Sunday, May 29, 2011

டியர்.. ஆயில் (OIL) உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.....

http://www.chennaivision.com/userfiles/monica.jpg

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது.

நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்.

இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.
சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள்.

அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.
நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள். 
அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது.

இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
 http://www.koodal.com/cinema/gallery/events/2011/423/vambu-and-bhadra-movie-press-meet-stills_1_165234123.jpg
தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

நன்றி - டாக்டர் விகடன்

22 comments:

Anonymous said...

ஆயிலால் குறையும் ஆயுள்!!!

HajasreeN said...

half பில்கும் ஆயில் கும் சம்பந்தம் இருக்கா?

பெம்மு குட்டி said...

ஒரு மாசத்தில 72 பதிவு......... அப்பா!!!!!!!!!!!!!!!!!

நானும் பிளாக்கு தொடங்கி 6 மாசமாவுது, இன்னும் ஒரு பதிவுகூட போட முடியல.

எப்படி சார் எப்படி?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

நாளைக்கி நானும் ஒரு பதிவ போட்டே தீருவேன், இது சி.பி. செந்தில்குமார் மேல சத்தியம் :-))))))))))))))))

தினேஷ்குமார் said...

ஹையோ வட போச்சே

Lali said...

அனைவருக்கும் உபயோகப்படும் அத்தியாவசியமான தகவல்.. நன்றி சி பி சார்!

http://karadipommai.blogspot.com/

Unknown said...

tq...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த கர்ச்சீஃப் கெடைக்குமா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்பிடிண்ணே இப்படி...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மோனிகாவுக்கு வேற படம் கெடைக்கலியா? அவுட் ஆஃப் ஃபோகஸ்ல இருக்கே?

பெம்மு குட்டி said...

என்னை பின்தொடந்த அண்ணன் சி.பி. வாழ்க வாழ்க.


உங்க பேரை காப்பாற்றுவதற்காகவாவது நாளைக்கு ஒரு பதிவு போடுகிறேன்.

:-))))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் வந்ததற்கு ஒரு கருத்த சொல்லிட்டு கெளம்பறேன்,
இப்போ கெடைக்கற எண்ணைகள்ல பாதுகாப்பானது, பயன்தரக்கூடியது, தவிட்டு எண்ணை (எ) ரைஸ் பிரான் ஆயில்.

மேலும் தற்போது, ஆலீவ் எண்ணையையும், சோள எண்ணையையும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட எண்ணையும் கிடைக்கிறது, அது எல்லாவற்றையும்விட மிக மிக சிறந்தது! ஆனால் கொஞ்சம் விலை அதிகம்!

MANO நாஞ்சில் மனோ said...

மோனிகா படம் வேறே கிடைக்கலியா...??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////
MANO நாஞ்சில் மனோsaid...
மோனிகா படம் வேறே கிடைக்கலியா...??/////

வெளங்கிரும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பெம்மு குட்டிsaid...
என்னை பின்தொடந்த அண்ணன் சி.பி. வாழ்க வாழ்க.


உங்க பேரை காப்பாற்றுவதற்காகவாவது நாளைக்கு ஒரு பதிவு போடுகிறேன்.

:-))))))))))))))///////


யோவ் நானும்தான் பாலோ பண்றேன், என் பேரை கெடுக்கறதுக்காவது ஒரு பதிவு போடுங்கய்யா....!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உண்மைதான் செந்தில், வாழ்க்கையில ஆயில் ரொம்ப முக்கியம்! ஆயிலால்தான் பலபிரச்சனைகள்வருது

பெம்மு குட்டி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////பெம்மு குட்டிsaid...
என்னை பின்தொடந்த அண்ணன் சி.பி. வாழ்க வாழ்க.


உங்க பேரை காப்பாற்றுவதற்காகவாவது நாளைக்கு ஒரு பதிவு போடுகிறேன்.

:-))))))))))))))///////


யோவ் நானும்தான் பாலோ பண்றேன், என் பேரை கெடுக்கறதுக்காவது ஒரு பதிவு போடுங்கய்யா....! ////



கவலையே படாதீங்க பன்னிக்குட்டியண்னே நாளைக்கு கலக்கிருவோம்

கூடல் பாலா said...

\\\ஒரு பக்கம் எண்ணை செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல் பட்டு மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம் \\\
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் .

சாகம்பரி said...

மகப்பேறு மருத்துவர்கள்கூட எண்ணெய் சிக்கனத்தை கடைபிடிக்க சொல்கிறார்கள். oil, பெண்களுக்கு கூடுதல் பாதிப்பு தருகிறது. நான்-ஸ்டிக் பாத்திர வகைகளை பயன்படுத்தினால் ஆயில் பயன்பாடு குறையும். 25 வயதில் ஹார்ட்-அட்டாக் வருகின்ற காலத்தில் அவசியமான பதிவு.

ஷர்புதீன் said...

அந்த டிவி பொண்ணு போட்டோ சூப்பர் ஹி ஹி ஹி

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

காரமும், மிகுப்புளிச சாரமும்,துவர்ப்பும், கைப்போடே,உப்போடே,கசப்போடேகூட்டி,ஊரமுது உண்டு நீ ஒழியாதே,என்பது உலகியல் பழக்கம்,
இன்று மக்கள் சுவைகளுக்கு அடிமையாகி விட்டார்கள்,ஆறு சுவை என்பது,இறைவனால் கொடுத்து.இந்த சுவைகளை சரி சமமாக யாரும் புசிப்பதில்லை.காரம்,புளிப்பு,இனிப்பு,உப்புஇவை நான்கும் அதிகமாக உண்கிறார்கள் கசப்பு,துவர்ப்பு,இரண்டையும் அதிகமாக யாரும் விரும்புவதில்லை,இந்த இரண்டும் குறைவதால் உடம்பிற்கு வியாதி வருகிறது.ஆறு சுவையும் சமமாக இருந்தால் வியாதி குறையும்.
அதிலும் ஆயில் அதிகமாக எல்லா வகைகளில் சேர்த்துக் கொள்வது மிகவும்தவறானது.ஆயில் ஆயுள் குறைக்கும் என்பது உண்மையாகும்.ஆயில்,உடம்புக்கு ஒவ்வாது அளவுக்கு மீறி ஆயில் சேர்க்கக் கூடாது.அதுவும் மாமிசம் உண்ணவே கூடாது.அதை உண்பவர்களுக்கு,ஆயுள் மட்டும் அல்ல துன்பங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்,மாமிசமும் அதனுடன்சேர்க்கும் ஆயில்,மரணத்தை சீக்கிரம் நெருங்கிக் கொண்டே இருக்கும்,அதனால் ஆயிலும் மாமிசமும் உன்னவேக் கூடாது.இதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டியதாகும் .

நிரூபன் said...

ஆயில் பற்றிய பதிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ.

குணசேகரன்... said...

இப்படி அழகான நடிகை போட்டோ போட்டால் நாங்க எப்படி பதிவை படிக்கிறது..மனசு குழம்புதுங்க..
http://zenguna.blogspot.com