய்யய்யோ யாரும் சொல்லவே இல்ல? எனக்கு வர வர நீரூற்று மேல ஆசை குறைஞ்சிட்டே வருது..

14.  ஆள் சைஸ் குறைஞ்சாலும் சேட்டை குறையவே இல்லையே. 

15.  டேய் நாயே.. இந்த கேவலமான டோப்பாவை போட்டுட்டூ நீ மன்னரை ஏமாத்தலாம். ஆனா என்னை ஏமாத்த முடியாது.. 

16. நான் அவரை என்னைக்குமே மதிச்சதே இல்லை.. 

17. என்னைத்தவிர யாரும் உன்னை சேர்த்துக்கவே மாட்டாங்க..

18.  எனக்கு ஒரு ஐடியா தோணுது.. இவனுக்கும், அவனுக்கும் சண்டை.. இதுல ஏன் 2 குரூப்பும் மோதிக்கனும்?  அவனுங்க 2 பேரும் மோதட்டும்.. நாம வேணா வேடிக்கை பார்ப்போம்.. வேணூம்னா பந்தயம் கட்டலாம்.. ஹா ஹா

19.  வேற யாராவது வீர மரணம் அடைய விரும்பறீங்களா?

20.  ஏய்.. உண்மையை ஒத்துக்க..  இன்னும் என்னை நீ லவ் பண்றே.. 

உன்னை என் வீட்டு நாய்க்குட்டி கூட லவ் பண்ணாது.. 

21.  கடல் கன்னிகளுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி.. ( ஹா ஹா பொதுவாவே கன்னிப்பொண்ணுங்களுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி தான் பாஸ்)

22. நீ அவளை லவ் பண்றியா?

ம் ம் தெரில.. அதை காதல்னு சொல்ல முடியாது.. சரி... காதலாவே இருக்கட்டும் .. இப்போ என்ன .. அதுக்கு?

23.  டியர்.. உன் கூட இருந்தா உருப்படியா எதையும் செய்ய முடியாது.

24. ஹாய்.. சாரி.. என் வேலை முடிஞ்சதும் உன்னை காப்பாற்றலாம்னு இருந்தேன்.. 

25.  ப்ளீஸ்.. ஒரே ஒரு சொட்டு கண்ணீர் கொடு.. ஓ.. உன் கிட்டே சோகம் இருக்கு ஆனா துக்கம் இல்லை.. ம் வர வைக்கிறேன்.. 

26.  அவளுக்கு என் மேல ஒரு இது.. அதை எப்படி சொல்றது? 

ம்./. வாயாலதான்

27. ஒரு பொண்ணைக்கூட இதுவரை நான்...... 

நீ அவ்வளவு நல்லவனா?

28. நீ மதம் மாறனும்,.. 

சாகறதுக்கு முன்னால மாறிடறேன்.

http://cdn.screenrant.com/wp-content/uploads/gemma-ward-pirates-of-the-caribbean-4.jpg

இயக்குநர் சபாஷ் வாங்கும் இடங்கள்

1. கடல் கன்னி தண்ணீர் தொட்டியில் கொண்டு வரப்படும்போது எதிர்பாராத விதமாக தொட்டி உடைந்து அவர் முழு பெண்னாக மாறுவது.. (செம கிளு கிளு.. இந்த சீனில் கடல் கன்னி .. ஹி ஹி )

2.  ஹீரோ மலை உச்சியில் இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் சீன் .. செம படப்பிடிப்பு.. படபடப்பு

3.  வெள்ளிக்கிண்ணத்தை ஹீரோ அபேஸ் செய்யும் சீன் செம லாவகம்.. 

4, ஹீரோ ஹீரோயின் காதல் ஊடல் காட்சிகள் மற்றும் கடல் கன்னி காதல் காட்சிகள் செம செண்ட்டிமெண்ட்

5. ஒளிப்பதிவும் ஆர்ட் டைரக்‌ஷனும் போட்டி போட்டுக்கொண்டு  கலக்குவது.. 



http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/pirates-of/the-caribbean-4-7-new-images/pirates-of-the-caribbean-4-7-new-images-05.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயினும் ,அவர் தந்தையும் மரணத்தின் வாசலில்.. யாரோ ஒருவர் தான் நீரூற்றை அருந்தி உயிர் பிழைக்க முடியும்.. அப்போது தந்தை  தான் பிழைத்தால் போதும் என நினைப்பது.. எந்த அப்பாவாவது சொந்த மகள் மரணம் அடைந்தால் பரவாயில்லை தான் மட்டும் பிழைத்தால் போதும் என நினைப்பரா?

2. க்ளைமாக்ஸில் ஹீரோ ஹீரோயினை அம்போ என தனி தீவில் விட்டு வருவது. எந்த காதலனாவது ஊடலுக்காக கூட காதலியை தவிக்க விடுவானா? அப்படி தவிக்க விட்டால் அவன் உண்மையில் காதலன் தானா?

3.  இறந்ததாக தான் கருதிய  காதலன் உயிருடன் வந்ததால் ஆனந்த கண்ணீர் விடும் கடல் கன்னி காதலன் கண் முன் பலி ஆவதைப்பார்த்தும் கல் மனதுடன் இருப்பது எப்படி? கதறி இருக்க மாட்டாளா?

4. ஹீரோ - ஹீரோயின் இருவரும் பல சமயங்களில் ஒருவரை ஒருவர் ஆபத்தில் தவிக்க விட்டு தான் மட்டும் தப்பித்தால் போதும் என நினைப்பது..  காதல் என்றாலே விட்டுக்கொடுப்பது தானே?

படத்தில் ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை.. செம ஸ்பீடு..  எல்லோரும் பார்க்கலாம். ஈரோடு அபிராமி தியேட்டரில் பார்த்தேன்.. 

நம்ம சித்தோடு ஜேம்ஸ்பாண்ட் சதீஷூம் நானும் பார்த்தோம். நல்ல நேரம் சதீஷ் சித்தோடு ஷர்மிளா கூட அப்பாயிண்ட்மெண்ட் என்பதால் வரவில்லை என இந்த சதீஷ் சொன்னார்.

 டிஸ்கி - தமிழ்மணம் கடந்த 6 நாட்களாக என் பிளாக்கில் மட்டும்  வேலை செய்யததால் அதில் ஓட்டு விழவில்லை. அந்த 18 இடுகைகளில் முக்கியமான சில இடுகைகளை மட்டும் லிங்க் கொடுத்துள்ளேன்.. முடிந்தால் அதில் வாக்கிடவும்.

2. நாளைய இயக்குநர் - சைக்கோ த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

3. டாப் டென் ( 10) பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல் 

4.மைதானம் - அடிச்சாங்கய்யா ஒரு சிக்சரை - சினிமா விமர்சனம்

40 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes vada 4 me

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

wait i read and come

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் எனக்கு புடிச்ச பலவரி இருக்கே, காப்பி பண்ண முடியாம தடுத்தா நான் எப்புடி கமென்ட் போடுறது ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கலக்கல் வசனங்களில் இருபத்தோராவது ரொம்ப புடிச்சிருக்கு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மூன்றாவது பந்தியில் ரெண்டாவது வரியும், அஞ்சாவது பந்தியில் அனைத்துவரிகளும் எனக்கு பிடித்துள்ளன!

Unknown said...

நல்லா இருக்கு, நான் படத்த சொன்னேன், பாப்பா படத்த ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மூன்றாவது பந்தியில் ரெண்டாவது வரியும், அஞ்சாவது பந்தியில் அனைத்துவரிகளும் எனக்கு பிடித்துள்ளன!

பந்தியா? பத்தியா?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்லா இருக்கு, நான் படத்த சொன்னேன், பாப்பா படத்த ஹி ஹி ஹி

விமர்சனம் பற்றி சொல்லிடாதீங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சித்தோடு ஷர்மிளா சதீசுக்கு பத்தோடு பதினொன்றா? இல்லை முத்தாடும் இளங்கன்றா? சொத்தோடு சுகம் கண்டு பத்தோடு ஆறுபெற இத்தால் வாழ்த்துகிறேன்! இத்தோடு கமெண்ட்சுக்கு தாள் போடுகிறேன்!

அத்தோடு என் ப்ளாக் ல் தத்துவங்கள் போட்டிருக்கேன்! சத்தமேதும் இல்லாமல் வந்திட்டால் நான் மகிழ்வேன்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மூன்றாவது பந்தியில் ரெண்டாவது வரியும், அஞ்சாவது பந்தியில் அனைத்துவரிகளும் எனக்கு பிடித்துள்ளன!

பந்தியா? பத்தியா?

May 25, 2011 6:26 PM
பந்தி வேறு பத்தி வேறு! ( சிறிலங்காவில் ) உங்க ஊர் இலக்கியமரபில் எப்படி நண்பா ?

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்

எனக்கு படிக்காம கமெண்ட் போடுறது புடிக்காது, படிச்சு கிட்டு இருக்கேன் இன்னொரு 10 நிமிஷம்.

Mohammed Arafath @ AAA said...

இது இந்த சீரியஸ் சோட நாலாவது படம் எல்லாமே செம கலகல இருக்கும்.

Mohammed Arafath @ AAA said...

இந்த படங்கள நான் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து ஜானி டேப் என்னோட ஹீரோ ஆகிட்டார். நான் ரெண்டு நாள் முன்பே படம் பார்த்துட்டேன் செம கலக்கல்.நீங்க ரொம்ப late.

Unknown said...

சிம்ப்ளி சூப்பர், உங்க விமர்சனம், அப்புறம் உங்க ஞாபக சக்தி படம் பார்த்துட்டு வெளிய வந்து பதிவு டைப் பண்ற வரை டயலாக் எல்லாம் ஞாபகம் வச்சு இருக்கீங்களே சபாஷ்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா ஒரு டவுட்! ஏன் கமெண்டு போடும் எல்லோரும் ஓட்டுப்போடுவதில்லை? இப்போ இந்தப்பதிவுக்கு நாலுபேரு கமென்ட் போட்டிருக்காங்க, நான் மட்டுமே ஓட்டுப்போட்டிருக்கேன்!

ஓட்டுப்போடுறது தேசத்துரோகமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம் என்ன நடக்குது இங்கே...?

Unknown said...

அண்ணே பாதிப்பட விமர்சனம்தான் வந்து இருக்கு மீதி எப்போ வரும் டவுட்டு!

Unknown said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி தப்பு நண்பரே, நான் கூட ஓட்டு போட்டுருக்கேன் இன்ட்லி-ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார்said...
>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மூன்றாவது பந்தியில் ரெண்டாவது வரியும், அஞ்சாவது பந்தியில் அனைத்துவரிகளும் எனக்கு பிடித்துள்ளன!

பந்தியா? பத்தியா?
///////////

என்றா நாராய்ணா பாதி சாப்பாட்டுல எந்திரிச்சு வந்துட்டியா....!

N.H. Narasimma Prasad said...

எப்படியோ, படம் பார்க்கற மாதிரி இருந்தால் சரி.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னலேய் நடக்குது இங்கே...???

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மூதேவி, தமிழ்மணம் எங்கே காணோம்???

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ஹி அந்த குட்டி ஹி ஹி ஹி அண்ணே சிபி அண்ணே....

Sathish said...

தல நாம ரெண்டு பேரும் படம் பார்க்கும்போது, நம்ம பக்கத்துல ஒரு பலான படம் ஒடுச்சே, அத ஏன் எழுதல?

Sathish said...

படத்தோட ஹீரோ பேரு ஜிம் கேரி இல்ல தல, ஜானி டெப். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்... பெருசா ஒன்னும் இல்லை. 200 கோடி தான்.

தினேஷ்குமார் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா எங்க பாஸ் திருந்திட்டாறு ....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! பிகர் சூப்பர். அதைவிட உங்க விமர்சனம் சூப்பர்.

செங்கோவி said...

பரவாயில்லையே..தேறிடும் போலிருக்கே..எதுவா? படம் தான்.

poda said...

2D ya? 3D ya?

poda said...

good ! * your Post *

குணசேகரன்... said...

how is is in 3D effect ?

Kiruthigan said...

//இயக்குனர் பல்பு வாங்கிய இடங்கள்//
1. தந்தை முதலிலேயே ஜாக் மலையிலிருந்து குதிக்காவிட்டால் தன் மகளை கொன்றுவிடுவேன் என கூறியது இந்த இடத்தில் சரியாக போய்விட்டது...

2. ஜாக் முன்னய படங்களில் தனித்தீவிலிருந்து தப்பியது மறந்து விட்டீர்களா? அதோடு ஒரு பெண்ணுடன் தனித்தீவிலிருந்து என்ன ஆகியது? முன்னய படங்களின் அனுபவம் தான் அது...

3. கடற்கன்னிகள் ஏற்கனவே மனிதரை கொல்ல தானே வந்தார்கள். காதலன் இறக்கையில் குத்தியதால் தானே அவள் சிறைப்பிடிக்கப்பட்டாள்...

4. ஜாக் எப்பவுமே பெண்களை நம்புவதில்லை.. எல்லா படங்களிலும் கடைசியில் கழற்றி விடுவது தெரிந்தது தானே...

விமர்சனத்தை விமர்சித்ததற்கு மன்னிக்கவும்..
நன்றி

ராஜ நடராஜன் said...

ஆட்டத்த துவங்கீட்டீங்க போல இருக்குதே சிபி:)

நெனச்சேன்.பின்னூட்டத்துல கூட்டம் அள்ளுமுன்னு:)

ராஜ நடராஜன் said...

ஆங்கிலப் படத்தின் மூக்கு இங்கிலீசை அவனவன் புரிஞ்சுக்குறதுக்கே கோனார் நோட்டிஸ் கிடைக்குமான்னு தேடுற போது கதை வசனமெல்லாம் சொல்றீங்கன்னா....

அப்ப ஆங்கில படத்துக்javascript:void(0)கெல்லாம் தமிழ் டப்பிங் செய்ற ஆளு நீங்கதானா!சொல்லவேயில்ல:)

கவி அழகன் said...

அட்ரா சக்கை கலக்குது
http://www.kavikilavan.blogspot.com/

ADMIN said...

//கமெண்டை கமெண்டுகிற கமெண்டுகளுக்கு நன்றி @ சி.பி. செந்தில்குமார், பன்னிகுட்டி...//

நான் வெளிப்படையாகவே சொல்லிடறேனே.. பதிவை விட படங்கள் கண்ணுக்கு முதல்ல தென்படறதாலே.. எனக்கு படங்கள் தான் பிடிச்சிருக்கு...!!

sweet said...

பொண்ணுங்க படத்தை போட்டு விளம்பரம் பண்றாங்க என்று சொல்ல தெரியுது..

ஆனா நீங்க மட்டும் வக்கிரமா இப்படி படங்கள் போட்டு?? கால கொடுமை

உங்க வீட்டுக்காரி, மகள்கிட்ட இந்த படங்களை காமிச்சு அப்புறம் இதுல போடவும்

இந்த பொழப்புக்கு நீங்க வேற வேலை பார்க்கலாம் பாஸ்

இப்படி ப்ளாக் எழுதுறதுக்கு நவீன சரோஜா தேவி புக் எழுதுங்க வருன்மானம் பெருகும்-ல

வக்கிர முகம் கொண்டவனுக்கும் vote போடுற நாதேரிகளை என்ன என்று சொல்லுவது

பயமா இருந்த இந்த கமெண்ட்-ஐ அழித்து விடவும்

Anonymous said...

Sweet enra paithiyakaaran yarkitayoo matikita pola iruku..evanavathu terinchavana thaan irupaan..ip a parunga CP..