Thursday, August 12, 2010

கலைஞரின் ரீ மிக்ஸ் வசன கவிதை -விகடன் அம்பலம்

எதேச்சையாக நடந்ததா,ஜூனியர் விகடன் அழகிரி சர்ச்சையின் காரணமாக நடந்ததா தெரியவில்லை.ஆனந்த விகடனில் கலைஞரின் வாழ்த்துச்செய்தி சர்ச்சையாக்கப்பட்டு இருக்கிறது.
எந்திரன்  இசை வெளியீட்டு விழாவில் கலைஞர் நேரில் கலந்து கொள்ளவில்லை.ஆனால் வாழ்த்துச்செய்தி மட்டும் அனுப்பி இருந்தார்,
அதில் “எங்கெங்கு காணினும் வெற்றியடா,ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா” என வசன் கவிதையாக கலைஞர் எழுதி இருந்தார்.

ஆனந்த விகடனின் நானே கேள்வி நானே பதில் பகுதியில் இதை பற்றிய நையாண்டி வந்துள்ளது.பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதை வரிகளின் ரீமிக்ஸ் தான் கலைஞரின் வாழ்த்துச்செய்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா

இது தான் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதையின் ஆரம்ப வரிகள்.

இது ஆனந்த விகடனுக்கும் கலைஞருக்கும் நடக்கும் பனிப்போர் என கணிப்போர் தமிழ்நாட்டில் ஏராளம்.

போகட்டும்.நமது வலைப்பூ நண்பர் பரிசல்காரன் அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.நீண்ட இடைவெளிக்குப்பிறகு பத்திரிக்கைத்துறையில் தடம் பதிக்கும் அவருக்கு நமது வாழ்த்தை சொல்வோம்.
அதே போல் நண்பர் காட்டுவாசி  அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்றும் ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.அவருக்கும் நமது வாழ்த்தை சொல்வோம்.

23 comments:

Current Political Trend said...

நாடு விடுதலைப்பெற்ற பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதை பாமக பாராட்டி வரவேற்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.மேலும் இந்த அறிவிப்பு பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,இதுக்கும்,நான் போட்ட மேட்டருக்கும் என்ன சம்பந்தம்னே புரியலை.ஒரு வேளை விளம்பரமோ?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சபாஷ் நண்பா... கலைஞர் பற்றியெல்லாம் எழுதி கலக்கறின்களே? தொடரட்டும் உங்கள் வெற்றி!

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க பூங்கதிர்,உங்கள் வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி.நீங்க எப்போ பிளாக் ஓப்பென் பண்றீங்க?

Unknown said...

ஆகாய மனிதன்...
மாபெரும் கலைஞர்....
பாவேந்தரை...காப்பியடிச்சாரோ ? இல்லையோ ?
இவர்தான் சன் டிவி யில் தலையை நுழைக்க முற்படுகிறார்.....
அவர்கள் எங்கே இவர் மறுபடியும் அரசியல் பண்ணுவாரோ என்று தான் விழாவை கடல் தாண்டி வைத்துள்ளார்கள்,
சன் குழுமத்தை தவிர இவர் குடும்பத்தில் யாரையும் அழைத்ததாக தெரியவில்லை...
இது நாடறிந்த செய்தி...
இதில் எங்கெங்கு காணினும்....
என்ற வரிகளை....
எங்கே ரசிக்கப் போகிறார்கள்...

Anonymous said...

சன் டிவிய பத்தி சன்பிச்சர்ஸ் பத்தி கலைஞர் கவிதையில எதுவும் சொன்ன மாதிரி தெரியல

Anonymous said...

இது பத்தி விளக்கமா நான் ஒரு பதிவு போட்ருக்கேன் படிச்சு பாருங்க அதிர்ச்சி தரும் முரசொலியில் கலைஞரின் எழுத்துக்கள் http://sathish777.blogspot.com/2010/08/blog-post_12.html.

'பரிவை' சே.குமார் said...

karunanithi kavithaiyil kutrama? amaa ananthavigadan irukulla... Maduraiyila irunthu neruppoda varapporaru maththiya amaichchar...

kavithai veliyanatharkku nanbarkalukku vazhththukkal.

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாய மனிதன் வருகைக்கும் நன்றி.குமர்ர் உடனே என் ஹெச் எம் டவுன்லோட் பண்ணுங்க.நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

no comments

சி.பி.செந்தில்குமார் said...

rameesh,என்ன ஆச்சு,முத் தடவையா நோ கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க?

புரட்சித்தலைவன் said...

இது ஆனந்த விகடனுக்கும் கலைஞருக்கும் நடக்கும் பனிப்போர் என கணிப்போர் தமிழ்நாட்டில் ஏராளம்.
நல்ல வார்த்தை பிரயோகம்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி புரட்சி அவர்களே

- யெஸ்.பாலபாரதி said...

சிபியெஸ், கருப்பு எழுத்துக்கள் வெள்ளை பின்னனியில் என்பது தான் வாசிப்பதற்கு இலகுவானது. முடிந்தால் சரி செய்யுங்கள். ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கிற நான் கூடுதல் பவர் ஆகிடுமோன்னு பயப்பட வேண்டி இருக்கு. உங்களின் இந்த பதிவு மூலம் எஸ்.எஸ்.பூங்கதிரும் ப்ளாக் பக்கம் இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி. :))

வாழ்த்துகள் தோழா

புரட்சித்தலைவன் said...

//இது ஆனந்த விகடனுக்கும் கலைஞருக்கும் நடக்கும் பனிப்போர் என கணிப்போர் தமிழ்நாட்டில் ஏராளம்//

நல்ல வார்த்தை பிரயோகம்

ஆட்டையாம்பட்டி அம்பி said...

//எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா//---பாரதிதாசன்...

///“எங்கெங்கு காணினும் வெற்றியடா,ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா” //---மு.க.

இதில் பாரதிதாசன் தாக்கம் இருக்கு என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை காப்பி என்று சொல்லலாமா? எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் உங்களது நேர்மை, தைரியம் அதுவும் கருணாநிதி செய்தது தப்பு என்று சொல்லும உங்களது நேர்மை எனக்கு மிகவும் பிடித்து இருக்கு. வளர்க உங்கள் பணி.

அதே சமயம், மதன் மற்றும் சுஜாதா அவர்கள் "கற்றதையும் பெற்றதையும்" எழுதும் போது கேள்வி கேளுங்கள். அவர்கள் அறிவு ஜீவி இல்லை "மொழி பெயர்க்கும்" ஜீவிகள் தான் என்று சொல்ல்லுங்கள். அதை செய்யுங்கள்; அதே மாதிரி அவர்களையும் ஆங்கிலத்தில் இருந்தது இவைகள் "சுட்டது" "மொழி பெயர்த்தது" என்று சொல்ல வையுங்கள்.

In any research or write up, one has to give the credit to the original author, whoever, it may be, even if it is as an alien language. இது தான் பத்தரிக்கை தர்மம். எழுத்தாளர்களின் தர்மம் மற்றும் கடைமையும் கூட...அவாளுக்கு இவைகள் தெரிந்து இருக்காது. அவாள் எல்லாம் அப்பிராணி! அவாளை அதற்காக மன்னிக்கலாம்.!

அனால உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே? நீங்கள் அதை சொல்லலாமே? செய்யாவிட்டால் உங்களது இந்த பதிவுக்கு அர்த்தம வேற! உங்களுக்கு அவாளை எதிர்க்க முதுகு எலும்பு இல்லை என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

செய்வீர்கள் எனற நம்பிக்கை எனக்கு இருக்கு சி.பி.செந்தில்குமார் அவர்களே?

செய்வீர்களா?

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,ஏன் லேட்.சங்கத்துல அபராதம் க்ர்ட்டு.(குறுக்குபுத்தி கூட்டிடு போ)

சி.பி.செந்தில்குமார் said...

யெஸ்.பாலபாரதி வருகைக்கும், கருத்துக்கும் நன்றி,உங்கள் வேண்டுகோள்படி மாற்றிவிட்டேன்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

யாருப்பா அங்க? அண்ணா சாலைக்கு அனுப்புன ஆட்டோவ அப்படியே சென்னீர்மலைக்கு திருப்புங்கப்பா..

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு.
நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

vaangka சரவணன்.நீங்க எனக்கு சப்போர்ட்டுனு பார்த்தா இப்படி உள்குத்து குத்த்றீங்களே

IKrishs said...

பதிவின் உள்ளடக்கத்தில் அழகான வார்த்தை பிரயோகங்கள் ..ஆனால் தலைப்பு மட்டும்
அம்பலம் ,பரபரப்பு என்கிற ரீதியில் மாலை மலர் போன்ற மாலை பத்திரிக்கைகள் ஸ்டைலில் ..தலைப்பையும் கவனிக்கலாமே ..

சி.பி.செந்தில்குமார் said...

அமைதி அப்பா வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி,கிருஷ் குமார் உங்கள் கருத்து அருமை.எல்லாம் மார்க்கெட்டிங்க் உத்திதான்