Friday, January 14, 2011

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை

http://www.tamilmaxs.com/Admin/event/1085_thamna.jpg

1. சிறுத்தை - பொங்கலுக்கு ரிலீஸ் ஆகற படங்கள்லேயே ரொம்ப
பிரம்மாண்ட படைப்பும், பெரிய பேனர்,ஸ்டார் வேல்யூ உள்ள படமும்
இதுதான்.ஆனால் டிரெயிலரைப்பார்த்தால் படு டப்பா படம் போல் தோணுது.
தெலுங்கு ரீமேக்னு அவங்களே ஓப்பனா சொல்லீட்டாங்க..அடிதடி வெட்டு குத்து வன்முறைன்னு படம் பக்கா மசாலாவா இருக்கும்.சந்தானம் காமெடி படத்துக்கு பிளஸ் ஆக இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது.. இந்த மாதிரி ஆக்‌ஷன் ரீவேஞ்ஜ் சப்ஜெக்ட்ல காமெடி சும்மா ஊறுகாய் மாதிரிதான் இருக்கும்.தமனா செம கிளாமரா இதுல
நடிச்சிருக்கறதா கேள்விப்பட்டேன். கார்த்தி - தமனா கெமிஸ்ட்ரி ஏற்கனவே பையா படத்தில் ஒர்க் அவுட் ஆனதால் இதிலும் காதல் காட்சிகள் பட்டாசைக்கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரி வன்முறையைத்தூண்டும் மாமூல் மசாலாப்படங்களோ,தெலுங்கு ரீமேக்குகளோ ஹிட் ஆகாமல் இருப்பதே நல்லது மினிமம் பட்ஜெட் படங்கள் ஹிட் ஆனால்தான் கதாசிரியருக்கும், நம்மைப்போன்ற இளம் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பும்,மரியாதையும் கிடைக்கும்.

ஹீரோயிச படங்கள் ஹிட் ஆவதால் மேலும் மேலும் அவர்களது சம்பளம் உயருமே தவிர கோலிவுட்டில் ஆரோக்கியமான சூழல் நிலவாது.கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே ஹிட் ஆக வேண்டும்.

ஈரோட்டில் இந்தப்படம் 4 முக்கிய தியேட்டரில் ரிலீஸ் ஆகுது. அபிராமி தியேட்டரில் காவலன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன்,ஆனால் தியேட்டர் மேனேஜர் சிறுத்தையை அபிராமியில் போட்டு,காவலனை தேவி அபிராமியில் ரிலீஸ் பண்ண முடிவெடுத்து விட்டார்.( அபிராமியில் 1280 சீட்,தேவி அபிராமியில் 680 சீட்) அவரது கால்குலேஷன் மிஸ் ஆகி
சிறுத்தையை விட காவலன் ஹிட் ஆகட்டும் என வாழ்த்துகிறேன்.(!?)
http://narumugai.com/wp-content/uploads/2011/01/Tapsee.jpg
2. ஆடுகளம் - தனுஷ் படம் என்பதால் அல்ல படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம். படத்தின் ஹீரோயின் புதுமுகம் என்பதாலும், பார்ட்டி நல்ல ஃபிகர் மாதிரி உத்தேசமான ட்ரெயிலர் பார்வையில் தெரிவதாலும் இளைஞர்களின் ரசனைக்குத்தீனி கன்ஃபர்ம்.பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத படம் என்பதே இதற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.எந்தப்படம் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகிறதோ, அது ஃபிளாப் ஆவதும் சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆகும் படங்கள் ஹிட் ஆவதும் கோலிவுட்டுக்கு புதுசில்லை.

பெரிய பட்ஜெட் படங்களான சிறுத்தை,காவலன் ஆகிய படங்களுக்கு
நல்ல நல்ல தியேட்டர்கள் புக் ஆகி விட்டதால் இந்தப்படத்துக்கு
சுமாரான தியேட்டரே கிடைச்சிருக்கு. பார்ப்போம்.
http://www.123tamilcinema.com/images/2010/11/Kaavalan-e1290671207347.jpg
3. காவலன். - தொடர்ந்து 6 தோல்விபடங்கள் கொடுத்து விட்டதால்
விஜய் இந்தப்படத்தில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
காமெடியை நம்பினோர் கைவிடப்படார் என்பது அனைத்து மொழிகளிலும்
நிரூபிக்கப்பட்டது என்பதாலும் ,ஏற்கனவே சூப்பர் ஹிட் படமான ஃபிரண்ட்ஸ்
பட இயக்குநர் சித்திக்கின் படம் என்பதாலும் இந்தப்படம் குடும்பத்துடன்
பார்க்கும்படி இருக்கும் என நம்பி போகலாம்.

ஏற்கனவே மலையாளத்தில் இந்தப்படம் ஹிட் ஆகி இருக்கிறது
என்பதும், அந்த படத்தை பார்த்தவர்கள் படம் நல்லாருக்கு என கருத்து சொல்லி
இருப்பதாலும் விஜய்யும், அவரது ரசிகர்களும் தெம்பாக இருக்கிறார்கள்.

அசின் ஜோடி என்றாலும் இன்னொரு ஃபிகரும் தட்டுப்படுது.பார்ட்டியும் ஷோக்காத்தான் இருக்கு.ஒளிப்பதிவு நல்ல கிளாரிட்டி.எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பு இந்தப்பொங்கலில் ஹிட் அடிக்கப்போவது காவலன் தான் .
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2010/11/ilaignan.jpg
4. இளைஞன் - இந்தப்படத்தின் விளம்பரங்களில் உங்கள் அபிமான தியேட்டர்களில் ட்ரெயிலர் அதிர்கிறது என வாசகம் வந்தது செம காமெடி.கலைஞர் வசனம் என்பதால் எப்படியாவது ஒப்பேற்றி விடலாம் என நினைக்கிறார்கள்.பாடல் ஆசிரியர் விஜய் ஜஸ்ட் பாஸ் ஆவது ஆக வேண்டும் என பிரார்த்தித்தபடி இருக்கிறார். ட்ரெயிலரை பார்த்தால் படம் பத்தோடு பதினொண்னு அத்தோட இதுவும் ஒண்ணு என்றே தோணுது.

டிஸ்கி -1 ; கடைசியா வந்த தகவல்படி (ஆமா,இவரு பெரிய நியூஸ் சேனல் நடத்தறாரு..) காவலன் இன்னைக்கு ரிலீஸ் ஆகலை.

டிஸ்கி 2 : நான் ஆடுகளம் படம் விமர்சனம் டைப் பண்ணிட்டு இருக்கேன். 5 மணிக்கு  போட்டுடுவேன்.( ஆமா, இவரு எவரெஸ்ட் சிகரத்தை டச் பண்ணீட்டாரு, இந்தியக்கொடியை நட்டு மானத்தை காபாத்தப்போறாரு...)

21 comments:

சக்தி கல்வி மையம் said...

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா வடை போச்சே....
பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

கவி அழகன் said...

அருமையான படைப்பு பொங்கல் வாழ்த்துக்கள்

மாணவன் said...

பொங்கல் படங்களின் ரிலீஸ் பகிர்வுக்கு நன்றி அண்ணே

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

என்னா ஒரு கால்குலேஷன்!

போகி போ போ பொங்க வா வா ஹி ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

happy pongal

ஆதவா said...

பொங்கல் வாழ்த்துகள்!!

ஆடுகளம் நல்லாயிருக்காமே

Ram said...

பாஸ்.. காவலன் ஹிட் ஆகுறது இருக்கட்டும்... ரிலீஸ் ஆகுமா.???#டவுட்டு

Unknown said...

ஆல் பிகர் சூப்பர்

www.Picx.in said...

to see sameera reddy 300 pictures

http://www.picx.in/2011/01/sameera-reddy-300-pictures.html

dont miss it

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காவலன் படம்தான் ஹிட் ஆகும்னு நெனைக்கிறேன். அதுதான் ஆகனும், விஜய்க்கு எதிரா சில அரசியல் சக்திகள் இயங்குறாங்க, அது ஓட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கும் தமிழகத்துக்குமே நல்லதில்லை!

ஆர்வா said...

நான் இன்னைக்கு ஆடுகளம் படம் பார்த்திட்டு சொல்றேன்.. வர்ட்டா தல... பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown said...

time is 5.00pm now..

பாரி தாண்டவமூர்த்தி said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... காவலன் ரிலீஸ் ஆகுமா?????

தர்ஷன் said...

பாஸ் இப்ப மணி ஆறு

Srini said...

" என்னது, காவலன் இன்னிக்கி ரிலீஸ் ஆவுலயா ?!! அப்படியே இன்னும் ரெண்டு நாள் தள்ளிப்போட்டாங்கன்னா, நம்ம ஜனங்க பொங்கல நிம்மதியா கொண்டாடிக்குவாங்க.. பொதுநலம் முக்கியமில்லியாண்ணே ? “

Ram said...

//காவலன் படம்தான் ஹிட் ஆகும்னு நெனைக்கிறேன். அதுதான் ஆகனும், விஜய்க்கு எதிரா சில அரசியல் சக்திகள் இயங்குறாங்க, அது ஓட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கும் தமிழகத்துக்குமே நல்லதில்லை!//

அடங்கொன்னியான்.!!! ஆட்டோவ ஸ்டார்ட்பண்ணுங்கப்பா...

தமிழ்திரை said...

Visit Here to Download New Tamil Movies

http://www.newtamilfilmz.blogspot.com

ம.தி.சுதா said...

எதிர் பார்ப்புடன் காத்திருப்போமாக...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

Unknown said...

dai srini shut up your mouth everybody knows that because of political view kavalan is not released.. stupid fellow

ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)