Wednesday, August 04, 2010

ஆனந்தவிகடன் கவுரவித்த 5 வலைபூ எழுத்தாளர்கள்

ஆனந்தவிகடன் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.பல எழுத்தாளர்களை அது இலக்கிய உலகிற்கு அளித்துள்ளது.சினிமாத்துறையில் உள்ள ஷங்கர்,மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட விகடனில் சினிமாவிமர்சனம் படிக்கத்தவறுவது இல்லை.
விகடனில் ஒரு படம் 40 மார்க் வாங்கி விட்டால் அந்தப்படம் தேறி விடும் என்று ஒரு பேச்சு திரை உலகில் உண்டு.
உதிரிப்பூக்கள்(65 மார்க்),நாயகன்(60 மார்க்)அஞ்சலி,பசங்க (50 மர்க்) என சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு ஏன் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் கட்டுரையில் ஏழைதாசன் என்ற சிற்றிதழை பற்றி ஒரு வார்த்தை எழுதினார்.அதுவரை 500 பிரதிகள் மட்டும் விற்ற புத்தகம் அந்த வாரம் மட்டும் 2400 பிரதிகள் விற்றது.வாரா வாரம் வியாழன் அன்று வெளியாகும் அது கிட்டத்தட்ட 7 லட்சம் பிரதிகள் வெளீயாகி 10 லட்சம் மக்களை சென்றடைகிறது.
அப்படிப்பட்ட இதழில் நாளை வெளிவரப்போகும் இதழில் சிறந்த 5 வலைப்பூ எழுத்தாளர்கள் பற்றி ஒரு கட்டுரை மினி பேட்டியுடன் வருகிறது.

1.கேபிள் சங்கர்-இயற்பெயர் சங்கரநாராயனன்.இவ்ர் சினி ஃபீல்டில் காலடி எடுத்து வைக்க பிளாக்ஸ்பாட் உத்வி இருப்பதாக பேட்டியில் கூறி உள்ளார்.

2.பரிசல்காரன் -இயற்பெயர் கே.பி.கிருஷ்ணகுமார்.திருப்பூர்.நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான இவர் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கைகளில் முத்திரை பதித்தவர்.

3.விக்னேஷ்வரி -பெண்களுக்கான சரியான உபயோகமான துறை வலைப்பூ என பேட்டியில் தெரிவித்துள்ளார்

4.சுந்தர்ராஜன் - இவர் மக்கள் சட்டம் என்ற வலைப்பூ நடத்தி மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்.

5. தீபா-இவர் தனது பேட்டியில் தனது வலைப்பூ பெயரை குறிப்பிடவில்லை.

ஆனந்த விகடன் கவுரவித்த இவர்களை நாமும் வாழ்த்துவோம்.

21 comments:

'பரிவை' சே.குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பரே..!

Iyappan Krishnan said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

பரிசல்காரன் said...

நன்றி.

உங்களுக்கு எப்படி இன்னைக்கே தெரிஞ்சது நண்பா???

நீச்சல்காரன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

Unknown said...

//உங்களுக்கு எப்படி இன்னைக்கே தெரிஞ்சது நண்பா???//

குசும்பு ...

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

வாழ்த்துக்கள்!

மதுரை சரவணன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பரே.... பகிர்வுக்கு நன்றி.

shortfilmindia.com said...

நன்றி..

கேபிள் சங்கர்

சி.பி.செந்தில்குமார் said...

பேட்டி கொடுத்த 5 வலைப்பூ எழுத்தாளர்களில் ஒருவர் பகிர்ந்து கொண்ட தகவல்.அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Jayadev Das said...

ரொம்ப நன்றி , நான் ரெண்டு பேத்தோட வலைப்பூவை என்னோட கூகுள் படிப்பானில் [Reader ஹி....ஹி....ஹி....] சேர்த்துவிட்டேன், [மிச்ச ரெண்டுல ஒன்னு வலைபூ பேரே தெரியவில்லைன்னுட்டீங்க, இன்னொன்னு காரணம் சொல்ல மாட்டேன்..ஹி.....ஹி.ஹி........

ஸ்ரீராம். said...

அட.... சபாஷ்...!

Karthick Chidambaram said...

வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

ஓமர்,ராதா,தேவா,ராம்.கார்த்தி அனைவர் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.ஜெயதேவன் அந்த மேட்டரை என் மெய்லுக்கு அனுப்புங்க

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

என் இனிய நண்பருக்கு... உங்கள் வலைப்பூ என்னமோ நன்றாகத்தான் இருக்கிறது. அனால். இதில் நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுவது எனக்குப் பிடிக்க வில்லை. தமிழகத்தின் அனைத்து முன்னனணி இதழ்களிலும் கலக்கிகொண்டிருக்கும் நீங்கள் அந்த இடத்தை நேரம் இன்னமையின் காரணமாக இழந்து விடுவீர்களோ என்று தயக்கமாக உள்ளது. அதுப் போக. பதிவர் உலகம் என்பது நமது வாசகர் எழுத்தாளர்களிடம் உள்ள நாகரிகம் இங்கு துளியும் இல்லை. இலவசமாய் எழுத ஒரு வலைப்பூ கிடைத்து விட்ட மமதையில் ஒரு சிலர் நாகரிகம் இல்லாமல் செயல் படுவதை பார்க்கும் போது நாம் அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. இது ஒரு சிலரே செய்யும் தவறு தான். அனால் முன்னூட்டம் இடுகிறேன் என்று அந்த ஒரு சிலர் செய்யும் தவறை பலர் வக்காலத்து வாங்கும் போது அதை படிப்பதற்கே வேதனையாக இருக்கிறது. எனவே, நீங்கள் பத்திரிகையில் சாதியுங்கள். போரடித்தால் சினிமாவுக்கு முயற்சி செய்யுங்கள்.. உங்கள் திரணை(மை)யை வீணடிக்க வேண்டாம்! ப்ளீஸ்!

--
- எஸ்.எஸ்.பூங்கதிர்,
வில்லியனூர்.

சி.பி.செந்தில்குமார் said...

ஆதங்கத்திற்கும், கருத்துக்கும் நன்றி பூங்கதிர்,இப்போதானே உள்ளே வந்து இருக்கோம், பார்ப்போம்

MoonramKonam Magazine Group said...

நல்ல சேதி ! பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி 3ம் கோணம் அவர்களே

Anonymous said...

விகடனின் இந்த முயர்ற்சியால் ப்லாக் என்பதை அதிக மக்கள் புரிந்து கொள்ள,இணைந்து கொள்ள வசதியாக முடியும்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்,சதிஷ் சரியா சொன்ன