Monday, April 18, 2011

ஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல்லக்கூடாதா? என்ன கொடுமை சார் இது?

http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0911/27/images/img1091127022_1_1.jpg

பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்?'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த 'சமையல் கலைஞர்' தேவிகா காளியப்பன்.

பெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ்  மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்!

சரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.
'ஒரு கப் உளுந்துனு போட்டிருக் காங்களே... அது எத்தனை கிராமா இருக்கும்? நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே!' என்றெல்லாம் ஆரம்பித்து, எல்லாவற்றி லுமே சந்தேகம் எட்டிப் பார்த்து... சமயங் களில் சமையலையே அது காலி செய்துவிடுவதும் உண்டு.
அவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக குறிப்பிட்ட சில அளவு முறைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. பொதுவாக படிக் கணக்கு என்பது இன்னமும் வீடுகளில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி எனப்படும் அந்த அளவைகள்... உரி, உழக்கு, ஆழாக்கு என்று பகுதிக்கு பகுதி வெவ்வேறு பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. அவற்றில் கால்படியில் தானியங்கள் மற்றும் மாவுகளை அளந்தால் எத்தனை கிராம் இருக்கும் என்பது மேலே தரப்பட்டிருக்கிறது.

1. சத்துமாவு மிக்ஸ் 

தேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
இதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.

--------------------------------------------------

2. ரவா தோசை மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ்,  உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து  இதில் சேர்க்கவும்.

சூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/Pasumai-Samayal4.jpg
---------------------------------------------
 3. தேங்காய் பொடி 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.

இட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

-----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKPHpnT8esxNmCtkReAk9nRTxe-ZgPLULgHYiFNpDnpfnnGG4lh3xf-f7RVHi_BJVWj5P5VNMaSeLkosTCN88JMcwmyQOmn2toW2pCte1fddxkSqMqPrErBd_7gOX3JlpCOf4BkTsRdCUc/s1600/Tamanna_Red_Green_Half_Saree.jpg
4.சேமியா பகாளாபாத் மிக்ஸ் 

தேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.

பகாளாபாத் செய்ய:  உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை போட்டு வறுத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். சேமியாவைத் தனியாக நெய் விட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

சேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்),  கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

--------------------------------------

5.ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ் 

தேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

---------------------------------


 டிஸ்கி 1  - பெண்கள் படிக்கற மாதிரி சி பி எழுதறதே இல்ல என்ற அவப்பெயர் இன்றோடு தொலைந்தது.. ஹி ஹி

டிஸ்கி 2 - அவள் விகடன் ல இருந்த கட்டுரையைத்தான் இதுல போட்டிருக்கேன்.. அதனால இதுல ஏதாவது டவுட்னா என்னை கேட்காதீங்க.. எனக்கு ருசியா யாராவது சமைச்சா சாப்பிட மட்டுமே தெரியும்..

டிஸ்கி 3  - சி பி க்கு என்ன ஆச்சு? வீட்ல சண்டையா? சொந்த சமையலா? மாமியார் வீட்ல மனைவியா ?போன்ற கமெண்ட்கள் கடுமையாக மறுக்கப்படும்.ஹி ஹி 

டிஸ்கி 4 -  நம்பி வந்தவங்களை நட்டாத்துல விடற ஜெ புத்தி எனக்கு கிடையாது என்பதால் என் தளத்துக்கு ரெகுலரா வர்றவங்க  வை கோ  மாதிரி ஏமாந்து போகாம இருக்க சில ஸ்டில்களை இணைத்துள்ளேன்.. பார்த்து ரசித்து விட்டு செல்லவும்..

72 comments:

Unknown said...

அருவா

Unknown said...

நல்லவன் எனக்கு நானே நல்லவன்

- தொலைவில் கேக்குது FM பாட்டு!

Unknown said...

வீட்டுல உலக்கையில வாங்குன உதையே சிம்பாலிக்க காட்டும் சிபி ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

என்ன ஆச்சு ?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி

போளூர் தயாநிதி said...

என்ன ஆச்சு ?aama aama என்ன ஆச்சு ?

ராஜி said...

அடிக்குற கோடை வெயில் உங்களையும் பதம் பார்த்துடுச்சா?

ராஜி said...

மீண்டும் நள பாகமா? வெளங்கிடும்

ராஜி said...

இத்தனை நாள் ஆனந்த விகட‌னில்தான் சுடுவீங்க. இப்போ அவள் விகடனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைப்ப பாத்துட்டு மைனஸ் ஓட்டு போட்டிருப்பேன்....நல்லவேள கொஞ்சம் கீழ பாத்தேன்............

Unknown said...

யோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கி உலகம் said...
யோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா!//////

வரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...!

ராஜி said...

பெண்கள் படிக்குற மாதிரி சிபி எழுதறது இல்லைன்ற அவப்பெயர் இன்றோடு தொலைந்தது.
>>
பெண்கள் சமையல் குறிப்பு மட்டும்தான் படிப்பாங்கனு உங்களுக்கு யார் சொன்னது. அந்த காலம்லாம் மலையேறிட்டது சிபி சார். பெண்கள் எழுதும் வலைப்பூவை ஒருமுறை விசிட் அடிச்சுட்டு வாங்க. அப்ப தெரியும்

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

இத்தனை நாள் ஆனந்த விகட‌னில்தான் சுடுவீங்க. இப்போ அவள் விகடனுமா?

சுடரதுன்னு முடிவான பின்னாடி அதென்ன? இதென்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் தக்காளி, என்னதான் தமன்னா, ஹன்சிக்கான்னாலும் நம்ம அனு மாதிரி வராதுங்கிறேன்... நீ என்னய்யா சொல்ற?

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கி உலகம் said...
யோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா!//////

வரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...!

என்ன? ராம்சாமி? என் பிளாக் கண்ணியமான பிளாக்.இப்படி டபுள் மீனிங்க்ல கமெண்ட் போட்டா என் இமேஜ் ..???????

ராஜி said...

எதோ நம்மாள முடிந்தது நாராயணா, நாராயணா

Unknown said...

"வரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...!"

>>>>>>>

எந்த பஸ்சுல டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைப்ப பாத்துட்டு மைனஸ் ஓட்டு போட்டிருப்பேன்....நல்லவேள கொஞ்சம் கீழ பாத்தேன்............

ஹி ஹி புரிஞ்சிருச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கி உலகம் said...
யோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா!//////

வரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...!

என்ன? ராம்சாமி? என் பிளாக் கண்ணியமான பிளாக்.இப்படி டபுள் மீனிங்க்ல கமெண்ட் போட்டா என் இமேஜ் ..???????/////////

தக்காளி பதிவ பத்தி சொன்னா அது டபுள்மீனிங்கா....? என்ன ஒலகமடா இது...........?

Unknown said...

"யோவ் தக்காளி, என்னதான் தமன்னா, ஹன்சிக்கான்னாலும் நம்ம அனு மாதிரி வராதுங்கிறேன்... நீ என்னய்யா சொல்ற?"

>>>>>

அதே அதே சபாபதே ஹிஹி!///

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம் said...
"வரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...!"

>>>>>>>

எந்த பஸ்சுல டவுட்டு!/////////

இதுல இது வேறயா? கூகிள் பஸ்லதான்யா.... (பின்ன சென்னை டூ பாண்டிச்சேரி பஸ்லயா போடுவாங்க?)

Unknown said...

பயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா!

சி.பி.செந்தில்குமார் said...

பஸ் என்பது பல பல பேர் வந்து போற இடம். அதுல மேட்டர் போடுன்னா என்ன அர்த்தம்.. ராம்சாமி.. இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே டம்ளரு, ஸ்பூன் படம்லாம் போட்டிருக்கீங்களே என்னாத்துக்கு? சமைக்க போறாவங்க அந்தளவுக்குக் கூடவா ஒண்ணுமே தெரியாம இருப்பாங்க?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா!

என் பதிவுக்கு லேடீஸே வர்றதில்லைன்னு ஒரு புகார்.. அதான் ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பஸ் என்பது பல பல பேர் வந்து போற இடம். அதுல மேட்டர் போடுன்னா என்ன அர்த்தம்.. ராம்சாமி.. இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..ஹி ஹி/////////

ஓ... இதான் மேட்டரா.......... அப்ப ஓக்கே....!

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே டம்ளரு, ஸ்பூன் படம்லாம் போட்டிருக்கீங்களே என்னாத்துக்கு? சமைக்க போறாவங்க அந்தளவுக்குக் கூடவா ஒண்ணுமே தெரியாம இருப்பாங்க?

அது சும்மா ஒரு சிச்சுவேஷன் இமேஜ்

ராஜி said...

தம்பி சிரிப்பு இல்லாதப்ப இந்த பதிவை போட்டதுக்காக நான் வன்மையா கண்டிக்குறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அய்யயோ...C.P ய யாரோ மந்திரிச்சு விட்டுட்டாங்க போல....அதான் ஆன்மிகம், சமையல்னு மாறிட்டாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

பயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா!

என் பதிவுக்கு லேடீஸே வர்றதில்லைன்னு ஒரு புகார்.. அதான் ஹி ஹி/////////

இந்த மாதிரி புகார் பண்ணவன் யாரு? அவன் மட்டும் என் கைல கெடச்சான்..... தக்காளி.... சட்னிதான்.........

Unknown said...

இன்னிக்கி எதோ கில்மாவ பாத்திருச்சி பய புள்ள எல்லாரும் உசாரா இருங்க 9 மணி பதிவு போடுவாரு ஹிஹி!

ராஜி said...

ஆனந்தவிகடன், சுட்டிவிகடன்,சக்திவிகடன், இப்ப அவள்விகடன் இனி நாணயவிகடன், பசுமைவிகடன்.., னு தங்களின் "சுடும்" பணி தொடர என் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// விக்கி உலகம் said...
இன்னிக்கி எதோ கில்மாவ பாத்திருச்சி பய புள்ள எல்லாரும் உசாரா இருங்க 9 மணி பதிவு போடுவாரு ஹிஹி!///////

ஓ இன்னிக்கு சிகுனல் இதுதானா....? அப்போ ரெடியாகிக்க வேண்டியதுதான்......!

Unknown said...

இது என்னோட பதிவு கம்மு பன்னி.....

http://vikkiulagam.blogspot.com/2011/04/blog-post_18.html

ராஜி said...

எனக்கு இதுநாள் வரை வத்தக் கொழம்பு வைக்க தெரியாது(வத்தக் கொழம்பு மட்டும்தானானு கேட்கக்கூடாது). இனி இந்த குறிப்பைப் பார்ட்த்ஹ்டுட்டுதான் செய்யனும். குறிப்புக்கு நன்றி

Unknown said...

பிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
பிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு!////////

இப்பத்தான் எல்லா கணவர்களும் நல்லா சமைக்கிறாங்களே.... பெண்களுக்குன்னு அவர் வெச்சது கரெக்ட்டுத்தான்யா........ !

Unknown said...

ஏன்யா உங்க வீட்ல உனக்கு சாப்பாடு கொடுக்கறதே அதிகம்.....நீ நல்லவனாட்டும் வீட்ல நடிக்கறையா டவுட்டு!

Unknown said...

அப்புறம் சிபி.....வேற என்ன விஷயம் ஊர்ல மழை பெய்யுதா!

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கி உலகம் said...
பிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு!////////

இப்பத்தான் எல்லா கணவர்களும் நல்லா சமைக்கிறாங்களே.... பெண்களுக்குன்னு அவர் வெச்சது கரெக்ட்டுத்தான்யா........ !"

>>>>

ரைட்டு

ஹேமா said...

சிபி....வாழ்க வளர்க.தோசையும் இடிச்ச தேங்காய் சம்பலும் ...ஊர் ஞாபகம் வருது சிபி !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி உலகம் said...
அப்புறம் சிபி.....வேற என்ன விஷயம் ஊர்ல மழை பெய்யுதா!/////

பேஞ்சா என்ன பண்ணுவ.... பேயலேன்னா என்ன பண்ணுவ?

ரஹீம் கஸ்ஸாலி said...

இப்ப சமையல் குறிப்பா....பெண்கள், வாலிபர்கள்,பக்தர்கள்ன்னு அண்ணே எல்லா ஏரியாவையும் கவர் பண்ணிடறாரே...

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கி உலகம் said...
அப்புறம் சிபி.....வேற என்ன விஷயம் ஊர்ல மழை பெய்யுதா!/////

பேஞ்சா என்ன பண்ணுவ.... பேயலேன்னா என்ன பண்ணுவ?"

>>>>>>>

ஒன்லி சிங்கள் நோ டபுள் ஹிஹி!

Unknown said...

ஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்!

சி.பி.செந்தில்குமார் said...

>> ரஹீம் கஸாலி said...

இப்ப சமையல் குறிப்பா....பெண்கள், வாலிபர்கள்,பக்தர்கள்ன்னு அண்ணே எல்லா ஏரியாவையும் கவர் பண்ணிடறாரே...

iruwdhaalum இருந்தாலும் ராம்சாமி மாதிரி கவர் பண முடியுமா? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்!

தக்காளி.. ஒழுங்கா இங்கேயே இருய்யா... தனியா இருக்க பயமா இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா said...

சிபி....வாழ்க வளர்க.தோசையும் இடிச்ச தேங்காய் சம்பலும் ...ஊர் ஞாபகம் வருது சிபி !

தமிழ்நாட்டுக்கு வந்திருக்கீங்களா?ஹேமா/

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

ஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்!

தக்காளி.. ஒழுங்கா இங்கேயே இருய்யா... தனியா இருக்க பயமா இருக்கு"

>>>>>>

"உனக்கேவா" ஆச்சர்யகுறி?

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

பிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு!

கவலைப்படாதேய்யா.. அடுத்து வயித்தால போறவங்களுக்குன்னு ஒரு மெடிக்கல் பதிவு போடரேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

" சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

ஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்!

தக்காளி.. ஒழுங்கா இங்கேயே இருய்யா... தனியா இருக்க பயமா இருக்கு"

>>>>>>

"உனக்கேவா" ஆச்சர்யகுறி?

தக்காளி.. தெளீவா பேசுய்யா ஒண்ணும் விளங்கலை

Unknown said...

நான் தெளீவாத்தான்யா இருக்கேன் உனக்கு தான் யாரோ மந்திரிச்சி விட்டு இருக்காங்க ஹிஹி!

Unknown said...

"கவலைப்படாதேய்யா.. அடுத்து வயித்தால போறவங்களுக்குன்னு ஒரு மெடிக்கல் பதிவு போடரேன்"

>>>>>>>>>>>>

அய்யய்யோ இவன் போடுற ரெகுலர் பதிவே போதும்னு பதிவுலகம் அல்லு இல்லாம ஓடப்போகுது.......

சாந்தி மாரியப்பன் said...

இப்பல்லாம் வீட்ல உங்க சமையல்தானா :-)))))

சி.பி.செந்தில்குமார் said...

>>அமைதிச்சாரல் said...

இப்பல்லாம் வீட்ல உங்க சமையல்தானா

hi hi ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

MANO நாஞ்சில் மனோ said...

இம்புட்டு குத்து வாங்கிட்டுத்தான் எனக்கு இன்பர்மேஷன் தந்தீராக்கும் ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
நல்லவன் எனக்கு நானே நல்லவன்

- தொலைவில் கேக்குது FM பாட்டு!///

அண்ணே அதை நாங்க சொல்லணும்...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
பயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா!//

அப்போ எல்லாம் பிளான் பண்ணிதான் பன்னாடை நடத்துறாரா....

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
அருவா///


நான் அறுபது....

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
நல்லவன் எனக்கு நானே நல்லவன்

- தொலைவில் கேக்குது FM பாட்டு!///

அண்ணே அதை நாங்க சொல்லணும்..."

>>>>>>>>>>>>

யோவ் நான் சிபிய சொன்னேன்யா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
" MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
நல்லவன் எனக்கு நானே நல்லவன்

- தொலைவில் கேக்குது FM பாட்டு!///

அண்ணே அதை நாங்க சொல்லணும்..."

>>>>>>>>>>>>

யோவ் நான் சிபிய சொன்னேன்யா ஹிஹி//

அதுதான் அப்பமே தெரியுமே....

rajamelaiyur said...

இதை யார் சாப்புடுறது
?

உணவு உலகம் said...

கவர்ச்சில கலக்கீட்டீங்க! சமையல் குறிப்பிலும் கவர்ச்சி படம். ம் ம் ம்.

பொ.முருகன் said...

சமையல் குறிப்புல தக்காளி சேக்காத குறைய,நண்பர்கள் பலர் பின்னூட்டத்துல போட்டு நீக்கிட்டாங்க.

சென்னை பித்தன் said...

அஷ்டாவதானி சி.பி.அவர்களுக்கு வாழ்த்துகள்!

Unknown said...

ஸ்டில்ஸ் போட்டத்தால தான் பொறுமையா கேளம்புரன்..
ரிலாக்ஸ் ஆவம்னு பாஸ் பக்கம் வந்தா இப்பிடி பண்ணுரியலே...
அடுத்த பதிவு வந்திச்சு மைனஸ் ஒட்டு தான் ஹிஹிஹி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Jana said...

நாள்தோறும்...அட்ரா சக்கையில் சிறப்பான தகவல்களை பெற அனைவரும் வாருங்கள்...

ஆன்மீக சிந்தனைகள், சமயற்குறிப்பக்கள், குழந்தைகள் உலகம், மங்கையர் அரங்கம், விளையாட்டு திடல், என்று நீங்கள் எண்ணாத கோணத்தில் புதிய நடையில் அட்ரா சக்கை...:)

>>>>நாங்க படிக்கிறது நம்பர் வன் வலைப்பூ! அப்ப நீங்க..!!<<<<

சரிதானே தலை??? :)

செங்கோவி said...

என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது!

ராஜி said...

கலக்குங்க

Jaleela Kamal said...

நல்ல இரூக்கு
நான் சமையலில் ஆழாக்கு என்ரூ தான் குறிப்பிடுகீறேன்
எல்லோருக்கும்புரியுதான்னு தான்னு தெரிய
இத பார்த்தவஙக் புரிந்து இருப்பாங்க