Wednesday, September 22, 2010

வந்தே மாதரம் - சினிமா விமர்சனம்

 
ஒரு புலனாய்வுப்படத்துக்கு ஆடை வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட படமோ என வியக்கும் வண்ணம் போலீஸ் ஆஃபீஸராக வரும் ஹீரோக்கள் இருவருக்கும் யூனிஃபார்மிலும் சரி,சிவில் டிரஸ்ஸிலும் சரி கலக்கலான டிரஸ்ஸிங்க் சென்ஸோடு எடுக்கப்பட்ட படம் இது.

ராஜநீதி என்ற பெயரில் கேரளத்தில் சக்கைபோடு போட்ட மலையாள டப்பிங் படம்தான் இந்த வந்தேமாதரம்.கதை என்று புதிதாக ஏதுமில்லை,விஜய்காந்தின் மாமூல் ஃபார்முலாதான்.பாகிஸ்தான் தீவிரவாதி,இந்தியாவில் சதி,ஹீரோக்கள் முறியடிப்பு என புளித்துப்போன கதைதான்.ஆனால் காட்சி அமைப்பில் ,திரைக்கதையில் வித்யாசமும்,வேகமும் காட்டி இருக்கிறார்கள். 



அர்ஜூன் எந்த பில்டப்பும் தராமல் சாதாரணமாக அறிமுகமாகும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏர்ஹோஸ்டலாக வரும் சினேகாவும்,உளவுத்துறை அதிகாரியாக வரும் மம்முட்டியும் படத்தின் ஓப்பனிங்கில் வரும் பாடல் காட்சியான சஞ்சீவனா என் ஜீவனா பாடலில் சினேகாவுக்கு கிளாமர் தூக்கல் ரகம்.(எனக்கு ஒரு சந்தேகம்,இங்கே போர்த்தி நடிக்கும் நடிகைகள் ஆந்திராவில்,கேரளாவில் மட்டும் தாராளம் காட்டுவது ஏன்?

எடுத்துக்கொண்ட கேஸ் படிப்படியாக முன்னேறி வரும்போது,வெற்றிகரமாக ஹீரோக்கள் நடந்து வரும்போது போடும் பின்னணி இசை அசத்தல் ரகம்.தொடர்ந்து வரும் கன்யாகுமரி,தேங்காய்பட்டினம் லொக்கேஷனும்,ஒளிப்பதிவும் அற்புதம்.



எனக்குத்தெரிந்து தீவிரவாதியை விசாரணை செய்கையில் அதிகபட்ச சித்திரவதை காட்டப்பட்டது (தமிழில்)திருப்பதிசாமி இயக்கி,விஜய்காந்த் நடித்த நரசிம்மா தான்.(நம்பவே முடியாத காட்சி அமைப்புகள்).அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது இந்தப்படத்தின் சித்திரவதைக்காட்சிகள்.விசாரணை நடக்கையில் எமோஷனல் ஆகும் மம்முட்டி அருகில் இருக்கும் போலீஸ் ஆஃபீசர் மேல் கை வைக்கும் ஆவேச நடிப்பு தூள்.

ரியாஸ்கானின் குத்துப்பாட்டுக்கான ஆட்டம்,இயக்குநர் ராஜ்கபூரின் வில்லத்தன நடிப்பு எல்லாம் அருமை.அர்ஜூன் ரியாஸ் சம்பந்தப்பட்ட சேஸிங்க் காட்சிகள் செம பரபரப்பு( கமலின் விக்ரம் படத்துக்குப்பின்)அனிமல் பிளானட் சேனலில் சிறுத்தை மானை துரத்துவது போல என்ன ஒரு விறுவிறுப்பு?



 

கஷ்டப்பட்டு பிடிக்கப்பட்ட வில்லனின் கையாள் டாக்டர் 2 ஹீரோக்கள் முன்னிலையில் சர்வ சாதரணமாக தற்கொலை செய்வது எப்படி?
செல்ஃபோனில் வில்லன் பேசும்போது சிக்னல் லொக்கேட்டர் வைத்து பேசும் இடத்தை கண்டறிவதை பாமரனும் கை தட்டும் விதத்தில் படமாக்கிய இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

அதே போல் பாம் பிளாஸ்ட் சீன் மிக தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்க் என அனைவரும் கை கோர்த்து கலக்கிய சீன் என பெயர் வாங்கிய சீன்.அவ்வளவு களேபரத்திலும் வில்லன் பேஷண்ட் வேஷத்தில் தப்பிக்கும் சீன் செம விறு விறுப்பு.






நான் நினைக்கிறேன்,இந்தப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஓடிக்கொண்டே எழுதியிருப்பார் என,அவ்வளவு நேர்த்தி,லாவகம்,வேகம்.இதெல்லாமே இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு ஸ்பீடு கம்மி.பாட்ஷா உட்பட பெரும்பாலான சூப்பர் ஹிட் படங்களின் திரைக்கதை முன் பாதி வேகமாகவும், பின் பாதி சுமாராகவும் அமைந்து விடும் மர்மம் என்னவோ?

பெலிக்கான் பறவை மூலம் சேதி பரப்பும் பாகிஸ்தானின் உளவாளி ஐடியா செம தூள் என்றால் அதை மம்முட்டி & கோ முறியடிப்பது செம ஸ்மார்ட்,ஆல் கிரடிட்ஸ் கோ டூ டைரக்டர்.(ALL CREDITS GO TO DIRECTOR)

கீழே கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்க மேலே அர்ஜுனும்,வில்லனும் போடும் ஃபைட் சீன் நல்ல கற்பனை.அதை அழகியல் நேர்த்தியோடு படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்.


 

ரசனையான சீன்கள்.

1.விவசாயிகள் தற்கொலைக்குபோவதற்கு என்ன காரணம் என்பதை தண்ணிர்க்கஷ்டத்தின் வலியோடு படமாக்கிய டாக்குமெண்ட்ரி

2.தேசிய நதி நீர் இணைப்பின் தேவையை,அதன் முக்கியத்துவத்தை அழகாக விளக்கிய விதம்

3.க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் ஜாக்கிசான் நடித்த  THE SPANISH CONNECTION (தெ ஸ்பானிஷ் கனெக்‌ஷன்) படத்தில் வருவது போல் அர்ஜூன் வில்லனை ஜம்ப்  பண்ணி நெஞ்சில் உதைக்கும் டூப்ப்  போடாமல் எடுக்கப்பட்ட அந்த ரிஸ்க் ஷாட்

4. குத்தாட்டப்பாடலான 1,2,3,4 பாட்டில் குத்தாட்ட நாயகியின் லோ கட் சீன் கிளாமரை கலரிங் லைட் அடித்து மறைத்த சாமார்த்தியம் ( ஏற்கனவே சிங்கம் படத்தில் அனுஷ்கா நடித்த காதல் வந்தாலே பாட்டு  படமாக்கிய விதம் போல் இருந்தாலும்)

படத்தில் நம்ப முடியாத சீன்கள்.

1.தீவிரவாதியின் மகளுக்கு 5 வயது என வசனத்தில் வருகிறது,ஆனால் காட்சி அமைப்பில் 10 வயது ஆன மாதிரி காண்பித்தது,

2.தீவிரவாதியை மகள் செண்ட்டிமெண்ட் காண்பித்து  மடக்க முயல்வது.99% தீவிரவாதிகள் குடும்பம் இல்லாத ,அதை துறந்தவர்கள்தான்.

3.அப்படியே அதை ஒப்புக்கொண்டாலும் மகளாக நடிக்க வைக்க 1008 பேர் இருக்க ஹீரோவின் மனைவியையே தேர்ந்தெடுப்பதும்,முக்கியமான தருணத்தில் சினேகாவை அம்போ என வில்லனின் பாசறைக்குள் அனுப்பி அவரை உயிரிழக்க வைப்பதும்.

சில வசன பளிச்கள்

1.குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது,சார்,இனி இவன் மேல நான் கை வைக்கலாமா?

ஓ,தாராளமா,இனி காலே வைக்கலாம்.

2.என்னது,இப்போ  டாக்டருக்கே டிரீட்மெண்ட் தரவேண்டியதா இருக்கு?

இந்தப்படம் எந்திரன் ரிலீஸ் ஆகும் வரை தங்கு தடை இன்றி அனைத்து செண்ட்டர்களிலும் ஓடும்.ஆக்‌ஷன் பிரியர்களுக்கும்,சி பி ஐ டைரி குறிப்பு,மாதிரியான கேரள புலனாய்வுப்படங்களை  ரசிப்பவர்களுக்கும் பிடித்தமான படம்.


21 comments:

Chitra said...

விமர்சனத்தையும் விறுவிறுப்பாக எழுதி இருக்கீங்க.... ஆனால், சிநேகா இறக்கும் காட்சி போன்று, முழு கதையும் சொல்லி இருப்பதை தவிர்த்து இருக்கலாமே! It spoils the suspense/thrill for the people, who are yet to watch the movie.

சி.பி.செந்தில்குமார் said...

s citra, i agree with u , i change it

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paaththu tholaikkalaamaa?

சி.பி.செந்தில்குமார் said...

ஏன் ரமேஷ் இவ்வளவு சலிப்பு?

எஸ்.கே said...

படம் சுமாரா சூப்பரா சார்?

Anonymous said...

சிநேகா இறந்துட்டாங்க..படமும் இறந்துடுச்சி....படத்தையே தியேட்டர்ல..இருந்து தூக்கிட்டாங்க...இவரு இப்பதான் விமர்சனம் போட்டு தூக்கி நிறுத்துறாரு...

Anonymous said...

வாலிபமே வா கிரண் நடிச்ச கிளுலிளுப்பு படம் விமர்சனம் என்னாச்சு..உங்களை தட்டி கேட்க ஆள் இல்லாம போச்சு...

சி.பி.செந்தில்குமார் said...

எஸ் கே படம் ஓகே,பார்க்கலாம்.

Anonymous said...

விமர்சன சூறாவளி அடுத்த மாசம் நிறைய இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆகுது..தமிழ் படம் வெச்சே ஒப்பேத்தாதீங்க..

Anonymous said...

விஜய்காந்தின் மாமூல் ஃபார்முலாதான்.பாகிஸ்தான் தீவிரவாதி,இந்தியாவில் சதி,ஹீரோக்கள் முறியடிப்பு என புளித்துப்போன கதைதான்.//
காலம் காலமா விஜயகாந்த்,அர்ஜூன் இதை வெச்சுதான் பிழைக்கிறாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

படம் சுமாரா சூப்பரா சார்?

September 22, 2010 9:21 AM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சிநேகா இறந்துட்டாங்க..படமும் இறந்துடுச்சி....படத்தையே தியேட்டர்ல..இருந்து தூக்கிட்டாங்க...இவரு இப்பதான் விமர்சனம் போட்டு தூக்கி நிறுத்துறாரு...

September 22, 2010 9:55 AM

ஏப்பா சதிஷ்,உனக்கு ஓட்டு போடவா வேணாமா?

படம் இப்பதான்பா ரிலீஸ் ஆகி ஓடிட்டிருக்கு,வாலிபமே வா வேஸ்ட் என தியேட்டர் ஆப்பரேட்ட்ரே சொல்லிட்டார்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விமர்சன சூறாவளி அடுத்த மாசம் நிறைய இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆகுது..தமிழ் படம் வெச்சே ஒப்பேத்தாதீங்க..

தமிழன் தமிழ்ப்படம்தான் விமர்சிக்கனும்னு சொல்லிடுவாங்களோ

karthikkumar said...

படம் சுமாரா இருக்குனு சில பேர் சொல்றாங்க நீங்க நல்ல இருக்குனு சொல்றீங்க. உங்க மேல நம்பிக்கை வெச்சு படத்துக்கு போறேன். பார்போம் அப்புறம் நடுராத்திரி பதிவு போடறீங்க போல

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்திக்,டைம் கிடைக்கறப்ப போடறதுதான்,அதுக்காக நடுநிசி நாய்கள்னு எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது,ஓகே

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விஜய்காந்தின் மாமூல் ஃபார்முலாதான்.பாகிஸ்தான் தீவிரவாதி,இந்தியாவில் சதி,ஹீரோக்கள் முறியடிப்பு என புளித்துப்போன கதைதான்.//
காலம் காலமா விஜயகாந்த்,அர்ஜூன் இதை வெச்சுதான் பிழைக்கிறாங்க..

சரியா சொன்னாய் சதிஷ்

Unknown said...

நீங்க படம் நல்லா இருக்குனு சொன்னனாலதான் படத்த இப்பதான் டவுன்லோட் பண்ணினேன்
பாப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு இன்னைக்கு உண்டுன்னு நினைக்கிறேன்

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க.

ம.தி.சுதா said...

ஏனோ தெரியல அர்ஜீன் படமென்றாலே கதைகள் ஞாபகத்துக்கு வருவதில்லை... எல்லாம் ஒரே படம் மாதிரி இருக்கிறது... இதையாவது பார்ப்போம்...

சி.பி.செந்தில்குமார் said...

அன்பு,வருகைக்கும்,கமெண்ட்டுக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சுதா,பாருங்க.ஜீஜிக்ஸ் பிரச்சனை தீர்ந்ததா?அதையும் ஒரு பதிவாக்கி கல்லா கட்டீட்டீங்களே