Thursday, March 03, 2011

ஈரோடு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் ஊழல்கள் + வேரோடு களையப்படவேண்டிய மோசடிகள்


http://dilipnaidu.files.wordpress.com/2010/09/tasmac-semester-1-ovbe-1.jpg 
தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும் எப்போதும் சிந்திக்காமல் இப்பொழுதும், அப்பொழுதும்,எப்பொழுதும்,முப்பொழுதும் தமிழக மக்களின் நலனைப்பற்றியே சிந்திக்கும் முத்தமிழ் வித்தவர் சாரி வித்தகர் டாக்டர் கலைஞர்  மது விலக்கு சாத்தியம் இல்லை என தனது நிரந்தரக்கூட்டாளியும்,பச்சோந்தி போல் மாறும் அரசியல்வாதிகளுக்கு நடுவே மாறாத குணமும்,தனது கட்சியில் தனது குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலோ. வாரிசுகளுக்கு பதவி கொடுக்கபட்டாலோ நடு வீதியில் என்னை செருப்பால் அடியுங்கள் என டயலாக் பேசி வன்னியர்களின் ஓட்டைக்கவர்ந்தவருமாகிய 2011-ன் சிறந்த தியாகி டாக்டர் ராம்தாஸ் அவர்களிடம் கூறியபோது நான் கூட அதை உண்மை என்றும் வேறு வழி இல்லை போல என்றும் நம்பி இருந்தேன்.

ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் எனது நண்பன் டாஸ்மாக் ஊழியனாகப்பணி புரிந்து வருகிறான்.டிகிரி முடித்தவன்.ரொம்ப நாளுக்குப்பிறகு நேற்று அவனை சந்தித்தேன்.

வாப்பா.. எப்படி போயிட்டிருக்கு வேலை.. எல்லாம்?

ம் ,ம் ,நல்லா போயிட்டிருக்கு.

எவ்வளவு சம்பளம்?

பிடித்தம் போக ரூ 3000 வருது..

ரொம்ப கம்மியா இருக்கே.. எப்படி குடும்பத்தை சமாளிக்கறே,...

சம்பளம் கம்மியா இருந்தா என்ன? கிம்பளம் கிடைக்கும் அல்ல?

ஆமா... நீ என்ன ஆ ராசாவா?டெண்ட்டர்ல கையெழுத்தைப்போட உனக்கு தேடி வந்து மொய் வைக்க...?

ஆஃப் குவாட்டர் சிஸ்டம் இருக்க பயம் ஏன்?

புரியலையே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_q4lWGcoI_l8GCrU0aPt0hs1lU68-L1M3HpzjIp99l0lhjoBkV2m04gsagqL1nykCrxcL8RwkrPNL51WswL6AWADrS5Mq8aTkW8sr69jqmTutp5xhCRBo2FSSjkg3BFkJDqSGcgNiE2M/s400/8.jpg
தம்பி...மானிட்டர்,ஷிவா,கோல்கொண்டா,மெக் டவல்,ஓல்டுமங்க் உட்பட கிட்டத்தட்ட 45 வெரைட்டி ஐட்டம் இருக்கு.ஒவ்வொரு ஐட்டம் ஃபுல் பாட்டில்ல சீல் உடைச்சு ஒரு ஆஃப் குவாட்டரை எடுத்து ஒரு குவாட்டர் பாட்டில்ல ஊத்திக்க வேண்டியது.அப்புறம் அந்த ஃபுல் பாட்டில்ல புனல் வெச்சு தண்ணி ஊத்திட வேண்டியது.பழையபடி சீல் ஒட்டிட வேண்டியது.அவ்வளவுதான் ,மேட்டர் ஓவர்.....

அடேங்கப்பா.. குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?

ரெகுலரா குடிக்கறவங்களுக்கு நாக்கு மரத்துடும். இது எப்படின்னா ஒரு மைசூர்பாக்கை நீ வாரம் ஒரு தடவை சாப்பிட்டா ஸ்வீட்டா இருக்கும்.தொடர்ந்து கேப் விடாம சாப்பிட்டு பாரு,நாக்கு மரத்துடும், நாக்கின் சுவை அரும்பு மொட்டூக்கள் உணர்வு சக்தியை இழந்திடும்.

சரி.. அதையும் மீறி நம்ம ராம்சாமி அண்ணன் மாதிரி மதி நுட்பமும், துல்லியமான டேஸ்ட் கண்டு பிடிப்புத்திறனும் உள்ளவங்க வந்து கண்டு பிடிச்சுட்டா என்ன பண்ணுவே..?

அந்த மாதிரி ஆளுங்களுக்கு நல்ல சரக்கா(!!!) குடுப்பேன்.

சரி.. இதுல உனக்கு என்ன வந்துடப்போவுது..?ஒரு 500 ரூபா..?

தம்பி.. நீ இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..கிட்டத்தட்ட ரூ 3000 டூ ரூ 3500 தேறும்.

http://photo.outlookindia.com/images/gallery/20100804/wine_shop_chennai_20100816.jpg
கலைஞர் நல்லாட்சி நடத்தறார்னு சொல்லி இருந்தாக்கூட அப்படி அதிர்ச்சி அடைஞ்சிருக்கமாட்டேன்..எனக்கு தலை சுத்துச்சு...அப்போ இவனோட மாத வருமானம் மாவட்டக்கலெக்ட்டர் வாங்கற சம்பளத்தை விட டபுள் மடங்கு ஆச்சே...

சரி.. நீ எப்படி கால்குலேட் பண்ணி பணம் எடுப்பே..?குழப்பம் வராது.?

ஹா ஹா .. அப்பப்ப எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்.. உதாரணமா ஒரு ஆஃப் குவாட்டர் தண்ணி கலந்தது விற்கறேன்னா அதுக்குண்டான அமவுண்ட் ரூ 30 அல்லது ரூ 25  எடுத்து பாக்கெட்;ல போட்டுக்குவேன்.டியூட்டி முடிஞ்சு போறப்ப அந்த சில்லரைகளை(!!) எல்லாம் கல்லாவுல போட்டுட்டு 500 ரூபா நோட்டா எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்..

சரி.. உனக்கு வருத்தம்னு ஒண்ணு ஏற்படவே ஏற்படாதா?

ம்.. 31 நாளும் நாமளே டியூட்டி பார்க்கனும்னு நினைப்பேன். ஆனா ஆள் மாத்தி விட்டுடுவாங்க.. 15 நாள் தான்.

அட.. பாவி.. அதை நான் கேட்கலை.. இப்படி எல்லாம் அடிக்கறமே... மனசாட்சி உன்னைக்கேள்வி கேட்காதா?


அடப்போடா.. இவனே.. நாட்ல எவன் யோக்கியனா இருக்கான்?ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்  அப்பாவி டி வி எஸ் 50 காரன் சிக்குனா ரூ 300 தேத்திடறாரு.கவர்மெண்ட் ஊழியர்கள் எல்லாரும் அவங்கவங்கவேலைல எந்த அளவு சுருட்ட முடியுமோ அதை சுருட்டீட்டுதான் இருக்காங்க.. நான் மட்டும் யோக்கியமா நடக்க நான் என்ன இளிச்சவயனா?
http://m3chennai.com/wp-content/uploads/2010/11/Lekha-Washington-hot-2.jpg
அவனை விட்டு நான் ஆஃபீஸ் போனேன்.. மேலும் சில டாஸ்மாக் கடைகளுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன்.சிலர் ஒத்துக்கொள்ளவில்லை.. சிலர் யாருங்க நீங்க என கேட்டார்கள்.

நான் அனைவரிடமும் எனது நண்பனின் தங்கைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. மாப்பிள்ளை டாஸ்மாக் ஊழியன். சம்பளம் கம்மியா இருக்கேன்னு நாங்க யோசிச்சப்ப மாப்பிள்ளை சம்பளம் கம்மியா இருந்தா என்ன? சைடு வருமானம் வருதுன்னு ஒரு பெரிய தொகையை சொல்றாரு.. இது உண்மையா? என கேட்டபோது சிலர் மென்று முழுங்குனாங்க.சிலர் என்னை வம்புல மாட்டி விடாதீங்க என்றார்கள். சிலர் ஆமாங்க ஓரளவு வருமானம் இதுல இருக்கு என ஒத்துக்கொண்டார்கள்.

ஒரு கடை நிலை ஊழியனுக்கே டாஸ்மாக் கடையில் வேலை கிடைச்சா இவ்வளவு சம்பாதிக்க முடியும்னா அந்த கடையை நடத்தற கவர்மெண்ட்டுக்கு லீகலா. இல்லீகலா எவ்வளவு வருமானம் கிடைக்கும்.?

பொதுவா ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க ஏதாவது சாக்கு சொல்லி லீவ் கேட்பாங்க.. ஆனா இந்த டாஸ்மாக் வேலைல இருக்கறவங்க மட்டும் லீவே எடுக்கமாட்டாங்களாம்.எடுத்தா ரூ 3000 அல்லது ரூ 4000 வருமானம் போச்ச
Delete
டிஸ்கி 1 - எனவே குடி மக்கள் பீர், ஒயின் மட்டும் குடித்து உங்கள் உடம்பை மட்டும் கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.அல்லது அடிச்சா ஒரு ஃபுல் குவாட்டர் இல்லைன்னா இன்னைக்கு நோ மேட்டர் என கொள்கை ரீதியான முடிவுக்கு வரவும்.

டிஸ்கி 2 - சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு ... நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?

டிஸ்கி 3 - கட்சிகள் தங்கள் கொள்கைல இருந்து மாறி கூட்டணி அமைத்துக்கொண்டாலும் அட்ரா சக்க இணைய தளம் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சமூக விழிப்புணர்வுப்பதிவில் கூட வ குவாட்டர் கட்டிங்க் பட நடிகை ஸ்டில் போட்டு ஆற்றிய மக்கள் தொண்டை மெச்சிக்கொள்கிறது # கலைஞர் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கறமாதிரி.. ஹி ஹி

டிஸ்கி 4 -Blogger Thirumalai Kandasami said...குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி. http://tasmac.tn.gov.in ,,இங்கு விலை பட்டியல்(புட்டியல்) ,சரக்கு நிலவரம் அனைத்தும் கிடைக்கும். TASAMC அரசு வருமானம் Just a simple calculation of Tamilnadu Government - TASMAC sale per day,based on following URL. http://new.vikatan.com/news.php?nid=467 Daily Beer usage - 73,800 case So total Beer Bottles - 73800 * 12 - 885600 Approx cost ,70 Rs per bottle - 885600 * 70 - 6,19,92,000 Beer sales (per day)- 6 Crore and 19 Lakhs and 92 Thousands - 20 % of Whole sale So Approx Total sales(per day) - 30,99,60,000 Approx total - 31 Crores per day !!! Total sales in USD per day - 6866002.2148 $

87 comments:

நர்மதன் said...

நான் தான் first

சி.பி.செந்தில்குமார் said...

மீ த செகண்ட். ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

I..poche...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாஸ்மாக் கடைகளுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன்.//

டாஸ்மாக் கடை ஃபோன் நம்பர் எப்படி தெரியும்? டவுட்டு (போன் புக்ல பார்த்தேன்னு பொய் சொல்ல கூடாது)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஈரோடு குடிமகன் சிபி வாழ்க

சக்தி கல்வி மையம் said...

பாம்பின் கால் பாம்பறியும்

சி.பி.செந்தில்குமார் said...

சென்னையின் மூத்த குடிமகனுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

பாம்பின் கால் பாம்பறியும்

பாம்புக்கு ஏது செல் ஃபோன்? அது எப்படி CALL பண்ணும்?

சக்தி கல்வி மையம் said...

குவாட்டருக்கும், பொண்ணுக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு கமென்ட் போடலாம்ன்னு நினைச்சேன்.. டிஸ்கி போட்டு கவுத்திட்டியே தம்பி...

நர்மதன் said...

////சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு/////

உங்கள நம்புறோம் சார்

சக்தி கல்வி மையம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாஸ்மாக் கடைகளுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன்.// இவரை அண்ணன் பிளாக் பக்கம் வரசோல்லு..

Unknown said...

ச்சே எல்லாம் போச்சி..........ஆனா சரக்கு மட்டும் கூட இருக்கு என்று சொல்லும்...............
கடைநிலை தமிழனின் வருத்தங்கள் ஹிஹி!

Unknown said...

//நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?
//

Ahhaaa..

சக்தி கல்வி மையம் said...

பாம்புக்கு ஏது செல் ஃபோன்? அது எப்படி CALL பண்ணும்? /////
பாம்புக்கு ஏது காலுன்னு கேட்கலையே சந்தோஷம்..

சி.பி.செந்தில்குமார் said...

>>வேடந்தாங்கல் - கருன் said...

குவாட்டருக்கும், பொண்ணுக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு கமென்ட் போடலாம்ன்னு நினைச்சேன்.. டிஸ்கி போட்டு கவுத்திட்டியே தம்பி...


பெண்களுக்கு 33% கண்டிப்பா உண்டு

Unknown said...

சரக்குள்ள பதிவு.

உங்கள் சமூக பார்வையை சாலப்படுத்தியிருக்கிறீர்கள். (குடிமகன்களும் சமூகத்தை சார்ந்தவர்கள் தானே?)

சக்தி கல்வி மையம் said...

நம்ம தியேட்டர்லையும் செகன்ட் ஷோ வந்து பாக்கரது..

Unknown said...

ஆட்சிக்கு எதிரா எழுதியிருக்கிறீங்களே?
இப்பவெல்லாம் ஆளுங்கட்சியிலிருந்து உங்களுக்கு மிரட்டல் வருவதில்லையா # ட்வுட்?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி நாங்க தான் புது நெம்பர்ல இருந்து கால் வந்தா ஆன் பண்றது இல்லையே..ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

பாரத்... பாரதி... said...

ஆட்சிக்கு எதிரா எழுதியிருக்கிறீங்களே?
இப்பவெல்லாம் ஆளுங்கட்சியிலிருந்து உங்களுக்கு மிரட்டல் வருவதில்லையா # ட்வுட்?
--- ஒர் சின்ன கரக்சன் , மிரட்டல் இல்ல ஆட்டோ!!!!!!!!!!

Unknown said...

நாங்கல்லாம் நம்பரே இல்லாம கூப்பிடுவோமே அப்போ என்ன பண்ணுவீரு ஹி ஹி!

Speed Master said...

ஆமாம் அந்த முதல் போட்டோ எங்கே எடுத்தது

சி.பி.செந்தில்குமார் said...

@ஸ்பீடுமாஸ்டர்

அது டாஸ்மாக் ஊழியர்களுக்கான கேம்பஸ்ல நடந்த ஆலோசனைக்கூட்டத்துல எடுத்தது

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

நாங்கல்லாம் நம்பரே இல்லாம கூப்பிடுவோமே அப்போ என்ன பண்ணுவீரு ஹி ஹி!

பல்லைக்கடிச்சுக்கிட்டு கலைஞர் ராம்தாச்கிட்ட பேசிட்டு இருக்கற மாதிரி வேற வழி இல்லாம எடுத்துப்பேசித்தொலைப்பேன்.. ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SEMA KICK....... HEROINE PHOTO

Speed Master said...

//சி.பி.செந்தில்குமார் said...
@ஸ்பீடுமாஸ்டர்

அது டாஸ்மாக் ஊழியர்களுக்கான கேம்பஸ்ல நடந்த ஆலோசனைக்கூட்டத்துல எடுத்தது


பொய் பொய் யாரை ஏமாத்திருங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

TASMAC - front view


ACTRESS - side view


SO in your blog... we are in a queue

MANO நாஞ்சில் மனோ said...

//குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?//

நான் ஆரம்ப கட்டத்தில் ஸ்டார் ஹோட்டல் பார்மேனா வேலை பார்த்ததால் சில டெக்னிக் ரகசியம் தெரியும்.....அதாவது அப்பிடி தண்ணீர் கலக்க பட்ட சரக்கை கண்டு பிடிக்க எளிய வழி இருக்கு.
அந்த பாட்டல் மூடிய திறந்து அந்த மூடியில் கொஞ்சம் லேசா சரக்கை ஊத்தி தீ பத்த வையுங்க தீ எறிஞ்சா ஒரிஜினல். இல்லைன்னா தண்ணீர் மிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு அர்த்தம். எந்த பிராண்டுலையும் கொஞ்சூண்டு தண்ணீர் கலந்தாலும் தீ எரியாது.....இதில் பீர் ஒயின் விதி விலக்கு....சோதிச்சி பார்த்துட்டு சொல்லுங்க....

சக்தி கல்வி மையம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?//

நான் ஆரம்ப கட்டத்தில் ஸ்டார் ஹோட்டல் பார்மேனா வேலை பார்த்ததால் சில டெக்னிக் ரகசியம் தெரியும்.....அதாவது அப்பிடி தண்ணீர் கலக்க பட்ட சரக்கை கண்டு பிடிக்க எளிய வழி இருக்கு.
அந்த பாட்டல் மூடிய திறந்து அந்த மூடியில் கொஞ்சம் லேசா சரக்கை ஊத்தி தீ பத்த வையுங்க தீ எறிஞ்சா ஒரிஜினல். இல்லைன்னா தண்ணீர் மிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு அர்த்தம். எந்த பிராண்டுலையும் கொஞ்சூண்டு தண்ணீர் கலந்தாலும் தீ எரியாது.....இதில் பீர் ஒயின் விதி விலக்கு....சோதிச்சி பார்த்துட்டு சொல்லுங்க....
////
அண்ணன் அனுபவத்தை பார்த்தியா.. தம்பி நீ வேஸ்டுடா..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

TASMAC - front view


ACTRESS - side view


SO in your blog... we are in a queue

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் மனோவுக்கு இந்தியாவின் சிறந்த குடி மகன் விருதை அளிக்க சிபாரிசு செய்கிறேன். ( ராம்சாமி கோவிச்சுக்கிட்டாலும் பரவால்ல)

சி.பி.செந்தில்குமார் said...

@ கருண்

ஹூம்.. சரண்டர்.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை அண்ணே

Unknown said...

போங்க தம்பி போங்க மனோங்கற சிறுத்தைய சொரண்டாதீங்க!

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் மனோவுக்கு இந்தியாவின் சிறந்த குடி மகன் விருதை அளிக்க சிபாரிசு செய்கிறேன். ( ராம்சாமி கோவிச்சுக்கிட்டாலும் பரவால்ல)
---- பக்ரைனில் சிறந்த குடி மகன்னு சொல்லு... ராம்சாமி கோவிச்சுக்க மாட்டார்.. ( சப்போட்டு)

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

போங்க தம்பி போங்க மனோங்கற சிறுத்தைய சொரண்டாதீங்க!

அப்போ மனோ சிங்கம் அல்ல்லவா?

சி.பி.செந்தில்குமார் said...

@ கருண்

சாரி.. இடமாறு தோற்றப்பிழை

Unknown said...

அது தெரியாத உமக்கு சிங்கம்னா நறைய குட்டிங்களோட(புள்ளைங்கள சொன்னேன்!) தான் இருக்கும் ஹி ஹி !

சக்தி கல்வி மையம் said...

நம்ம நண்பர் கவிதைவீதி சௌந்தரை காலையிலிருந்து கானோம்..

அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு

ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை ஃபுல் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்... (நண்பேன்டா)

உணவு உலகம் said...

வித்தியாசமான அணுகுதல். எல்லாம் வெளிவரவேண்டிய விஷயங்கள்தான். தெளிவாக இருப்பவர்களையே ஏமாற்றும்போது, . . . . . .

சக்தி கல்வி மையம் said...

நம்ம நண்பர் கவிதைவீதி சௌந்தரை காலையிலிருந்து கானோம்..

அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு

ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ஃபுல் (உபயம் சி.பி தம்பி) இலவசமாக அனுப்பிவைக்கப்படும்... (நண்பேன்டா)

தமிழ் 007 said...

//டிஸ்கி 1 - எனவே குடி மக்கள் பீர், ஒயின் மட்டும் குடித்து உங்கள் உடம்பை மட்டும் கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.//

என்ன ஒரு சமூக அக்கறை குடி மக்கள் மீது.

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அது தெரியாத உமக்கு சிங்கம்னா நறைய குட்டிங்களோட(புள்ளைங்கள சொன்னேன்!) தான் இருக்கும் ஹி ஹி !


ஆஹா.. அபாரம்.. டே சி பி நோட் பண்ணிக்கோ.. ஏதாவது ஜோக் எழுத உதவும்

தமிழ் 007 said...

உபயோகமான பதிவு.

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
அது தெரியாத உமக்கு சிங்கம்னா நறைய குட்டிங்களோட(புள்ளைங்கள சொன்னேன்!) தான் இருக்கும் ஹி ஹி !//

எலேய் பிச்சி புடுவேன் பிச்சி....

சி.பி.செந்தில்குமார் said...

@ கருண்

நம்ம ரெண்டு பேருக்குமே இப்போ 7வது ஓட்டு தேவைப்படுது.. ம்ம் ம்ம் என்ன பண்ணலாம்?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

போங்க தம்பி போங்க மனோங்கற சிறுத்தைய சொரண்டாதீங்க!

அப்போ மனோ சிங்கம் அல்ல்லவா?//

சொறிஞ்சி விட்டுட்டு சொரண்டாதேவா தோலை உரிச்சி புடுவேன்....

Unknown said...

மக்கா வாங்க என்ன ஆச்சி!

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
நாஞ்சில் மனோவுக்கு இந்தியாவின் சிறந்த குடி மகன் விருதை அளிக்க சிபாரிசு செய்கிறேன். ( ராம்சாமி கோவிச்சுக்கிட்டாலும் பரவால்ல)//

ஆரம்பிச்சிட்டானுகைய்யா இன்னைக்கு நான்தானா கிடச்சென்....மொக்குங்க ராசா மொக்குங்க....

Thirumalai Kandasami said...

குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி.
http://tasmac.tn.gov.in ,,இங்கு விலை பட்டியல்(புட்டியல்) ,சரக்கு நிலவரம் அனைத்தும் கிடைக்கும்.

TASAMC அரசு வருமானம்

Just a simple calculation of Tamilnadu Government - TASMAC
sale per day,based on following URL.

http://new.vikatan.com/news.php?nid=467


Daily Beer usage - 73,800 case
So total Beer Bottles - 73800 * 12 - 885600

Approx cost ,70 Rs per bottle - 885600 * 70 - 6,19,92,000

Beer sales (per day)- 6 Crore and 19 Lakhs and 92 Thousands - 20 % of Whole sale

So Approx Total sales(per day) - 30,99,60,000

Approx total - 31 Crores per day !!!

Total sales in USD per day - 6866002.2148 $

TASMAC

விகடன்.காம் இணையதள ரசிகர்களின் இந்திரபுரி!

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

@ கருண்

நம்ம ரெண்டு பேருக்குமே இப்போ 7வது ஓட்டு தேவைப்படுது.. ம்ம் ம்ம் என்ன பண்ணலாம்?
---- அரசியல்வாதி ஆகிடலாமா?

sathishsangkavi.blogspot.com said...

ஏப்பா கடைநிலை ஊழியனின் பொழப்புல மண்ணப்போடுற...

அவர்களும் பொழைக்கட்டுமே....

MANO நாஞ்சில் மனோ said...

// FOOD said...
வித்தியாசமான அணுகுதல். எல்லாம் வெளிவரவேண்டிய விஷயங்கள்தான். தெளிவாக இருப்பவர்களையே ஏமாற்றும்போது, . . . . . .//

ஏ நம்ம ஆபீசரு வந்தாச்சு......
அந்த டாஸ்மாக் காரனை பிடிச்சி குடுங்கைய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ் 007 said...
உபயோகமான பதிவு.//

சரியான சரக்கு பார்ட்டியா இருப்பாரோ....

Unknown said...

சிபி தம்பி மாமாவுக்கு bye சொல்லு!

செங்கோவி said...

//கட்சிகள் தங்கள் கொள்கைல இருந்து மாறி கூட்டணி அமைத்துக்கொண்டாலும் அட்ரா சக்க இணைய தளம் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சமூக விழிப்புணர்வுப்பதிவில் கூட வ குவாட்டர் கட்டிங்க் பட நடிகை ஸ்டில் போட்டு ஆற்றிய மக்கள் தொண்டை மெச்சிக்கொள்கிறது//இதனால தாண்ணே உங்களுக்குப் பின்னாடி பெரும் கூட்டமே இருக்கு!

Thirumalai Kandasami said...

பகலில் - வாட்டர்,
இரவில் - குவார்ட்டர்

பகலில் - என் முன் monitor ,
இரவில் - என்னுள் monitor

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதே வந்துட்டேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உளவுலே பாஸாக்கியாச்சி..

சி.பி.செந்தில்குமார் said...

@ திருமலை கந்த சாமி...


இந்த கலக்கு கலக்கறீங்களே...கமெண்ட்லயே.. உங்களை டாஸ்மாக் விட்டா என்னா கலக்கு கலக்குவீங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த தண்ணி கதையை போடாதிங்கன்னு எத்தனை முறை சொல்றது..

பாருங்க எப்படி அடிதடி நடக்குது..

மனோசார் இருக்காரா..

சி.பி.செந்தில்குமார் said...

?>>># கவிதை வீதி # சௌந்தர் said...

உளவுலே பாஸாக்கியாச்சி..


புரியலை.. விளக்கவும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதாங்க..
தமிழ் மணத்தில் 7-வது ஓட்டு போடலான்னு வந்தா 9-வது ஓட்டுதான் போட முடிஞ்சது..

ஆனா உளவு 4 ஓட்டு போட்டு பாஸாக்கியிருக்கிறோம்..

ஏன்ன பாஸாக்கினா ஏதோ தற்றதா சொன்னாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

@sowndhar

ஹா ஹா ரைட்டு.. உங்க அட்ரஸை தனி மெயிலில் குடுத்துட்டு அப்பீட் ஆகிக்குங்க.. ஹி ஹி

Riyas said...

ம்ம்ம்ம் நல்லதொரு சமூக பதிவு..

THOPPITHOPPI said...

//டிஸ்கி 2 - சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு ... நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?//

hehe........

THOPPITHOPPI said...

நம்பிட்டேன்

ராஜி said...

தமிழ் நாட்டை திருத்தாம விடுற்தில்லைனு யார்கிட்டயாவது சத்தியன் செஞ்சு குடுத்டு இருக்கிங்களா? என்ன?

கோவை நேரம் said...

ஒரே ட்ராபிக் ஜாம் .....அப்புறம் பாட்டில் விலையை விட 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் ஏத்தி விக்கிறது.அதுல எவ்ளோ கமிசன் கிடைக்கும் ?ஒருவேளை நீங்க கடைக்கு போய் இருந்தா தெரிஞ்சிருக்குமோ

ராஜி said...

சாரி மாறி வந்துட்டேன், நான் போய்ட்டு அப்புறமா வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

நம்பிட்டேன்


ஆ ராசா ஊழல் பண்ணி இருக்க மாட்டார்னு கலைஞர் சொன்னா நம்பறீங்க.....நான் எது சொன்னாலும் நம்ப மாட்டீங்க#தமிழேண்டா./

ஈரோடு சுரேஷ் said...

//சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி

பாஸ் நீங்க சரக்கு அடிக்கிறது இல்லியா!!!!!!!!?

மாணவன் said...

// சி.பி.செந்தில்குமார் said...
THOPPITHOPPI said...

நம்பிட்டேன்


ஆ ராசா ஊழல் பண்ணி இருக்க மாட்டார்னு கலைஞர் சொன்னா நம்பறீங்க.....நான் எது சொன்னாலும் நம்ப மாட்டீங்க#தமிழேண்டா./

ஹிஹிஹி

Anonymous said...

அட.. பாவி.. அதை நான் கேட்கலை.. இப்படி எல்லாம் அடிக்கறமே... மனசாட்சி உன்னைக்கேள்வி கேட்காதா//
ஒரு நாளைக்கு 3 போஸ்ட் போடுறீங்களே உங்க மனசாட்சி கேள்வி கேட்காதா

Anonymous said...

73 கமெண்ட் எகிருது காத்து பலமா அடிக்குது

Anonymous said...

இதெல்லாம் தமிழ்நாடு பூரா அடிக்கப்படும் கொள்ளை ஈரோடு ந்னு அடிக்கடி போட்டு எதாவது துறை கிட்ட வாங்கி கட்டிக்காதீங்

சேலம் தேவா said...

//நான் அனைவரிடமும் எனது நண்பனின் தங்கைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. மாப்பிள்ளை டாஸ்மாக் ஊழியன். சம்பளம் கம்மியா இருக்கேன்னு நாங்க யோசிச்சப்ப மாப்பிள்ளை சம்பளம் கம்மியா இருந்தா என்ன? சைடு வருமானம் வருதுன்னு ஒரு பெரிய தொகையை சொல்றாரு.. இது உண்மையா? என கேட்டபோது சிலர் மென்று முழுங்குனாங்க.சிலர் என்னை வம்புல மாட்டி விடாதீங்க என்றார்கள். சிலர் ஆமாங்க ஓரளவு வருமானம் இதுல இருக்கு என ஒத்துக்கொண்டார்கள்//

தனியார் துப்பறியும் நிறுவனம் ஒண்ணு ஆரம்பிங்க...நல்லா கலெக்ட் பண்றாங்கைய்யா டீடெய்ல்... :)

ரஹீம் கஸ்ஸாலி said...

டிஸ்கி 2 - சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு ... நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?
arumai anne.....

Jayadev Das said...

\\அட.. பாவி.. அதை நான் கேட்கலை.. இப்படி எல்லாம் அடிக்கறமே... மனசாட்சி உன்னைக்கேள்வி கேட்காதா? \\ அடப் பாவிங்களா? மக்களைக் காக்க வேண்டிய அரசு, ஊர் ஊருக்கு சாராயக் கடையை திறந்து விட்டு அந்த வருமானத்தை நம்பியே ஆட்சியை நடத்துது. அறிவுள்ளவன் சாரயத்தால் உயிரும் போகும் எனத் தெரிந்திருந்தும் போய்க் குடிக்கிறான். இதில், நாள் பூராவும் கடையில் சாராயத்தை ஊற்றும் உழைப்பாளி ஒருவன் காந்தி மாதிரி நேர்மையா நடந்துக்கனுமா? பாவம் வெறும் மூவாயிரம் ரூபாயை வச்சுகிட்டு அவன் பிள்ளை குட்டிகளை எப்படிக் காப்பாத்துவான்? சாராயத்துல தண்ணியைக் கலந்தா என்ன? கெடுதல் கொஞ்சம் குறையும், தப்பேயில்லை. என்பது லட்சம் கோடி இந்தியப் பணத்தை திருடியவனுங்க வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு நாட்டை ஆளும் போது, தன்னுடைய குடும்பத்தின் வறுமை காரணமாக சாராயத்துல கொஞ்சம் தண்ணியைக் கலந்தவன் குற்றவாளியா? என்ன நியாயம் இது?

வசந்தா நடேசன் said...

வந்த கமென்ட்களை எல்லாம் முழுதும் படிக்காமல் நான் எழுதும் முதல் கமென்ட் இது, டாஸ்மாக்ல வேலை காலி இருந்தா முதல்ல எனக்கு யாராவது சொல்லுங்கப்பூ...

வசந்தா நடேசன் said...

எல்லாம் பொழைக்கிற வழியை பாருங்கய்யா!!

Unknown said...

எப்படியோ இவனுக தண்ணி கலக்கிறதுனால குடிமக்களுக்கு கொஞ்சம் வாழ்நாள் கூடினால் நல்லது நடந்தமாதிரிதான்.

அன்பரசன் said...

மூணாவது படம் செம

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி.அண்ணே ஏண்ணே அவுங்க பொழப்புல மண் அள்ளி போடுறா! இந்திய குடிமகன்கள் மேல் உமக்கு இருக்கும் அக்கறையே பார்த்தா நொம்ப பெருமையா இருக்குண்ணே. காங்கேயம். பி.நந்தகுமார்

டக்கால்டி said...

புதிய பாட்டில்ல பழைய கள்ளுங்க...அட நான் இந்த டாஸ்மாக் கொள்ளையை பத்தி சொன்னேங்க...யாரோ இதுக்கு முன்னாடியே இதை பத்தி எழுதியதா எனக்கு ஞாபகம்...இருப்பினும் உங்க எழுத்துக்களில் சுவாரசியமாய்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ்! வேலை பாக்குற இடத்துல வர்ற பிகருகள கூட பார்க்காம, கஷ்டப்பட்டு மொபைல்ல கமெண்டு போட்டாக்கா, அதுக்கு பதில் சொல்லாம என்ன மொறைப்பு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னய்யா ஒரே சொர சொரப்பா இருக்கு? ( டாஸ்மாக் பெயர் பலகையை உற்றுப்பார்க்கவும்! ஹி.........ஹி.......ஹி........... )

Unknown said...

//அடேங்கப்பா.. குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?

ரெகுலரா குடிக்கறவங்களுக்கு நாக்கு மரத்துடும். இது எப்படின்னா ஒரு மைசூர்பாக்கை நீ வாரம் ஒரு தடவை சாப்பிட்டா ஸ்வீட்டா இருக்கும்.தொடர்ந்து கேப் விடாம சாப்பிட்டு பாரு,நாக்கு மரத்துடும், நாக்கின் சுவை அரும்பு மொட்டூக்கள் உணர்வு சக்தியை இழந்திடும்.//

TN State Marketing
TASMAC - பெயர் சொன்னால் போதும்...
தரம் எளிதில் விளங்கும் (விலங்கு'ம்)