Saturday, April 16, 2011

சுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)

http://clipart.peirceinternet.com/png/reading-child.png 

1.மதிய உணவு

மதிய உணவுக்கான நேரம்... அந்தப் பள்ளியின் மரத்தடி, வராண்டா எங்கும் சுட்டிகள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். நித்யா வகுப்பு அறையைவிட்டு வெளியே வர, கையில் சாப்பாட்டுப் பையுடன் அம்மா. ''எல்லோரும் வந்து பத்து நிமிஷம் ஆச்சு... நீ ஏன்டி இவ்வளவு நேரம் கழிச்சு வரே?'' என்று கேட்டாள் அம்மா. ''அது...வந்து...'' என்று நித்யா தயங்க...
  ''தெரியும் சொல்லாதே! எழுதிகிட்டு இருந்திருப்பே'' என்ற அம்மா, 

ஒரு சுட்டியிடம் ''உன் பேர் என்ன?'' என்று கேட்டாள்.

  ''அனிதா'' என்றாள் அவள். '

'என்ன படிக்கறே?'' ''தேர்ட் ஸ்டாண்டர்ட்''

  ''ஓ! நித்யா கிளாஸ்தானா?'' 

 ''ஆமா!'' என்றாள்.

உடனே நித்யா பக்கம் திரும்பிய அம்மா ''இவளைப் பாரு! கரெக்டா வந்து க்ளீயரா சாப்பிட்டுகிட்டு இருக்கா. நீ இப்ப பெல் அடிச்சுடுவாங்கன்னு அரைகுறையா சாப்பிடுவே. ஒருநாள் பிரின்ஸ்பால் கிட்ட சொன்னாதான் நீ சரிப்படுவே'' என்றாள்.

''போதும் நிறுத்தும்மா! இவங்க ஹோம் ஒர்க்கைப் பார்த்து கரெக்ஷன் போட லேட்டாயிடுச்சு. சாப்பாடு கொடுத்தாச்சு இல்லே. கிளம்பு'' என்றார் மூன்றாம் வகுப்பு மிஸ் நித்யா.
http://sabigames.com/wp-content/gallery/blog/sad-child.jpg

போலீஸ் !


நேரம் செல்லச் செல்ல பாலுவுக்கு டென்ஷன் அதிகமானது. பத்து மணிக்கே எஸ்கேப் ஆவதாகப் பிளான். ''நீ எப்படியாவது வந்துடு பாலு... உன் திறமை மேலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எல்லாத்தையும் நாங்களே கொண்டுவரோம். அவங்களை அடிச்சு நொறுக்கிடணும்'' என்று சொல்லி இருந்தார்கள்.
வெளியே இருந்து மூன்று முறை சிக்னல் வந்துவிட்டது. மெதுவாக எட்டிப் பார்த்தான் பாலு. 'ஒரு நிமிஷம் கிடைச்சாலே போதும். எஸ்கேப் ஆயிடலாம். ஆனா, இந்தப் போலீஸ்... இடத்தைவிட்டுக் கொஞ்சமும் அசையலையே’ என்று தவித்தான். அப்போது தொலைபேசி ஒலித்தது. வாசலில் இருந்த அவர் எழுந்தார். பாலு சட்டெனப் பதுங்கினான். அவர் உள்ளே வந்து போனை நெருங்க...


  அந்த சில நொடிகளில் 'குபீர்’ என வெளியே பாய்ந்துவிட்டான். திரும்பிப் பார்த்த அவர், ''டேய்... டேய்!'' என்று கத்தினார். ''என்ன... கோட்டை விட்டுட்டியா? என்ற இன்ஸ்பெக்டரிடம், ''ஸாரி சார்... ரொம்பக் கவனமா பார்த்துட்டு இருந்தேன்... அப்படியும் டிமிக்கி கொடுத்துட்டு ஓடிட்டான் சார்!'' என்றார் அந்த கான்ஸ்டபிள்.

''பாருடீ உன் பையனை... எங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாட ஓடிட்டான்!'' என்று நொந்து
கொண்டார் அந்த இன்ஸ்பெக்டர் அப்பா.

http://mindspower.com/wordpress/wp-content/uploads/2010/10/mother_child.jpg
3.எக்ஸ்பிரஸ் ! 

''அம்மா நான் கிளம்பறேன்'' என்றான் முரளி. ''சீக்கிரம் போ! நேத்து மாதிரி எக்ஸ்பிரஸ் வந்துடப் போகுது!'' என்றாள் அம்மா.
''இல்லேம்மா அதுக்குள்ளே போய்டுவேன்'' என்றபடி கிளம்பினான்.
நேற்று கிளம்பும் நேரத்தில் சைக்கிள் டியூப் பஞ்சர். கடைக்குப் போனால் பஞ்சர் ஒட்டுபவர் எங்கோ போய் இருந்தார். பிறகு ரெடி செய்துகொண்டு போவதற்குள் எக்ஸ்பிரஸ் போய்விட்டது. இன்று எழுந்ததும் சைக்கிளை சரி பார்த்துவிட்டான். 

அதனால் தவற விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டே தெரு முனைக்கு வந்தான். கடைசி வீட்டு, பாட்டி நின்றிருந்தார். ''முரளி ரெண்டு நாளா காய்ச்சல். என்னை ஆஸ்பத்திரியில விட்டுடறியா?'' என்றார்.


ஆஸ்பத்திரி இருப்பது எதிர் திசையில்... பாவம் பாட்டிக்கும் வீட்டில் யாருமில்லை. அதனால், மறுக்க முடியாமல் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்று ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தினான். அடுத்த நொடியே மின்னலாக கிளம்பினான். ''நன்றிப்பா'' என்ற பாட்டியின் குரல் காற்றில் கரைந்தது. சரியான நேரத்துக்கு வந்து, சைக்கிளை நிறுத்தினான். எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. டயம் இருந்தது.


அந்த லெவல் கிராஸிங்கில் காத்திருந்த பேருந்துகளில் தூக்கு பாத்திரத்தோடு ஏறியவன், ''சுண்டல்! சுண்டல்'' என்று விற்க ஆரம்பித்தான்.

61 comments:

குரங்குபெடல் said...

பிராயசித்தமான பதிவா ?
0 + போடலையா ...?

செங்கோவி said...

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் எனக்கே!

செங்கோவி said...

ஆஹா..முந்திட்டாங்களே..என்னாச்சு அண்ணனுக்கு?..நைட் வரைக்கும் நல்லாத்தானே இருந்தாரு!

சி.பி.செந்தில்குமார் said...

udhavi iyakkam said...

பிராயசித்தமான பதிவா ?
0 + போடலையா ...?

hi hi ஹி ஹி நல்லவனுக்கு நல்லவன்

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

ஆஹா..முந்திட்டாங்களே..என்னாச்சு அண்ணனுக்கு?..நைட் வரைக்கும் நல்லாத்தானே இருந்தாரு!

ஹி ஹி பகல்ல மட்டும் ...??//

Unknown said...

பாருங்கப்பா இந்த முடிவ இந்த நல்லவன் ஏன் எடுத்தான்னு கேளுங்க!

Unknown said...

மாப்ள செங்காவி உன் ப்ளோக்ல சிபிய புகழ்ந்து சொல்லி இருந்தேனே பயபுள்ள கிட்ட சொன்னியா!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

பாருங்கப்பா இந்த முடிவ இந்த நல்லவன் ஏன் எடுத்தான்னு கேளுங்க!


இனி வாரா வாரம் சனிக்கிழமை மட்டும் நல்லவன் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

மாப்ள செங்காவி உன் ப்ளோக்ல சிபிய புகழ்ந்து சொல்லி இருந்தேனே பயபுள்ள கிட்ட சொன்னியா!

நீ தானே.. கண்டபடி திட்டி இருப்பே.. நான் போய் பார்த்து கேவலப்படனுமா?

ராஜி said...

என்னாது இது?

ராஜி said...

சிபி சார் அநியாயத்துக்கு இப்புடி நல்ல புள்ளையா மாறிட்டார்

Unknown said...

"பதிவுலகம் அதிர்ச்சி திருந்திய பதிவர் திருத்தியது யாரோ!"

Unknown said...

இன்னும் படிக்கிறாங்களோ கதைகள.....இல்ல.. அதிர்ச்சில இருக்காங்களா டவுட்டு!

ராஜி said...

சிபி பக்கங்களிலும் விடுமுறை கொண்டாட்டமா?

ராஜி said...

என்ன இந்த மாற்றமோ?!

ராஜி said...

சிலேட்டு

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

என்னாது இது?

நேற்று இல்லாத மாற்றம் என்னது?

ராஜி said...

பல்பம்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

சிபி சார் அநியாயத்துக்கு இப்புடி நல்ல புள்ளையா மாறிட்டார்

நல்லவன் எனக்கு நானே நல்லவன் , பதிவிலும், கமெண்ட்டிலும் வல்லவன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"பதிவுலகம் அதிர்ச்சி திருந்திய பதிவர் திருத்தியது யாரோ!"

மாறியது நெஞ்சம் .. மாற்றியவர் யாரோ..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இன்னும் படிக்கிறாங்களோ கதைகள.....இல்ல.. அதிர்ச்சில இருக்காங்களா டவுட்டு!

கத கேளு கத கேளு சி பி ட்ட கத கேளு.. அழகாக சுவையாக சுட்டு வந்த கத கேளு

Unknown said...

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் ஹூம் ஹூம்!

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

சிபி பக்கங்களிலும் விடுமுறை கொண்டாட்டமா?

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு.. கொண்டாடக்கண்டு பிடிச்சு கொண்டா ஒரு டாவு

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் ஹூம் ஹூம்!

தென் பாண்டிச்சீமையிலே.. தேர் ஓடும் வீதியிலே யார் அடிச்சாரோ.. கண்ணை யார் அடிச்சாரோ..

ராஜி said...

கிரேயான்ஸ்

Unknown said...

எங்கே நிம்மதி...........எங்கே வெண்மதி!

செங்கோவி said...

இண்ட்லில இன்னும் இணைக்கலியா..நாங்கள்லாம் ஆஃபீஸ் போக வேண்டாமா..

ராஜி said...

ஸ்கூல்பேக்

ராஜி said...

லஞ்ச்பேக்

Unknown said...

யோவ் மாப்ள இன்னிக்கி காலையில இருந்து இன்ட்லிக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க!

ராஜி said...

ஷீ, சாக்ஸ்

ராஜி said...

வாட்டர் கேன்

rajamelaiyur said...

நல்ல கதை

ராஜி said...

புத்தகம்,

ராஜி said...

பென்சில்பாக்சு

ராஜி said...

எப்படியும் சகோ நாஞ்சில் மனோ வந்து இப்படிதான் கமெண்ட் போட போறர். அதான் நான் முந்திக்கிட்டேன்.

ராஜி said...

ஒரு மனுசன் இண்டிலில இணைக்க முடியாம லோல் படுறேன் என்ன இங்க சின்ன புள்ளத்தனமா விளையாட்டு இங்க. Raskals
By
சிபிசார்

ராஜி said...

Where is shop owner

ராஜி said...

2020 Bloggers list லயும் முதலிடம் பிடிக்க இப்பலிருந்தே வருங்கால bloggers காக்கா பிடிச்சு வைக்கும் சூழ்ச்சியா இது?#davubt#

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல என்னாச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல என்னாச்சு?

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

சக்தி கல்வி மையம் said...

தல நான் லேட்டு..

சக்தி கல்வி மையம் said...

6-10 கரன்ட் கட்..

சக்தி கல்வி மையம் said...

குட்டி கதைகள் எப்பவுமே படிக்க நல்லாயிருக்கும்..
சூப்பர் புதிய களம்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி.அண்ணன் இப்ப எல்.கே.ஜி யில சேர்ந்திட்டாருண்ணு ஊருக்குல்ல பேசிக்கிறாங்க அது உண்மையா?

சசிகுமார் said...

கதைகள் அருமை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இனிமையான குழந்தைகளின் ஞாபகங்கள் செந்தில்!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. சூப்பர்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களிடம் இருந்து ஒரு வித்தியாசமான பதிவு...

வாழ்த்துக்கள்..

ரஹீம் கஸ்ஸாலி said...

சுட்டிகதைகளான குட்டிக்கதைகள் ஒவ்வொன்றும் அருமை. கவர்சி படம் போட்டதற்கு பரிகாரம் தேடிக்கிட்டீங்க...

Sivakumar said...

பள்ளி விடுமுறையில் இருக்கும் எனக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தது இப்பதிவு. நன்றி சார்.

Thirumalai Kandasami said...

கதைகள் மிக அருமை,,வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

குட்டி பிள்ளைங்களும் படிக்க வசதியா போச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

//udhavi iyakkam said...
பிராயசித்தமான பதிவா ?
0 + போடலையா ...?//

ஹா ஹா ஹா ஹா.....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

பாருங்கப்பா இந்த முடிவ இந்த நல்லவன் ஏன் எடுத்தான்னு கேளுங்க!


இனி வாரா வாரம் சனிக்கிழமை மட்டும் நல்லவன் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன் ஹி ஹி//

எப்பிடியோ நாசமா போனா சரி...

நிரூபன் said...

இவ்வளவு நாளும் கொழந்தைங்களை பெற்றோர் போகக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்த அடல்ஸ் ஒன்லி தளத்தில்.. மழலைகள் கதையா...

ஹி...ஹி..

நிரூபன் said...

முதலாவது கதை- மதிய உணவு.. கருமமே கண்ணாக இருக்கும் நித்தியா டீச்சரினைப் பற்றிக் கூறுகிறது, கதையின் மொழி நடையும், சஸ்பென்ஸாக நித்தியா டீச்சரையும் ஒரு மாணவி போலக் காட்டி முதற் கதையினை நகர்த்தி, பின் நவீனத்துவம் புகுத்தி, கதையின் இறுதியில் ஆசிரியராகக் காட்டிய விதம் கதைக்கு அணி சேர்க்கிறது.

நிரூபன் said...

போலிஸ் கதையும், அழகான மொழி வளத்துடன் பின் நவீனத்துவமாகவே வந்துள்ளது.

நிரூபன் said...

முதலிரண்டு கதைகளும்(மதிய உணவு, போலீஸ்) ஒரே மாதிரியான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது கதை....எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு இணையாகத் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக அல்லது தன் வறுமையினைப் போக்க உழைக்கும் ஏழைச் சிறுவனைப் பற்றிய பார்வையினை அழகாக வெளிக் கொணர்ந்திருக்கிறது.

நிரூபன் said...

மூன்றாவது கதையில் விடயப் பரப்பினைச் சுருக்கி, கதையினை வேகமாக நகர்த்தியுள்ளீர்கள். அரசியல் பதிவுகளுக்கு நடுவே இப்படியான அழகிய இலக்கிய நயங்களையும் பரப்பரப்பாகினால் சுவாரசியமாக இருக்கும் சகோ!