Sunday, April 24, 2011

நாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட்! ஜூ வி பர பரப்பு கட்டுரை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIMGVUPXOJ3j9IO3-SXbinKN2oWeEhtn93H5wozAe67b1NxoBvvxImNFX7qanupWH1ODTVXGPkUol8tiiQENCWpAU06EQZPUtB5s_gQMQInXMkjXsSGvrBw4KSp5PL7sS9S373k_ngWxcE/s1600/0409223w.jpg
15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை
விவகாரம்! கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

ஆமா.. நம்மாளூங்க தப்பி ஓடும் வரை வேடிக்கை பார்த்துட்டு , அதுக்கப்புறமா ஆள் விட்டு தேடுவாங்க.. 


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவரது தந்தை பொன்னுசாமி, அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.
1996 நவம்பர் 6-ம் தேதி திடீரென்று நாவரசு காணாமல் போனார். 'காணாமல் போனாரா... கடத்தப்பட்டாரா?' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.




அதன் பிறகு ஜான் டேவிட்டை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். நாவரசு படித்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஜான் டேவிட், கரூரைச் சேர்ந்தவர். 'தனக்கு ரெக்கார்டு நோட் எழுதிக்கொடுக்கும்படி ஜூனியரான நாவரசுவை ஜான் டேவிட் டார்ச்சர் செய்தபோது, 'ஜாக்கிரதை... என் தந்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ என்று கோபமாகச் சொல்லி இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த ஜான் டேவிட், 'சமாதானமாகப் போவோம்' என்று பொய்யாகச் சொல்லி நாவரசுவைத் தனியாக அழைத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கியதில், நாவரசுக்கு உயிர் பிரிந்துவிட்டது. அதன் பிறகு, உடலைத் துண்டு துண்டாக அறுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார் ஜான் டேவிட்' என்று முதல் கட்ட விசாரணையில் அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி-யான ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.

15 நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழகக் குளத்தில் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் தலை கிடைத்தது. சென்னை தாம்பரத்திலிருந்து கிளம்பிய 21 ஜி பஸ்ஸில் ஒரு பார்சலில் தலையில்லா முண்டம் கிடைத்தது. மரக்காணம் அருகே ரயில்வே டிராக் பக்கம் கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் போலீஸார் ஒன்றுபடுத்தி, 'நாவரசுவின் உடல்தான்’ என்று உறுதி செய்தனர். சவாலான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 1998-ல் ஜான் டேவிட்டை குற்றவாளி எனக் கருதி இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. இதை எதிர்த்து, ஜான் டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பக்தவத்சலு ஆகியோர் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இதையடுத்து, கிறிஸ்துவ போதகராக மாறி தேவாலயத்தில் பணியாற்றி வந்தார் ஜான் டேவிட்.

 பாவம். அந்த மதத்துக்கே தீராத களங்கம்


2002-ம் வருடம் தமிழக அரசு இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா தலைமை​யிலான பென்ச், ''மாணவர் நாவரசு கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது. 

இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்​டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடி​யாது!'' என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனி​யர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்​பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்​படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்!'' என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.


உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, மலையாண்டி கவுண்டனூர் என்கிற ஊரில் பொன்.நாவரசு மெட்ரிக் பள்ளி ஒன்றைத் துவக்கி நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவில் மகள் வீட்டுக்குச் சென்று இருந்த காரணத்தால், அவர் சார்பாக, மைத்துனர் சிவ.சத்தியசீலன் பேசினார்.

''மருத்துவம் படிக்கப்போன நாவரசுவை, கதறக் கதறக் கொன்ற கொலைகாரன் இத்தனை காலமும் வெளியில் நடமாடியதை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். குற்றம் செய்தால், சட்டத்தின் முன்பு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்து இருக்கிறது!'' என்றார் சோகத்துடன்.

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் தனஞ்செயன், ''இந்த வழக்​கில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளி​களுக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் சுசில்குமார் எதிர்த் தரப்புக்காக வாதாடினார். 

ஜான் டேவிட்டின் சூட்கேஸிலும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளிலும் நாவரசுவின் ரத்தம் படிந்து இருந்தது முக்கியமான ஆதாரமாக இருந்தது. நாவரசுவுக்கு முன்பே, ஜான் டேவிட் பலரை ராகிங் செய்ததற்கான சாட்சியங்கள், கொலைக்குப் பிறகு பதற்றத்துடன் ஜான் டேவிட் நடமாடியதைப் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டினேன். 

ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆனதையும், அவர் மத போதகராக இருப்பதையும் காட்டி அனுதாபம் பெற முயன்றதைக் கடுமையாக எதிர்த்தேன். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்!'' என்றார்.

கடலூர் மாவட்ட போலீ​ஸார் ஜான் டேவிட்டை தேடிய​போதுதான், ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. உடனே, இன்டர்போல் போலீஸ் உதவியுடன் ஜான் டேவிட்டைத் தேடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்!

 கடைசியாக வந்த தகவல் -  சென்னை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜான் டேவிட் சென்னை அடையாறில் தங்கி, வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ., கம்பெனியில் பணிபுரிந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் தேடுவதையறிந்த ஜான் டேவிட், பாண்டிச்சேரிக்‌கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் தானாகவே வந்து சரணடைந்தார்.


38 comments:

Unknown said...

தாடி மசால் வடை !

நிரூபன் said...

நாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட்! ஜூ வி பர பரப்பு கட்டுரை//

என்ன நடக்குது இங்க...

சன் டீவியில வாற குங்குமம் விளம்பரம் மாதிரி ஒரு தலைப்பு...

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...
தாடி மசால் வடை !

April 24, 2011 12:13 AM

முதல்ல எனக்கு புரியல.. இப்போ புரிஞ்சிடுச்சு ஹா ஹா

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...
நாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட்! ஜூ வி பர பரப்பு கட்டுரை//

என்ன நடக்குது இங்க...

சன் டீவியில வாற குங்குமம் விளம்பரம் மாதிரி ஒரு தலைப்பு


டைட்டில் சரி இல்லைன்னா சொல்லுங்க மாத்திடலாம்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...
ஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....

April 24, 2011 12:18 AM

ஹி ஹி எதுக்கு இந்த பதட்டம்?

நிரூபன் said...

15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை
விவகாரம்! கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.//

15 வருஷமா பைலை மூடாமல், தேடிப் பிடிச்சிருக்காங்களே, உண்மையிலே நம்ம தமிழக போலீஸ் கில்லாடி தான் சகோ.

வாழ்க ஜனநாயகம்!

நிரூபன் said...

போனாரா... கடத்தப்பட்டாரா?' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.//

அப்போ.....டான் டேவிட் தான் கொலையோடை சூத்திரதாரி...

நிரூபன் said...

சகோ... டைட்டில் ஓக்கே சகோ...

ச்...சும்மா ஒரு தமாஷிற்கு சொன்னேன்...

Unknown said...

போங்கடா நீங்களும் உங்க சட்டமும் என்று சொல்லத் தோன்றும் நீதி...
சதாம் உசேனப் புடிச்சு தூக்கில போட்ட நீதி... (அது வேறு நாடு வேற வாயி !!!)
அந்த சூட்கேசு கரை இன்னும் நியாபகம் இருக்கு எல்லோருக்கும்...
நம் நாட்டில் பத்திரிக்கை இருப்பதனால் நீதி இன்னும் பட்டுப் போகவில்லை...
இன்றைய செய்தி நாளைய வரலாறு...
நேற்றைய செய்தி தான் இன்றைய பூகோளம்..
அதை மறுக்க நாம் யார் ?
நாவுக்கே அரசு = கல்வி
ஜான் டேவிட் = முழம் ரிவிட்டு
(இத்தனை காலம் நடமாட விட்டதே தப்பு - சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ???)
இரட்டை ஆயுள்...என்பதை விட..சாகும் வரை தூக்கில் இடவும் என்பதே சரியான தீர்ப்பு...
சாகாவராயினும்__________ நாகாக்க_________சொல்லிலுக்கப்பட்டு
சொல் + இழுக்கப் + பட்டு
"நாவுக்கே அரசு = கல்வி"
கல்(வி)- விற்பனைக்கு எப்போ வந்துச்சோ அன்றைக்கே நீதி செத்துப் போச்சு !

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்வாசி - Prakash said...
ஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....

April 24, 2011 12:18 AM

ஹி ஹி எதுக்கு இந்த பதட்டம்>>>>>>
சீக்கிரம் பிடிச்சா அத வச்சு ஒரு பதிவு போடுவிங்களே, அதுக்கு தான்...ஹி...ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...
சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்வாசி - Prakash said...
ஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....

April 24, 2011 12:18 AM

ஹி ஹி எதுக்கு இந்த பதட்டம்>>>>>>
சீக்கிரம் பிடிச்சா அத வச்சு ஒரு பதிவு போடுவிங்களே, அதுக்கு தான்...ஹி...ஹி..

உங்க வாய்க்கு சர்க்கரை தான் போடனும்.. பிடிச்ட்டாஅங்க.. பதிவா போடலை டிஸ்கி மாதிரி போட்டுட்டேன்

Unknown said...

மதபோதகரா...?
போதை மதகரா...?
நடமாடும் நயவஞ்சக நஞ்சு...
நர நர நர...
நசுக்க..நம் சட்டத்தில் ஓட்டைகள் பல நயம்...
சாரி..வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு...
அது பேச்சுக்கு...
இந்தப் பதிவில் (கட்டுரையில்) நடைமுறை படுத்த முடியாத சோகம் !
- பகிர்வுக்கு நன்றி CPS !

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க வாய்க்கு சர்க்கரை தான் போடனும்.. பிடிச்ட்டாஅங்க.. பதிவா போடலை டிஸ்கி மாதிரி போட்டுட்டேன்>>>>

ஒரு பதிவையே டிஸ்கியாக மாற்றும் திறமை சி.பி. க்கு மட்டுமே உண்டு... ஹி...ஹி...

நிரூபன் said...

த்ரிலிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு.. சூட்கேசினுள் படிந்திருந்த இரத்தம் முதலிய தடயங்களை வைத்து... போலீஸ் அமுக்கிட்டாங்க.

செங்கோவி said...

ஜான் டேவிட் பிடிபட்டாச்சா..ரொம்ப நல்ல செய்தி சிபி..சீக்கிரமே அவனை தூக்குல போட்டா நல்லது!

உணவு உலகம் said...

நாவரசு கொலை வன்மையாக கண்டிக்க தக்க ஒன்று. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ஓட்டம், தலைமறைவு.அதனினும் கொடுமை.
ஆனால், உங்கள் உடனடி தகவல்கள்-ஜாண் டேவிட் சரண்டர்-மகிழ்சி. சுட சுட தகவல்கள் சி.பி. பாணி.

கோவை நேரம் said...

ஒரு செய்தி ..1995 நான் கரூர் முனிசிபல் ஹையர் செகண்டரி ஸ்கூல் ல படிச்சேன்.ப்ளஸ் டூ பயாலஜி க்ரூப் தமிழ் மீடியம் நான் .நம்ம ஜான் டேவிட் இங்கிலீஷ் மீடியம் .அப்பவே அவன் கராத்தே கிளாஸ் போய்ட்டு இருந்தான்.நல்ல வாலி பால் பிளேயர்..ஸ்கூல் ல ரவுடி மாதிரித்தான் இருப்பான்..இப்போ கொலைகாரனா இருக்கான்

அப்துல் சலாம் said...

ஜூனியர் விகடன்- ஆஸ்திரேலியா அமெரிக்க என்று கதை விடுவதில் கில்லாடி

Unknown said...

யோவ் சிபி நீ எந்த பிரச்சனயிளையும் மாட்டிக்காம நழிவுடுறியே இதுல எப்படி மாட்டுன!

சி.பி.செந்தில்குமார் said...

அடப்பாவி.. உன் கிட்டே மட்டும் தான் மாட்டி இருக்கேன்..

Unknown said...

இந்த பய்யன் ரொம்ப ஸ்ட்ராங்கான இதயம் கொண்டவனாசெய்யா........கூறு கூறா அந்த குழந்தைய அறுத்தவனாசே!

சி.பி.செந்தில்குமார் said...

என்கவுண்ட்டர்லயோ என்முதலியார்லயோ போட்டுத்தள்ளனும்

Unknown said...

இவன் ஒரு சைகோ கொலைகாரன் இவன என்னமோ பெரிய டானுகணக்கா இன்டெர் போல் உதவியுடன் தேடுனானுங்கலாம்..........
அன்னிக்கே சங்கு ஊதறத விட்டுட்டு தூ!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
என்கவுண்ட்டர்லயோ என்முதலியார்லயோ போட்டுத்தள்ளனும்"

>>>>>>>>>>>>

யோவ் ஜாதிபிரச்சனைய தூண்டுரியா பிச்சி புடுவேன்!

சி.பி.செந்தில்குமார் said...

நேத்து உன் அப்பார்ட்மெண்ட்ல ஏதோ கலாட்டாவாமே? குற்றம் நடந்தது என்ன? ஹி ஹி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
நேத்து உன் அப்பார்ட்மெண்ட்ல ஏதோ கலாட்டாவாமே? குற்றம் நடந்தது என்ன? ஹி ஹி"

>>>>>>>>>>>

அது ஒண்ணுமில்ல பக்கத்து வீட்டு தங்கச்சிய பேய் புடிச்சிருச்சி ஹிஹி!!

Anonymous said...

I am Jo. Amalan. Nowadays I am writting as simmakkal because my email ids as amalan were hacked.

Anonymous said...

The title is not ok.

It tells a lie.

Lower court convicted him and gave him two Life Imprisonments (LI). The HC reversed it and released him, not holding him guilty as the evidences did not prove beyond doubt that he was the murdered.

After 15 years, the SC confirmed the LIs given by the lower court.

During the 15 years, David was not the murderer. So, he lived free. He had not fled from India. That act he could have done , in particular, fleeing to a country with which we don’t have an extradition treaty, which means, he could not be asked to come back or caught now after the SC’s confirmation that he was the murderer.

Even after the SC has confirmed, he did not flee. He did not hide himself from being caught. Rather, he surrendered before Police within a few days.

So, aren’t you lying here that he has fled from police?

During the 15 years, he got married and maintained his family as a BPO worker and his work as a pastor among Christians is a community service. He did not sponge off his parents, nor cheated society to live. In short, David has shown a good conduct. In Christian terms, he is a sinner who has repented worthy of forgiveness.

One person here has commented that it is a shame for the religion which allowed him to be a pastor. I would point out to that person that he should make comments only about his own religion, not about Christianity which does not condemn a sinner who has repented to eternal damnation. Forgiveness for sinners who have repented is the corner stone of the Christ’s teachings. I am happy to note this on this Easter day.

Please stop this cut and paste work. We can go to JV to read. Why to read your blog which is doing duplicate work of cut and paste?

Blogs should give the original thoughts of the blogger.

You need to analyse issues. For e.g you can analyse these questions:

Why did the lower court give only LI while the government lawyer prayed for death sentence to him ?

Whether the 2 L.Is are to run concurrently or, one after the other ?

L.I is generally for 7 years only. It is not till he lives. Even the 7 years can be curtailed and he may be free if he shows good conduct and an example for others in his jail term.

David has shown such a conduct during the 15 years. He has shown to the world that he has repented.
Why the SC only confirmed the 2 L.Is, and did not covert it to Death penalty?

Navukkarasu was dead in a cruel murder. David and he were classmates. The murder was committed when both were in their early 20s. 15 years have passed. We must take into consideration whether the murderer is the same personality as he was in his 20s.

He will go to prison and serve his L.I whether it is just 7 or 17 years. During this jail term or terms, he will show righteous conduct because he has fortified his mind with solid faith of Christianity and become sure that if men do not forgive him, God will never give him up. That is sufficient for him.

Jo.Amalan

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஜான்டேவிட் நேற்றே சரணடைந்துவிட்டான். பிடிங்க அவனை? ஹாங் கொட்டாவி வருது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா என்ன இது மர்ம படம் பார்ப்பது போலவே இருக்கு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இனி இப்படியான திடுக் ...... விஷயங்களும் அட்ராசக்க வில் வலம் வரும் போல! அசத்துங்க!!

ராஜ நடராஜன் said...

Jo Amalan

Your defence on John david sounds Like thought provoking and you seems to gain a point like a prominent criminal lawer trying to protect a client but on moral ground and Indian penal code your argument will not stand a winning judgement.

Most of the crimes occur in India are not pre mediated but an emotional timely outburst of feeling exploded beyond a limit where it turns out to be either a suicide or a criminal murder.Civil society norms are starting from this point of controlling physical ill feeling and emotions.Most recently a girl having affair with a married man killed a child and if she would not have got caught she too would not have committed another sin in your point of view:).

A man/Woman is jailed not only for the punishment of a crime committed but to teach a lession to the society not to commit a crime once again by others.Ragging during college days have some good and bad effect on an induvidual and John David anger is exceptional one and barbaric.

By preaching bible this guy bring a bad name instead of glory to christianity,not only that the mushrooming preachers of christianity nowadays brain washing the innocent peoples for their self interest and survival.

I am not against the christianity rather I would argue that the abroad missionery people who landed in India have done a woderful service to society, education compared to Hinduism and other religions.But all that good endeavour are hyjacked by the present pentecost society people in India particulary in Tamilnadu.

Regarding the jailing of a person and the way judiciary,police and jail system functions might be subject to arguement in full length especially the death sentence.That is beyond this article I believe.

Abhi said...

ஜான் டேவிட்ட திரும்ப ஞாபகப் படுத்திட்டீங்க !

Manohar said...

Amalan

I agree with Raja Natrajan.

Anonymous said...

ஜான் டேவிட் மனம் திருந்தி ஜான் மாரிமுத்தாக சென்னை பிபிஓவில் பணியாற்றி வந்தார். இருந்தாலும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல செய்த தவறுக்கான தண்டனைக் கொடுப்பது அவசியமே. ஆனால் கொலைத் தண்டனைக் கொடுக்காமல் - 15 ஆண்டு கடுங்காவல் தண்டனைக் கொடுக்கலாம். இறுதிக் காலங்களில் மனம் திருந்தி அவன் வாழட்டும். பல்லுக்கு பல், இரத்துக்கு இரத்தம் என்பது சரியா ?

Anonymous said...

Mans

The thrust of my comments is the Biblical principle of forgiveness and who get the forgiveness.

Natarajan says by preaching the Bible, David brought bad name to the religion. That is not my point.

My point is that by repentance, a sinner is forgiven in Christianity. David repented as we understand. He did not stop merely at that: he went on telling people that if they do repent their sins and resolve not commit them again, they will be forgiven. It is not preaching; it is telling people about his own experience of crime, repentance and forgiveness.

Natajaran has not understood Christianity. He talks abut irrelevant things like schools, services etc. He dodges the principle I am talking about.

Courts may punish him on the man made law that the perpetrator of the crime must undergo punishment. Why? Because judges cant write their own law and cant write the judgements on their emotions. Their emotion may tell them to forgive; but they have to go by law book which does not take into consideration the fact of repentance. But David's religion does.

That was why, I said, if men don't forgive him, his God will forgive him definitely. What more a true Christian need, Natajrajan ?

Therefore, David is not going to cry in jail for the LIs. If he had to, he would have fled to dodge the police. He did'nt, He surrendered to the police.

In Jail, he is not going to sulk and be a nuisance to anybody. He will read the Bible, which, I am sure, is allowed to the inmates of a jail; and will tell all the inmates about his religion.

Natarajan, religion, I mean truly felt religion, is not a joke or a sham ! IT IS THE SHEET ANCHOR OF A A WOUNDED SOULD to help the soul from collapsing.

David is not going to convert. He will be only there, to lead a religious life.

I am not behaving here like a lawyer and treating him as my client. Natarjan is narrow minded to view me like that.

I am just taken a human view of this matter and stand outside law; and the general thirst for blood.

To accept Eye for an eye - is not being a human.

"To err is human
To forgive is divine"

The wild justice of eye for an eye, tooth for a tooth, could of course be applied only in deterring incorrigible criminals.

Not at all to such corrigible criminals who committed the crime in their youthful days out of misguidance or wrong bringing up, but repented and repenting heartily.

Not to forgive such penitent and contrite former criminals is inhuman.

Now, I am applying my law degree. Natarjan, in our jurisprudence, which is based on English law, jails are not called punishment centres but reformatories where the criminals are to serve their given sentence and come out after their sentence, as reformed human beings, repeat, REFORMED HUMAN BEINGS.

In the case of David, he is already reformed. :-)

I will point out the case of Sundaram MBBS. While he was the second yr student, in a family quarrel between their family and other family, he was so provoked that he murdered two members of the other family. He was initially given capital punishment. Then, converted to LI. Sundaram's good conduct was cited to allow him to complete the Medical degree on parole. He completed and when time came for release, he begged to serve in the hospital meant for the inmates. He was allowed. A doctor for the criminals ?

Yes, it was many decades ago.

What will your mind say ? Your mind will see the cruel murder on the day when he was a callow youth, and then, cry for his blood.

We must forgive. If we don't, we should not call ourselves humans !

(Natarjan can write in Tamil if he wants to respond. I can follow Tamil easily)

virutcham said...

Yeah. forgive and forget. So people can commit what ever sin and can give justification saying young age, not aware of human values and damage/kill/loot property/lifes/belonging of some one else. We can sit on other part of the world and say the person shows good conduct and hence forgive and forget.

send all police to home. close down all courts. Why all these? Do sin without knowing. realise it and go and prey and preach.