Saturday, May 28, 2011

அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை

மைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?’- இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கிடைத்தால்தான், அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும். ஆரம்பத்தில், விபத்துதான் என்று அடித்துச் சொல்லிய பலரும், 'அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்’ என்று மாற்றிச் சொல்வதற்குக் காரணம்... விபத்துக்கான லாரி இன்னமும் சிக்கவில்லை! 

 சி பி - அப்போ லாரி சிக்கிடுச்சுன்னா மரணத்துல மர்மம் இல்லைன்னு முடிவுக்கு வந்துடுவீங்களா?

விபத்து நடந்த இடத்தில் தொடங்கி, கார் டிரைவர் ஆனந்தன், அமைச்சரின் தனிப்பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரன், காரில் பயணம் செய்த திருச்சி அ.தி.மு.க-வினர் கார்த்திகேயன், சீனிவாசன், வெங்க​டேசன், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எனப் பல தரப்பிலும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 சி. பி - முதல்ல டிரைவரை விசாரிங்க.. பெரும்பாலான வழக்குகள்ல டிரைவர் தான் உடந்தையா இருக்காப்ல..

இந்த வழக்கு விசாரணைக்காக தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-யான அர்ச்சனா ராமசுந்தரம், மே 25-ம் தேதி மதியம் விபத்து நடந்த இடமான பாடாலூருக்கு வந்து, நேரடி விசாரணையில் ஈடுபட்டார். 

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் ரவிச்சந்திரன் என்ற தொழிலாளர் இருந்து இருக்கிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. டிரைவர் ஆனந்தன், கன்டெய்னர் லாரி என்று சொல்ல... ரவிச்சந்திரன், டிப்பர் லாரி என்று சொல்லி இருக்கிறார். 

சி.பி. - ஓப்பனிங்க்கே சரி இல்லையே?

அமைச்சரின் உடன் சென்றவர்களோ, ''அமைச்சர் வீட்டில் இருந்து இடியாப்பம் செய்து கொடுத்தார்கள். பசிக்கிறது என்று அமைச்சர் சொன்னதால், இடியாப்பத்தை எடுத்துப் பரிமாறுவதில் கவனமாக இருந்தோம். அந்த சமயத்தில் சம்பவம் நடந்துவிட்டதால், லாரியை சரியாகக் கவனிக்கவில்லை!'' என்கிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட லாரி எது என்பதிலேயே இடியாப்பச் சிக்கல் நீடிக்கிறது.

சி.பி - நல்ல வேளை டிரைவரும் இடியாப்பம் சாப்பிட்டுட்டு இருந்ததாலதான் விபத்து நடந்ததுன்னு சொல்லாம விட்டாங்களே?

டோல்கேட் வீடியோ பதிவுகளை ஆனந்தனிடம் காண்பித்தபோதும், அவரால் சரியாக அடையாளம் காட்ட முடிய​வில்லை. சம்பவம் நடந்த நேரத்தில், சமயபுரத்தில் இருந்து தொழுதூர் வரை சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்ற 11 லாரிகளின் பதிவு எண்களை வைத்து விசாரணை நடக்கிறது. இவற்றில் ஏழு ஆந்திராவைச் சேர்ந்தவை. நான்கு கேரளாவைச் சேர்ந்தவை. அந்த மாநிலங்களுக்குச் சி.பி.சி.ஐ.டி. படைகள் விசாரணைக்காகச் சென்றுள்ளன. பாடாலூர் வட்டாரத்தில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. ஏதேனும் ஒரு குவாரியில், 'அந்த லாரி’ பதுக்கிவைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் போலீஸுக்கு சந்தேகம்.  

சி.பி - நெம்பர் பிளேட் மாத்திட்டா வேலை  முடிஞ்சுது.. எப்படி கண்டு பிடிப்பீங்க?

பாதுகாப்பு தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்துள்ளன. வி.ஐ.பி. வாகனம் செல்கிறது என்றால், அந்த வாகனம் ஆயுதப் படையில் நிறுத்தப்பட வேண்டும். வண்டி சோதிக்கப்படும். டிரைவரின் பின்னணி ஆராயப்படும். எந்த வழக்கும் அவர் மீது இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர்தான், வாகனமும் டிரைவரும், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுவர். இந்த நடைமுறை, டிரைவர் ஆனந்தன் விஷயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா? ஆனால், ரெகுலராகச் செல்லும் டிரைவர்களுடன் வாகனங்கள் தயார் நிலையில் இருந்தும், அந்த வாகனங்களில் ஒன்று மரியம்பிச்சைக்கு ஏன் வழங்கப்படவில்லை?

அமைச்சருடன் பாதுகாப்பு போலீஸ் உடன் செல்லவில்லை. 'வேண்டாம்’ என்று அமைச்சரே சொன்னதால், திரும்பிச் சென்றதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெறாமல், பாதுகாப்பு போலீஸார் ஏன் திரும்பி வந்தனர்?

சி. பி. - ஒரு வேளை உயர் அதிகாரிகளின் உயர் அதிகாரியான அமைச்சரே சொல்லீட்டாரே?ன்னு நினைச்சுட்டாங்களோ என்னவோ?

சம்பவம் நடந்த உடனேயே, வாகனத் தணிக்கையை முடுக்கிவிட்டு, விபத்துக்குக் காரணமான வண்டியைப் பிடிக்க முயற்சி செய்யாதது ஏன்? மாட்டு வண்டி ஓட்டுபவரிடம்கூட செல்போன் இருக்கும் இந்தக் காலத்தில், டிரைவர் ஆனந்தனிடம் செல்போன் இல்லாததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சி. பி - ஆமா, செல் ஃபோன் இருந்தாத்தான் கடைசியா யார்ட்ட பேசுனான்? என்ன எஸ் எம் எஸ் அனுப்பினான்னு தோண்டி துருவிடுவாங்களே. அதான்.. 

முதல் கட்ட விசாரணையை முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், ''இது, திட்டமிட்ட கொலை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்!'' என்று தகவல் கசிய விடுவதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு!

 சி.பி - அதெல்லாம் எதையும் நீங்க வெளியிட வேணாம்.. கொலை செஞ்ச ஆளை வெளில விடாம அரெஸ்ட் பண்ணுனா சரி..

ஒரு லாரியைப் பிடிக்க 18 படை!

திருச்சியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள், விபத்துக்குக் காரணமான லாரியை போலீஸார் கோட்டை விட்டதுதான் மிகப் பெரிய தவறு. விபத்து நடப்பதற்கு முன், சமயபுரம் டோல்கேட் வழியாக கடந்த வாகனங்கள் 800.

அவற்றில் லாரிகளின் எண்களை வாங்கி அவற்றில் ட்ரைய்லர், கன்டெய்னர், டிப்பர் லாரி போன்ற வாகனங்களை வகைபிரித்து விசாரித்து வருகிறோம். வண்டியில் எழுதப்பட்டிருக்கும் எண்ணும் ரெக்கார்டுகளில் உள்ள எண்ணும் வேறுபடுகிறது. மேட்டுப்பாளையத்தில் ஒரு லாரியை பிடித்தோம். ஆந்திராவில் இரண்டு லாரிகளை பிடித்து சோதனை நடத்தினோம். மூன்று வண்டிகளிலும் விபத்து நடந்ததற்கான அறிகுறி இல்லை.

''சம்பந்தப்பட்ட லாரி டிரைவர், போலீஸுக்குப் பயந்து ஒளிந்து இருக்கலாம். அது யார் என்று விசாரித்து எங்களிடம் ஒப்படையுங்கள்!’' என்று லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களிடம் சொல்லி இருக்கிறோம். 18 தனிப்படைகள் இந்த விவகாரத்தில் களம் இறங்கி உள்ளன. இன்னும் ஓரிரு நாளில், விபத்துக்கு காரணமான லாரியைப் பிடித்து டிரைவர் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்!'' என்றார். 

31 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் முடிச்சி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மர்மங்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டிரைவர் மேல ஏன்யா இந்த கொலை வெறி...

எல்லா டிரைவர்களும் தவறானவங்க இல்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு இடியாப்பத்தில் விழுந்துட்டாங்களே...

அந்த இடியாப்பம் என்னாச்சி...

Unknown said...

அதுக்குள்ளே வந்திட்டாரா சவுந்தர்

Unknown said...

காலங்காத்தாலா உருப்படியான பதிவு ஹிஹி

Unknown said...

அதுசரி நான் போட்டாத விடவா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்பல்லொம் செல்ல அவ்வளவு சுதந்திரமா பேச முடியல...

திருட்டு தனம் செஞ்ச உடனே கண்டுபிடிச்சிடுராங்க....

அதான் சொல் பயன்படுத்தலன்னு நினைக்கிறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

18 படைகளும் ஒழுங்க வேலை செஞ்சா சரி....

இந்த விஷயத்தில் சிபி எவ்வளவு பொருப்பா இருக்காரு பாருங்க....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
மைந்தன் சிவா said...

அதுக்குள்ளே வந்திட்டாரா சவுந்தர்/////


எலே சிவா..
உன் பிளாக்லேயும் நான்தாய பஸ்ட்..

Unknown said...

உண்மை விரைவில் வெளிவரும். பாதிக்க பட்ட குடும்பத்துக்கு அது ஆறுதலாக இருக்கும் ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்டு..:-)

Unknown said...

ணோவ் வணக்கமுங்க!

நிரூபன் said...

அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.//

ஆஹா....ஒரு திரிலிங் சனிகிழமையாக எல்லே நம்ம சகா தொடங்கியிருக்காரு.

நிரூபன் said...

மர்மம்

நிரூபன் said...

திகில்

நிரூபன் said...

சஸ்பென்ஸ்

நிரூபன் said...

கிரைம்

நிரூபன் said...

திருட்டு

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

பதினெட்டுப் பேர் முயற்சி செய்தாவது கேஸை முடிச்சு, பைலைக் குளோஸ் பண்ணாமல், குற்றவாளியைக் கண்டு பிடித்து, தண்டனை வழங்கினால் சந்தோசம்.

சசிகுமார் said...

//நம்பர் பிளேட்ட மாத்திட்டா என்ன பண்ணுவாங்க //

யோவ் உனக்கு மட்டும் எப்படியா இது போல யோசனை வருது ரொம்ப அனுபவமோ

Anonymous said...

எப்படியும் நேருவுக்கு ஆப்பு கன்ஃபார்ம்னு நினைக்கிறேன்...குத்தமே செய்யலைன்னாலும் ஹிஹி

rajamelaiyur said...

///
Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

டிரைவர் மேல ஏன்யா இந்த கொலை வெறி...

எல்லா டிரைவர்களும் தவறானவங்க இல்லை...
///

ஆமாம்

rajamelaiyur said...

//
ஒரு இடியாப்பத்தில் விழுந்துட்டாங்களே...

அந்த இடியாப்பம் என்னாச்சி...

May 28, 2011 8:47 AM
Blogger மைந்தன் சிவா said...

அதுக்குள்ளே வந்திட்டாரா சவுந்தர்
//
அவர் always online than

கூடல் பாலா said...

திகில் நாவல் ......!

ராஜி said...

ம் ம் ம்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நல்ல ஆழமான அலசல், சகோ.சி.பி.(ஐ?).செ.

நீங்க கிரைம் பிராஞ்சில் இருக்கவேண்டிய ஆள்தான்.

ஆனால் நாம் அனைவரும் இன்னொரு முக்கிய விஷயத்தை மறந்துட்டிருக்கோம்.

காலை ஆறரைக்கு திருச்சியில் சிலைக்கு மாலை போட்டுட்டு பகல் பன்னிரண்டு மணிக்கு சென்னையில் அமைச்சர் மீட்டிங்கில் முதல்வருடன் உட்கார்ந்து இருக்கவேண்டும் என்றால்..? அதெப்படி முடியும்..? யார் இந்த 'அதிவேக ஆபத்து' ஐடியாவிற்கு பிளான் போட்டது..?

எல்லாம் இதனால் வந்த வினைதான்..!

இந்த விபத்துக்கு இன்னொரு காரணம் ஓவர் ஸ்பீடு இல்லையா..!

Prakash said...

Pls go thru

http://www.vinavu.com/2011/05/28/rowdy-mariam-pichai/

middleclassmadhavi said...

ஆராய்ச்சிப் பதிவு! ஓவர் ஸ்பீட் முக்கிய காரணம் என மறுப்பதற்கில்லை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யா ராசாக்களே தயவு செஞ்சு விகடன்,குமுதம் போன்ற புக்ஸ்ல இருந்து பதிவு போடுறத நிறுத்தி தொலைங்க. எங்களுக்கு புக் வாங்குறதுக்குகூட காசில்லைன்னு நினைப்பா? வெள்ளி,சனி, ஞாயிறு இந்த அக்க போறு தாங்கலை. நிறுத்தி தொலைங்க