Tuesday, September 14, 2010

நாட்டு நடப்பு - சிரிப்போ சிரிப்பு

1.இந்த வாரத்தின் சிறந்த பிஸ்னெஸ் மேக்னெட் பிர்லா விருது சன் டி வி கலாநிதி மாறனுக்கு, எந்திரன் பட டிரைலரைக்கூட விட்டு வைக்காமல் விழா நடத்தி காசு பார்த்தமைக்காக. (ஹூம்,பல்லு இருக்கறவங்க பக்கோடா சாப்பிடறாங்க,கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா,நமக்கென்ன?)

2. இந்த வாரத்தின் சிறந்த ஜோக்காண்டி ஜெர்க்கப்பன் விருது  ஐ ஜி சிவனாண்டி அவர்களுக்கு,அண்ணாமலை யுனிவர்சிட்டி ஸ்டூடண்ட் ஜோதி ஈவ் டீசிங்க்கால் தற்கொலை செய்யவில்லை,என சப்பைக்கட்டு கட்டி கேசை திசை திருப்பியதற்காக.

3 .  இந்த வாரத்தின் சிறந்த கலாச்சாரக்காவலன் விருது மிட்டாய் எனும் படத்தின் இயக்குனருக்கு,ஹீரோயின் ஒரே சமயத்தில் 2 பேரை கல்யாணம் செய்வது போலும் ,அவர்களுடன் வாழ்வது போலவும் திரைக்கதை அமைத்ததற்கு. (மனசுக்குள்ள ஜூனியர் சாமினு நினைப்பா?)

4. இந்த வாரத்தின் சிறந்த மல்டிகில்டி பல்டி டஹால்டி விருது ஹிந்தி நடிகர் ஷைனி ஆஜோவின் வீட்டு பணிப்பெண் அனாமிகாவுக்கு ,நடிகர் மேல் ரேப் புகார் அளித்து பின் கோர்ட் விசாரணையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை,யாரும் என்னை எதுவும் செய்யவில்லை என பல்டி அடித்து அரசாங்கபணத்தை,நேரத்தை வீணாக்கியமைக்காக.( சே,எத்தனை டி போட வேண்டியதா போச்சு)

5. இந்த வாரத்தின் சிறந்த கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் கஞ்சா கார்மேகம் 
 விருது  ஒரிஸா மாநில ஷாபி இஸ்லாம்க்கு,தபால் மூலம் 6 மாதங்களாக கஞ்சா கடத்தியதற்கு.(அடா அடா,என்ன ஒரு கிரியேட்டிவ் திங்க்கிங்டா சாமி)

6. இந்த வாரத்தின் சிறந்த ஏழை ஜாதிக்கு குரல் கொடுக்கும் ஏகலைவன் விருது  பிரதமர் மன்மோகன்சிங்க் அவர்களுக்கு,வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக்கொடுங்கள் என உத்த்ரவு இட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்தியமைக்காக.(வேஸ்ட்டாப்போனாலும் எங்களுக்கு கொள்கை தானே முக்கியம்?)

7. இந்த வாரத்தின் சிறந்த செட்டில்மெண்ட் செம்மல் செவலக்காளை விருது
ஹிந்தி நடிகர் ஷைனி ஆஜோவிற்கு,தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை ரேப் செய்து பின் கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைத்தமைக்காக. (அண்ணே,அடுத்த புராஜக்ட் எப்போண்ணே?)

8. இந்த வாரத்தின் சிறந்த தழுவாத கைகள் தங்கமுத்து விருது ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூம்மாவுக்கு, 22 குழந்தைகள் பெற்றமைக்கு. (குடும்பத்தை உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தார் எங்கப்பா)

9. இந்த வாரத்தின் சிறந்த ஆர்வக்கோளாறு ஆர்யமாலா விருது டென்னிஸ் வீராங்கனை ஷைனிக்கு,விளையாட்டு மைதானத்தில் கொடுக்கப்பட்ட பணமுடிப்புப்பரிசை என் டி டிவி கேமராக்கள் பார்க்கிறது என்பதைக்கூட உணராமல் அங்கேயே எண்ணிப்பார்த்தமைக்காக.(எங்கே ஓடிடப்போவுது அம்மணி?)

10. இந்த வாரத்தின் சிறந்த அவசரக்குடுக்கை அனந்த “பதமாஸ்” விருது எமதர்மராஜாவுக்கு,ஒரே வாரத்தில் சினி ஃபீல்டின் முக்கிய ஆட்களான நடிகர் முரளி,பாடகி ஸ்வர்ணலதா,இயக்குநர் கே எஸ் ரவி 3 பேரின் உயிர்களை எடுத்தமைக்கு.

24 comments:

karthikkumar said...

appada nanthan first

karthikkumar said...

///இந்த வாரத்தின் சிறந்த கலாச்சாரக்காவலன் விருது மிட்டாய் எனும் படத்தின் இயக்குனருக்கு,ஹீரோயின் ஒரே சமயத்தில் 2 பேரை கல்யாணம் செய்வது போலும் ,அவர்களுடன் வாழ்வது போலவும் திரைக்கதை அமைத்ததற்கு. (மனசுக்குள்ள ஜூனியர் சாமினு நினைப்பா?)///இதே மாதிரி ஏற்கனவே ஒரு படம் வந்திருக்கு "தப்பு பண்ணிட்டோம் மன்னிச்சிருங்க" அப்படின்னு (எப்படி தெரியும்னு கேட்க கூடாது)

karthikkumar said...

இயக்குநர் கே எஸ் ரவி 3 பேரின் உயிர்களை எடுத்தமைக்கு.ks ravikumar-a senthil sir

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இயக்குநர் கே எஸ் ரவி 3 பேரின் உயிர்களை எடுத்தமைக்கு.ks ravikumar-a senthil sir//

அது கே.எஸ். ரவி - என் சுவாசக் காற்றே பட இயக்குனர்..

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

// கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் கஞ்சா கார்மேகம் விருது ஒரிஸா மாநில ஷாபி இஸ்லாம்க்கு,தபால் மூலம் 6 மாதங்களாக கஞ்சா கடத்தியதற்கு //

அருமை..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

karthikkumar said...

நன்றி திரு ரமேஷ்

அ.முத்து பிரகாஷ் said...

செந்தில் சார்! ஒவ்வொரு விருதும் சூப்பர்! தேர்வு சூப்பரோ சூப்பர்!! தீர்வுக்கான விளக்கம் சூப்பரோ சூப்பரோ சூப்பர்!!! ...

//அண்ணே,அடுத்த புராஜக்ட் எப்போண்ணே?//
நந்தா ரீமேக் ல பாத் ரூம்ல பிஸ் அடிக்கிறவன் வேடத்தில ஆஜோ வை நடிக்க வையுங்க சார்!

அ.முத்து பிரகாஷ் said...

சார் ... ஓட்டு போட விடாமல் சதி செய்யுதே உங்க தமிழ் மணப் பட்டை ... அதுக்கு என்ன விருது கொடுக்கலாம்!?

Unknown said...

'அட்ரா அட்ராசக்க' விருது...
தம்பட்டம் அடித்து தனக்கு தானே பல துறைகளுக்கு பல விருதுகளை இந்த ஐந்தாண்டு கால ஆச்சி வளர்ச்சிக்கும் தானே காரணம் என்று தனக்கு தானே வழங்கிக் கொண்ட தானை தலைவர் அவர்களுக்கு

Anonymous said...

எந்திரனுக்கு ஒரு விருது கொடுத்திருக்கலாம்

Anonymous said...

எமதர்மனுக்கு கொடுத்த விருது நல்ல டைமிங்

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

///இந்த வாரத்தின் சிறந்த கலாச்சாரக்காவலன் விருது மிட்டாய் எனும் படத்தின் இயக்குனருக்கு,ஹீரோயின் ஒரே சமயத்தில் 2 பேரை கல்யாணம் செய்வது போலும் ,அவர்களுடன் வாழ்வது போலவும் திரைக்கதை அமைத்ததற்கு. (மனசுக்குள்ள ஜூனியர் சாமினு நினைப்பா?)///இதே மாதிரி ஏற்கனவே ஒரு படம் வந்திருக்கு "தப்பு பண்ணிட்டோம் மன்னிச்சிருங்க" அப்படின்னு (எப்படி தெரியும்னு கேட்க கூடாது)

1st vada to u,THE FILM "THAPPU PANNITTOM MANNICHIDUNGKA" IS A STORY OF A GIRL WHO RAN A LIFE WITH A GUY TILL INTERVEL AND THEN MAKE A LIFE AFTER INTERVEL. BUT IN MITTAI UTTER TIME 2.

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

இயக்குநர் கே எஸ் ரவி 3 பேரின் உயிர்களை எடுத்தமைக்கு.ks ravikumar-a senthil sir

no,he is directed only 4 films.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இயக்குநர் கே எஸ் ரவி 3 பேரின் உயிர்களை எடுத்தமைக்கு.ks ravikumar-a senthil sir//

அது கே.எஸ். ரவி - என் சுவாசக் காற்றே பட

wat a memory power have u.good

சி.பி.செந்தில்குமார் said...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

// கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் கஞ்சா கார்மேகம் விருது ஒரிஸா மாநில ஷாபி இஸ்லாம்க்கு,தபால் மூலம் 6 மாதங்களாக கஞ்சா கடத்தியதற்கு //

அருமை..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

thanx for coming and comenting

சி.பி.செந்தில்குமார் said...

நியோ said...

செந்தில் சார்! ஒவ்வொரு விருதும் சூப்பர்! தேர்வு சூப்பரோ சூப்பர்!! தீர்வுக்கான விளக்கம் சூப்பரோ சூப்பரோ சூப்பர்!!! ...

//அண்ணே,அடுத்த புராஜக்ட் எப்போண்ணே?//
நந்தா ரீமேக் ல பாத் ரூம்ல பிஸ் அடிக்கிறவன் வேடத்தில ஆஜோ வை நடிக்க வையுங்க சார்!

oho ho ho, this is super comedy

சி.பி.செந்தில்குமார் said...

நியோ said...

சார் ... ஓட்டு போட விடாமல் சதி செய்யுதே உங்க தமிழ் மணப் பட்டை ... அதுக்கு என்ன விருது கொடுக்கலாம்!?

September 14, 2010 1:07 PM

too late terminate award to tamilmanam.

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...

'அட்ரா அட்ராசக்க' விருது...
தம்பட்டம் அடித்து தனக்கு தானே பல துறைகளுக்கு பல விருதுகளை இந்த ஐந்தாண்டு கால ஆச்சி வளர்ச்சிக்கும் தானே காரணம் என்று தனக்கு தானே வழங்கிக் கொண்ட தானை தலைவர் அவர்களுக்கு

the same award told by u alredy given to him 3 weeks before,thanku

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

எந்திரனுக்கு ஒரு விருது கொடுத்திருக்கலாம்

September 14, 2010 3:31 PM

if i give a comedy award to rajini a lot of rajini fans like u will opposis me,so i didnt do it.

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எமதர்மனுக்கு கொடுத்த விருது நல்ல டைமிங்

thank u

karthikkumar said...

///,THE FILM "THAPPU PANNITTOM MANNICHIDUNGKA" IS A STORY OF A GIRL WHO RAN A LIFE WITH A GUY TILL INTERVEL AND THEN MAKE A LIFE AFTER INTERVEL. BUT IN MITTAI UTTER TIME 2/// NEENGA SOLDRA MOVIE VERA-NU NENAIKIREN

சி.பி.செந்தில்குமார் said...

o i c.விசாரிக்கிறேன்

goma said...

10வது விருது கண்ணீர் வரவழைத்த விருது

சி.பி.செந்தில்குமார் said...

S GOMA,U R 100 % CORRECT