Sunday, August 15, 2010

பாக்யாவின் வால்போஸ்டர்களில் ஜாக்கிசேகர்

இயக்குனர் கே பாக்யராஜ் பல வருடங்களாக பாக்யா எனும் பத்திரிக்கை நடத்திவந்ததும் ,20 வருடங்களுக்கு மேல் அது தொடர்ந்து வெற்றிகரமாக பவனி வருவதும் நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த பாக்யாவில் பொதுவாக வால்போஸ்டர்களில் கே பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதிலில் அந்த வார டாப் கேள்வி எதுவோ அதுவே வால் போஸ்டர்களீல் விளம்பரப்படுத்தப்படும்.
அந்தப்பத்திரிக்கையின் சரித்திரத்தில் முதன் முறையாக ஆசிரியர் அல்லாத ஒருவரின் படைப்புக்கான் முன்னோட்ட வரிகள் விளம்பரமாக வருவது இதுவே முதல் முறை.
நமது பதிவுலக நண்பர் அண்ணன் ஜாக்கிசேகர் அவர்கள் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற பிளாக்கில் ஹாலிவுட் படங்களின் விமர்சனம் எழுதி ஏற்கனவே புகழ் பெற்று இருந்தார்.சமீபத்தில் அலாஸ்கா கவுண்ட்டிங் & ரேட்டிங்கில் ஒரு சாதனை புரிந்தார்.அவரது புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாக அவரது படைப்பு பாக்யாவில் வால்போஸ்ட்ரில் “உங்கள் மனைவி மீது யாராவது கை வைத்தால்?” இடம் பெற்று உள்ளது.
கே பாக்யராஜின் மனம் கவர்ந்த ஜாக்கி அண்ணன் தொடர்ந்து மேன்மேலும் புகழ் பெறவும்,திரை உலகில் கொடி கட்டிப்பறக்க பதிவுலகம் மற்றும் பதிவாளர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

13 comments:

http://rkguru.blogspot.com/ said...

good post...congrats

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க குரு,செம ஃபாஸ்ட்டா இருக்கிங்க,நன்றி

Anonymous said...

அடடா அவர் உங்களை கிழி கிழி ந்னு கிழிச்சு தொங்க விட்டாலும் நிங்க எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்குறீங்க...? நீங்க ரொம்ப நல்லவங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி ,,,

என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஜெய் ஹிந்த்!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி வெறும்பயல் அவர்களே.

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி ,,,

என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி குமார்

Jey said...

இளைஞர், ஜாக்கி அவர்களுக்கு வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ஜெய் அவர்களே

புரட்சித்தலைவன் said...

1.பாக்யாவின் வால் போஸ்டர்ல ஜாக்கி. ஆனா உங்க blogல நியூஸ் க்கு சம்பந்தம் இல்லாம 2 பாக்யராஜ் photo . (உங்க blog , உங்க விருப்பம், only suggestion)
2.“உங்கள் மனைவி மீது யாராவது கை வைத்தால்?” (படைப்பு திருட்டு பத்தி நியூஸ் ஆ?)
3.சதிஸ் சொன்ன மாதிரி உங்களை கிழி கிழி ந்னு கிழிச்சு தொங்க விட்டாலும் நீங்க எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்குறீங்க...? நீங்க ரொம்ப நல்லவங்க.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

என் தலைவரின் படத்தை உங்க வலைப்பூவில் பார்க்கும் போது மிக சந்தோசமாக இருந்தது.
-

geethappriyan said...

வாழ்த்துக்கள் ஜாக்கிக்கு
நன்றி உங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன்
அவர்களே,உங்க ஆலோசனைக்கு நன்றி.சும்ம்மா கிளாமருக்கு.2..அந்த டைட்டில் ஜாக்கி அண்ணனின் படைப்பின் தலைப்பு 3.நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்