Thursday, September 23, 2010

காந்தி தேசமே.........!?


 காந்தி பிறந்த மண் இது.தேனாறும்,பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை,மக்கள் பட்டினி இல்லாமல் இருந்தாலே போதும் எனும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் நம் அரசியல்வாதிகள் அவர்கள் சுயநலத்தைத்தான் பார்க்கிறார்களே தவிர மக்கள் நலத்தை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.பத்திரிக்கைகளில் அவர்களது கூற்றும்,அடிக்கும் கூத்தும்,




காங்கிரஸ் எம்.எல்.ஏ., விடியல் சேகர்: திருப்பூர் சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு ஒதுக்கிய 200 கோடி ரூபாயை பயன்படுத்த, மாநில அரசு திட்டம் வகுக்கவில்லை. மத்திய அரசு ஆய்வு செய்ய ஒதுக்கிய ஐந்து கோடி ரூபாயை பயன்படுத்தி, திட்ட விளக்க அறிக்கை தயாரிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு பங்குத் தொகையையும் ஒதுக்கவில்லை.


நக்கலிஸ்ட் நாரதர் - அந்தத்திட்டத்துக்கு ஒதுக்கலைன்னா என்ன,அவங்க பர்சனலா ஒரு தொகை ஒதுக்கி இருக்க மாட்டாங்க?


முதல்வர் கருணாநிதி: ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகைகளை படிப்பதற்கே கை நடுங்குகிறது. செய்தியைப் படிக்கிறபோது, இத்தனை பேர் இறந்தனர், இத்தனை பேர் கொல்லப்பட்டனர், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்லப்படுகிற, காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது.


நக்கலிஸ்ட் நாரதர் - அப்போ இலங்கை காஷ்மீரை விட தூரம்னு சொல்றீங்களா?சொந்தப்பொண்டாட்டிக்கு சீக்காம்,பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி உடம்பு தேக்காம்



தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், அந்த துறை சம்பந்தப்பட்ட தொழிலில் இருக்கக் கூடாது என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறதா என்பது தெரியவில்லை.

 நக்கலிஸ்ட் நாரதர் - நம்ம அரசியல்வாதிகள் எதை ஃபாலோ பண்றாங்களோ இல்லையோ முறைகேடு எப்படி பண்ணலாம்கறதை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுவாங்க.



அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு: தமிழக அரசியலில் கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து பேச வேண்டும்.

நக்கலிஸ்ட் நாரதர் -அது எப்படி முடியும்?அவரு கொட நாடே கதினு இருக்கார்,இவர் தமிழ்நாடே நம்ம குடும்பத்துக்குனு கனவு காண்கறார்.

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, "தமாஷ்' பேச்சு: கருணாநிதியும், ஜெயலலிதாவும் வன்னியர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இந்த சமூகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்றால் அன்புமணி முதல்வராக வேண்டும்.

நக்கலிஸ்ட் நாரதர் - இந்த சமூகம்னு நீங்க சொல்றது டாக்டர் ராம்தாஸ் குடும்பம்தானே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: மற்ற கட்சிகளில் தேர்தலின் போது மட்டுமே இளைஞர்களை எப்படி பயன்படுத்த முடியும் என்று யோசிக்கின்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அந்த இளைஞர்களை வேலை வாய்ப்பு, கல்வி மட்டுமின்றி, நாட்டு மக்களின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்து சக்தியாக பார்க்கிறது.

நக்கலிஸ்ட் நாரதர் - உங்களுக்கு அரசியல் பரீட்சைல பாஸ்மார்க் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேட்டி: தி.மு.க., அரசின் செயல்களை கம்யூனிஸ்டுகள் விமர்சித்தால், முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

நக்கலிஸ்ட் நாரதர் - மக்கள் மாற்றத்தை விரும்பறாங்க,ஓகே,எந்த மாற்றம் வந்தாலும் அது பொது ஜனத்துக்கு ஏமாற்றமா போயிடுதே?

பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: பா.ஜ., சொந்த பலத்தில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பும் அளவு சக்தி படைத்துள்ளது. கூட்டணி குறித்து தி.மு.க., பேச வந்தாலும், பா.ஜ., தயாரில்லை.

நக்கலிஸ்ட் நாரதர் - பந்திலயே உக்காரவேணாம்னு சொல்றாங்களாம்,இலை ஓட்டைனு சொன்னானாம்

மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேட்டி: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 10 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது, 13 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நக்கலிஸ்ட் நாரதர் - அண்ணே ,ஆப்பிரிக்காவைத்தான் இருண்ட கண்டம்னு சொல்வாங்க,உங்களை தொடர்ந்து மின் வாரியத்துல விட்டு வெச்சா தமிழகத்துக்கு அந்தப்பேரை வாங்கிக்குடுத்துடுவீங்க போலிருக்கே? 

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை, வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி செய்ய வேண்டும். சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடு தான்.

நக்கலிஸ்ட் நாரதர் - டாக்டர் அய்யா,2011 ல உங்க கட்சிக்கு எந்தக்கூட்டணிலயும் இட ஒதுக்கீடு கிடைக்கறமாதிரி தெரியலையே,என்ன் பண்ணப்போறீங்க?

6 comments:

Jegan said...

good
i got the vada

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா ஜெகன்,இடுகை போட்ட 2 வது நிமிஷமே வந்துட்டிங்களே,மேடை போட்டு வடை தந்துட வேண்டியதுதான்

karthikkumar said...

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:///அகில உலக பேமஸ் ஆண்டியப்பன் மாதிரி சொல்றீங்க.... ஆனா கார்த்தி சிதம்பரம் அவருக்கு கட்சில எந்த பதவியும் இல்லைங்கற காரணத்துக்காக இத நான் ஏத்துக்கறேன்.

karthikkumar said...

அப்போ இலங்கை காஷ்மீரை விட தூரம்னு சொல்றீங்களா?சொந்தப்பொண்டாட்டிக்கு சீக்காம்,பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி உடம்பு தேக்காம்// good question

சி.பி.செந்தில்குமார் said...

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:///அகில உலக பேமஸ் ஆண்டியப்பன் மாதிரி சொல்றீங்க.... ஆனா கார்த்தி சிதம்பரம் அவருக்கு கட்சில எந்த பதவியும் இல்லைங்கற காரணத்துக்காக இத நான் ஏத்துக்கறேன்.

ok thanks

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

அப்போ இலங்கை காஷ்மீரை விட தூரம்னு சொல்றீங்களா?சொந்தப்பொண்டாட்டிக்கு சீக்காம்,பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி உடம்பு தேக்காம்// good

நல்லா கவனிக்கறீங்க