Thursday, April 21, 2011

உங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெடி கும்மி

http://i.indiaglitz.com/tamil/news/mankatha181210_1.jpg 

''மும்பை தாராவி கிட்டத்தட்ட ஒரு குட்டித் தமிழ்நாடு. 'நாயகன்’ படத்துக்குப் பிறகு தாராவிக்குள் முழுமையாகப் புகுந்த படம் 'மங்காத்தா’!  ( அடங்கோ.. மறுபடி ஒரு நாயகனா?)

மொத்த தாராவியும் அஜீத்தைப் பார்க்கும் ஆசையில், அந்தச் சின்ன சந்துக்குள் திமிறி நிக்குது. 'தல... தல... மங்காத்தா சூப்பர் ஹிட்டாகும் தல’ன்னு அவங்க பக்கம் அஜீத் திரும்புறப்பலாம் சவுண்டு கொடுப்பாங்க. 'முதல்ல படத்தை எடுக்கவிடுங்கப்பா. (எந்தப்படம் எடுத்தாலும் ரிலீஸ் ஆகற வரை இந்த ஜால்ராக்கள் சத்தம் தாங்கறதில்லை.. )

அப்பதானே அது ஹிட் ஆகும்’னு ஜாலியும் கேலியுமா அஜீத்தே கூட்டத்தை கன்ட்ரோல் பண்ணி ஷூட்டிங் நடக்க உதவி பண்ணுவார். ரொம்ப ஜாலியா ஷூட்டிங் முடிச்சு இப்பத்தான் மும்பைல இருந்து பேக்கப் ஆகி வந்திருக்கோம்!'' - பெசன்ட் நகர் வீட்டில் கடல் காற்றுக்கு இடையே 'மங்காத்தா’ கதை சொல்கிறார் வெங்கட் பிரபு.

(சகுனி-மகாபாரதம் கதை உல்டா தானே..?மணி ரத்ணம் பாணில?)


1.''படத்தில் 'அவங்க நடிக்கிறாங்க... இவங்க நடிக்கிறாங்க’ன்னு ஏகப்பட்ட தகவல்கள். யார் யார் நடிக்கிறாங்கன்னு இப்பவாது சொல்லலாம்ல?''


(எல்லாரும் நடிக்கறாங்க.. யார் யார் நல்லா நடிக்கறாங்க?)

''இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டோடு படம் உருவாகும்னு நானே எதிர்பார்க்கலை. 'உங்க டீமே இல்லாம ஃப்ரெஷா ஒரு படம் பண்ணலாம். பிரேம்ஜியை மட்டும் வெச்சுக்குங்க’ன்னு துரை தயாநிதி சொன்னார். 

(அதானே .. பிரேம்ஜி இல்லாம வெங்கட் படம் எடுத்துடுவாரா என்ன?)

அப்ப அஜீத் சார் மட்டும்தான் உள்ளே வந்தார். அப்புறம் படத்துக்கே வேற கலர் வந்துடுச்சு. இப்போ அர்ஜுன் சார், த்ரிஷா, வைபவ், அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ்னு ஏகப்பட்ட பவர் பெர்ஃபார்மர்ஸ் உள்ளே வந்துட்டாங்க. அஜீத்துக்கும் அர்ஜுனுக்கும் இடையிலான போட்டிதான் 'மங்காத்தா’. 

ஒரு பிரச்னை, அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள்னு முதல் பாதி நகரும். 


(எப்படியோ படம் ரிலீஸ் ஆன பிறகு எந்த குடும்பமும் ரிசல்ட்டால பாதிக்கப்பாடாம இருந்தா சரி..)


அந்தப் பிரச்னைக்கான தீர்வு இரண்டாம் பாதி. ஒருநாளில் நடக்கும் சம்பவங்கள்தான் செகண்ட் ஆஃப். அர்ஜுன் சாருக்கு ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. மாதிரியான கேரக்டர். அஜீத் சாரின் 50-வது படத்தில் அவருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும்னு தெரிஞ்சும், அர்ஜுன் சார் நடிச்சுக் கொடுத்தது பெரிய விஷயம். 

 (அர்ஜூன்க்கு அது ஒண்ணும் புதுசு இல்லையே.. ஏற்கனவே குருதிப்புனல்ல டம்மி ஆனவர் தானே?)

'படத்தில் ஒரு சின்ன கேரக்டர் இருக்கு. நீங்க ஃப்ரெண்ட்லியா பண்ணித் தரணும்’னு ஆண்ட்ரியாகிட்ட கேட்டேன்.

செல்வராகவன் கோவிச்சுக்கலையா?

'எனக்கு ஓ.கே. ஆனா, உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு தரணும்’னாங்க. 'அதுக்கென்ன கொடுத்துட்டாப் போச்சு’ன்னு அவங்களைப் பிடிச்சுப் போட்டாச்சு!''

 ஹி ஹி அப்படியா விஷயம்..?

''அஜீத் ஹிட் கொடுத்து கொஞ்சம் இடைவெளி ஆயிருச்சே... இந்தப் படம் அதுக்குப் பதில் சொல்லுமா?'' 

''ஒரு வரியில் சஸ்பென்ஸ் உடைக்கவா? படத்தில் அஜீத் சார் முதல் முறையா முழு நெகட்டிவ் கேரக்டர் பண்ணி இருக்கார். அவர் கேரக்டர் பேரு விநாயக் மகாதேவன். 'பாஸிகர்’ ஷாரூக் மாதிரியான கேரக்டர். 


 படத்தோட ரிசல்ட் நெகடிவ்வா அமையாம இருந்தா சந்தோஷம்

காமெடி, திரைக்கதைன்னு எல்லாத்தையும் தாண்டி அவரின் கேரக்டர்தான் நிக்கும். 

 (இந்தப்படத்துல நடக்கலையா..பில்லாவுல வர்ற மாதிரி.. )

டான்ஸ், சண்டைக் காட்சிகளுக்கு ரொம்ப டெடிகேட்டடா வொர்க் பண்ணினார். அவர் இயல்பா கிரே ஹேர், சால்ட் அண்ட் பெப்பர் லுக்னு எப்படி இருக்காரோ அப்படியே விட்டுட்டோம். 'ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மாதிரி இருந்தா, நல்லா இருக்கும்’னு சொன்னேன். அப்படியே ரெடி ஆகி வந்து நின்னார்.

(நரை முடி கெட்டப் உங்க ஐடியாவா? கேவலமா இருக்கு)


படம் ரிலீஸானதும் பசங்க டை அடிக்கிறதை விட்டுட்டு கிரே ஹேர் ஸ்டைலை டிரெண்ட் ஆக்கிருவாங்க.

 நாசமாப்போச்சு.. இது வேறயா? ஏற்கனவே இவனுங்களைப்பார்க்க சகிக்காது. இதுல டை வேறயா? எல்லா ஃபிகருங்களும் கலரிங்க் தலையான்னு கிண்டல் பண்ணப்போகுது.. 

எங்க டீம் பசங்களைவிட குத்துப் பாட்டுக்கு செமத்தியா ஆட்டம் போட்டாரு. அவர் நல்லா ஆடிட்டு இருக்கும்போது பசங்க யாராவது மிஸ்டேக் பண்ணா, 'டேய் நானே நல்லா ஆடுறேன். உங்களுக்கு என்னடா வந்துச்சு?’ன்னு செல்லமாத் திட்டி வேலை வாங்குவார்.

நல்லா ஆடறாரா..? என்ன சீட்டுக்கட்டா? செஸ்சா?

'இந்த கேரக்டரை ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்க. ஆனா, என் ஃபேன்ஸை நாமதான் தயார் பண்ணணும். டிரெய்லர், இன்டர்வியூன்னு கொஞ்சம் கொஞ்சமா என் கேரக்டர் பிடிக்கிற மாதிரி அவங்களைத் தயார் பண்ணுங்க’ன்னார். அதுக்கு இந்தப் பேட்டிதான் பிள்ளையார் சுழி!'' 

பிள்ளையார் பிடிக்க  குரங்கா ஆன கதை ஆகிடப்போகுது.. 

2.''அப்போ வில்லன் அஜீத்துக்கு ஏகப்பட்ட பன்ச் டயலாக் இருக்குமே!''

''சான்ஸே இல்லை. பொதுவா எல்லாப் படங்களிலும் ஒரு ஹீரோ கெட்டது பண்ணா, உடனே அவருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சு அந்த ஹீரோ எதனால் கெட்டவன் ஆனார்னு சொல்வாங்க. ஆனா, நாங்க அதெல்லாம் பண்ணலை. கெட்டவன்னா... கெட்டவன்தான். 'நான் கெட்டவன்... நீ நல்லவன்’னு எந்த பன்ச்சும் கிடையாது. டயலாக் எல்லாமே யதார்த்தமா இருக்கும்!'

பதார்த்தமா இருக்குமா? விஜய் படம் மாதிரி இருக்குமா?

'
3''இதை அஜீத் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?''

( அவங்க எதைக்குடுத்தாலும் ஏத்துக்குவாங்க.. சராசரி ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?ன்னு கேட்கனும் )

''அவர் பெர்சனல் விஷயங்கள் எதையும் படத்தில் சேர்க்கலை. அவர் சேர்க்கவும் சொல்லலை. 'நாட்டு மக்கள் திருந்தி வாழணும்’னுலாம் எந்த மெசேஜும் இல்லை. இதுல அஜீத்-பிரேம்ஜிதான் காமெடி கூட்டணி. ஆனா, என் மத்த மூணு படங்களைக் காட்டிலும், இதுல சீரியஸ்னெஸ் ஜாஸ்தியா இருக்கும். அஜீத் ரசிகர்களுக்கு 'மங்காத்தா’ டபுள் ஜாக்பாட்!''

 நாட்டு மக்கள் திருந்தி வாழணும்’னா எவனும் சினிமாப்பார்க்கக்கூடாது..

என்னது? சீரியஸ்னெஸ் ஜாஸ்தியா.. ம் ம் வெளங்கிடும்.

4. ''அஜீத் அரசியல், எலெக்ஷன் பத்தி ஏதாவது பேசுவாரா?''

'' 'யார் பிரபு வருவாங்க? வேர்ல்டு கப் மாதிரி பயங்கர டஃப்பா இருக்கு’ன்னு ஏதாவது கமென்ட் அடிப்பார். தினமும் அரை மணி நேரமாவது அரசியலைப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். அஜீத் சாருக்கு இவ்வளவு டீடெய்ல்டா அரசியல் தெரியுமான்னு ஆச்சர்யமா இருக்கும்!''

 தினமும் அவரு அரை மணி நேரம் டைமை வேஸ்ட் பண்றாரா/ அடடா..

இது இந்த வார ஆனந்த விகடன் பேட்டி..


டிஸ்கி - இப்போ திடீர்னு நான் ஏன் திருந்தீட்டேன்னு கேட்டு நிறைய மெயில் வருது.. நாட்ல ஆட்சியே மாறப்போகுது.. நான் ஒரு தனி மனிதன் மாறக்கூடாதா? ஹி ஹி

30 comments:

Unknown said...

hehe

Ram said...

எங்க சிங்கம் அஜித்தையுமா.?

Unknown said...

சரக்க ரெண்டு நாளா தேடி கெடச்சிடுச்சி போல ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

first vote.. comment later ..hi..hi..

சக்தி கல்வி மையம் said...

டிஸ்கி உண்மைப்பா சிபி திருந்திட்டாராம்.

சக்தி கல்வி மையம் said...

மாம்ஸ் நீ எப்ப கெட்டுப்போன திருந்தரத்திற்கு?

Unknown said...

இந்த இசுக்கி போட்ட டிசுக்கி ஹிஹி!

Unknown said...

அஹா.. எங்க வலைப்பூவிலும் இன்று காமெடி கும்மி தான்..ஆனால் அஜித் பற்றியல்ல.. வலையுலக பிரபலங்கள் பற்றி...

Unknown said...

பாருங்கப்பா அவரு மாறிட்டாருன்னு அவரே சொல்லிக்கிறாரு பரலோக நாதர்களே கவனியுங்கள்!

Unknown said...

உங்க கமெண்ட் ரொம்ப டெரராக இருக்கு. கும்மியில் கலக்குர வெங்கட் பிரபுவுக்கே கும்மியா? வெங்கட் பிரபு பாத்தா
உங்கள கும்மியிருவாரு..

Unknown said...

மங்காத்தாவில் அஜித், விஜய.டி.ஆரின் வசனம் சிலவற்றை பேசுகிறாமே உண்மையா?

Unknown said...

தமிழ்மணம் வாக்களிக்க விடாமல் தகராறு செய்கிறது.

சசிகுமார் said...

அஜித் சார் தலைக்கு டை அடிங்கோ தலைமுடி ரொம்ப நரைத்து விட்டது.

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது படத்துல அர்ஜூன் இருக்காரா அப்போ படம் ஹிட்டுதான்....

MANO நாஞ்சில் மனோ said...

கும்மிக்கே கும்மி நடத்துங்க நடத்துங்க...

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா நேற்றைக்கு எதுக்குய்யா போன்ல ஓடி ஒளிஞ்சி போனீர் ஹே ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா தமிழ்மணம் ஒர்க் ஆகமாட்டேங்குது....

காங்கேயம் P.நந்தகுமார் said...

அஜித் மங்கத்தா அதைவிடுங்க! தற்போது புதுமுகத்தைப்போல் விஜய் ஒவ்வொரு கம்பெனியாய் கால்கடுக்க ஏறி இறங்கறாராமே? தோடர் தோல்விபடங்களை தந்ததால் விஜய். கம்பெனிகள் சான்ஸ் மறுக்க சுவற்றில் அடித்த பந்துபோல் போன வேகத்திலேயே திரும்பி வருகிறார் . இப்போது அவருக்கு ஓரே ஆறுதல் எஸ்.ஏ.சந்திரசேகர். மகனின் கண்ணீரை துடைத்து நானே உன்னை வைத்து இரண்டு படம் எடுக்கிறேன். அதுதான் எலக்சனில் அம்மாவிற்கு ஆதரவா பேசுனதற்கு பெட்டி கொடுத்தாங்களே அதுல எடுக்கிறேன் என்று விஜய்யின் கண்ணீரை ஆறுதலாய் தொடைத்துவிட ஏழாவது பட தோல்விக்கு இப்போதே தயாராகி விட்டார். இது தான் இப்போதைய சினிமா நியூஸ்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

அஜித் திரும்பவும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஊருக்குள்ள இப்ப அதிகமா பேசுற பஞ்ச். "அஜித் ஒரு சிங்கம். விஜய் ஒரு அசிங்கம்."

காங்கேயம் P.நந்தகுமார் said...

அஜித் அரசியல் எலக்சன் பற்றி ஏதாவது பேசுவரா? அஜித் ஒரு பக்கா ஜென்டில் மேன். திரையுலகில் தனித்துவிடப்பட்டாலும் யாரையும் கூற வில்லை! ஆனா விஜய் இத்துப்போன படத்துல நடிச்சுவிட்டு அந்தப்படமெல்லாம் முனிசிபால்டிக்காரன்காளால் குப்பைக்கு எடுத்துசென்றுவிட அரசியலில் பிரவேசம். ஆமா அரசியல் ஒரு குப்பைங்கிறாங்களே? ஒரு வேளை அந்த குப்பையை கிண்டுவதற்கு அம்மா தாயே என்று பிச்சை கேட்டிருப்பாரோ?

காங்கேயம் P.நந்தகுமார் said...

நாட்டு மக்கள் திருந்தி வாழனும்னா சினிமா பார்க்ககூடாது. அண்ணே விஜய் படத்தை தானே! அதைத்தானே மக்கள் தொடர்ந்து செஞ்சு வரிசையா 6 படத்தை தோல்வியடைய செய்துவிட்டார்களே?

Unknown said...

//MANO நாஞ்சில் மனோ said...
என்னாது படத்துல அர்ஜூன் இருக்காரா அப்போ படம் ஹிட்டுதான்....//
இது கொஞ்சம் யோசிக்க வைக்கிற விஷயம்தான்!

அப்புறம் த்ரிஷாக்காவும் அஜித்தும் நடிச்ச படங்கள் ஓடுறதில்லையே # டவுட்டு!

Unknown said...

//இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டோடு படம் உருவாகும்னு// நாங்களும் எதிர்பார்கல
(ஹி ஹி ஹி)

பாட்டு ரசிகன் said...

அஜீத் படம் பார்த்து ரொம்ப நாலாச்சி....

சீக்கிற வரட்டுங்க...

தலப்படம் டாக்டரு படம் மாதிரியெல்ாம் இருக்காதுங்க...

தல தல தான்..

"ராஜா" said...
This comment has been removed by the author.
"ராஜா" said...

//அப்புறம் த்ரிஷாக்காவும் அஜித்தும் நடிச்ச படங்கள் ஓடுறதில்லையே # டவுட்டு!

நீங்க கிரீடம் பாக்கலையா?

நரைமுடி தலைக்கு பக்காவா சூட் ஆகுது .... really a different style ever in tamil cinema...

தல நடந்தாகூட மாஸ்தான்# பில்லா ...

// நானே நல்லா ஆடுறேன்

இதுதான் தல .. எங்க அவர(bodyguard) நானே நல்லா நடிக்கிறேன் நீ நடிக்கிறதுக்கு என்னன்னு யாரையாவது பாத்து சொல்ல சொல்லுங்க பாப்போம்?

ரஹீம் கஸ்ஸாலி said...

தலையை பற்றி பதிவு போட்ட தல வாழ்க

நிரூபன் said...

தலையை வறுத்தெடுக்கிறீங்க போல இருக்கே...

ஹி...ஹி...

கேரளாக்காரன் said...

Hello neenga kummi adikka thala onnum dummy illa rummy