Wednesday, April 20, 2011

நாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்

இந்த வாரம் ஆக்‌ஷன் ஸ்டோரிஸ்ன்னு சொன்னதும் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.தெலுங்கு டப்பிங்க் படத்துல  வர்ற மாதிரி சொதப்பப்போறாங்கன்னு நினைச்சேன்.. ஆனா முத கதையே வெரைட்டியா இருந்தது..அதுவே முதல் பரிசையும் தட்டிட்டு போச்சு...( அப்போ இனி நாம எப்பவாவது படம் எடுத்தா முதல்ல போடச்சொல்லனும்)

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேர்ட்டயும் ஒரு மாற்றம்.. ரெண்டு பேருமே புது முக இயக்குநர்கள் முகம் சுண்டற ,மாதிரி பேசலை.. பூஸ்ட் அப் பண்ற மாதிரி பேசறாங்க.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,ஒரு படைப்பாளி கவுரப்படுத்தப்படும்போது ஆட்டோமேட்டிக்கா இன்னொரு படைப்பாளிக்கு சந்தோஷம் வந்துடும்..( ஏன் டாக்ஸி மேட்டிக்கா வராதா?)


1.  பார்த்திபன் - ரமேஷ்


அடியாளா வேலைக்கு வந்த இடத்துல சின்ன வயசுப்பசங்க அடி மாடுகளா விற்பதற்காக  கடத்தப்படறதை எதிர்க்கறான்.. தனி ஆளா சண்டைக்குப்போறான்.. அவனை அந்த கடத்தல் கோஷ்டி போட்டுத்தள்ளிடறாங்க...  சாகறப்பக்கூட அவன் அந்த சிறுவர்களை விடுதலை பண்ணிடறான்.

ஒரு ரவுடியா இருந்தாலும், அடியாளா இருந்தாலும் , கல்லுக்குள் ஈரம் இருக்கும்,முரடன் மனதுக்குள்ளும் அன்பு நேசம் போன்ற மென்மையான உணர்வுகள் இருக்கும்கற பாசிட்டிவ்வான கருத்தோட படம் முடியுது.

 படத்தோட மேக்கிங்க் ஸ்டைல் , பேக் கிரவுண்ட் மியூசிக் எல்லாம் நல்லாதான் இருந்தது.. ஆனா இயல்பா இல்லாம ஒரு சினிமாட்டிக் தன்மை தொக்கி நின்னுது.. ஆல்ரெடி கோலிவுட்ல கோலோச்சுன ஒரு டைரக்டர் எடுத்த குறும்படம் போல் இருந்தது.
இதுல வந்த ஒரு நல்ல வசனம்

அடியாள்ங்கறதுக்காக கசாப்புக்கடை வேலை பார்க்கனும்னு அவசியம் இல்லையே..?


 2. இன்னா செய்தாரை - அழகுராஜ்

இந்த தொகுப்பாளினி ஓரளவுக்கு கிரியேட்டிவ்வா சொந்த டயலாக் பேசுனாங்க.. வாங்க அழகா வந்திருக்கீங்க... அழகுராஜ்.. படத்தோட டைட்டில்
இன்னா செய்தாரை...படத்துல நீங்க என்னா செஞ்சிருக்கீங்க?ன்னு கேட்டு சூழலை இறுக்கமான சூழல்ல இருந்து கொஞ்சம் நார்மல்க்கு கொண்டு வந்தாங்க.. 

ஒரு கல்யாணம் ஆன தம்பதி ( கல்யாணம் ஆனாத்தானே அது தம்பதி ?#சொதப்பாம சொல்லு) ஒரு ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு ஜாலி டிரிப்பா வர்றாங்க..அவர் ஒரு கஸ்டம் ஆஃபீசர்.. ஏற்கனவே அவரால பாதிக்கப்பட்ட சட்ட விரோத கும்பல் அவரை அங்கே போட்டுத்தள்ளிடுது..அவரோட மனைவி அந்த கும்பலை அங்கேயே பழி வாங்கறா.

அவ பழி வாங்கற விதம் எல்லாம் பழைய எஸ் ஏ சந்திர சேகரன் படங்கள் மாதிரி வெரைட்டியான அப்ரோச்சா இருக்கு.ஒருத்தன் காதுல  வெடி குண்டு கட்டி, ஒருத்தனோட உடம்புல ஒரே சமயத்துல வெவ்வேற பிளட் குரூப் ஏத்தி,ஒருத்தன் மூக்குல  2 கஞ்சா சிகரெட் வெச்சு வாயை அடைச்சு,இன்னொருத்தனுக்கு காலால மர்ம ஸ்தானத்துல ஒரே அடி..
( பார்க்கறப்ப நமக்கு வலி.. ஹி ஹி )

இதுல எல்லாரும் சிலாகிச்ச படி லொக்கேஷன் செலக்‌ஷனும் கேமராவும் பக்கா.ஆந்திரா போய்  அங்கே ஏதோ ஒரு ஃபார்ஸ்ட்டை தேடிப்பிடிச்சு ஷூட் பண்ணி இருக்காங்க..

 ஆனா எல்லாருக்கும் தோணும் டவுட்ஸ்

1.  ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர் அப்படி தனிமைல எந்த செக்யூரிட்டியும் இல்லாம வந்து சிக்கிக்குவாரா?அதுவும் மனைவி கூட வந்து.. 

2, மோதல் நடக்கறப்ப  அவர் ஒரு ஆஃபீசர் என்பதற்கான கம்பீரமே இல்லை..

3. அவருக்கே இல்லாத அந்த  வீரம் அவரோட மனைவிக்கு எப்படி வந்தது?

4. ரொம்ப மென்மையான பெண்ணா காட்டப்படும் அந்த மனைவி வில்லனின் ரத்தத்தை தொட்டு நாக்கில் வைத்து சுவைப்பது நம்ப முடியாத கொடூரம்.
( அட்ராட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க)

( அவர் என்ன பூலான் தேவியா?)

5. கஜினி பட க்ளைமாக்ஸில் அசினுக்கு ஒரு மரண அடி விழுமே அப்படி நங்க் என அடி விழுந்தும் அவர் தப்பிப்பது எப்படி?


ஆனா அந்த ஆஃபீசர் மனைவியா வந்த ஃபிகரோட நடிப்பு ஓக்கே தான்.. இதுல  குளியல் சீன் வேற.. ( சின்னத்திரை செம டெவலப்பு ஹி ஹி )

3. ரணம் - தமிழ் செல்வன்

 ஹீரோ ரவுடி.. ஹீரோயின் கம் காதலிக்கு லவ்வரோட தொழில் என்னன்னு தெரிஞ்சதும் பிடிக்கலை.. ( எல்லா காதலிகளுக்கும் ரவுடிங்களைப்பிடிக்கறதில்லை. ஆனா பெரும்பாலான ஹீரோயின்கள் ரவுடிகளத்தான் லவ்வறாங்க.. # ஒழிக தமிழ் சினிமா லாஜிக் )

ஒரு கட்டத்துல ஹீரோயினை ஒரு ரவுடி குரூப் கடத்திட்டுப்போகுது.. தன்னோட உயிரைக்குடுத்து ஹீரோ அவரைக்காப்பாத்தறாரு.. இப்போ அந்த பொண்ணு அவரை லவ்வுது.. ( அட போங்கப்பா... இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்.. பக்கத்துலயே இருக்கறப்ப கண்டுக்க மாட்டாங்க.. சொர்க்கத்துக்கு டிக்கட் வாங்கறப்ப பதறிட்டு வருவாங்க )

வில்லன் ப்ளேஸ் ல ஹீரோ வில்லன் கூட சண்டை போட்றது,அவங்களை வீழ்த்தறது எல்லாம் அக்மார்க் சிரஞ்சீவி படம் தோத்துது போங்க..

 ஒரே ஆறுதல் என்னான்னா  ஹீரோயின் ஃபிகர் நல்லாருந்தது. ( அதானே பார்த்தேன் )


முதல் பரிசை வழங்கறதுல, எந்தக்குழப்பமும் இல்ல. ஆனா இது குவாட்டர் ஃபைனல் என்பதால் (குவாட்டர் ஃபைனல்னா குவாட்டர் அடிச்சிட்டு ஃபைனல்ல கலந்துக்கறதா? #டவுட்டு)எலிமினேட் பண்ணனுமாம். 

( இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக்குத்திடுமா?)

 யாரை எலிமினேட் பண்ணலாம்னு மதன் சார் கேட்க பிரதாப் போத்தன் சிரிச்சுக்கிட்டே  மினி மினி மைனோ போட்டுப்பார்க்கலாமா? என காமெடி பண்ணுனது ஹா ஹா ( அது பிங்கி பிங்கி பாங்கி ஃபாதர் ஈஸ் ஏ டாங்க்கி மாதிரி ) 

 கடைசில எலிமினேஷன் இல்லைன்னு அறிவிச்சுட்டாங்க. 

 சந்தோஷம்.



27 comments:

Unknown said...

ஹிஹி

கோவை நேரம் said...

மைசூர்பா.....

கோவை நேரம் said...

ஏனுங்க...ரொம்ப சைவத்துக்கு மாறிட்டிங்க ....வர வர ஆன்மிகம் ..சமையல் குறிப்பு அப்படின்னு ரொம்ப வறட்சியா இருக்கு....

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஒரே ஆறுதல் ஹீரோயின் பிகர் நல்லாயிருந்தது. ஆனா உங்க லொள்ளுக்கு அளவே இல்லை. மற்றபடி விமர்ச்சனம் டாப்

rajamelaiyur said...

I also watch this show :-) really superb

வைகை said...

கலக்கல் பாஸ்..ஹி ஹி...

காங்கேயம் P.நந்தகுமார் said...

நாளைய இயக்குனர் ஆக்சன் கதை விமர்ச்சனம் நன்று. அதென்னது குவார்ட்டர் பைனலா? நம்ம கருப்பு எம்.ஜி.ஆர் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

"ராஜா" said...

//பழைய எஸ்‌ஏ சந்திரசேகரன் படம் மாதிரி "வெரைட்டியா" இருந்தது

எஸ்‌ஏ சந்திரசேகரன் படம் மாதிரினா எப்படி வெரைட்டியா இருக்கும் # டவுட்டு

செங்கோவி said...

அட்ராசக்கயில் வரும் உருப்படியான பதிவு இந்த நாலைய இயக்குனர்!

உணவு உலகம் said...

சுத்த சைவம். பாருங்க. ரசிங்க.

உணவு உலகம் said...

ஓட்டு?

உணவு உலகம் said...

இன்று உணவு உலகத்தில் --
http://unavuulagam.blogspot.com/2011/04/blog-post_20.html#more
பாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க!

உணவு உலகம் said...

மூணு ஓட்டு முழுசா போட்டுட்டோம்ல!

உணவு உலகம் said...

சரி, மாலையில் சந்திப்போம்.

சக்தி கல்வி மையம் said...

வந்துட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

ரி, மாலையில் சந்திப்போம்

shanmugavel said...

//ஒரு படைப்பாளி கவுரப்படுத்தப்படும்போது ஆட்டோமேட்டிக்கா இன்னொரு படைப்பாளிக்கு சந்தோஷம் வந்துடும்..//

correct sir

Sathish said...

kalakkal thala

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

சசிகுமார் said...

பதிவு அருமை

Unknown said...

////"ராஜா" said...
//பழைய எஸ்‌ஏ சந்திரசேகரன் படம் மாதிரி "வெரைட்டியா" இருந்தது

எஸ்‌ஏ சந்திரசேகரன் படம் மாதிரினா எப்படி வெரைட்டியா இருக்கும் # டவுட்டு///

சேம் டவுட்டு!

Unknown said...

நல்ல பதிவு பாஸ்!

சித்தாரா மகேஷ். said...

எது எப்படி இருந்தாலும் உங்க எழுத்து நடையில் வாசிப்பதே தனி ருசி...

என் உயிரே.

Thirumalai Kandasami said...

நானும் பார்த்தேன்,,முதல் படம் - நன்று ,,ரெண்டாவது படம் - ஓவர் violence ,,மூன்றாவது - ஓவர் மசாலா (typical telugu film )

Thirumalai Kandasami said...

http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-35/

Kesavan Markkandan said...

Whether he is a custom's officer or Forest Officer???