Wednesday, April 13, 2011

பணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பார்வை

Hilarious political cartoon images
 தேர்தல் கமிஷனின் பார்வைக்கும்  ஒரு பட்டியல் போய் இருக்கிறது.   பணத்தினால் வெற்றி முடிவு செய்யப்படும் தொகுதிகளின் நிலவரம் இங்கே...

1. மதுரை மேற்கு: மாவட்டத்திலேயே மிக
அதிகமாகப் பணம் விளையாடும் தொகுதி.  கவர்களைக் கொடுப்பதற்காக தொகுதிக்காரர் ஒருவரையும், பக்கத்துத் தொகுதிக்காரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புகிறார்கள். இரவில் பட்டுவாடா முடிந்ததும் காலையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு போன் செய்து, 'கவர் வந்துச்சா?’ என்று கேட்டு உறுதி செய்கிறார்கள். யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்! 

2. மதுரை மத்தி:  மேற்கு தொகுதியைப்போலவே இங்கும் பட்டுவாடா டீம் பக்கா. அபார்ட்மென்ட்கள், வசதியான குடியிருப்புகளைக்  கவனிப்பதற்காக வக்கீல்கள் தலைமையில் 'கவர் டீம்’ போட்டு இருக்கிறார்கள். மற்ற இடங்களில் பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது!

3. மதுரை வடக்கு:  இந்தத் தொகுதியில் இடத்துக்கு ஏற்ப ஓட்டுக்கு 100 முதல் 1,000 வரை அனல் பறக்கிறது. நிலைமை இழுபறியாகலாம் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, இங்கு பணம் இப்போது தாறுமாறாய்ப் பாய்கிறது!


4. மேலூர்: இங்கே நிலைமை உல்டா.  வேட்பாளர் வேகமாக முன்னேறுகிறார் என்றதுமே, ஓட்டுக்குக் கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகிகள் பலரும் பதுக்கிவிட்டார்கள். கடைசி நேரம் என்பதால், இப்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் 200 முதல் 500 வரை சப்ளை ஆகிறது!

5. திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.

6. மானாமதுரை:  ஓட்டுக்கு 200 என்ற கணக்கில் 80 ஆயிரம்  பேருக்கு கவர்கள் போய்விட்டதாகப் பேச்சு.  இதில் இடையில் சில ஆட்கள் சுருட்டியதும் நடந்து இருக்​கிறது.

7. சங்ககிரி: சுற்றி உள்ள கிராமங்களில் 500 வரை கைகளில் திணிக்கப்பட்டு இருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் பசையோடு நடமாடுகிறார்கள்.

8. மேட்டூர்:  ஓட்டுக்கு 500 என்று பட்டுவாடாவைத் தொடங்கிவிட்டனர்.


9. வேலூர்:  எப்போதும்போல இல்லாமல் இந்த முறை வைட்டமின் 'ப’-வுடன் பலரும் திரிகிறார்கள்.   வேண்டியவர்கள் மூலம் நபருக்கு 300 வீதம்  வழங்கப்படுகிறது. பணத்தைக் கொடுத்து விட்டு ஒருவர் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கணும் என்று சொல்ல உடன் வந்தவர்கள் அந்த ஆளை அடித்து திருத்தி இருக்கிறார்கள்.

10. காட்பாடி:  கடுமையான போட்டி காரணமாக திடுமெனப் பணம் இறைக்கத் தொடங்கிவிட்டார்கள். நபருக்கு 300 முதல் 700 வரை போணி ஆகிறதாம். அடுத்த  தரப்பிலும் இறங்கிவிட்டார்கள்.   300 முதல் 500 வரை பட்டுவாடா ஆகிறதாம்!

11. கீழ்வைத்தியணான் குப்பம்:   300 தாராளமாகக் கையில் விளையாடுகிறது!

12. சோளிங்கர்: கட்சி வேட்பாளரை விட சுயேச்சை ஒருவர்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

13. திருச்சி மேற்கு:  பவர் கட்டாகும் சமயத்தில் படபடவெனப் பண விநியோகம் நடக்கிறதாம். சில நேரத்தில், 'இந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்... அந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்’ என்று அதிகாரிகளுக்குத் தகவல் பறக்கிறது. அதிகாரிகள் அங்கு சோதனைக்கு செல்லும் நேரத்தில், வேறு ஒரு இடத்தில் கமுக்கமாக விநியோகம் நடக்கிறதாம். கொடுக்கப்படும் பணம் 500!

14. ஸ்ரீரங்கம் : 'பணம் கொடுத்தாலும், பணம் பெற்றாலும் கைது செய்யப்படுவார்கள்’ என்ற தேர்தல் கமிஷனின் விதி இங்குதான் அமலானது. பணம் கொடுத்தவர்களில் பிரதானமானவர் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்!

15. லால்குடி:  அதிகாலையில் நியூஸ் பேப்பரைப்போல சரசரவென வேஷ்டி, சேலைகள் சப்ளை ஆகின்றன. அந்தத் துணியைப் பிரித்துப் பார்த்ததும், கூடுதல் உற்சாகம் அடைகிறார்கள். காரணம் செல்லோ டேப் வைத்து துணிக்குள் ஒட்டிருக்கும் 500 நோட்டு!

16. நாகப்பட்டினம்:  பண விநியோகப் பொறுப்பு தெருவில் ஒருவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. சில நோட்டுகளை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பார். தெருவில் இருப்பவர்கள் வெளியே கிளம்பினால், அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே பாக்கெட்டுக்குப் பணத்தை மாற்றிவிடுவார்!

17. பாப்பிரெட்டிப்பட்டி:   200 முதல் 500 வரை பரவலாக பட்டுவாடா நடக்கிறது!

18. தளி: பலமான கூட்டணி என்றாலும்  நூலிழையில் சறுக்கிவிடக் கூடாது என்று பயம். அதனால், கையில் எடுத்திருக்கும் ஆயுதம், பணம்!

19. திருவாரூர்: 500 விநியோகம் அமோகமாய் நடக்கிறது. கட்சியின் அடிமட்டக் கிளை செயலாளர்கள் வரை பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்தாலும், காவல் துறை கண்டுகொள்ளவே இல்லை!

20. நன்னிலம்:  ஆளும் கட்சிக்காரர்களுக்கு 500. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு 1000 அள்ளித் தருகின்றனர். அதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களை எதிர்க் கட்சி என்றே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்!

21. கும்பகோணம்:  இங்கே முதல் கட்ட  விநியோகமே 1,000 என்று தொடங்கிவிட்டார்கள். 'ப’ தவிர வேறு எதுவும் கை கொடுக்காது என்பதில் தெளிவாக இருப்பதால், குடும்பம் ஒன்றுக்கு 5,000 கடைசிக் கட்டத்தில் கொடுக்கிறார்கள்!

22. பேராவூரணி:  கிளை ஒன்றுக்கு 10,000 மட்டுமே கொடுக்கப்படது. இதை எப்படி வாக்காளர்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பது என விழிக்கிறார்கள்!

23. அரவக்குறிச்சி:  தொகுதி முழுக்க பணம் விளையாடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.

24. விழுப்புரம்:   500 தொடங்கி 1,000 வரை அள்ளிவிடப்படுகிறது!

25. திருவண்ணாமலை:  முதல் ரவுண்டிலேயே 500 கொடுத்து குளிப்பாட்டிவிட்டனர். இரண்டாவது சுற்று ஆரம்பம்!

26. அந்தியூர் :  கூடுதல் வாக்குகள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து, வீட்டுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த கூப்பனைக் கொடுத்து ஒரு டி.வி.எஸ். சூப்பர் எக்ஸ்.எல். வண்டி வாங்கிக்கொள்ளலாமாம். 'இதுக்குப் பிறகும் ஓட்டை மாத்தியா போடப் போறாங்க..?!’ என்பது  நினைப்பு!

27. மடத்துக்குளம்:   500 தொடங்கி 1,000 வரை கொடுப்பதுடன,  சில பல வீடுகளுக்கு மிக்ஸியும். 

28. கன்னியாகுமரி:  படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது!

29. ஆத்தூர் : தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதிக்குள் இருக்கும் நம்பிக்கையானவர்கள் வீடுகளில்  பணத்தைப் பதுக்கிவிட்டனர்.  வீடு வீடாக 500 முதல் 3,000 வரை கொடுத்து முடித்துவிட்டனர். கரை வேட்டி கட்டாத நபர் நிதானமாக வீடு வீடாகப் போய்ப் பட்டுவாடா செய்கிறார்!

30. தூத்துக்குடி:  பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், டோக்கன் முறையைக் கையாளுகிறார்கள். 

31.  திருச்செந்தூர்:  தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது!

32. ஸ்ரீவைகுண்டம்:  'பணம் கொடுக்கிறாங்க’ என்று திடீர் திடீரென வதந்திகள் பரவி மக்கள் ஆளாய் பறக்கிறார்கள்.

33. ஓட்டப்பிடாரம்:  பணம் இறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, ஆங்காங்கே கோயில் பிரசாதம்போல குறைந்த அளவாக மட்டும் பட்டுவாடா நடக்​கிறது!

34. அருப்புக்கோட்டை:  தேர்தல் அறிவிப்பதற்கு சில மாதம் முன்பே, பிள்ளையார் சுழி போடப்பட்டது. அடுத்த கட்டமாக, டோக்கன் மூலம் 500 விநியோகம் நடைபெற்றது. வீட்டுக்கு ஒரு கூப்பன் வழங்குகிறார்கள். அந்த கூப்பனுக்கு 3,000 மதிப்புள்ள அன்பளிப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்படுகிறது!

35. திருச்சுழி:  ஓட்டுக்கு 500 என்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் தொகுதி முழுவதும் செலவழிக்கிறார்கள். யாரா இருந்தாலும்... காசு!

36. விருதுநகர்:  கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்!

37. பெரம்பலூர் : வாக்காளர்களின் செல்போனுக்கு டாப்- அப் பண்ணிக் கொடுப்பது, இலவசமாக சிலிண்டர் சப்ளை செய்வது என பெண்களைக் கவர்கிறார்கள்!

38. ஜெயங்கொண்டம்:   வார்டு பொறுப்பாளர்கள் மூலமாக இரவோடு இரவாக ஓட்டுக்கு 200 வீதம் அள்ளி வீசி அனைவரையும் கவர் செய்துவிட்டார்கள்! 

39. போடி:  சிட்டிங் எம்.எல்.ஏ லட்சுமணனின் அண்ணி பரிமளாவைப் பணம் கொடுத்ததாக போலீஸார் கைது செய்த பின்னரும் பட்டுவாடா நடக்கத்தான் செய்கிறது. அந்தப் பக்கம், ஓட்டுக்கு 1,000 என விநியோகம் நடக்கத் தொடங்க, அசந்து நிற்கிறார்கள் மக்கள்!   

40. ராதாகிருஷ்ணன் நகர்:  சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்!

41. கொளத்தூர்:  கடந்த ஒரு வாரமாகவே வார்டு வாரியாக இரவு 9 மணிக்கு மேல் கரன்ட் கட் ஆகிப் பண விநியோகம் வெள்ளமாகப் பாய்ந்தது. ''நம்ம ஏரியாவுக்கு எப்ப கரன்ட் கட் பண்ணுவீங்க?'' என்று கேட்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்தி இருந்தனர். ஏரியாவில் பேப்பர் போடும் ஆட்களை எல்லாம் ஒரு இடத்தில் அழைத்து மீட்டிங் போட்டு இருக்கிறார்கள். பேப்பரில் பணம் விழவும் வாய்ப்பு இருக்கிறது!

42. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: முஸ்லிம்கள் ஓட்டுகள் அதிகம் என்பதால், அவர்களைக் குறிவைத்து பணம் விநியோகம் நடக்க ஆரம்பித்தது. கவுன்சிலர் தலைமையிலான குழுதான் பணத்தை விநியோகம் செய்கிறது!

43. மயிலாப்பூர் :  எப்படியும் வெல்ல வேண்டும் என்று... பண விநியோகம் ஏரியாவில் பாய்கிறது. காங்கிரஸின் போட்டி வேட்பாளர் மட்டும் இதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்!

44. விருகம்பாக்கம்.:  குடிசை வாழ் மக்களில் யாராவது 2,000 ரூபாய்க்குள் தாலி, தோடு, மூக்குத்தி, வளையல் என்று எதையாவது மார்வாடிக் கடையில் அடகு வைத்திருந்தால், வீடுகளுக்கு வந்து அந்த ரசீதை கேட்டு வாங்கிப் போகிறார்கள். மார்வாடிக் கடையில் பணத்தை செட்டில் செய்துவிட்டு, 'இன்னார் வருவார்... அவரிடம் நகையை கொடுத்துவிடவும்' என்று சொல்லிப்போகிறார்கள்!

45. திருவள்ளூர்:  கூரியர் கம்பெனி மூலம் தபால் வரும் பாணியில் பணம் பட்டுவாடா நடக்கிறது. சென்னையில் இருந்து மின்சார ரயிலில் பணம் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு பார்சல் வருகிறது. அதை எடுத்துச் செல்லும் பைக் ஆசாமிகள், கூரியர் தபால் பைகளை அள்ளிக்கொண்டு பறக்கிறார்கள். 1,000 வீதம் வீடுகளுக்கு கவர் விநியோகம் நடக்கிறது!

46. அம்பத்தூர்:   நள்ளிரவில் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தால், குறிப்பிட்ட மத ஸ்தலத்துக்கு பெண்களை அழைக்கிறார்கள். ஆண்கள் போகலாம். ஆனால், வாசலில் நிற்க வேண்டும். பெண்களிடம் கவர்கள் தரப்படுகின்றன. தலைக்கு 1,000 வீதம் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி பணம் கவரில் இருக்கிறது. பெண்கள் இல்லாத வீடுகளில், ஆண்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாறுகிறது! 

47. திருவொற்றியூர்': டோல்கேட் அருகே மீனவக் குப்பத்து மக்களிடம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பணம் விநியோகம் செய்ய... தகவல் போய் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை வந்தது. உடனே அந்த இளைஞர் 21,000 மட்டும் தெருவோரம் வீசிவிட்டு, பைக்கில் தப்பினார். ஹவாலா ஸ்டைலிலும் பணம் கை மாறுகிறது. சிறு துண்டு பேப்பரில் அம்புக் குறி வரையப்பட்டு இருக்கும். அந்த பேப்பரை குறிப்பிட்ட வீட்டில் போய்க் கொடுத்தால், 1,000 தருகிறார்கள்!

48. கும்மிடிப்பூண்டி : வினோதமான முறையில் இங்கு பணப் பட்டுவாடா நடக்கிறது.   கார்கோ ஜீன்ஸில் இடுப்பில் இருந்து கால் வரை உள்ள பகுதிகளில் நிறைய பாக்கெட்டுகள் இருக்கும். அந்த பாக்கெட்டுகள் முழுவதும் கரன்ஸிகள். எங்கே பணம் தேவை என்று செல்போன் அடிக்கிறார்களோ, உடனே அந்த படை ஸ்பாட்டில் ஆஜராக... பணம் கைமாறுகிறது.

49. ஆலந்தூர்: இங்கே   500 நோட்டுகளை அமர்க்களமாக விநியோகம் செய்கிறார்கள். கையும் களவுமாக சிலர் பிடிபட்டு இருந்தாலும், பணப்பட்​டுவாடா தொடர்கிறது.

50. மதுரவாயல்:   ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோக​மாக நடக்கிறது.


டிஸ்கி - நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..

39 comments:

பொ.முருகன் said...

தொண்டர் 1 : தேர்தல்ல தனக்கு ஒட்டு போடுற பத்துபேர குலுக்கல்ல தேர்ந்தெடுத்து கார் கொடுக்கப்போறதா தலைவர் சொன்னாரே,கொடுத்தாரா?

தொண்டர் 2 : எங்க, அவருக்கு ஓட்டுப்போட்டவங்களுக்கு கொடுத்தது ப்போக ரெண்டு காரு மீதி இருக்கு.

ராஜி said...

ம் ஜெயிச்சப் பிறகு வரேன்

Unknown said...

டாப்புங்கண்ணா........

ராஜி said...

நீங்க ஓட்டுப் போட்டுட்டீங்களா?

அஞ்சா சிங்கம் said...

அட ங்கோன்னியா பாரு ஒரு மைனஸ் ஒட்டு விழுந்திருக்கு ................

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி அதை நான் தான் போட்டேன்.. மைனஸ் ஓட்டு போடலைன்னா யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க.. ஹி ஹி

நெல்லி. மூர்த்தி said...

ஹி... ஹி... ஒரு வேளை பிரதமரின் வாக்குரிமை தமிழகத்தில் இருந்திருந்தால், அசாமில் செய்யத் தவறிய தனது ஜனநாயகக் கடமையை இங்குச் செய்திருப்பாரோ என்னவோ..?
காண்க: ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே!?
http://nellimoorthy.blogspot.com/2011/04/blog-post_12.html

சென்னை பித்தன் said...

குதிகாலில் வலி.அதோடு நடந்து போய் முக்கால் மணி வரிசையில் நின்று வாக்களித்து விட்டு வந்தேன்!ஒரு பைசா கிடைக்கவில்லை!நீங்கள் பணம் விளையாடுது என்கிறீர்கள்!!என்னவோ போங்க!

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. பெரும்பாலும் கிராமங்களில் தான் பணப்பட்டுவாடா..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எங்க ஊர்ல எல்லாம் இதைவிட அதிகம். (வந்தவரைக்கும் லாபம்?!)

Sathish said...

டிடெக்டிவ் செந்தில் அண்ணன் வாழ்க

குரங்குபெடல் said...

அப்ப திரும்பவும் தமிழ்நாட்டை லீசுக்கு
எடுத்துடடாங்கன்னு சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எங்க ஊர்ல எல்லாம் இதைவிட அதிகம். (வந்தவரைக்கும் லாபம்?!)

வந்தவரை லாபம் என நினைப்பதால் தான் நாம் நொந்தவர்கள் ஆகிறோம் நண்பா..

சி.பி.செந்தில்குமார் said...

udhavi iyakkam said...

அப்ப திரும்பவும் தமிழ்நாட்டை லீசுக்கு
எடுத்துடடாங்கன்னு சொல்லுங்க

அப்படி சொல்லிட முடியாது.. 234 தொகுதிகள்ல 50 தானே..

ரிஷி said...

//விருதுநகர்: கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்!//

நான் விருதுநகர் தொகுதிதான். இங்கு எந்த வேட்பாளரும் பணம் கொடுக்கவில்லையே! காங்கிரஸ் சார்பில் 200 வரும் என்றார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. ஓட்டும் போட்டுட்டு வந்தாச்சு!

சி.பி.செந்தில்குமார் said...

ரிஷி அண்ணே.. நீங்க படிச்சவரா இருக்கறதால எப்படியும் நமக்கு ஓட்டு விழாதுன்னு விட்டுட்டாங்க போல..

MANO நாஞ்சில் மனோ said...

நாஞ்சில் ஆஜர்.....

MANO நாஞ்சில் மனோ said...

//யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்! //

அடகொப்புரானே நமக்கு குடுத்து வைக்கலியே....

MANO நாஞ்சில் மனோ said...

// பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது!//

பாட்டியம்மா பணம் விடு தூது சரியா....

MANO நாஞ்சில் மனோ said...

//திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.//

இதுல மொத்தமா பெரிய தலைங்க சுருட்டி இருப்பானுங்க...

MANO நாஞ்சில் மனோ said...

// தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்!//

எப்பிடியெல்லாம் ரோசிக்கிரானுக....

MANO நாஞ்சில் மனோ said...

//. கன்னியாகுமரி: படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது!//

இதுல ஒரு திருத்தம். எங்க அம்மா, அண்ணன், அண்ணிங்க இன்னும் சொந்தகாரங்க, நண்பர்கள் பலருக்கும் போன் செய்து கேட்டேன், ஒருத்தருக்கும் பணம் தரப்பட வில்லையாம். ஒருவேளை பணம் ஒப்படைக்க பட்டவர்கள் சுருட்டி வைத்து கொண்டார்கள் என்றே சொல்கிறார்கள்.....

MANO நாஞ்சில் மனோ said...

//திருச்செந்தூர்: தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது!//

இங்கேயும் எல்லோருக்கும் பணம் கிடைக்கவில்லை...

MANO நாஞ்சில் மனோ said...

// ராதாகிருஷ்ணன் நகர்: சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்!//

பறக்கும் படையின் அதிரடி வாழ்க...

MANO நாஞ்சில் மனோ said...

//மதுரவாயல்: ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோக​மாக நடக்கிறது//

ஆக மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்கள்...

Unknown said...

பயபுள்ள என்னமா போடுது பதிவு நான் ஓட்டுக்கு 50000 செலவு பண்ணி இருக்கேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்டுப்போட செலவு பண்ணுனியா? இல்ல.... என யாருக்குத்தெரியும்? ஹி ஹி கோவை வர்றியா? இல்லையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கி - நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..

hi.....hi........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

how you collected these details? haaaaaaaaaaaaaaaaaa................

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

30 th vadai....

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா... அந்த ஊடக அனுபவம் பற்றி ஒரு தனி பதிவு போட்டா எங்களுக்கும் யூஸ் ஆகும்..

சேக்காளி said...

//நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..//
அதிகாலை நாலு மணிக்கு பேப்பர் கடை முன்னால தினகரன் நாளிதழை கோபத்துல கிழிச்சு போட்டது நீங்கதானா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

பணம் பட்டுவாடா கரூரில் நடந்தள்ளது. வேட்பாளர் பெயர் கடவுள் பெயரில் உள்ளது.

அக்கப்போரு said...

/**hi hi ஹி ஹி அதை நான் தான் போட்டேன்.. மைனஸ் ஓட்டு போடலைன்னா யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க.. ஹி ஹி**/

ம்ம்ம்ம் அண்ணே நீங்களே எலக்சன்ல நின்றுக்கலாம்

அக்கப்போரு said...

செய்றதையும் செஞ்சுட்டு கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்வோ இல்லாம காங்கிரஸ்காரத் _________ தமிழ்நாட்டுல எலக்சன்ல நிக்குறாயங்க. அப்ப நம்மள எவ்ளோ இளக்காரமா நினச்சுருக்காய்ங்க. இந்தத் தேர்தல்ல காங்கிரஸ்க்கு விழுகுற ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டுல இன்னும் எத்தன எட்டப்பன் மிச்சம் இருக்கன்னு காட்டும்.
செத்துப் போன பார்வதியம்மாளோட சமாதில நான் ஏத்துற ஒரு தீபமா காங்கிரஸ் + தி.மு.க. கூட்டனிக்கு எதிரா நம்ம போடுற ஓட்டு இருக்கட்டும்.

இப்டித்தான் காலேல இருந்து வீட்ல ஒவ்வொருத்தரையா கேன்வாஸ் பண்ணி தி.மு.க. கூட்டனிக்கு எதிரா ஓட்டுப் போட வச்சுக்கிட்டிருக்கேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்க ஊரு பத்தி போடவே இல்ல.....? (ஒருவேள அங்க எல்லாரும் திருந்திட்டாய்ங்களோ?)

Unknown said...

சந்தேகம் வந்தா கேட்டுடணும்னு எங்க டீச்சர் சொல்லி இருக்கிறதுனால:

1 .எப்படி இவ்வளவு டேட்டா சேகரித்தீர்கள்? ஊடகங்கள்ளேருந்தா? ஆச்சரியமா இருக்கு!

2. MANO நாஞ்சில் மனோ சொல்றாரு: //எங்க அம்மா, அண்ணன், அண்ணிங்க இன்னும் சொந்தகாரங்க, நண்பர்கள் பலருக்கும் போன் செய்து கேட்டேன்// அவருக்கு ஒரு அண்ணன் பல அண்ணிங்க. ம், ரிப்போர்ட் பண்ணலாமா?

Tex said...

சும்மா எதையாவது எழுதனும் தமிழ்மணத்துல பெயர் வரணுமுன்னு எழுத கூடாது

50 தொகுதி பேர் தெரிஞ்சா என்ன வேண்டுமானாலும் எழுதலாமா?

http://maidenpost.wordpress.com/ said...

என்னமோ நிறைய ஊர் பேர் போட்டு இருக்கீங்களே ! ! ! எங்க ஏரியாவில் நடக்கலையே ! !

நடந்தாலும் எங்களுக்கு எதுவும் வரலை
வருத்தம் தான் ஆனால் நிம்மதி இப்போ இருக்கு ! ! !