Saturday, February 05, 2011

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/Dina%20mani%20%20ad%20-6%20.jpg
வழக்கமான கிராமத்துக்காதல் கதைதானோ என நினைக்க வைக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள் சலிப்பைத்தந்தாலும் இடைவேளைக்குப்பிறகு திடீர் என கதை ட்ராக் மாறுகிறது.அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்றைத்தான் இயக்குநர் பெரிதாக நம்பி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

4 நண்பர்களின் அறிமுகமும் ,அவர்களது குறும்புத்தனத்தையும் இன்னும் நல்லாவே சொல்லி இருக்கலாம்.களவாணி விமல் தான் ஹீரோ ,ஆனால் அவர் ஏனோ தானோ என்றுதான் நடித்திருக்கிறார்.அதே போல் திரைக்கதை இடைவேளை வரை ஒரு சீரான இலக்கில்லாமல் காட்டாறு போல , டாக்டர் ராம்தாஸின் கடைசி நேர தேர்தல் கூட்டணி முடிவைப்போல தடுமாறுகிறது.

ட்ரெயிலரில் காட்டப்பட்ட வடிவேல் படத்தில் 10 செகண்ட் மட்டுமே வருகிறார் என்பது ஆடியன்ஸூக்கு முதல் ஏமாற்றம்.அப்புறம் பெஸ்ட் கவுண்ட்டர் டயலாக் மேன் என பெயர் பெற்ற இயக்குநர் கம் காமெடியன் சிங்கம்புலியை சரியாக யூஸ் பண்ணாமல் விட்டது... ( கேட்டால் படத்தில் ஃபுட்டேஜ் பிராப்ளம் .. என சால்ஜாப்பு பதில் ரெடியாக இருக்கும்.)



http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1981&option=com_joomgallery&Itemid=77
அழகு மயில் மாதிரி வரும் அஞ்சலியைக்கூட ஜஸ்ட் லைக் தட் யூஸ் பண்ணி இருக்காங்க. விமல் -அஞ்சலி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை இன்னும் கவிதையாக,டீட்டெயிலாக காட்டி இருக்கலாம்.

படத்தோட கதை என்ன?மதுரையில் 4 நண்பர்கள்.அந்த ஊர்ப்பெரிய மனுஷனோட பையன் ஜவுளிக்கடைல பெண்கள் டிரஸ் மாத்தறப்ப செல்ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து அந்தப்பெண்களை  மிரட்டறான்.நம்ம ஹீரோ அவனை துவைச்சுக்காயப்போட்டுடறாரு.வில்லனோட அப்பா ஹீரோவை சொந்த விரலாலயே கண்ணை குத்த வைக்கற மாதிரி ஹீரோவோட நண்பர்களை விட்டே அவனை முடிச்சுக்கட்ட முடிவு பண்றாரு..
இந்த KNOT டை கையில் எடுத்துக்கிட்டு இயக்குநர் நம்மை (ஆடியன்ஸ்) முடிச்சுகட்ட முடிவு பண்றாரு.


படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மதுரையோட அழகை ஒரு ரவுண்டு காட்டறாங்க.. அடடா...அதே போல் ஆவணி மாசம் அத்தை பொண்ணு தாவணிபோட்டா கொண்டாட்டம் தான் செமயான கிராமிய கலை நுட்பங்களை உள்வாங்கி வெளிப்படுத்தும் தெம்மாங்கு கலக்கல் ஹிட். ( நமக்கு அத்தை பொண்ணு தாவணி போட்டாலும் சந்தோசம்தான், போடலைன்னாலும் சந்தோஷம்தான்)

அந்தப்பாட்டில் அஞ்சலியை தன்னோடு ஆடுவதாக ஒருத்தன் கற்பனை பண்றப்ப ( அந்த ஒருத்தன் ஹீரோ அல்ல)  அஞ்சலி பளார் என ஒண்ணு குடுத்து ஏண்டா கனவு சீன்னா எப்படி வேணாலும் கற்பனை பண்ணிக்குவியா? என கேட்டு மலையாள முண்டு சீன் டூ தமிழ் கலாச்சார தாவணி டிரஸ்க்கு மாறுவது இயக்குநரின் நகைச்சுவைத்திறனை வெளிப்படுத்தும் காட்சி.

ஆனால் மார்ச்சுவரியில் வேலை செய்யும் ஒரு நண்பன்  ஒரு சீமந்த விழாவில் ( கர்ப்பமான பெண்ணுக்கு கட்டுச்சோறு விருந்து ஆக்கிப்போடுதல்)அந்தப்பெண்ணை பிணமாக கற்பனை செய்வது ஓவர் டோஸ் காமெடி..அது சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத சீன்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQaHM9HXgCB6C2Y_j2_aTmKtxD7_xenFxQBH-vecrJgXg8c1M0GSrU-sdLNShoNyeuNs0OuKbhYI_nkxs6gCiMY6MvnHJ8d5p7lt7-MFonZ7Qc97eBB5W50yKm6SbuzEuPdMDuKnnvh2Q/s1600/0+karungali+anjali+hot+stills.jpg
பூவான பார்வைகள், குறும்பான வார்த்தைகள் எனத்தொடங்கும் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி. ஆனால் அந்தப்பாட்டுக்கான பிக்சரைஷேசனில் (PICTURAISATION) இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். டான்ஸ் மாஸ்டர் கூட சுமாராகத்தான் அந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணி இருக்கர்.அந்த பாடலில் அஞ்சலி மட்டும் அழகு தேவதையாக வர்றார்.

வசனகர்த்தா நீங்கா இடம் பிடித்த இடங்கள்

1.இந்த உலகத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் நாம எல்லாருமே ஒருநாள் சாகப்போறோம் என்பதுதான். தெரியாத விஷயம் எப்போங்கறதுதான். அது தெரிஞ்சிட்டா எவனும் நிம்மதியா வாழ முடியாது..

( சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாயிடும் வசனத்தின் உல்டா)

2. பொண்ணா இது ?பன்னு மாதிரி இருக்கு.. வேற பொண்ணு ஃபோட்டோ காட்டுங்க.

இது?

வயக்காட்டு சோளக்கொல்லை பொம்மைக்கு சேலை கட்டி விட்டாப்ல ஒல்லியா இருக்கே..?

அது சரி.. இது ஐஸ்வர்யாராய் ஃபோட்டோ..இதையே குறை சொல்றே..

3. நானும் உலக அளவுல  எத்தனையோ குடிகாரனுங்களைப்பார்த்திருக்கேன்.ஆனா சரக்கை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சறதை இப்போதான் பாக்கறேன்.

4. இவங்க எல்லாம் யாருன்னு தெரியுமா?

பெரிய கலெக்டரா?

ம்ஹூம்,என் நண்பன்,தோழன்.சிநேகிதன்..

மூணும் ஒண்ணுதாண்டா மூதேவி..

5.சரக்கடிக்கப்போறப்ப பாக்கெட்டை காலி ஆக வெச்சிருக்கனும் இல்லைன்னா கண்ட கண்ட நாய்க்கெல்லாம் நாம செலவு பண்ண வேண்டியதா போயிடும்.

6. கில்மாப்படத்துல சீன் போடறவன் கூட இவ்வளவு பில்டப் தர மாட்டான். நீ ஓவரா சீன் போடறே..

7.பொண்ணுங்களை லவ் பண்ணாலே இப்படித்தான் புலம்ப விட்டுடுவாளுங்க..

8.நாங்க ரொம்ப ராசியான ஆளுங்க.. அந்தப்பொண்ணு வயசுக்கு வந்தப்ப நாங்கதான் வந்து வேலை செஞ்சு குடுத்தோம்.. வளைகாப்புக்கும் நாங்கதான், அவ்வளவு ஏன் கருமாதிக்குக்கூட நாங்கதான் வந்தோம்.

9.அவனுக்கு மனைவியா வரப்போறவ ரொம்ப குடுத்து வெச்சவளா இருக்கனும். ஃபிரண்டையே இவ்வளவு கவனமா பாத்துக்கறவன் கட்டிக்கப்போறவளை எவ்வளவு நல்லா பார்த்துக்குவான்?

10  அப்பா.. இந்த 15 வருஷத்துல ஊரே மாறிடுச்சுப்பா...

ஹூம்.. மனுஷங்களும் மாறி இருந்தா பரவால்ல..

11. கலி யுகத்துல கடவுள் இல்ல. அப்படி இருந்தா இப்படி  நான் கஷ்டப்படறதைப்பார்த்து சும்மா இருப்பானா?

நாம 140 கோடிப்பெர் இருக்கோம்.எல்லாத்தையும் ஒரே கடவுளால பாக்க முடியாது. எவன் ஒருத்தன் கஷ்டத்துல உதவி செய்யறானோ அவன் தான் கடவுள். ( தியேட்டரில் அப்ளாஸை அள்ளிய இடம்)

12 . டேய்... டேய்.. அவளை என்னடா பண்றே..?

புது ஹீரோயின் ரெடி பண்றேண்ணே..

அவளையே ரெடி பண்ற மாதிரி இருக்கு..

நண்பர்கள் கொலை வெறியுடன் ஹீரோவைத்தாக்க முயலும் சதி சீன்கள் எல்லாம் எடுபடவில்லை.நட்புக்கு அவமானம்.இந்த இடத்தில் இயக்குநர் சறுக்கி விட்டார். என்னதான் அதற்கான ட்விஸ்ட் இருந்தாலும் .....

படம் ஏ செண்ட்டரில் ஓடறது கஷ்டம் தான். பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்





http://www.icetamil.com/ta/images/stories/janelvn/tamil%20actress%20anjali%20hot.jpga
டிஸ்கி - நேற்று நெட் பக்கம் வராதவங்களுக்காக


யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

30 comments:

Unknown said...

1

Unknown said...

நல்ல விமர்சனம்.
வசனங்கள் நல்லாருக்கு.
இந்த படத்தில் வடிவேலு இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

இல்ல சார்.. ஏமாத்தீட்டாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Next bittu padam review?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி ஏன்? வேணாமா? எல்லாரும் கேட்டுக்குங்க ரமேஷ் என்னை தடுத்துட்டாரு

குரங்குபெடல் said...

வடபழனி கமலா தியேட்டர் ஓனர் நடிச்சிருந்தும்
அந்த தியேட்டர்லயே 2 ஷோ மட்டும்தான்
ஓட்டுறாங்களேன்னு நெனச்சேன் . . .

நீங்க காரணத்தை வெளக்கிட்டிங்க . . .

Unknown said...

ஆட்டோகாரரோட படத்துக்கு இப்படி விமர்சனம் எழுதிபுட்டீங்களே ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்.

Unknown said...

அண்ணே அம்சமா இருக்காங்க அஞ்சலி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விமர்சனம் அருமை..

ரஹீம் கஸ்ஸாலி said...

வந்தாச்சு,படிச்சாச்சு,வாக்களிச்சாச்சு,கிளம்பியாச்சு

Chitra said...

படத்தை பார்க்கிறது வேஸ்ட்னு சொல்லாம சொல்ற மாதிரி இருக்குதே... ஹி,ஹி,ஹி....

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
இல்ல சார்.. ஏமாத்தீட்டாங்க///

ஹி ஹி இதுக்குதான் முந்தியடிச்சு போய் பாதீங்களோ...

Speed Master said...

அருமை
2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு
http://speedsays.blogspot.com/2011/02/2_04.html

சசிகுமார் said...

எப்பவும் போல உங்கள் பாணியில் விமர்சனம் அருமை செந்தில்.

Unknown said...

நல்ல விமர்சனம், தப்பித்தோம்
வாழ்க அஞ்சலி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி ஏன்? வேணாமா? எல்லாரும் கேட்டுக்குங்க ரமேஷ் என்னை தடுத்துட்டாரு
February 5, 2011 8:03 AM//

ரமேஷை வன்மையாக கண்டிக்கிறேன்!

Unknown said...

இளைஞன் விமர்சனம் தொடர்பில் இல்லை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே எனக்குப் புரிஞ்சு போச்சு! நம்ம சப்போஸ் தியேட்டருக்குப் போனா தூங்கிடுவோம்! அதனாலதான் இப்புடி டைட்டில் வச்சிருக்காங்க!

Anonymous said...

அஞ்சலிக்காக 3 தடவை பார்க்கலாம்

கார்த்தி said...

இண்டைக்குதான் போகபோறன். பாத்திட்டு வாறன்

MANO நாஞ்சில் மனோ said...

நான் இனி எதுக்கு படத்தை பாக்கணும்...?
அதான் சீதைக்கு ராமன் சித்தப்பன்'ன்னு சொல்லிட்டீங்களே......
அம்பது ரூபா மிச்சம்.....

அஞ்சா சிங்கம் said...

நமக்கு அத்தை பொண்ணு தாவணி போட்டாலும் சந்தோசம்தான், போடலைன்னாலும் சந்தோஷம்தான் ................................//////////////////
அதானே அப்டிதான் இருக்கனும் .
நல்ல வேளை இந்த படம் பார்கலாமா ?வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் . தெளிய வைத்து விட்டீர்கள் ...............

Unknown said...

படத்தின் தலைப்பை தொங்கா நகரம் என்று வைத்திருக்கலாமோ ?

goma said...

உங்கள் விமரிசனமே போதும் படம் டப்பா ........
‘....வந்து சில மாதங்களே ஆன...’என்று ராகம் போட்டு சின்னத்திரைக்கு வந்த பிறகு பார்த்தால் போதும்

Anonymous said...

//அந்தப்பாட்டில் அஞ்சலியை தன்னோடு ஆடுவதாக ஒருத்தன் கற்பனை பண்றப்ப ( அந்த ஒருத்தன் ஹீரோ அல்ல)//

>>> (ஏ)மாற்று சினிமா??

வைகை said...

தூங்கா நகரம் பாத்தா...தூங்க விடாதோ..?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10 அப்பா.. இந்த 15 வருஷத்துல ஊரே மாறிடுச்சுப்பா...


ஹூம்.. மனுஷங்களும் மாறி இருந்தா பரவால்ல../////

நெஜமாவே சூப்பர் டயலாக்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க என்னதான் படம் நல்லா இல்லேன்னு சொன்னாலும் அஞ்சலிக்காக நாங்க படம் பார்ப்போம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நெஜமாலுமே படம் மொக்கையா பாஸ்..