Monday, May 23, 2011

டாப் டென் ( 10) பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல்

http://www.hinduonnet.com/thehindu/mp/2006/11/11/images/2006111101600101.jpg

பெண் எழுத்து- ஒரு பாசிட்டிவ் பார்வை பாகம் 2

பெண் எழுத்து பற்றி நான் எழுதிய முதல் பாகம் அட்டர் ஃபிளாப் ஆனது எனக்கு வருத்தமே.. சாதாரண டப்பா பட விமர்சனமே 1800 டூ 3000 பேர் படிக்கும்போது மிக சிரமப்பட்டு தயாரிக்கப்பட்ட என் உழைப்புப்பதிவு வெறும் 189 பேர் மட்டுமே படித்தார்கள் என்னும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கு,



அந்த பாகத்துல நான் பெண் எழுத்தாளர்களின் சிறந்த நாவல் பற்றி ஒரு பட்டியல் கொடுத்தேன்.. அதுல சில கருத்து வேற்றுமை.. எப்டின்னா ஒரு ஆணால் பெண் நாவல் ஹிட்டை எப்படி வரையறுக்க முடியும் என.. சரி என ஒரு ஐடியா பண்ணுனேன். எங்க ஊர்ல இருக்கற லைப்ரரில  கருத்துப்பெட்டி வைத்தேன். அதன் படி வரும் பெண் வாசகிகள் தங்கள்க்கு பிடித்த எழுத்தாளர்கள் நாவல்கள் பற்றி ஒரு கருத்து கணீப்பு நடந்தது.


1. லக்‌ஷ்மி - சூரிய காந்தம், அகிலா, மீண்டும் பிறந்தாள்

2. அனுராதரமணன் - விதைகள் , சிறை

3. வித்யா சுப்ரமணியம் - விட்டில் பூச்சிகள்,தூரத்து நிலவு,தென்னங்காற்று

4. சிவசங்கரி - மலையின் அடுத்த பக்கம்,நான் நானாக,ஏன்?

5. இந்துமதி - தரையில் இறங்கும் விமாங்கள்,மணல் வீடுகள்,கீதமடி நீ எனக்கு

6. ரமணி சந்திரன் - ஜோடிப்புறாக்கள்,வந்து போகும் மேகம்,தேவி,தவம் பண்ணி விடவில்லையடி

7. திலகவதி - கல்மரம்,கைக்குள் வானம்,கனவை சூடிய நட்சத்திரம்

8. வாசந்தி - ஆகாச வீடுகள்,புரியாத அர்த்தங்கள்

9. அநுத்தமா - ஆல மண்டபம்,ஒன்று பட்டால்,பூமா,சுருதி பேதம்

10. ஜோதிர்லதா கிரிஜா - மத்தளங்கள்

11. ராஜம் கிருஷ்ணன் - சத்திய வேள்வி,கோடுகளும் கோலங்களும்
http://www.tamilenn.info//images/stories/tamilcnn/january2011/india/leena.jpg
ஓக்கே..  லெட் கம் டூ சப்ஜெக்ட்..

இப்போ வலை உலகில் உள்ள பெண் பதிவர்கள் யார்? டாப்ல இருக்காங்கன்னு பார்ப்போம். நான் எடுக்கும் இந்த டாப் டென் தமிழ்மணம் போல் ஹிட் அடிப்படையில் அல்ல.. தர வரிசை.

பொதுவா பதிவுலகில் உள்ள பெண் பதிவர்கள் -ல் பெரும்பாலும் கவிதைகள், சமையல் குறிப்புகள் அதிகமா எழுதறாங்க.. வெகு சிலரே நகைச்சுவை உணர்வோடு எழுதறாங்க.. பெரும்பாலானோர் எழுத்துக்களில் சொந்தக்கதை சோகக்கதை அதிகம்.

அப்படி எல்லாம் இல்லாம தான் வாழும் நாட்டை பற்றிய ஒரு கலாச்சாரப்பார்வை சம்பந்தமான பதிவுகள் எழுதும் சித்ரா பதிவுலகில் நெம்பர் ஒன் பெண் பதிவர் என  என் கண்ணுக்கு தெரியறார்.

இவர் தன்னோட பதிவுகள்ல அவர் வசிக்கும் ஊர் பற்றிய பகிர்தலை,அந்த ஜனங்களோட கலாச்சாரத்தை ,நகைச்சுவையா சொல்ற விதம் அழகு..

வாரா வாரம் திங்கள் கிழமை வந்தாலே சித்ராவின் பதிவும் ஆஜர்.. வீக் ஓப்பனிங்க் டேல சிக்சர் அடிப்பார். இவர் பதிவு போட்ட 3 மணி நேரத்துல தமிழ்மணத்துல 30 ஓட்டுக்கள் வாங்கி தமிழ் மண மகுடம் சூட்டும் பதிவர் ஆகி 2 நாட்கள் அந்த சிம்மாசனத்துல அசைக்க முடியாத இடத்துல இருப்பார்.

மற்ற பதிவர்கள் அதே மகுடம் வாங்க 12 மணி நேரம் ஆகுது.. அதே போல் இண்ட்லில இவர் 45 ஓட்டுகள் வாங்க 4 மணீ நேரம் டூ 6 மணி நேரம் தான் ஆகுது.. அதை மற்ற பதிவர்கள் அடைய குறைஞ்ச பட்சம் 24 மணி நேரம் ஆகுது.. 

இவர் தனது பதிவில் இது வரை தனி நபர் தாக்குதல் செய்ததே இல்லை.. தேவை அற்ற விவாதங்களை வளர்ப்பதே இல்லை.. 

புதிய பதிவர்களை ஊக்குவிப்பதில் இவர் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருக்கார். பதிவுலகில் அதிக நேரம் ஆன் லைனில் (ON LINE) இருக்கும் பெண் லயன் (பெண் LION) இவர். இவர் பதிவுகளுக்கு கமெண்ட் போடும் லவகமான வேகம் பிரம்மிக்க வைக்கிறது. 

பெரும்பாலான பதிவுகளில் உள்ள கடைசி பேராவில் உள்ள 3 லைனை காப்பி பேஸ்ட் செய்து அது பற்றி கமெண்ட் போடுவார். பல கமெண்ட்ஸ்களில் ஹா ஹா ஹா என்ற அடை மொழி இருக்கும். ஸ்மைலி  சில சமயம் போடுவார்.

 ரெகுலராக இவர் போகும் நண்பர் பதிவுகளில் 18+ இருந்தாலோ, சர்ச்சைக்குரிய விஷயங்கள் விவாதிக்கப்பாட்டாலோ  சத்தம் இல்லாமல் வந்துடுவார்.. 

2 பதிவுகளுக்கு போக இவர் எடுத்துக்கொள்ளும் நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே.. 

இவர் படிக்கும் பதிவுகளில் ஏதாவது கமெண்ட்டில் யாராவது உண்மைக்கு புறம்பாக எழுதினால் உடனே ஏதாவது ஆதார லிங்க்குடன் களம் இறங்கி கலக்குவார்.


வலைப்பூ ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. 23. 12 . 2009 அன்று வலை உலகிற்கு வந்தார். 704 ஃபாலோயர்ஸ்

மைனஸ் ஓட்டே இதுவரை வாங்காத பதிவர்.. ( நோட் பண்ணீக்குங்கப்பா.. இனி போட நினைக்கறவங்க ஹி ஹி )

இவர் வெட்டிப்பேச்சு என்ற வலைப்பூ போக கவுண்டமணி செந்தில் என்ற பிளாக்கிலும் கெஸ்ட் ரோல் பொறுப்பு ஏற்றுள்ளார்.

 இவர் பதிவின் லிங்க்....

http://konjamvettipechu.blogspot.com/


வெட்டிப்பேச்சு சித்ராவுடன் ஒரு மினி பேட்டி


1. பொதுவா பதிவுலகில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் வீட்டில் அங்கீகாரம் கிடைக்காத அல்லது அனுமதி கிடைக்காத நிலையில் தான் இயங்கி வர்றாங்க.. ஆனா உங்க எழுத்துகளில் இருந்து உங்க கணவர் பூரண சுதந்திரமும் ,ஊக்குவிப்பும் தர்றார்னு தோணுது..  வாட் யூ ஃபீல்..?
/////பொதுவா பதிவுலகில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் வீட்டில் அங்கீகாரம் கிடைக்காத அல்லது அனுமதி கிடைக்காத நிலையில் தான் இயங்கி வர்றாங்க.. ////

....   அப்படியா?  Thats news to me.
/////ஆனா உங்க எழுத்துகளில் இருந்து உங்க கணவர் பூரண சுதந்திரமும் ,ஊக்குவிப்பும் தர்றார்னு தோணுது.. /////

....... பூரண சுதந்திரம் என்னிடமே இருக்கிறது. அதை என் கணவர் தருகிறார் என்று  நான் நினைத்தால், நான் என் சுதந்தரத்தை இழந்த அடிமை ஆவேன். எப்பூடி! 


///வாட் யூ ஃபீல்..?////

........ You mean,  How I feel about it?  இதுக்கெல்லாம் பீலிங்க்ஸ் ஆகுமா?  

அவ்வ்வ்வ்........

2. இண்ட்லில் அதிகம் ஓட்டு போட்ட பதிவர் லிஸ்ட்ல நீங்க முதல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்..பொதுவா புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் அங்கீகாரம் கொடுப்பதும் உங்க  பேசிக் கேரக்டரா இருக்கு.. இது சின்ன வயசுல இருந்தே ஊறியதா?
.//// இண்ட்லில் அதிகம் ஓட்டு போட்ட பதிவர் லிஸ்ட்ல நீங்க முதல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்////

..........  நான் எந்த அளவுக்கு வெட்டி வேலை பார்க்கிறேன் என்று  டமாரம் அடிச்சு அறிவிச்சிட்டாங்களே..... ரொம்ப நன்றிங்க.
//////பொதுவா புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் அங்கீகாரம் கொடுப்பதும் உங்க  பேசிக் கேரக்டரா இருக்கு.. இது சின்ன வயசுல இருந்தே ஊறியதா?////

....... ஆமாங்க.  பள்ளிக்கூட நாட்களில் - ஒரு நாள் - லஞ்ச் பிரேக்ல, அப்பா ஷர்ட் பாக்கெட்ல இருந்து சுட்ட காசுல ஒரு ஆரஞ்சு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு கிட்டு இருந்தேன்.  அப்போ, புதுசா என் வகுப்பில் சேர்ந்த தோழி, என் குச்சி ஐஸையே பார்த்துக்கிட்டு பக்கத்துல வந்து நின்னுட்டாள்.  உடனே, என் ஐஸ் குச்சியை அவள் கிட்ட கொடுத்து அவளுடைய தோழியாக மாறிட்டேன். :-)))))


3. இங்கே எல்லாம் மொய்க்கு மொய் சிஸ்டம் தான் பெரும்பாலும் ஃபாலோ பண்றாங்க.. நீ என் பிளாக் வா கமெண்ட் போடு.. நான் உன பிளாக் வர்றேன்.. இப்படி.. ஆனா வாரம் ஒரு முறை பதிவு போடும் நீங்க  வாரம் 5 நாட்கள் பல பிளாக்ல கமெண்ட் போடறீங்க.. ஓட்டும் போட்றீங்க.. இந்த மனோ பக்குவம் எப்படி வந்தது?

/////இங்கே எல்லாம் மொய்க்கு மொய் சிஸ்டம் தான் பெரும்பாலும் ஃபாலோ பண்றாங்க..////// 

....................   நாம் ப்லாக்ல கருத்துக்களைத்தான் பகிர்ந்து கொள்கிறோம்னு நினைச்சேன்.  கல்யாண விருந்து பரிமாறிக் கொள்கிறோம்னு தெரியாம போச்சே!


////இப்படி.. ஆனா வாரம் ஒரு முறை பதிவு போடும் நீங்க  வாரம் 5 நாட்கள் பல பிளாக்ல கமெண்ட் போடறீங்க.. ஓட்டும் போட்றீங்க.. இந்த மனோ பக்குவம் எப்படி வந்தது?////

.......... ஓ அதுவா?  அது கம்பெனி சீக்ரட்.  இருந்தாலும், நீங்க இவ்வளவு தூரம் கேட்பதால் சொல்கிறேன்.  ஆயிரம் டாலர்க்கு செக் அனுப்பி வைங்க.  டெபாசிட் ஆனதும், பதில் உடனே மெயில்ல வரும்.  ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

4. திங்கள் கிழமை நீங்க பதிவு போட்டா பதிவு போட்ட 3 மணீ நேரத்துல தமிழ் மண மகுடம் கிடைச்சுடுது.. திங்கள் செவ்வாய் 2 நாளும் நீங்க தான். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படலை.. வாட் யூ ஃபீல்?
........  நம்பினால் நம்புங்கள்.    உண்மையில் நீங்க சொல்லித்தான் தெரியது.   திங்கள், செவ்வாய் - தமிழ்மண மகுடத்தை எனக்காக விட்டு கொடுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 
 

5. ஆண்கள் வலைப்பூ , பெண்கள் வலைப்பூ என பிரிச்சுப்பார்ப்பீங்களா/ அப்படி எல்லாம் கிடையதா/
.............  அப்படி பிரிச்சு பார்க்க வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை.

6. தமிழ்மண நட்சத்திரப்பதிவாளர் அனுபவம் எப்படி இருந்தது? வாரம் ஒரு போஸ்ட் போடும் நீங்க அந்த வாரம் எப்படி சமாளிச்சீங்க?

..............  ரொம்ப சந்தோஷமாக இருந்தது.  Temporary ஆக இரண்டு assistants வேலைக்கு சேர்த்துக்கிட்டேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....  

7. எந்த சர்ச்சைலயும் சிக்காம இது வரை தாக்கு பிடிச்சுட்டீங்களே.. அது எப்படின்னு புது பதிவர்களுக்கு சொல்லுங்க..


........... தினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து, குளிச்சு முடிச்சு,  நெத்தியில சந்தனப் போட்டு வச்சுக்கிட்டு,
வெறும் வயித்துல, ஒரு கப் வனிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு,
 "கொஞ்சம் வெட்டி பேச்சு சரணம்!
சச்சரவில் மாட்டாமல் இருக்க சரணம்!"  என்று நூறு முறை சொல்லி வர எந்த சர்ச்சையிலும் சிக்காம இருக்கலாம்.

8. கடைசியா ஒரு வம்பு கேள்வி  .. உங்களுக்கு பிடிச்ச ஒரு ஆண் பதிவர் வலைப்பூ , ஒரு பெண் பதிவர் வலைப்பூ சொல்லுங்க
நிறைய வலைப்பூக்கள் உள்ளன:  குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் - உதாரணத்துக்கு:  

 1. http://blogs.herald.com/dave_barrys_blog/  
 
2. http://www.thevine.com.au/blog/clembastow/on-funny-women-_-let%27s-end-this20110421.aspx
 
 எது ஆண் வலைப்பதிவரின் வலைப்பூ, எது பெண்பதிவரின் வலைப்பூ என்று அவற்றில் நீங்களே பிரித்து பார்த்துக்கோங்க. 


-தொடரும்

 

50 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அடரிருட்டிலும் கண்ணாடி போடும் சிபி அண்ணே வணக்கம்ன்னே..

Speed Master said...

ஐ சித்ராக்கா!!!

சி.பி.செந்தில்குமார் said...

@ மனோ

மொட்டை வெய்யில்லயும் கோட் சூட் போட்டு டை கட்டி இருக்கும் நீ பேசறியா?

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் பேட்டி ஹே ஹே ஹே ஹே நடக்கட்டும் நடக்கட்டும்...

சி.பி.செந்தில்குமார் said...

>>Speed Master said...

ஐ சித்ராக்கா!!!

சாரி.. அவங்க எஸ் சித்ராக்கான்னு நினைக்கறேன். அண்ணன் பேரு சாலமன்

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் பேட்டி ஹே ஹே ஹே ஹே நடக்கட்டும் நடக்கட்டும்...

ஏலேய்.. உன் பிளாக்ல என்னை கேவலப்படுத்துனியாமே? அடங்க மாட்டியா? ராஸ்கல்

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
@ மனோ

மொட்டை வெய்யில்லயும் கோட் சூட் போட்டு டை கட்டி இருக்கும் நீ பேசறியா?//

டேய் சித்ரா மேடம் பற்றி பதிவு போட்டதாலே என் திட்டுல இருந்து தப்பிச்சிட்டதா நினைக்காதே, இரு உனக்கு அடுத்த பதிவுல வச்சிருக்கேன் ஆப்பு...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் பேட்டி ஹே ஹே ஹே ஹே நடக்கட்டும் நடக்கட்டும்...

ஏலேய்.. உன் பிளாக்ல என்னை கேவலப்படுத்துனியாமே? அடங்க மாட்டியா? ராஸ்கல்//

அண்ணே நீங்க எவளவு அடிச்சாலும் தாங்குரீங்கன்னே அதான் ஹிஹிஹிஹி...

சக்தி கல்வி மையம் said...

வந்தேன், படித்தேன், வாக்களித்தேன்(தமிழ்மணம் காணோம்).. சென்றேன்.

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
வந்தேன், படித்தேன், வாக்களித்தேன்(தமிழ்மணம் காணோம்).. சென்றேன்.//

ஒடுய்யா ஓடு...

சக்தி கல்வி மையம் said...

வந்தேன், படித்தேன், வாக்களித்தேன்(தமிழ்மணம் காணோம்).. சென்றேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! சித்ரா அக்கா அலசல் அருமை .. கேள்வி பதில்கள் சூப்பர்.

எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

Unknown said...

அருமையான பதிவு பாஸ்!!!
ரசித்தேன் ஒவொரு கேள்வி பதில் மற்றும் அறிமுகத்தை...
சித்திரா ராக்ஸ்!!

அமைதி அப்பா said...

கலக்கல் பதிவு & பேட்டி

Unknown said...

அண்ணே வணக்கம்னே நல்லா இருக்கீங்களா......!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இப்படியான அருமையான பதிவுகள் குறைந்தளவு ஹிட்ஸ் வாங்குவது குறித்த உங்கள் ஆதங்கம் நியாயமானது! இனிமேலாவது கடும் உழைப்புக்கு மரியாதை கிடைக்கிறதா என்று பார்ப்போம்!

சித்ரா பற்றி நீங்கள் குறிப்பிட்டது அத்தனையும் உண்மை செந்தில்! அவருக்கு எனது வாழ்த்துக்கள்! சித்திராவின் வெற்றியின் ரகசியம் என்னவென்றால், அவர் சக பதிவர்களை ஊக்குவிக்கும் திறன்தான்!!

அருமையான பதிவு செந்தில்!!

Lali said...

பெண்களை பாராட்டுவதற்கு ஒரு நல்ல மனசு வேணும்.. இந்த பதிவின் தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்க்கிறோம் :)

http://karadipommai.blogspot.com/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செந்தில் நீங்கள் சில பல விஷயங்களில் மாத்தியோசித்திருக்கிறீர்கள்! ஒரு முதிர்ச்சி நிலை உங்கள் பதிவுகளில் தென்படுகிறது! விடலையாக, வெட்டியாக திரிஞ்ச ஒரு பையனுக்கு குடும்ப பொறுப்பு வந்த மாதிரி இருக்கு! இதை வாழ்த்தி வரவேற்கலாமா? வேணாமா? னு தோணுது!

இந்த நேரத்தில் ஒரு குசும்பு கேள்வி,

" அண்ணே ரெண்டு நமிதா ஸ்டில் போடுவீங்களா? " ஹிஹிஹி...!!

சி.பி.செந்தில்குமார் said...

ஜீவன்.. ஏண் இந்த கொலை வெறி ? ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>Lali said...

பெண்களை பாராட்டுவதற்கு ஒரு நல்ல மனசு வேணும்.. இந்த பதிவின் தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்க்கிறோம் :)

http://karadipommai.blogspot.com/

சக படைப்பாளியை பாராட்டுவது ஒரு படைப்பாளியின் ஆதார குணம். அவன் ஆண் பெண் பேதம் பார்ப்பது இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இப்படியான அருமையான பதிவுகள் குறைந்தளவு ஹிட்ஸ் வாங்குவது குறித்த உங்கள் ஆதங்கம் நியாயமானது! இனிமேலாவது கடும் உழைப்புக்கு மரியாதை கிடைக்கிறதா என்று பார்ப்போம்!

நண்பா.. நாம் ஜாலி பதிவு போடும்போது அதை எதிர்த்து அந்த பதிவை நெகடிவ் ஹிட்ஸ் ஆக்கும் நண்பர்கள் சீரியஸ் பதிவு போடும்போது அதை பாராட்டி பாசிட்டிவ் ஹிட் ஆக்குவதில்லையே .. இது ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அண்ணே வணக்கம்னே நல்லா இருக்கீங்களா......!

அம்புட்டு நல்லவனாடா நீ?

சிசு said...

ஒரு நல்ல பதிவரை அறிந்துகொண்டேன்.. நன்றி சிபி...
மினிபேட்டியில் இன்னும் சுவாரஸ்யப்படுத்துகிறார் சித்ரா.

இன்னும் நீங்கள் (எனக்கு) அறிமுகம் செய்யப்போகும் பதிவர்களுக்காக காத்திருக்கிறேன்.

உணவு உலகம் said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இப்படியான அருமையான பதிவுகள் குறைந்தளவு ஹிட்ஸ் வாங்குவது குறித்த உங்கள் ஆதங்கம் நியாயமானது! இனிமேலாவது கடும் உழைப்புக்கு மரியாதை கிடைக்கிறதா என்று பார்ப்போம்!//
எப்படியோ, பெண் பதிவர்கள் பற்றி போட்டு கிடைக்காத ஓட்டை, இன்று சகோதரி சித்ரா பற்றி பதிவெழுதி, பெண்கள் மத்தியில், சிபி, நல்ல பெயர் எடுக்க கடும் முயற்சி செய்துள்ளார்.

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

எப்படியோ, பெண் பதிவர்கள் பற்றி போட்டு கிடைக்காத ஓட்டை, இன்று சகோதரி சித்ரா பற்றி பதிவெழுதி, பெண்கள் மத்தியில், சிபி, நல்ல பெயர் எடுக்க கடும் முயற்சி செய்துள்ளார்.

haa haa ஹா ஹா நல்ல பெயர் எடுக்க நினைப்பவன் கில்மா பட விமர்சனம் வாரா வாரம் போடுவானா? என் எண்ணத்தில் உள்ளதை எழுதுகிறேன்.. அவ்வளவு தான்

ராஜி said...

பதிவு நல்லாயிருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ராஜி said...

பதிவு நல்லாயிருக்கு.

டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா ரூ 50000 அபராதம் ஹி ஹி

Sathish said...

potamilla vote

தினேஷ்குமார் said...

பாஸ் சித்ரா அக்கா பேட்டியும் விமர்சனமும் அருமை .... சித்ரா அக்கா நேர்ல பேசின மாதிரியே இருக்கு ...
ஒன்னு மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் "நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் " என்னும் குணாதிசயம் உள்ளவர் சித்ரா அக்கா ....

தினேஷ்குமார் said...

ஒன் சகன்ட் பாஸ் அக்கா கொடுத்த ரெண்டு பிளாக் அட்ரசும் இங்கிலீசுல ஓபன் ஆகுது பாஸ் ,,,, எனக்கு தமிழ் மட்டும் தான் படிக்க தெரியும் .... தமிழ்ல கொடுக்க சொல்லுங்க .....

Ram said...

ஓ சிபி.,க்கு வருத்தம் கூட வருமா.? ஓகே ஓகே.!! சித்ராவின் பேட்டி கலக்கல்.. சிறப்பு..

Ram said...

நீங்கள் வருத்தவே படவேண்டாம் சிபி உங்க சினிமா பதிவுகளுக்கு இனிமேல் நான் வரல ஓகே!

சி.பி.செந்தில்குமார் said...

>>தினேஷ்குமார் said...

ஒன் சகன்ட் பாஸ் அக்கா கொடுத்த ரெண்டு பிளாக் அட்ரசும் இங்கிலீசுல ஓபன் ஆகுது பாஸ் ,,,, எனக்கு தமிழ் மட்டும் தான் படிக்க தெரியும் .... தமிழ்ல கொடுக்க சொல்லுங்க .....

haa haa ஹா ஹா நாளை காலை தருவாங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>தம்பி கூர்மதியன் said...

ஓ சிபி.,க்கு வருத்தம் கூட வருமா.? ஓகே ஓகே.!! சித்ராவின் பேட்டி கலக்கல்.. சிறப்பு.

அண்ணே .. நானும் மனுஷன் தான். காமெடி பதிவு போடரவ்ங்களுக்கு வருத்தம் சோகம் வராதா?அதை வெளிக்காட்டிக்கரதில்லை. அவ்வளவுதான்

Ram said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே .. நானும் மனுஷன் தான். காமெடி பதிவு போடரவ்ங்களுக்கு வருத்தம் சோகம் வராதா?அதை வெளிக்காட்டிக்கரதில்லை. அவ்வளவுதான்//

இப்ப எதுக்கு தம் கட்டுறீங்க.. ஷோல்டர இறக்குங்க ஷோல்டர இறக்குங்க..

Anonymous said...

சித்ரா பேட்டி என கொடுத்திருக்கலாம் மற்ற பெண் பதிவர்களை கோபப்படுத்த வாய்ப்புண்டு

Anonymous said...

சித்ரா புதுப்பதிவர்களை ஊக்குவிப்பதில் உதாரண திலகம்...சுவையான எழுத்துக்கு சொந்தக்காரர்

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆர்.கே.சதீஷ்குமார் said...

சித்ரா பேட்டி என கொடுத்திருக்கலாம் மற்ற பெண் பதிவர்களை கோபப்படுத்த வாய்ப்புண்டு

நல்ல வேளை.. நான் உன் கிட்டே ஐடியா கேட்காம போனேன் .. ஹா ஹா

ரேவா said...

உழைப்பு பதிவுக்கு வெறும் 189 பேர் மட்டுமே படித்தார்கள் என்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன பண்ண சகோ, பதிவை படிக்கும் "சிலர்" பதிவிலே நகைச்சுவையும், காதலும், அதோடு தொட்டுக்க காமமும் கிடைக்கும் படி இருக்கும் பதிவைத்தான் படிக்கிறார்கள....இதில் பயனுள்ள பதிவை தேடிபடிக்கும் 189 பேர் இருப்பது மகிழ்ச்சியே....

அதோடு உங்கள் மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள் சகோ..அதான் நூலகத்தில் நீங்கள் வைத்த கருத்துப் பெட்டிக்கு சொன்னேன்....அதோடு பதினோரு பெண் எழுத்தாளர்கள், அவர்கள் நாவல் பற்றிய கருத்துக் கணிப்பும் அருமை....

ஓகே லெட் கம் டூ சுப்ஜெக்ட்....

சித்ராக்கா, பற்றிய அனைத்து கேள்விகளும், வழக்கம் போல் அவங்க பதில் சொன்ன விதமும் சூப்பர்...

ஆமா சகோ டெம்பிளேட் கமெண்ட் போட்டா 50000 அபராதம் நு சொல்லிருக்கேங்க....அப்போ நாங்க போட்ட கமெண்ட்க்கு, எதுவும் சன்மானம் கிடைக்குமா?....ஹி ஹி பதிவு சூப்பர்.....

செங்கோவி said...

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்துவதில் அக்காவிற்கு நிகர் அக்கா தான். எனது ஆரம்பக்காலத்திலும் கமெண்ட் மழை பொழிந்து உற்சாகப் படுத்தினார்..எங்க ஊர்க்காரங்கன்னாலே நல்ல மனசு இருக்கும் தானே?

கார்த்தி said...

இரண்டு பதிவுகளுக்கு செல்லும் நேரம் 7நிமடங்களே --, நல்லா கலாய்க்கிறீங்க போல!

Angel said...

கலகலப்பான பேட்டி
பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் எல்லாமே நான் விரும்பி படித்தவை .

ஹேமா said...

நிறைவான பெண் எழுத்துக்களின் தேடல்கள்.திறமையான அழுத்தாளர்களைக் கொண்டு வந்திருக்கிறிர்கள்.இப்படியான வரிசையில் இன்னும் நிறையப்பேர்கள் இருக்கிறார்கள்.

சித்ரா...நானும் ரசிக்கும் பெண் எழுத்தாளர்களின் நகைச்சுவைத் திலகம் மனோரமா.எனக்கு அவங்க எழுத்து அதிசயம்.மனம் கனத்த நேரங்களில் அவர் எழுத்த்க்கள் இலேசாக்கும் என்னை.
வாழ்த்துகள் சித்ரா.நன்றி சிபி !

Chitra said...

மிக்க நன்றிங்க....



நல்ல பதிவுகளை குறைந்த வாசகர்களே வாசிக்கிறார்கள் என்று வருத்தப்படாதீங்க.... சம்மர் லீவு - மற்றும் தமிழ்மணம் பட்டை உள்ள நிறைய பதிவுகள், ப்லாக் பேஜ் ஓபன் செய்யவே மிகுந்த நேரம் எடுக்கிறது என்ற பல காரணங்களால் பதிவுகள், இப்பொழுது நிறைய வாசகர்களை பெறுவதில்லை. நிறைய வாசகர்கள் பதிவுகள் வாசிப்பதை குறைத்துக் கொண்டதாக கேள்விப்பட்டேன். தமிழ்மணம் விரைவில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறேன்.
மேலும், ஹிட்ஸ் என்பதற்காக நான் எழுதாததால், இந்த மாற்றங்கள் பெரிதாக தெரியவில்லை.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நம்பர் ஒன் பதிவர் சித்ராதான் என்பதை ஆணித்தரமாக கூறியதற்கு பாராட்டுக்கள. இன்னும் ஒன்பது பேர் யாரென அறிய காத்திருக்கிறோம்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Geetha6 said...

பாராட்டுக்கள!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான பதிவுகள் தோழரே..

உங்கள் ஆக்கங்களை வார இதழ்களில் கண்டதுண்டு.. அங்கேயே நான் உங்கள் ரசிகன்..

இன்று வலைப்பூவிலும் கண்டு மகிழ்கிறேன்..

தொடரட்டும உங்கள் பணி..

http://sivaayasivaa.blogspot.com

அன்புடன் சிவ.சி.மா.ஜா.

சித்தாரா மகேஷ். said...

நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு.....

"தான் வாழும் நாட்டை பற்றிய ஒரு கலாச்சாரப்பார்வை சம்பந்தமான பதிவுகள் எழுதும் சித்ரா பதிவுலகில் நெம்பர் ஒன் பெண் பதிவர் என என் கண்ணுக்கு தெரியறார்."

வாழ்த்துக்கள் அக்கா.....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.ஸி.பி.ஸி,
உண்மையிலேயே பேட்டி 'அட்ராசக்கை' ரகம்தான்..!
அபாரம்..!