Thursday, November 04, 2010

நாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்

http://img.dinamalar.com/data/large/large_119529.jpg1. சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன்: மழை பாதிப்பை தடுக்க ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில், 260 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள், மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் -யோவ் என்னய்யா தீர்மானம் தூர்மானம்னுட்டு,260 கோடில நீ எவ்வளவு தேத்துனே?அதை சொல்லு முதல்ல.

2. அ.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: கருணாநிதியின் எண்ணமெல்லாம், "கை'யுடனான தன் உறவைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறதே தவிர, காவிரி பிரச்னையில் தமிழர்களின் உரிமையைக் கேட்டுப் பெறுவதில் இல்லை.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அம்மா,அல்லக்கைகளை பற்றி என்ன பேச்சு?அடுத்த கூட்டம் எந்த ஊரு?



3. ம.தி.மு.., பொதுச் செயலர் வைகோ: தமிழகத்தில், தி.மு.., அரசு அமைக்க முற்படும் சட்ட மேலவையில், ஆதிதிராவிடர்களுக்கும், பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இந்த டகால்டி வேலை எல்லாம் நம்ம கிட்டே வேணாம்,உங்களுக்கு மேலவைல சீட்டு வேணும்னு நேரடியா கேட்டுடுங்க.

4. சீனப் பிரதமர் ஜியாபோவிடம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்: இரு நாடுகளின் வர்த்தக உறவு மேம்பட்டு இருக்கிறது. இரு நாடுகளும் முக்கிய விஷயங்களில் கூட்டுறவாக செயல்படும் வகையில் அமைய உள்ள தங்களின் இந்திய வருகையை வரவேற்கிறேன்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் -அட வெக்கங்கெட்ட ராசா,சீனா நம்மகிட்ட நல்லவன் மாதிரி போடுது சீன.(SCENE)


5. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: சமூகத்துக்கு ஆன்மிகவாதிகள் பல நல்ல பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தி.மு.., அரசு துணை நின்று வருகிறது. அதே போல, வேலூர் ஸ்ரீபுரத்தில் நடக்கும் பல பணிகளையும் அரசு ஆதரிக்கிறது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஆமாமா,நித்யானந்தா,பிரேமானந்தா,காஞ்சி சங்கராச்சாரியார் அப்படினு லிஸ்ட் நீளுது,

6. பத்திரிகைச் செய்தி: தமிழகத்தில், 69 அரசு கலைக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஓய்வு பெறுவதன் மூலம் காலியாகும் முதல்வர் பணியிடங்கள், முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். 2009-10ம் ஆண்டு முடிவில், 45 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியானது. இன்னமும் அவை காலியாகவே இருக்கின்றன.



கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இவ்வளவுதானே,2011ல முதல்வர் ஆவேன்னு இதுவரை 68 பன்னாடைங்க பேட்டி குடுத்திருக்கானுங்க,அவங்கள்ல 45 பேரை செலக்ட் பண்ணிடுங்க.

7. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி: தமிழகத்தைப் பொறுத்தவரை, மாநிலத்தின் உரிமைகளைப் பறிகொடுக்காத வகையில், பல நலத்திட்டங்களையும் தேவையான நிதியையும் பெற்றுத் தர காங்கிரஸ் உதவுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாக வைத்திருக்கின்றன. அதுபோல், நாங்களும் ஆட்சிக்கு வருவோம். காங்கிரஸ் தலைமை, தக்க நேரத்தில் யுக்திகளை வகுக்கும்




கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக்- யோவ்,இந்த டகால்டி வேலை எல்லாம் என் கிட்டே  வேணாம்.காவடி தூக்கறதை முதல்ல நிறுத்துங்கய்யா,அப்புறமா மிச்சத்தை பேசுவோம்.





8. பா.ஜ., தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: பத்து லட்சம் விவசாய பம்பு செட்டுகளை மூன்று மாதத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை. இது போல எல்லா திட்டங்களும் தேர்தலுக்காகவும், ஓட்டுக்காகவுமே நடமுறைப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.



கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - விளக்கமா கேக்காம பேசுனா எப்படி?சம்பந்தப்பட்டவர்களுக்குன்னா உங்களுக்கு அர்த்தம் தெரியலையா?கட்சில சம்பந்தப்பட்டவங்களுக்கு... இதெல்லாம் கத்துக்கிட்டாத்தான் நீங்க தமிழ்நாட்டுல காலம் தள்ள முடியும்.





9..முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, "தமாஷ்' பேச்சு: பா.ம.க., வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதைப் பார்த்து மாற்றுக் கட்சியினர் பொறாமையிலும், கலக்கத்திலும் உள்ளனர். எங்களுக்கு பதவிகள் மீது விருப்பமில்லை. ஆனால், மாற்றுக் கட்சியினர் நம் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகைகளுக்காகவும் போராடுவதில்லை; நமக்காக போராடவே, நமக்கு பதவிகள் வேண்டும்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஏற்கனவே பதவில இருந்தப்ப என்ன செஞ்சு கிழிச்சீங்கண்ணா?


 10 பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்களில் ஒன்றரை கோடி பேர், பா.ம.க.,வுக்கு ஓட்டளித்தால் கூட, 120 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இப்போதான் இந்த கணக்கு தெரிஞ்சுதாக்கும்,நீங்க ரொம்ப தமாசுக்காரர்ணா,இனி எந்த நாய் கால்லயும் போய் விழாதீங்கண்ணா.



11. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு, மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ முதல்வர் கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா?
 

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - யக்கோவ்,யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க,ஐயா ! ஆகறது ஆகட்டும்,உடனே 2 அரசுக்கும் லெட்டர் எழுதுங்கய்யா,போஸ்ட் பண்ணாட்டியும் பரவால்ல,முரசொலில வெளியிட்டு நம்ம வீரத்தை நிரூபிச்சுடுவோம்,ஹ யாருகிட்டே?

20 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ஹூம்..... ஒருத்தனயும் விட்டு வெக்கலே போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அம்மா,அல்லக்கைகளை பற்றி என்ன பேச்சு?அடுத்த கூட்டம் எந்த ஊரு?///

பாத்து அடுத்து உங்க ஊருக்கு வந்துடப் போறாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இவ்வளவுதானே,2011ல முதல்வர் ஆவேன்னு இதுவரை 68 பன்னாடைங்க பேட்டி குடுத்திருக்கானுங்க,அவங்கள்ல 45 பேரை செலக்ட் பண்ணிடுங்க.////

அதுல எனக்கும் ஒண்ணுங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அந்த புதிய தலைமுறை மேட்டர் என்னாங்கோ? கொஞ்ச்சம் லிங்க் கொடுங்கோ!

Unknown said...

அய்யா ஓட்டு போட்டாச்சி

எஸ்.கே said...

வழக்கம்போல் கலக்கல்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சரி சரி விடுங்க ....,இந்தா புடிங்க என் தீபாவளி வாழ்த்துகல

கதிர்கா said...

/*இவ்வளவுதானே,2011ல முதல்வர் ஆவேன்னு இதுவரை 68 பன்னாடைங்க பேட்டி குடுத்திருக்கானுங்க,அவங்கள்ல 45 பேரை செலக்ட் பண்ணிடுங்க.*/

ஹா..ஹா..ஹா..

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் கான்செப்ட் சூப்பர்... ஏனோ இப்பொழுதெல்லாம் கவுண்டமணி என்றாலே பன்னிக்குட்டியின் ஞாபகம் தான் வருது...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ஹூம்..... ஒருத்தனயும் விட்டு வெக்கலே போல?


hi hi hiஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அம்மா,அல்லக்கைகளை பற்றி என்ன பேச்சு?அடுத்த கூட்டம் எந்த ஊரு?///

பாத்து அடுத்து உங்க ஊருக்கு வந்துடப் போறாங்க!

வந்தா வரட்டும் எனக்கேன்ன?நான் ஓடிடுவேனே

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இவ்வளவுதானே,2011ல முதல்வர் ஆவேன்னு இதுவரை 68 பன்னாடைங்க பேட்டி குடுத்திருக்கானுங்க,அவங்கள்ல 45 பேரை செலக்ட் பண்ணிடுங்க.////

அதுல எனக்கும் ஒண்ணுங்கோ!

எடுத்துக்கோங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அந்த புதிய தலைமுறை மேட்டர் என்னாங்கோ? கொஞ்ச்சம் லிங்க் கொடுங்கோ!

வெயிட் பிளீஸ் ஒரு பதிவாவே போட்டுடலாம்

சி.பி.செந்தில்குமார் said...

க்கி உலகம் said...

அய்யா ஓட்டு போட்டாச்சி

நன்றி ஐயா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

வழக்கம்போல் கலக்கல்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

கலக்கல்

நன்றி பட்டா

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சரி சரி விடுங்க ....,இந்தா புடிங்க என் தீபாவளி வாழ்த்துகல

வாழ்த்துக்கு நன்றி மாமேதை

சி.பி.செந்தில்குமார் said...

கதிர்கா said...

/*இவ்வளவுதானே,2011ல முதல்வர் ஆவேன்னு இதுவரை 68 பன்னாடைங்க பேட்டி குடுத்திருக்கானுங்க,அவங்கள்ல 45 பேரை செலக்ட் பண்ணிடுங்க.*/

ஹா..ஹா..ஹா..

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நன்றி கதிர்கா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் கான்செப்ட் சூப்பர்... ஏனோ இப்பொழுதெல்லாம் கவுண்டமணி என்றாலே பன்னிக்குட்டியின் ஞாபகம் தான் வருது..

கரெக்ட்,எனக்கும்தான்