Saturday, April 09, 2011

ஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியாதிகளுக்கு சொம்பு

'ஊழலுக்கு எதிரான இந்தியா!'

அதில் நீங்களும் ஒருவரா?
'இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற 
http://www.indiareport.com/resources/images/original/anna_hazare1.jpg

உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணா​விரதப் போராட்டத்தில் இறங்க... ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே! 

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்​படுத்தி​யவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. 'ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா!

ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்​வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது  நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!

அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், 'பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்​​களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்​மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, 'ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர்.

அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.

இது குறித்து ஹசாரே, ''லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை.

ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?

இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். 

'உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!


முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!'' என்கிறார் உறுதியாக.


இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ''இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளு​மன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்​பேன்...'' என்றார்.

http://im.in.com/media/download/wallpapers/2011/Apr/anna_hazare_420x315.jpg
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். 

அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ''அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!'' என்கிறார்.

நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!


இன்றைய தினமலரில்........
லோக்பால் மசோதாவை தயாரிக்க இருதரப்பு குழு அமைப்பது குறித்து, அரசு கெஜட்டில் வெளியிட இயலாது என்றும், மசோதா தயாரிப்பு குழுவுக்கு அமைச்சர் அல்லாத ஒருவரை தலைவராக இருக்கவும் ஏற்க முடியாது என, மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதையடுத்து, அன்னா ஹசாரேயின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர் கருத்துக்கு நாடு முழுவதும் அதிக ஆதரவு பெருகுவதால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ளின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார். 

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நான்காவது நாளாக அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. ஹசாரே தரப்பில் வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கைகள் இரண்டை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது.
http://lh4.ggpht.com/_xFP6s39OUYY/TZxN0zPsQwI/AAAAAAAAqSI/PqYJgEtdQs8/Anna%20Hazare-gandhiyan-%20begins%20fast_thumb%5B2%5D.jpg?imgmax=800
கபில் சிபல் தகவல்: நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுவாமி அக்னிவேஷ் வரு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவாமி அக்னிவேஷ் வரவில்லை. பின்னர் அவர் கூறும்போது, "ஹசாரே தரப்பினர் வலியுறுத்தும் பிற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது.

அரசு மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரண்டு தரப்பும் இணைந்த குழுவை அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், அந்த குழு அமைப்பது பற்றியோ, அந்த குழுவின் பேச்சுவார்த்தை மற்றும் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசு கெஜட்டில் வெளியிட இயலாது. வேண்டுமெனில் அரசின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் இதுபற்றி அனைத்து உறுதிமொழிகளையும் அளிக்கவும் தயார். 

இன்னொரு கோரிக்கையான, இருதரப்பும் அங்கம் வகிக்கும் அரசின் குழுவுக்கு அமைச்சரவையில் இல்லாத வெளிநபர் தலைவராக இருக்கவும் அனுமதிக்க முடியாது. அது இயலாத காரியம் என்பதால், அதையும் ஏற்க முடியாது' என்றார். இந்த தகவல்கள் உண்ணாவிரத மேடையில் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த குழுவுக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் தலைவராக இருப்பார் என்றும் அரசு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது உண்ணாவிரத பந்தல் முன்பாக குழுமியிருந்த அனைவருமே கோபமும், ஆத்திரமும் அடைந்தனர். வரும் 13ம் தேதி ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடப்பது கண்டு அரசுகள் அலறுகிறது. 

இதன் வெளிப்பாடாக, ஆளாளுக்கு ஒரு போராட்டம் நடத்தும் அபாயம் ஏற்படும் என்று காங்., தகவல் தொடர்பாளர் சிங்வி கூறினார். பிரதமர் மன்மோகன் ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து ஆலோசனை செய்தார். அரசும் நேற்று தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டது.
http://nimg.sulekha.com/others/thumbnailfull/anna-hazare-2011-4-6-10-21-28.jpg
13ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம்: முக்கிய கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டதையடுத்து, உண்ணாவிரத மேடையிலிருந்த படியே அன்னா ஹசாரே அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 13ம் தேதி அன்று ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும், மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். 

ஊழலை எதிர்ப்பதில் அலட்சியம் காட்ட நினைக்கும் அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழு வேண்டுமென்றும், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, ஏப்ரல் 12ம் தேதி அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராமநவமி விடுமுறை என்பதாலும், மக்களுக்கு சிரமம் அளிக்க வேண்டாமென்றும் நிர்வாகிகள் முடிவு செய்ததையடுத்து சிறை நிரப்பும் போராட்டம் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

பின்னர் நிருபர்களிடம் ஹசாரே தரப்பு நிர்வாகிகள் பேசும்போது, "ஹசாரே கூறும் காரணங்களையும், வார்த்தைகளையும் வேண்டுமென்றே திரித்து வெளியிட அரசு முயற்சிக்கிறது. அரசியல் கலப்பு இல்லாத நியாயமான ஒருவர் தான் குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டுமெனஹசாரே வலியுறுத்துகிறார். இதை ஏற்க அரசு மறுக்கிறது' என்றனர்.

பெருகுகிறது ஆதரவு: ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், குடும்பத் தலைவிகள் என, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து, ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் குவியத் துவங்கியுள்ளனர். யோகா குரு ராம்தேவ், பாலிவுட் நட்சத்திரம் அனுபம்கெர் போன்ற பிரபலங்களும் வந்திருந்தனர். அனுபம்கெர் பேசும்போது, "சச்சின், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற முக்கியமானவர்களும் வர வேண்டும். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்றார்.

22 comments:

Unknown said...

முத வேட்டு.. படிச்சிட்டு வரேன்

சி.பி.செந்தில்குமார் said...

வெட்டா? வேட்டா?

Unknown said...

//நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுவாமி அக்னிவேஷ் வரு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவாமி அக்னிவேஷ் வரவில்லை//
சுவாமி பேரே சரியில்லையே - அக்னி-வேஷம் போடுறாரா ?
- நேற்று அவர் ஏன் வரவில்லை என்று சோனியாவை கேட்டால் தான் தெரியும் போல

Unknown said...

அது வேட்டு தான் CPS !

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா.. வேட்டு எனக்கா?

Unknown said...

வேட்டு சுவாமிக்கு!!!

சி.பி.செந்தில்குமார் said...

அப்ப ரைட்டு

சக்தி கல்வி மையம் said...

சிறந்த கட்டுரை.. பாராட்டுக்கள் தம்பி..

நாம் எல்லோரும் கைகோர்ப்போம்...

ம.தி.சுதா said...

/////முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.////

இன்னும் எத்தனை தலை உருழும்.. ஹ..ஹ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

வை.கோபாலகிருஷ்ணன் said...

நிச்சயமாக ஒரு மிகப்பெரிய நல்லதொரு மாற்றம் ஏற்படத்தான் போகிறது.

நம்புவோம். நிச்சயம நடக்கும்.
பதிவுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

வாழ்க பாரதம்.

டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீண்டுன் நானே வந்தேன்

டக்கால்டி said...

உனது பதிவை..பதிவை படிக்க நானும் வந்தேன்...
வந்தேன் வந்தேன்..மீண்டும் நானே வந்தேன்...

டக்கால்டி said...

உனது பதிவை..பதிவை படிக்க நானும் வந்தேன்...
வந்தேன் வந்தேன்..மீண்டும் நானே வந்தேன்...

டக்கால்டி said...

நாலு பேத்துக்கு நல்லதுன்னா...நானூறு கள்ள வோட்டு போட்டா கூட தப்பு இல்ல...ஹ ஹாஆ

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே இப்பவாவது சொல்லுங்க?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு

Unknown said...

நல்ல முயற்சி மக்கள்
ஒன்று சேர்வார்கள்
பகிர்வுக்கு நன்றி

raN said...

நல்ல முயற்சி மக்கள் கட்டாயம்
ஒன்று சேரவேண்டும்
பகிர்வுக்கு நன்றி

Unknown said...

மக்களே இது நமக்காக நடக்கும் போராட்டம் அனைவரும் கை கோர்ப்போம்.......!

கிறுக்கன் said...

Thanks a lot CPS for ur wonderful post!!!!

இராஜராஜேஸ்வரி said...

எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே! //
விடிவெள்ளி தோன்றி இருக்கிறது.விடியலை எதிர்நோக்குகிறோம்.

Nalliah said...

லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அடுத்த நொடியே நாட்டில் ஊழல் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பதுபோல அன்னா ஹசாரே மக்களை ஏமாற்றிவருகிறார். காங்கிரஸ் ஊழலை ஒழிக்க முன் வரும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். காரணம் சோனியா மீது ஊழல் புகாரும், கருப்புப்பண புகாரும் ஆதாரத்துடன் உள்ளது. ஆனால் அன்னா ஹசாரே ஏன் சோனியா ஊழல் குறித்து பேச மறுக்கிறார் என்பது புரியவில்லை. அதுமட்டுமல்ல ஊழலை ஒழிக்க அவருக்கு கடிதம் எழுதுவது ஏன் என்றும் புரியவில்லை. மத்திய அரசு தன்னுடன் பேசி ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் இயற்றப் போவதாக ஒரு குழு அமைத்து போட்ட நாடகத்தை நம்பிய அன்னா ஹசாரே இன்று அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறார்.

நல்லையா தயாபரன்