Saturday, May 21, 2011

ரஜினி விஷயத்தில் வெளி வரும் வதந்திகளை நம்பாதீர்... ...நடப்பது என்ன?

http://10hot.files.wordpress.com/2009/02/kamal-gowthami-rajini-latha-rajnikanth-tamil-actors-sarees1.jpg

'ரஜினி நன்றாக இருக்கிறார்... உற்சாக​மாக இருக்கிறார்...’ என்று கூறி வந்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ​மனை நிர்வாகம், கடந்த 18-ம் தேதி நள்ளிரவு, 'ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்’ என்கிற பகீர் தகவலை வெளியிட, தமிழகம் மீண்டும் தத்தளிக்கிறது. 

'பிரபல தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முக்கியப் பிரமுகர்களின் உடல்நிலை ப்ளஸ் சிகிச்சை விவரங்களை, அவ்வப்போது அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்’என்பது எழுதப்படாத விதி. சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்​பட்டபோது, ரஜினி நிலைமையை அரசுக்குச் சொன்னது அந்த மருத்துவமனை. அதனால்​தான், சி.ஐ.டி. காலனி வீட்டில் இருந்த கருணாநிதி விரைந்து வந்து பார்த்தார்.
 
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அதிபர் வெங்கடாசலம், ரஜினியின் நெருங்கிய நண்பர். அவர், 'சிகிச்சை ரகசியம் பாதுகாக்​கப்படும்’ என்று உறுதிமொழி கொடுக்கவே, ராமச்​சந்திராவில் அட்மிட் ஆனார் ரஜினி. ஏற்கெனவே அவரைப்பற்றிப் பரவிய வதந்திகள் கொஞ்சம் தணிந்த நிலையில், இப்போது மீண்டும் பதற்றம்!
 http://onlysuperstar.com/wp-content/uploads/2009/03/rajini-with-daughterpj.jpg
வதந்திகளை நம்பாதீர்கள்

கடந்த 19-ம் தேதி மதியம் மருத்துவமனை வளாகத்தில் மருமகன் தனுஷ§டன் பத்திரிகையாளர்களை சந்தித்தார், லதா ரஜினிகாந்த், ''முதலில் என் கணவருக்கு வைரஸ் கிருமியால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இசபெல்​லாவில் சேர்த்தோம். வீட்டுக்கு வந்தவுடன் உடம்பில் சமநிலையற்ற தன்மை ஏற்பட்டது. அதனால், இப்போது ராமச்சந்திராவில் சேர்த்து உள்ளோம். டாக்டர்கள் சிறப்பாகச் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொற்றுநோய் காரணமாக தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பார்வை​யாளர்கள் தொல்லை அதிகம் இருப்பதால், ஐ.சி.யு. பிரிவில் இருக்கிறார். அவரைப்பற்றி வெளிவரும் வதந்தி​களை யாரும் நம்பாதீர்கள். அவர் நலமாகவே இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்துத் தவறான தகவல்​களை எழுதாதீர்கள். ரஜினி நலம் பெற வேண்டி, நாடெங்கிலும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதை நான் அறிவேன். நாங்களும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறோம்!'' என்று விளக்கம் கொடுத்தார்.

அருகில் இருந்த தனுஷ், ''ரஜினி சாரின் உடல்நிலை பற்றி யாரும் கவலைப்படாதீர்கள். நலமாகவே இருக்​கிறார். ரசிகர்கள், அவரவர் சொந்த வேலைகளில் கவனம் செலுத்துங்கள்...'' என்றார்.


ஜெ. வெயிட்... விஜி விசிட்!
 http://www.voicetamil.com/wp-content/uploads/2009/10/rajini-vijay-srikanth-jayalalitha.jpg
தேர்தலில் வெற்றி பெற்றதும் ஜெயலலிதா, விஜயகாந்த் இருவருக்கும் ராமச்சந்திராவில் இருந்தபடியே வாழ்த்து தெரிவித்தாராம், ரஜினி. பதவியேற்பு முடிந்து அரசுப் பணிகளில் அசுர வேகத்​தில் இறங்கிவிட்ட ஜெயலலிதா, 'ரஜினிக்கு உடல்நிலை தேறியதும் தகவல் சொல்லுங்கள்... நானே வந்து பார்க்கிறேன்’ என்று குடும்பத்தாரிடம் தெரி​வித்துள்ளார்.

இந்த நிலையில், ராமச்​சந்திராவுக்கு திடீர் விசிட் அடித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ரஜினியை சந்தித்தார் விஜயகாந்த். ''ரஜினி சாருக்கு ஒண்ணுமே இல்லை.... நல்லாத்தான் இருக்கார்.  நான்கூட கொஞ்ச​நாள் முன்னாடி ஆஸ்பத்தியில் அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அந்தத் தகவலை யாருக்கும் சொல்​லவே இல்லை. சொல்லி இருந்தா, ரஜினி சாருக்குக் கிளப்பின வதந்திபோல, எனக்கும் பரப்பி இருப்பாங்க...'' என்று ஜோவியலாகப் பேசினார்.

மேல்நாட்டு சிகிச்சை

''என்னோட பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்று என் மனைவிக்குக்கூட தெரியாது. வைரமுத்து சாருக்குத்தான் எல்லாம் தெரியும்!'' என்று கவிஞர் வைரமுத்துபற்றி ரஜினி மனம் நெகிழ்ந்தது உண்டு. வைரமுத்துவிடம் பேசினோம். ''தீவிர சிகிச்சைப் பிரிவில் அருமை நண்பர் ரஜினிக்கு ஆழ்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சிகிச்சை செய்வது உசிதம் என்று மருத்துவர் குழு முடிவு செய்து, அதற்கான பணியில் துரிதமாகச் செயல்பட்டால், வரவேற்பேன். நோயில் இருந்து மீண்டு... மீண்டும் ரஜினி, ரசிகர்கள் மனதை ஆண்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாரம் இரு முறை தவறாமல் சந்திப்போம். வெள்ளந்தி உள்ளத்துக்கு சொந்தக்காரர். எறும்புக்கும் தீங்கு நினைக்காத இதயம் ரஜினி.

சிங்கப்பூரில் நடந்த 'எந்திரன்’ ஒலிநாடா வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, விமானத்தில் நானும் ரஜினி​யும்  சென்றோம். விமானத்தில் எல்லோரும் அசந்து தூங்கினார்கள். பைலட், விமானப் பணிப்பெண்களுடன், நான், ரஜினி மட்டுமே விழித்து விடிய விடியப் பேசிக்கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில், 'அப்போ சரி... தூங்கலாமா..?’ என்று கேட்டார், ரஜினி. ஜன்னல் வழியே பார்க்கச் சொன்னேன். ராட்சஸ மின்விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. 'சிங்கப்பூர் ஏர்போர்ட்’ என்றதும் குபீரெனச் சிரித்தார், ரஜினி. இப்படிப்பட்ட சுறுசுறுப்புக்கொண்டவரை எந்த நோயா​லும் முடக்க முடியாது!'' என்று அசை போட்​டார் வைரமுத்து.
 http://onlysuperstar.com/wp-content/uploads/2009/06/rajini-sridevi-wedding-fbj.jpg
தனி விமானம் ரெடி

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி சேர்ந்​ததில் இருந்தே, டெல்லியில் இருந்து பல முறை போனில் விசாரித்த வண்ணம் இருக்கிறாராம், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அவரிடம், ''ரஜினிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதனால், விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு, அவரது உடல்நிலை தெம்பாக இல்லை. ஓரளவு சீரானதும் வெளிநாடு போகலாம்!'' என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். 'டாக்டர் குழுவோடு தனி விமானம் ஏற்பாடு செய்து தரத் தயார்’ என்று உறுதி அளித்துள்ளாராம் ப.சிதம்பரம்!

கருணாநிதி கோபம்

கடந்த 17-ம் தேதி, காலை ரஜினியைப் பார்க்க ராமச் சந்திராவுக்குக் கிளம்பினாராம் கருணாநிதி. அப்போது, 'விசிட்டர்களுக்கு அனுமதி இல்லை என டாக்டர்கள் கண்டிப்பு காட்டுகிறார்கள்’ என்ற தகவலைச் சொல்லி, கருணாநிதியைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். ''நரேந்திரமோடி, சந்திரபாபு நாயுடு எல்லாம் ரஜினியைப் பார்க்கலாம், நான் பார்க்கக் கூடாதா?'' என்று முகம் சிவந்தாராம் கருணா​நிதி!

26 comments:

Unknown said...

வ்ச்ப்சி

Unknown said...

பசிக்குதுயா சாப்பாடு தாங்க....

Unknown said...

நடப்பது ஏன்னா??

Unknown said...

சி பிக்கு தமிழ்மணத்துடன் கோபம்...நடந்தது என்ன?

ராஜி said...

ரைட்

Unknown said...

பிரபலமேன்றாலே கிசு கிசு வதந்தி எல்லாம் இருக்கத்தானே செய்யும் பாஸ்..
பாருங்க நீங்க கூட நமீதாவோட ஒரு நாள் மொரீசியஸ் பக்கமா ஒதுங்கினதா
எனக்கு தகவல் வந்திச்சு...

ராஜி said...

கண்ணா வியாதிங்குறது எப்போ வரும்? எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது? ஆனால், வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்து சேரும்.

செங்கோவி said...

தலைவர் நல்லா இருந்தாச் சரி.

Unknown said...

நல்லது நடக்கும்யா....யாரும் பயப்பட தேவை இல்ல!

Unknown said...

ரஜினிக்கு காச்சல் ஒரு தடவை வந்தா வதந்தி நூறு தடவை வருது ...நீங்களாவது நல்ல வார்த்தை சொன்னீங்களே

Anonymous said...

ரஜினி நல்லபடியாக ராணா வில் கலக்குவார்

Anonymous said...

thamizmaNam ennaassu?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரஜினி நல்லபடியாக குணமாகி, ரானாவில் எம்மை மகிழ்விப்பார் என்று நம்புவோம்! சி பி என்னாச்சு? தமிழ்மணத்தில் ஏன் இணைக்கவில்லை? நானும் இணைத்துவிட பலதடவை முயன்றேன்! புதிய இடுகைகள் எதுவும் காணப்படவில்லை என்று வருகிறது! என்னாச்சு? நண்பர்களின் பக்கங்களுக்கும் நீங்கள் போகவில்லையா?

சக்தி கல்வி மையம் said...

தமிழ்மணம், தமிழ டென் எல்லாத்துக்கும் என்னாச்சு ...

Unknown said...

//நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு எல்லாம் பார்க்கலாம் நான் பார்க்கக் கூடாதா ?-கருணாநிதி//
பெருசு...
பெருசு...
இவங்க அவரை கண்ணாடி வழியா தான் பார்த்திருப்பாங்க...
நீங்க ஸ்ட்ரெட்சர்ல போனா மட்டும் ICUல அட்மிட் பண்ணுவாங்க !
தொத்து நோய் ஒட்டிக்கும்ன்னு சொல்றாங்க..?
உங்களுக்கு தான் ஒய்வு கொடுத்தாச்சே ! அவரையாவது நிம்மதியா விடுங்களேன் !
சும்மா நொய்யு நொய்யுன்ட்டு...

சசிகுமார் said...

உங்க தளத்துக்கு வந்தா நாலு திரட்டியில ஒட்டு போடுவோம் இப்ப இரண்டு மட்டும் தான். வாசகர் படும் கஷ்டத்திற்காக இரண்டு திரட்டிகளில் இணைக்காமல் விட்ட சிபி சாருக்கு மிக்க நன்றி. (எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு இந்த திரட்டிகள் பிரச்சினைக்காக)

NKS.ஹாஜா மைதீன் said...

கருணாநிதிக்கு இங்கும் மூக்குடைப்பா...?

தமிழ்வாசி பிரகாஷ் said...

விரைவில் குணமாக வேண்டுகிறேன்...

காங்கேயம் P.நந்தகுமார் said...

ரஜினி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம். நேற்று மதியம் நடிகர் சரத்குமார் ரஜினியை சந்திக்க சசென்றார். சந்தித்தால் ரஜினியின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முன் சத்யசாய்பாபா மூச்சுதினறல், மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த போது விஐபிக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியில் அவரது பிணத்தை தான் பார்க்க முடிந்தது. தற்போது ரஜினிக்கும் இந்த நோய் இரண்டும் உள்ளது குறிப்பிடதக்கது.

கவி அழகன் said...

கலக்கல் ரிபோர்ட் ஒண்டு கொடுதிருகிக்ங்க

குணசேகரன்... said...

கலைஞர் கோபம்-நியாயமானது..
http://zenguna.blogspot.com

N.H. Narasimma Prasad said...

ரஜினி விரைவில் மீண்டு வருவார் என நம்புவோம்.

மனோவி said...

இந்த மீடியவே இப்படித்தான்...
நீங்க மீடியா இல்லையா?

kumar said...

நியாயம் தானே? நரேந்திர மோடிக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?
குஜராத் மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவரா?

இர்ஷாத் ஜத்தி said...

xx

நிரூபன் said...

ரிஜனி வெகு விரைவில் குணமாகி வர வேண்டும் என்பது தான் எல்லோர் விருப்பமும்.