Tuesday, March 22, 2011

சமையல் பண்ணமாட்டேன்னு சலம்பல் பண்ணும் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி?

http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0911/27/images/img1091127022_1_1.jpg 

பொதுவா கணவன்மார்களை மிரட்ட இந்த பொண்டாட்டிங்க வெச்சிருக்கற 2 ஆயுதங்கள்ல சமையல் 2வது ஆயுதம்..முதல் ஆயுதம் என்ன?ங்கறதை தனி பதிவா தலையணை மந்திரம் போடும் தலைவியிடம் தப்பிப்பது எப்படி?ன்னு மறுக்கா போடறேன்..( மணி மேகலைப்பிரசுரம் ரேஞ்சுக்கு போய்ட்டமே...)

பெரும்பாலும் எல்லா சம்சாரங்களுமே ஒரே டெக்னிக்கைத்தான் ஃபாலோ பண்றாங்க..( சுமாரா நீ எத்தனை சம்சாரத்தை பார்த்தே..?)எனக்கு எப்படித்தெரியும்னா எல்லாம் கேள்வி ஞானம்தான்.(நான் பார்த்த எல்லா சம்சாரமுமே சுமாராத்தான் இருந்தது,..)

அவங்க வீட்டு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு நம்மால வர முடியாம போச்சுன்னா, ( தண்டம் வேற முட்டுக்கோல் வேற.. )அவங்க கேட்ட பொருள் ஏதாவது வாங்கித்தர முடியாம போச்சுன்னா( வாங்கற சம்பளம் ரூ 5000 ஆனா 5 லட்சம் ரூபாக்கு நெக்லஸ் கேட்டா),வீட்டுக்கு லேட்டா வந்தா இப்படி 10 பைசாவுக்கு பெறாத சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட இந்த டெக்னிக்கை அவங்க யூஸ் பண்ணிக்குவாங்க..
http://www.newsonweb.com/newsimages/June2010/eb637c18-3465-49a8-8bb1-9c0972d798a31.jpg
எனக்கு தலை வலிக்குது... என்னமோ மாதிரி இருக்கு.. இப்படி ஏதாவது காரணத்தை சொல்லிட்டு அவங்க குப்பற படுத்துக்குவாங்க.. நாம என்னடா பண்றதுன்னு மல்லாக்க படுத்து யோசிப்போம்.. ( நாமளும் குப்புற படுக்கலாம்.. அப்புறம் நமக்கும் ,அவங்களுக்கும் ஒரு வித்தியாசம் இல்லாம போயிடுமே. #கோபமா இருக்கறப்பக்கூட நமக்கு பிரஸ்டீஜ் முக்கியம்).)

நமக்கு மட்டும் பசிக்குதே.. அங்கே பசியே எடுக்காதா?ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்லை... ஏன்னா சண்டை போடறதுன்னு முடிவு பண்ணுனதும் அவங்க முதல்லியே தெம்பா சாப்பிட்டு இருப்பாங்க.. 

ஹோட்டல்ல போய் சாப்பிட நமக்கு கையாலாகாது...சரி நாமே சமைக்கலாம்னு நினைப்போம்...அப்பாடா.. இப்போதான் மேட்டருக்கு வந்தேன்.. இந்தப்பதிவுல சுயமா சமைப்பது எப்படி?ன்னு பதிவர்களுக்கு சொல்லப்போறேன்..இது ஆண்களுக்கு மட்டுமானது...ஏதோ எனக்கு தெரிஞ்ச அரை குறை ஞானத்தை வெச்சு டிப்ஸ் தர்றேன்...இதைப்படிக்கிற பெண்கள் யாராவது அது சரி இல்லை, இது சரி இல்லைன்னு நொனை (குறை) சொன்னா நான் கடுப்பாகிடுவேன்.. (அடுப்புல வேலையா இருக்கறப்ப கடுப்பு.. ஆஹா எப்படி எதுகை மோனை தானா வருது...?)
http://www.supanet.com/woman-cleaning-clean-kitchen-lady-14693465.jpg

ஒரு டம்ளர் அரிசியை ஒரு குண்டாவுல போட்டு அதுல ஒரு சொம்பு தண்ணி ஊற்றி ஊற வைங்க..( தண்ணி மட்டும் ஊத்துனா போதும்.. அதுவா ஊறும்..)

அரை மணி நேரம் ஊறனும். அதுக்குள்ள கடைக்கு பொடி நடையா போய் தயிர் அரை லிட்டர் வாங்கிட்டு வந்துடுங்க..இப்போ வீட்டுக்கு வந்து ஊறுன அரிசியை களையனும்.. அதாவது அந்த தண்ணியை கீழே ஊத்தனும். வை கோ வை அம்மா கழட்டி விட்ட மாதிரி..மறுபடி தண்ணி ஊத்தி மறுபடி களையனும்.. இப்போ 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும்.

அதாவது எவ்வளவு அரிசி போட்டமோ அதை விட 2 மடங்கு...கடைல வாங்குன அரிசி பழையதா இருந்தா இந்த பதம். அதுவே புது அரிசியா இருந்தா அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊத்தனும்..

குக்கர்ல 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும். அப்புறம் குக்கருக்குள்ள அரிசி குண்டாவை வைக்கனும்.அப்புறம் குக்கர் மூடியை டைட்டா மூடனும்..குக்கர் வெயிட் போட மறக்கக்கூடாது...இப்போ அடுப்புல குக்கரை வெச்சுட்டீங்க..10 நிமிஷம் டைம் ஆகும்.
http://thumbs.dreamstime.com/thumblarge_242/1204260906YAxDh5.jpg
அதுக்குள்ள ரசம் ரெடி பண்ணிடலாம்.அது ரொம்ப ஈஸி.. பி ஜே பி காரங்க வேட்பாளர் லிஸ்ட் ரெடி பண்ற மாதிரி.. எந்த கஷ்டமும் இருக்காது..முதல்ல புளி கொஞ்சம் எடுத்து ஒரு சின்ன குண்டாவுல போட்டு ஊற வைக்கனும்..( தண்ணீர் ஊற்றி)

இப்போ பெரிய அடுப்புல அரிசி வெந்துட்டு இருக்கும். சின்ன அடுப்புல புளிக்கரைசல் குண்டாவை வைங்க..2 தக்காளி எடுத்து வாஷ் பண்ணி  4 பாகமா அறிந்து புளிக்கரைசல்ல போடுங்க..அப்புறம் ரசப்பொடி 2 ஸ்பூன் போடுங்க.. 4 நிமிஷத்துல கொதிக்க ஆரம்பிக்கும்,, சீரகப்பொடி ஒரு ஸ்பூன் போடுங்க.. அப்புறம் கறி வேப்பிலை,கொத்து மல்லி தழை கொஞ்சம் போடுங்க.. 

கொஞ்சம் உப்பு போடுங்க..(ஏன் கொஞ்சம் உப்பு போட சொல்றேன்னா அதிக உப்பு போட்டு சாப்பிட்டா நமக்கு கோபம் வந்துடும்.. ஹி ஹி .. முடிஞ்சவரை குடும்பஸ்தங்க ரோஷம் இல்லாம இருப்பதே நல்லது.. )இப்போ தள புள தள புளன்னு கொதிக்கும்.. வாசம் கம கமன்னு வரும்.. சப்போஸ் வாசமே வர்லைன்னாக்கூட என்ன வாசம் ஆஹா அப்படின்னு நாக்கை சப்புக்கொட்டிக்கனும்..( எல்லாம் வெறுப்பேத்தத்தான்.. ஹி ஹி )

இப்போ ரசத்தை இறக்கி வெச்சுடுங்க.. சின்ன அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க..இப்போ குக்கர் விசில் அடிக்கும்..2 சவுண்ட் விடும் வரை பொறுத்திருக்கவும். அப்புறம் கேஸ் அடுப்பின் வேகத்தை தணிக்கவும் .7 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணவும்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD6nypfysSGGXNe2sLDCj-KK5XzCxbHT0IUwcyNhoIXSrl7if_sloBZDRfXVbDkf8HU9PN2xl6M2mbp-Ys4Tf4IO4SeLdY-Tgz4t1MO7emKgAXvFH2FytFB4VGkGMlv0uhI2Uc08-2Ire-/s1600/002.jpg
இப்போ 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. அவசரப்பட்டு இப்பவே மூடியைத்திறந்தா அம்மா கார்த்திக்கை தூக்கி வீசுன மாதிரி மூடி தூக்கி அடிக்கும். வெயிட் ப்ளீஸ்...


இப்போ சாப்பாடு, ரசம், தயிர் ரெடி... சாப்பிடுங்க.. சாம்பார் எங்கே?ன்னு கேட்கறீங்களா? நாம்பளே சாம்பார் மாதிரி தான் இருப்போம்...ஹி ஹி 

இந்தப்பதிவு ஹிட் ஆகித்தொலைத்தால் அடுத்தடுத்து தக்காளி சாதம் செய்வது எப்படி? லெமன் சாதம் செய்வது எப்படி? போன்ற பல பதிவுகள் வரும்.. ஹி ஹி 

இந்தப்பதிவு வழக்கம் போல் ஊத்திக்கிச்சுன்னா மறுபடி இதே பதிவை தலைப்பை மட்டும் மாற்றி மீள் பதிவாக வரும்.. ஹி ஹி

டிஸ்கி 1 - சினிமாவைத்தவிர இவனுக்கு எந்த மேட்டருமே தெரியாது போலன்னு இனி யாரும் எள்ளி நகையாட மாட்டாங்க...இந்தக்கொடுமைக்கு அந்த கொடுமையே தேவலாம்கற முடிவுக்கு வந்துடுவாங்க..

டிஸ்கி 2 - நான் ஏதோ என் சம்சாரம் கூட சண்டை போட்டுட்டனோன்னு யாரும் நினைக்க வேனாம், என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ..(இதுல கூட சினிமா டைட்டில்). அப்போ என் பொண்டாட்டி கெட்டவாளா?ன்னு சண்டைக்கு வர வேணாம்..

(மன்னிப்பு)  டிஸ்கி 3 - இது வழக்கமா நான் போடறது தான்.இந்தப்பதிவு யார் மனதையாவது புண்படுத்தினால் சாரி.. தாவணி சுடி  மிடி. இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்..

டிஸ்கி 4 - டைட்டில்ல சலம்பல் எனும் வார்த்தை வந்துள்ளதே அதுக்கு அர்த்தம் என்ன? என்பவர்களுக்கு  ஹி ஹி எனக்கே தெரியாது.. சமையல், சம்சாரம்,சமாளிப்பு இந்த 3 வார்த்தைகளுக்கும் எதுகை மோனையா எனக்கு ஒரு வார்த்தை தேவைப்பட்டுச்சு...அதுக்கு தகராறு, அலம்பல்,போன்ற அர்த்தங்கள் இருக்குன்னு நினைக்கறேன்..

டிஸ்கி 5  - படம் 2 - ல் இருக்கும் பெண் அணிந்திருக்கும் சேலை சண்டே மண்டே சாரியாம்.. அப்படினா அந்த 2 நாள் மட்டும் தான் அதை கட்டனுமா?ன்னு கேட்டேன்.. அதுக்கு காரணம் யாருக்கும் தெரியல.. ஹி ஹி

72 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்களுக்கு சினிமா மட்டுந்தான் தெரியும்ன்னு நினைச்சேன்..

கலக்குங்க தல..

Unknown said...

சமையலுக்கு நன்றி நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சமையலுக்கு நன்றி நண்பா

hi hi ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்களுக்கு சினிமா மட்டுந்தான் தெரியும்ன்னு நினைச்சேன்..

கலக்குங்க தல..

அடப்பாவிகளா.. அப்படித்தான் நினைச்சீங்களா?

SUMAN said...

I think today you have not get food from your wife,Next tell us how to prepare hotwater

சக்தி கல்வி மையம் said...

வந்தேன்.

settaikkaran said...

உள்ளேன் ஐயா!
அப்பாலிக்கா வந்து கருத்துச் சொல்றேன் தல...!

நர்மதன் said...

வந்துட்டேன்.............

நர்மதன் said...

இதையும் கொஞ்சம் படியுங்க

கவுண்டமணியின் சில மணியோசைகள்

சி.பி.செந்தில்குமார் said...

>>சேட்டைக்காரன் said...

உள்ளேன் ஐயா!
அப்பாலிக்கா வந்து கருத்துச் சொல்றேன் தல...!


அண்ணன் வீட்ல ஏதோ பிரச்ச்னை போல.. அண்ணி இலலாதப்ப கமெண்ட் போடுவாரு.. ஹி ஹி

Unknown said...

பதிவுக்கு பதிவு வித்யாசம். இது தான் சி.பி. செந்தில்குமாரின் முன்ணணி ரகசியம்..

Unknown said...

நீங்க ஒரு சகலகலா வல்லவர் - (யார மாதிரி அப்படினு கேட்கக்கூடாது).

Unknown said...

வீட்ல சோறு இல்லன்னு சொன்னதையே ஒரு பதிவாக்கி வெற்றி பெரும் தலைவர் சிபி வாழ்க!

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger பாரத்... பாரதி... said...

பதிவுக்கு பதிவு வித்யாசம். இது தான் சி.பி. செந்தில்குமாரின் முன்ணணி ரகசியம்..

வாரத்துக்கு வாரம் வித்தியாசம்.. அதுதான் குமுதம்னு முதல்ல எல்லாம் டி வி ல விளம்பரம் பண்ணுவாங்க.. 10 லட்சம் புக் விற்கற நிறுவனமே வெரைட்டி காட்டறப்ப நாம காட்டலைன்னா அவ்வளவுதான்... நடிகைன்னா கவர்ச்சி காட்டனும்.. படைப்பாளின்னா வெரைட்டி காட்டனும்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

நீங்க ஒரு சகலகலா வல்லவர் - (யார மாதிரி அப்படினு கேட்கக்கூடாது).

ஹி ஹி கேட்கல.. காது கேட்கல..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

வீட்ல சோறு இல்லன்னு சொன்னதையே ஒரு பதிவாக்கி வெற்றி பெரும் தலைவர் சிபி வாழ்க!

ஆமாய்யா.. இங்கே வாழ்க சொல்லிட்டு அங்கே போய் ஒழிக , மன்னிப்பு கேள்னு ஒரு பதிவு போடு ஹி ஹி

சசிகுமார் said...

சூப்பர் டிப்ஸ் உடனே களத்துல இறங்கிட வேண்டியது தான்.

சி.பி.செந்தில்குமார் said...

>>சசிகுமார் said...

சூப்பர் டிப்ஸ் உடனே களத்துல இறங்கிட வேண்டியது தான்.


hi hi சசி வீட்லயும் சண்டை போல

Unknown said...

தப்பு எங்க நடந்தாலும் தட்டிக்கேக்க நான் ஒன்னும் சூப்பர் ஹீரோ இல்ல ஆனா உண்மைய சொல்லக்கூடிய ஓர் மனிதன் அவ்வளவே ஹிஹி!

அமுதா கிருஷ்ணா said...

நல்ல வெயில் நேரத்தில் வந்த அருமையான பதிவு. ஆண் பதிவர்கள் இதை பார்த்து சமைக்க ஆரம்பித்தால்..ஆஹா,நினைக்கவே நல்லாயிருக்கே.அந்த ஆண் பதிவர்களின் மனைவிகள் கொடுத்து வைத்தவர்கள். வெயில் நேரத்தில் ஒரு அரை மணி நேரம் சமையலறையில் வெந்து பாருங்கள் தெரியும் பொண்டாட்டி நல்லவளா, கெட்டவளா என்று..

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி மேடம்.. இது ஒரு காமெடி பதிவு தான்..

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கி உலகம்

துரை தத்துவமா பொழியுதே.. என்ன மேட்டர்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

haaaaaaa super cooking/...

i needs some tips on how to wash the dishes after cooking....

சி.பி.செந்தில்குமார் said...

கவலைப்படாதீங்க நண்பா.. பல் துலக்கும் நேரத்தில் பாத்திரம் துலக்குவது எப்படி?ன்னு ஒரு பதிவு போடறேன் விரைவில்.. ஹி ஹி

ராஜி said...

அனுபவமோ??!!

தமிழ் 007 said...

பதிவை படிச்சவுடன் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு அதனால சாப்பிட்டு வந்து கருத்து சொல்லுறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

அனுபவமோ??!!


நல்ல வேளை நீங்க ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் படிக்கலை..

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

பதிவை படிச்சவுடன் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு அதனால சாப்பிட்டு வந்து கருத்து சொல்லுறேன்.

செவிக்குணவில்லத போழ்துதானே வயிற்றுக்கு ஈயப்பட வேண்டும்..?

sulthanonline said...

//இந்தப்பதிவு ஹிட் ஆகித்தொலைத்தால் அடுத்தடுத்து தக்காளி சாதம் செய்வது எப்படி? லெமன் சாதம் செய்வது எப்படி? போன்ற பல பதிவுகள் வரும்.. ஹி ஹி

இந்தப்பதிவு வழக்கம் போல் ஊத்திக்கிச்சுன்னா மறுபடி இதே பதிவை தலைப்பை மட்டும் மாற்றி மீள் பதிவாக வரும்.. ஹி ஹி//



ஆக அடுத்த தடவையும் சமையல் குறிப்பு மாதிரி போடணும்னு முடிவு பண்ணிட்டீங்க

Sathish said...

நமக்கு சமையல் எதுக்கு சிபி சார். இருந்தாலும் உங்களுக்காக ஒரு முறை முயற்சி பண்ணலாம்.

பாட்டு ரசிகன் said...

வீட்ல சண்டையா..
அதை இப்படி பதிவு போட்டு சமாளிக்க வேண்டியது..

Sathish said...

voted....

உணவு உலகம் said...

பதிவு மூலம் பதில் சொல்றீங்களா சார்? பட்டினி, பட்டினி நினைவிருக்கட்டும்

உணவு உலகம் said...

சூப்பர் சமையல் குறிப்புகள். திடீர்னு தேவை படலாம். குறித்து கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி.சார்

settaikkaran said...

//முதல் ஆயுதம் என்ன?ங்கறதை தனி பதிவா தலையணை மந்திரம் போடும் தலைவியிடம் தப்பிப்பது எப்படி?ன்னு மறுக்கா போடறேன்//

ஹிஹி! வெயிட்டிங்!

settaikkaran said...

//பெரும்பாலும் எல்லா சம்சாரங்களுமே ஒரே டெக்னிக்கைத்தான் ஃபாலோ பண்றாங்க//

எல்லா சம்சாரங்களுமா? அப்படீன்னா மொத்தம் எத்தனை தல...?

settaikkaran said...

//இப்படி 10 பைசாவுக்கு பெறாத சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட இந்த டெக்னிக்கை அவங்க யூஸ் பண்ணிக்குவாங்க//

ஓஹோ! இப்போத்தான் ஒவ்வொண்ணா வெளியிலே வருது!

settaikkaran said...

//ஏன்னா சண்டை போடறதுன்னு முடிவு பண்ணுனதும் அவங்க முதல்லியே தெம்பா சாப்பிட்டு இருப்பாங்க.//

இருங்க தல, கர்ச்சீப்பை எடுத்துக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

பதிவு மூலம் பதில் சொல்றீங்களா சார்? பட்டினி, பட்டினி நினைவிருக்கட்டும்


பத்தினிகள் மூலம் நமக்கு நடப்பதால் தான் அது பட்டினியோ.#கண்டுபிடிப்பு

settaikkaran said...

//(அடுப்புல வேலையா இருக்கறப்ப கடுப்பு.. ஆஹா எப்படி எதுகை மோனை தானா வருது...?)//

கே.டிவியிலே ’பகவதி’ படம் பார்த்ததுனாலே வருது! :-)

settaikkaran said...

//தண்ணி மட்டும் ஊத்துனா போதும்.. அதுவா ஊறும்..)//
தண்ணிக்கு அவ்வளவு பவரு?

நீங்க பாட்டுக்கு சோறு, ரசமுன்னு போயிட்டே இருக்கீங்களே? அடுப்பு பத்த வைக்கிறது எப்படீன்னு சொல்லித்தர்றதில்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//ஏன்னா சண்டை போடறதுன்னு முடிவு பண்ணுனதும் அவங்க முதல்லியே தெம்பா சாப்பிட்டு இருப்பாங்க.//

இருங்க தல, கர்ச்சீப்பை எடுத்துக்கிறேன்.

எதுக்குண்ணே.. சமாதானக்கொடிக்கா? கண்ணீரைத்துடைக்கவா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சேட்டைக்காரன் said...



நீங்க பாட்டுக்கு சோறு, ரசமுன்னு போயிட்டே இருக்கீங்களே? அடுப்பு பத்த வைக்கிறது எப்படீன்னு சொல்லித்தர்றதில்லையா?

அண்ணே.. தமிழர்களுக்கு பத்த வைக்க சொல்லித்தரனுமா?

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//(அடுப்புல வேலையா இருக்கறப்ப கடுப்பு.. ஆஹா எப்படி எதுகை மோனை தானா வருது...?)//

கே.டிவியிலே ’பகவதி’ படம் பார்த்ததுனாலே வருது! :-)

அண்ணன் சினிமா விமர்சனம் போடரதில்லையே தவிர சாப்ஜாடா எல்லா பட ஹிட் டயலாக்ஸை ஞாபகம் வெச்சிருக்காரு

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//பெரும்பாலும் எல்லா சம்சாரங்களுமே ஒரே டெக்னிக்கைத்தான் ஃபாலோ பண்றாங்க//

எல்லா சம்சாரங்களுமா? அப்படீன்னா மொத்தம் எத்தனை தல...?

ஓஹோ. மொத்தமா எத்த்னை? ஒல்லியா எத்தனின்னு கேட்கரீங்களா? ஹி ஹி டோட்டலா ஒண்ணு தான்னே

தமிழ் 007 said...

///சி.பி.செந்தில்குமார் said...


செவிக்குணவில்லத போழ்துதானே வயிற்றுக்கு ஈயப்பட வேண்டும்..?///

நீங்க என்ன பதிவை MP3 பார்மெட்டிலா போட்டிருக்கீங்க. செவிக்கு உணவு கொடுக்குறதுக்கு.( வேணும்னா உங்க பதிவை சத்தமா நானே படிச்சு நானே கேட்டுக்கலாம்...ஹிஹிஹி..ஹிஹிஹி...)

காங்கேயம் P.நந்தகுமார் said...

இன்னைக்கு சமைப்பது எப்படின்னு சொன்னீங்க! நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் அமைந்தது. அதுக்குன்னு அடுத்த பதிவுல துணி துவைப்பது எப்படி? பாத்திரம் கழுவது எப்படி? ன்னு போட்டுடாதீங்க!

ராஜி said...

நல்லவேளை நீங்க ராஜேஷ்குமார் கிரைம் நாவல் படிக்கலை.
ஃஃஃ
ஹலோ சமையலை பத்தி எங்ககிட்டயவா? கிரைம் நாவல் எழுத புத்திக்கூர்மை, கற்பனை, பொது அறிவும் வேணும். ஆனால் சமையலுக்கு கண்டிப்பா அனுபவம் வேணும் சார்

ராஜி said...

அனுபவமில்லைனா சமையலில் காரம் தூக்கலாகவும், உப்பு கம்மியாகவும் கண்றாவியாதான் இருக்கும் சார்

ராஜி said...

ஹலோ சிபி சார் திருமணம் முடித்து உங்கள் இல்லத்து அரசி சமைத்த அனுபவமின்றி முதல் சமையல் நினைவிருக்கா? ஆனால் புது ஜோருல அந்த சாப்பாடும் ருசித்திருக்கும். மீண்டும் ஒருமுறை அதேப்போல் சமைத்து போடச்சொல்லி சாப்பிட்டுட்டு, அப்புறம் பதிவு போடுங்க. சமையலுக்கு அனுபவாம் தேவையா இல்லையானு

ராஜி said...

அட 50வது வடை எனக்கா? எடுத்துக்கவா?

ரஹீம் கஸ்ஸாலி said...

அய்யய்யோ....தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை காணலே...

கோவை நேரம் said...

உங்களோட சமையல் குறிப்பு நல்ல பயன் ..அப்புறம் அதுல அப்பப்போ கொஞ்சம் அரசியலையும் கலந்து விட்டீர்களே ...அருமை

சி.பி.செந்தில்குமார் said...

>>ரஹீம் கஸாலி said...

அய்யய்யோ....தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை காணலே...


இவ்வளவுதானா? நான் கூட என்னவோ ஏதோன்னு பதறிட்டேன்

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், உங்களின் ஜனநாயகத் திறமையைப் பாராட்டுகிறேன். உள்ளதை உள்ள படி, ஒளிவு மறைவின்றிச் சொல்லும் உங்களின் திறமைக்கு இப் பதிவும் ஒரு சான்று. நீங்கள் சமைக்கிற சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் பின் விளைவுகள் வராதா?

டக்கால்டி said...

Arumai

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

the way of writing is superb.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ai.......... 60 th vadai for me...

haaa...........haa.....

Speed Master said...

நலமா
வேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
நம்ம பதிவு

பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html
///////

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுக்கு எதிலேயோ கண்டம்னு கேள்விப்பட்டேன்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுக்கா களிங்கர்ஜீ ஆச்சி வரப்போவுதுண்ணே, கொஞ்ச நாள்ல ரேசன் கடைல சோறு, ரசம், தயிறுலாம் கெடைக்கப் போவுதுண்ணே.....!

ராஜ நடராஜன் said...

கடைசி ஷோவுக்குப் போறதே வழக்கமா போச்சு.

அரசியல் எதுகை மோனைக்கும் இயல்பான நகைச்சுவைக்கும் ஓட்டு:)

செங்கோவி said...

//உங்களுக்கு எதிலேயோ கண்டம்னு கேள்விப்பட்டேன்...// என்ன, எங்க தலைவருக்கு கண்டமா? காண்டம்னு சொல்லியிருப்பாங்க..நல்லாக் கேளுங்க.

ஹேமா said...

சிபி...இது ஒரு சமையல்...அதுக்கு அருமை அருமைன்னு பின்னூட்டம் வேற.அதுசரி எல்லாரும் உங்க கட்சிக்காரர்தானே !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி...... இத நான் உங்ககிட்ட சொல்லியே ஆகணும்! இந்தப் பதிவு சூப்பரோ சூப்பர்! மேட்டர் புதுசு இல்லைன்னாலும் அத சொன்னவிதம் அருமையிலும் அருமை! இடையிடையே அரசியல் நக்கல் வேறு! அசத்திட்டீங்க!



நேற்று முன்தினம் போட்ட ஆன்மீக பதிவும் சூப்பருங்க! உங்களின் இன்னொரு பரிணாமத்தை அது காட்டியது! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி...... இத நான் உங்ககிட்ட சொல்லியே ஆகணும்! இந்தப் பதிவு சூப்பரோ சூப்பர்! மேட்டர் புதுசு இல்லைன்னாலும் அத சொன்னவிதம் அருமையிலும் அருமை! இடையிடையே அரசியல் நக்கல் வேறு! அசத்திட்டீங்க!



நேற்று முன்தினம் போட்ட ஆன்மீக பதிவும் சூப்பருங்க! உங்களின் இன்னொரு பரிணாமத்தை அது காட்டியது! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

Pranavam Ravikumar said...

பதிவுக்கு நன்றி...ரசித்தேன்

Geetha6 said...

ஓகே.ஓகே.நல்லா சமைங்க! வாழ்த்துக்கள்!

Anonymous said...

உங்கள் பதிவுகளில் ஸ்டார் போஸ்ட்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.