Friday, January 28, 2011

சேட்டைக்காரன் VS சேஷ்டைக்காரி - பிரச்சனைகள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU9PmehVV8qec1o5gRRaHzjt6rFy3O0W0_iiQuWIL1m_4Y8z8PlJJkSqmIDhdkJu37ggJsIx2MEbk_dtj4xAlvSH9OgFRkCE1eI-5fjQt5k5WVQc-aLPUmdYw9mgckUe28RMMPlApJ4F3c/s1600/smile.jpg
உலகத்துலயே ரொம்ப சந்தோஷமான விஷயம் குழந்தைகளோட டைம் பாஸ் பண்றதுதான். மத்தவங்களோட பழகறப்ப அவங்களுக்குத்தகுந்தபடி ஒரு முகமூடி போட்டுக்கற மாதிரி குழந்தைகளோட பழகறப்ப நாமும் ஒரு குழந்தை ஆகிடறோம்.ஆனா ஒரே ஒரு விஷயம் நாம் நம்ம புத்திசாலித்தனத்தையும்..,மேதாவிலாசத்தையும் ( நாமா கற்பனை பண்ணிக்கறது..) தூக்கி கடாசிட்டு நாமும் குழந்தையாவே ஆனாத்தான் அவங்களோட எஞ்சாய் பண்ண முடியும்.

1. அப்பா.. நாம 2 பேரும் ஒளிஞ்சு விளையாடலாமா?

ஓக்கே நீ முதல்ல போய் ஒளீஞ்சுக்கோ...
ஓகே ஜூட்டா...

ஜூட் டாடி..

ஆ.. கண்டு பிடிச்சுட்டேன்.. சத்தத்தை வெச்சே கண்டுபிடிச்சுட்டேன்...

போங்கப்பா.. என்னை ஏமாத்தீட்டே..

---------------------------------------------------------------------------

2.  அப்பா.. என்ன யோசிச்சுட்டு இருக்கே..?

ஜோக் எழுத KNOT யோசிக்கறேன்..

அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்..

---------------------------------------------------------------------

3.  எனக்கு ஒரு முத்தம் குடு...

சாரி டாடி.. அம்மாவுக்கு மட்டும்தான் தருவேன்...

சரி.. நான் இப்போ உனக்கு ஒரு முத்தம் தர்றேன்.. பிடிச்சிருக்கா?

ம்ஹூம்.. அம்மா குடுத்தாதான் பிடிக்கும்..

பிடிக்கலையா? அப்போ திருப்பி குடு..

ம்ச்

ஆ.. நல்லா ஏமாந்தியா? உன் கிட்டே முத்தம் வாங்கீட்டேனே?

 ------------------------------------------------------------------------------

4. அப்பா.. கதை சொல்லுப்பா..

அம்மா கிட்டே போய் கேளு.. நான் பத்திரிக்கைக்கு கதை எழுத யோசிச்சிட்டு இருக்கேன்..

என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)

http://www2.hiren.info/desktopwallpapers/thumb/child-playing-with-bubbles.jpg

5. ஸ்கூல்ல என்ன என்ன குறும்பு பண்ணுனே..இன்னைக்கு?

எதுவும் செய்யலை டாடி..

பொய் சொல்லாதே.. GOD CAMERA வெச்சு பார்த்துட்டேன்..

அதென்ன காட் கேமரா..?

யார் யார் என்னென்ன தப்பு பண்றாங்க?ன்னு காட் கேமரால தெரிஞ்சிடும்..

அப்படியா? ஹைய்யா.. அப்பா.. கேமராவை ஆன் பண்ணுங்க.. நீ இங்க ஆஃபீஸ்ல என்ன என்ன தப்பு பண்ணுனீஙகன்னு பார்க்கலாம்.

------------------------------------------------------------

6.  அப்பா.. உங்க மேரேஜ் ஆல்பத்துல என்னை மட்டும் காணோமே...?

அது வந்து... நீ தூங்கப்போயிட்டே..

சும்மா பொய் சொல்லாதீங்கப்பா..உங்க கல்யாணத்துக்கு அப்புறமாதான் நான் பொறந்தேனாம்.. அம்மா சொன்னாங்களே..

http://media.nowpublic.net/images//80/6/80610c54ed55ef5382d93acd7e980860.jpgஅட..

7. அப்பா.. எனக்கு டிஃபனுக்கு போட்டாச்சா?

இரு.. ஃபர்ஸ்ட் எனக்கு போட்டுக்கறேன்..  ( சுயநலம்)

அப்பா.. இவ்வளவு சாப்பாடு போட்டுக்கறியே.. இத்தனை எதுக்கு?

நான் பெரிய ஆள் இல்லையா? அதிகம் பசிக்கும்..

அப்போ அம்மாவும் பெரியவங்கதானே.. அவங்க டிஃபன் பாக்ஸ் சின்னதா இருக்கு.. உங்களுது மட்டும் பெரிசா  இருக்கே..?

--------------------------------------------------------------

8. அப்பா.. காசு எவ்வளவு வெச்சிருக்கே..?

எதுக்கு கேக்கறே..?

ஸ்கூல்ல சர்க்கஸ் கூட்டிட்டு போறாங்க.. பணம் 60 ரூபா வேணும்..

அடேங்கப்பா.. 60 ரூபாயா? பேசாம நான் உன்னை காலைல சர்க்கஸ் கூடாரத்துக்கு வாக்கிங்க் போறப்ப கூட்டீட்டு போறேன்.. சிங்கம், யானை,ஒட்டகம்  இதெல்லாம் காட்டறேன்..ஃபிரீயாவே பார்த்துக்கோ..

போங்கப்பா.. ஜோக் எழுதறப்ப 10 ஜோக் சேர்த்து எழுதி சம்பாதிப்பா....

------------------------------------------------------------------------------

9. அப்பா.. நானும் ஜோக் எழுதறேன்...

எப்படி? எழுது பார்ப்போம்...

இதோ உங்க ஜோக்கை பார்த்து எழுதறேன்...

இது செல்லாது.. சொந்தமா யோசிச்சு எழுதனும்..

நீங்க கூட டைரியை பார்த்துத்தானே எழுதறீங்க...?

அது.. நான் ஏற்கனவே யோசிச்சு எழுதுன ஹின்ட்ஸ்..அதை வெச்சு டெவலப் பண்ணி எழுதறேன்..

அப்பா சொத்து பிள்ளைங்களுக்குத்தானே.. அப்போ உங்க ஜோக்கும் எனக்குத்தானே சொந்தம்?

-------------------------------------------------------------

10.  ஆஃபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு.. கிளம்பறேன்..

அப்பா.. இன்னைக்கு எனக்கு ஸ்கூல் லீவ்.. என் கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டுப்போப்பா..

மேனேஜர் அடிப்பாரு... நான் போறேன்.

என்ன்னப்பா.. இவ்வளவு பெரிய ஆளா இருக்கே..நீயும் திருப்பி அடி..

டிஸ்கி 1 - இந்தப்பதிவுக்கு நான் முதல்ல வெச்ச டைட்டில் குழல் இனிது.. யாழ் இனிது என்பர்......(பேபி ஸ்பெஷல்) என்பதுதான். மறுபடி யோசிச்சு பார்த்தா அதுல கிளாமரும் இல்ல.. கிக்கும் இல்ல. ஏற்கனவே என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்கு ..அதனால சும்மா அட்ராக்‌ஷனுக்காக இப்படி டைட்டில் வெச்சேன்.. சேட்டை அண்ணன்கிட்டே அனுமதி வாங்கிட்டுத்தான்..

டிஸ்கி 2 - பொதுவா யாரையாவது தாக்கி போடற பதிவுக்குத்தான் வரவேற்பு  அதிகமா இருக்கு.. ஆனா என் கூட யாரும் வமபு சண்டைக்கே வரமாட்டேன்கறாங்க.அது ஏன்னு தெரியல..(நாம டம்மி பீஸ்ங்கற ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போல.)

டிஸ்கி 3  இதுல சேட்டைக்காரன் நான் தான், சேஷ்டைக்காரி  என் 7 வயசு பொண்ணு அபிராமி ஸ்ரீ

79 comments:

எல் கே said...

குழந்தைகள் கூட இருக்கும் நேரம் சொர்க்கம். அனுபவிங்க செந்தில்

எண்ணங்கள் 13189034291840215795 said...

கலக்குறே அபிராமி...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி எல் கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

senthil uncle senthil uncle
மாமா பிஸ்கோத்து

சி.பி.செந்தில்குமார் said...

பயணமும் எண்ணங்களும் said...

கலக்குறே அபிராமி...

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

senthil uncle senthil uncle
மாமா பிஸ்கோத்து

யாரப்பா அது என்னை மாமாங்கறது? நான் ஒண்ணூம் டபுள் எம் ஏ பண்ணலையே ஹிந்தில ஒரே ஒரு எம் ஏ தானே பண்ணுனேன்

settaikkaran said...

தல, எதுக்கு ’அனுமதி’ன்னெல்லாம் பெரிய வார்த்தை? நான் என்ன சேட்டைக்காரன்கிற பெயருக்கு காப்பி ரைட்டா வாங்கியிருக்கேன்? யார் வேண்ணாலும் உபயோகிக்கலாம். தப்பேயில்லை! :-)

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னும் உன் குழந்தையிடம் பல்பு வாங்கலயா சி பி ..........

Chitra said...

ஏற்கனவே என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்கு

.....நாங்க நம்பிட்டோம்... :-)

கோவை நேரம் said...

நன்று ..புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? வெல்டன் அபிராமி

Chitra said...

அபிராமி - செம ஸ்மார்ட்! Good ones!

ரஹீம் கஸ்ஸாலி said...

குழந்தைகள் உலகம் தனி உலகம் தல.....அதுல அவங்கதான் ஹீரோ....நம்ம எல்லாம் காமடி பீசுதான். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவன் கூட.....அவன் குழந்தைகளிடம் தோற்கும் போது சந்தோசப்படுவான். உங்களின் ஒவ்வொன்றும் ஜோக்காகவே தெரியவில்லை. எல்லாம் குட்டி குட்டி கவிதையாகத்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள் அண்ணே....

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி ...உங்க கிட்டே பிடிக்காத ஒரே அம்சம் தம்பியைபோய் அண்ணன்னு சொல்றதுதான் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

தல, எதுக்கு ’அனுமதி’ன்னெல்லாம் பெரிய வார்த்தை? நான் என்ன சேட்டைக்காரன்கிற பெயருக்கு காப்பி ரைட்டா வாங்கியிருக்கேன்? யார் வேண்ணாலும் உபயோகிக்கலாம். தப்பேயில்லை! :-)

ஓக்கே அண்ணே.. உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னும் உன் குழந்தையிடம் பல்பு வாங்கலயா சி பி ..........

ஹா ஹா நிறைய வாங்கியாச்சு பாபு

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

ஏற்கனவே என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்கு

.....நாங்க நம்பிட்டோம்... :-)

January 28, 2011 9:03 AM

நம்பிக்கை இல்லைன்னா நைட் 3 டூ 4 பாருங்க வெறும் 6 பேர்தான் ஆன்லைன்ல இருப்பாங்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

jeeva said...

நன்று ..புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? வெல்டன் அபிராமி

ஹி ஹி நான் வீட்ல எலி வெளில புலி.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Chitra said...

அபிராமி - செம ஸ்மார்ட்! Good ones!

January 28, 2011 9:04 AM

நன்றி சித்ரா

Srini said...

" ஆ.. நல்லா ஏமாந்தியா? உன் கிட்டே முத்தம் வாங்கீட்டேனே?..... "
-------------------------------------
அடடா.. இதுவல்லவோ இன்பம்..!!
இதெல்லாம் ஜோக்’ங்கறதவிட வாழ்க்கையோட பிடிமானம்னே சொல்லலாம்தானே ?!
நல்லாருக்கு எல்லாமே..

karthikkumar said...

அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்////
சூப்பர் உங்க பொண்ணுக்கு உங்க மனைவி மூளை போல :))

karthikkumar said...

இந்த மாதிரியும் எழுதுங்க நல்லா இருக்கு :)

Unknown said...

//நம்பிக்கை இல்லைன்னா நைட் 3 டூ 4 பாருங்க வெறும் 6 பேர்தான் ஆன்லைன்ல இருப்பாங்க.. ஹி ஹி//

தல இது உங்களுக்கே ஒவரா இல்லை, என்னோட பிளாக்குல எல்லாம் ஒரு நாளைக்கே இவ்வளவு பேருதான் வராங்க, அப்ப நான் என்ன சொல்றதாம்? ஜோக்கெல்லம் பிரமாதம் தல, குழந்தைகள்னாலே சம்திங் ஸ்பெசல்தான் ...

Anonymous said...

குழந்தைகள் உலகமே தனி தான். நாம் இவர்கள், நாம என்னதான் புத்திசாலித்தனமாக யோசித்தாலும் சுலபமாக நமக்கு பல்பு குடுத்துடுவாங்க.

சக்தி கல்வி மையம் said...

குழந்தைகள் கூட இருக்கும் நேரம் சொர்க்கம்தான்...நிஜமாகவே...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

Speed Master said...

குழந்தைகள் கூட இருக்கும் நேரம் சொர்க்கம். அனுபவிங்க செந்தில்

வைகை said...

அப்பா.. கதை சொல்லுப்பா..

அம்மா கிட்டே போய் கேளு.. நான் பத்திரிக்கைக்கு கதை எழுத யோசிச்சிட்டு இருக்கேன்..

என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)//////

பளார் இல்ல.....பளார்! பளார்!

வைகை said...

குழந்தையிடம் தோற்பதும் சுகம்தான்!

சசிகுமார் said...

பதிவிலேயே இப்படி கலக்காலா ஜோக் எழுதிகிரீர்களே உங்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது சிரித்து கொண்டே இருக்கலாம் போல சூப்பர் செந்தில் வாழ்த்துக்கள்.

Umapathy said...

kaaranamae illama pidippathu kulanthaikal mattum than

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தங்கட்ட இருந்து நாம நிறைய கத்துகிடலாம்....!!!
அவர்கள் கேட்கும் கேள்விகளும் உல்டாவாதான் இருக்கும் ரசிக்கும் படியாய்...

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகளின் மழலை கேள்விகள் அழகு.....

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல ஜாலியான கருத்துள்ள பதிவு சூப்பர் மக்கா....................

குரங்குபெடல் said...

மிகச்சிறப்பான பதிவு . . . நன்றி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ் இது நியாயமா? நாம இங்க தூங்கிட்டு இருக்கும் போதா நீங்க பதிவு போடணும்! வடை போச்சே! சரி விடுங்க லேட்டா அன்பு கெட்டுடுமா என்ன? அப்புறம் உங்க பொண்ண வச்சு சூப்பரா ஒரு பதிவு போட்டிருக்கீங்க! அந்தச் சுட்டிக்கு என்னோட வாழ்த்துக்கள்!

நம்ம பக்கம் வரவே இல்லையே பாஸ்!

Anonymous said...

சூப்பர்

செல்வா said...

//அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்..//

இது செம !!

செல்வா said...

//என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)
//

நல்ல கேள்வி .. அது சரி நீங்க ரோசிசுதான் கதை எழுதுவீங்களா ? ஹி ஹி

செல்வா said...

//சும்மா பொய் சொல்லாதீங்கப்பா..உங்க கல்யாணத்துக்கு அப்புறமாதான் நான் பொறந்தேனாம்.. அம்மா சொன்னாங்களே..
//

ஹா ஹா ,, ஏமாத்த முடியாதுல !

செல்வா said...

//அப்பா சொத்து பிள்ளைங்களுக்குத்தானே.. அப்போ உங்க ஜோக்கும் எனக்குத்தானே சொந்தம்?
//

நல்ல கனி நல்ல கனி , அட ச்சே நல்ல கேள்வி ..

செல்வா said...

//.(நாம டம்மி பீஸ்ங்கற ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போல.)
///

ஹி ஹி ஹி .. நானும் டம்மி பீசுதான் ..

Arun Prasath said...

அடடா ரொம்ப லேட் ஆய்டுச்சு போல

Sathish said...

உங்கள் மகள் உங்களை விட புத்திசாலியாக இருப்பார் போல... நல்ல படிக்கத்தூண்டும் பதிவு..

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல பதிவுங்க குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள் மழலைசொல் கேளாதவர் என்று அய்யன் சொன்னது மெத்த சரிதான்

தமிழ்வாசி பிரகாஷ் said...

குழந்தைகள் இருக்குமிடத்தில் நாமும் குழந்தையாய் மாறி விடுவோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கலான சேட்டை சிபி, குழந்தைகளுடன் செலவிடும் நேரமே வாழ்வின் பொன்னான தருணம் என்பேன்!

சி.பி.செந்தில்குமார் said...

Srini said...

" ஆ.. நல்லா ஏமாந்தியா? உன் கிட்டே முத்தம் வாங்கீட்டேனே?..... "
-------------------------------------
அடடா.. இதுவல்லவோ இன்பம்..!!
இதெல்லாம் ஜோக்’ங்கறதவிட வாழ்க்கையோட பிடிமானம்னே சொல்லலாம்தானே ?!
நல்லாருக்கு எல்லாமே..

THANX SRINI

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்////
சூப்பர் உங்க பொண்ணுக்கு உங்க மனைவி மூளை போல :))

OH U THINK I HAVE NO BRAIN

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

இந்த மாதிரியும் எழுதுங்க நல்லா இருக்கு :)

January 28, 2011 10:09 AM

OK KARTHI THANX

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

//நம்பிக்கை இல்லைன்னா நைட் 3 டூ 4 பாருங்க வெறும் 6 பேர்தான் ஆன்லைன்ல இருப்பாங்க.. ஹி ஹி//

தல இது உங்களுக்கே ஒவரா இல்லை, என்னோட பிளாக்குல எல்லாம் ஒரு நாளைக்கே இவ்வளவு பேருதான் வராங்க, அப்ப நான் என்ன சொல்றதாம்? ஜோக்கெல்லம் பிரமாதம் தல, குழந்தைகள்னாலே சம்திங் ஸ்பெசல்தான் .

HI HI HI THANX SIR

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இந்திரா said...

குழந்தைகள் உலகமே தனி தான். நாம் இவர்கள், நாம என்னதான் புத்திசாலித்தனமாக யோசித்தாலும் சுலபமாக நமக்கு பல்பு குடுத்துடுவாங்க

THANX INDIRA

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger sakthistudycentre-கருன் said...

குழந்தைகள் கூட இருக்கும் நேரம் சொர்க்கம்தான்...நிஜமாகவே...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

OH OK

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Speed Master said...

குழந்தைகள் கூட இருக்கும் நேரம் சொர்க்கம். அனுபவிங்க செந்தில்

THANX

சி.பி.செந்தில்குமார் said...

குழந்தைகள் கூட இருக்கும் நேரம் சொர்க்கம். அனுபவிங்க செந்தில்

January 28, 2011 11:00 AM
Delete
Blogger வைகை said...

அப்பா.. கதை சொல்லுப்பா..

அம்மா கிட்டே போய் கேளு.. நான் பத்திரிக்கைக்கு கதை எழுத யோசிச்சிட்டு இருக்கேன்..

என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)//////

பளார் இல்ல.....பளார்! பளார்!

HAA HAA

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

குழந்தையிடம் தோற்பதும் சுகம்தான்!

THANX VAIKAI.. U R RIGHT

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சசிகுமார் said...

பதிவிலேயே இப்படி கலக்காலா ஜோக் எழுதிகிரீர்களே உங்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது சிரித்து கொண்டே இருக்கலாம் போல சூப்பர் செந்தில் வாழ்த்துக்கள்.

THANX SASI.. LET WE MEET

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger உமாபதி said...

kaaranamae illama pidippathu kulanthaikal mattum tha

CORRECT

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

குழந்தங்கட்ட இருந்து நாம நிறைய கத்துகிடலாம்....!!!
அவர்கள் கேட்கும் கேள்விகளும் உல்டாவாதான் இருக்கும் ரசிக்கும் படியாய்...

January 28, 2011 1:06 PM

S S THANX

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகளின் மழலை கேள்விகள் அழகு.....

January 28, 2011 1:07 PM

THANX

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

நல்ல ஜாலியான கருத்துள்ள பதிவு சூப்பர் மக்கா....................

January 28, 2011 1:09 PM

THANX MANOO

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger udhavi iyakkam said...

மிகச்சிறப்பான பதிவு . . . நன்றி

January 28, 2011 1:19 PM

THANX

சி.பி.செந்தில்குமார் said...

மிகச்சிறப்பான பதிவு . . . நன்றி

January 28, 2011 1:19 PM
Delete
Blogger மாத்தி யோசி said...

பாஸ் இது நியாயமா? நாம இங்க தூங்கிட்டு இருக்கும் போதா நீங்க பதிவு போடணும்! வடை போச்சே! சரி விடுங்க லேட்டா அன்பு கெட்டுடுமா என்ன? அப்புறம் உங்க பொண்ண வச்சு சூப்பரா ஒரு பதிவு போட்டிருக்கீங்க! அந்தச் சுட்டிக்கு என்னோட வாழ்த்துக்கள்!

நம்ம பக்கம் வரவே இல்லையே பாஸ்!

January 28, 2011 1:46 PM

HI HI

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கந்தசாமி. said...

சூப்பர்

THANX

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

//அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்..//

இது செம !!

HAA HAA THANX

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கோமாளி செல்வா said...

//என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)
//

நல்ல கேள்வி .. அது சரி நீங்க ரோசிசுதான் கதை எழுதுவீங்களா ? ஹி ஹி

January 28, 2011 4:15 PM

HI HI S

சி.பி.செந்தில்குமார் said...

//என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)
//

நல்ல கேள்வி .. அது சரி நீங்க ரோசிசுதான் கதை எழுதுவீங்களா ? ஹி ஹி

January 28, 2011 4:15 PM
Delete
Blogger கோமாளி செல்வா said...

//சும்மா பொய் சொல்லாதீங்கப்பா..உங்க கல்யாணத்துக்கு அப்புறமாதான் நான் பொறந்தேனாம்.. அம்மா சொன்னாங்களே..
//

ஹா ஹா ,, ஏமாத்த முடியாதுல

HIO HI HI

சி.பி.செந்தில்குமார் said...

January 28, 2011 4:16 PM
Delete
Blogger கோமாளி செல்வா said...

//அப்பா சொத்து பிள்ளைங்களுக்குத்தானே.. அப்போ உங்க ஜோக்கும் எனக்குத்தானே சொந்தம்?
//

நல்ல கனி நல்ல கனி , அட ச்சே நல்ல கேள்வி ..

HI HI ALWAYS U R IN THE MEMMORY OF KANIMOZI

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கோமாளி செல்வா said...

//.(நாம டம்மி பீஸ்ங்கற ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போல.)
///

ஹி ஹி ஹி .. நானும் டம்மி பீசுதான்

HI HI

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Arun Prasath said...

அடடா ரொம்ப லேட் ஆய்டுச்சு போ

SO WAT?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Sathishkumar said...

உங்கள் மகள் உங்களை விட புத்திசாலியாக இருப்பார் போல... நல்ல படிக்கத்தூண்டும் பதிவு..

January 28, 2011 5:43 PM

THANX

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல பதிவுங்க குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள் மழலைசொல் கேளாதவர் என்று அய்யன் சொன்னது மெத்த சரிதான்

THANX SIR

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தமிழ்வாசி - Prakash said...

குழந்தைகள் இருக்குமிடத்தில் நாமும் குழந்தையாய் மாறி விடுவோம்.

THANX SIR

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கலான சேட்டை சிபி, குழந்தைகளுடன் செலவிடும் நேரமே வாழ்வின் பொன்னான தருணம் என்பேன்

SS U R 100 % CORRECT

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

இந்த சேட்டைக்காரனுக்கு ஏத்த சேஷைக்காரிதான் போல. உங்களுக்கு ஏத்த மகள்தான். இந்த பந்தம் தொட்டு தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Rathnavel Natarajan said...

அபிராமிக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

super kalakkal!

உணவு உலகம் said...

என்றும் இனிமை.

cheena (சீனா) said...

அன்பின் சிபி - மழலைச் செல்வங்களுடன் நேரம் செலவழிப்பதென்பது மகிழ்ச்சிக்குரிய செயல். நன்று நன்று- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

K.Arivukkarasu said...

இத எழுதனுன்னு நினச்ச உங்கள பாராட்டுறதா? உங்கள ஒவ்வொரு முறையும் outsmart பண்ண அபிராமிய பாராட்டுறதா? மொத்ததில் அருமை!